Pages - Menu

Friday, 28 April 2017

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

(நாசரேத்தூர் நல்லாள் பாத்திமாவில் காட்சி தந்ததன் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை)

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

‘ஆகட்டும் ஆண்டவரே’ என்று சொல்லி  இறைத் திருவுளத்தினுக்கு முற்றும் பணிந்து வாழ்ந்தனாலேயே பெண்குலத்தோருள்  மாணிக்க மாகத் திகழ்கின்றார் மரியா. விண்நோக்கிப் பயணித்தன் விளைவாக இவரின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைச் செயல்பாடுகளாகத் திகழ்ந்தன. பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்த  உலகோரினை விண்நோக்கி நடத்திச் செல்ல வேளாங்கண்ணி, லூர்து, லா சலேத்,   கோதலுப்பே போன்ற பல இடங்களில் காட்சி தந்து இறைத் திட்டத்தினைச் செயல்படுத்தி வருபவர் இறை அன்னை மரியா.

முதல் உலகப் போர் முழக்கம்:

1914 முதல் 1918 வரை உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. அழிவுச் சக்தியினை  உணவாக உட்கொண்டு மரணத்தினை நோக்கிப் பயணித்திட்ட இருள் சூழ்காலம் அது. இப்போரட்ட காலத்தில்தான் தன்னிலை விட்டெழுந்து தரணியர்  தழைத்திட பாத்திமா நகரில் காட்சி தந்து பல தந்த வாழ்வினாக்கி வழிகாட்டினார் நம் மரியன்னை.

பாத்திமா ஒரு வரலாற்றுப்  பின்னணி:

                    போர்த்துக்கல் நாட்டினருக்கும், இஸ்லாமியருக்கும் 12 ஆம் நூற்றாண்டில் பெரும்போர் ஒன்று நடைபெற்றது. போர்த்துக்கீசியர் வெற்றிக்கனியினை ஈட்டினர். இஸ்லாமியப் படைத்தளபதியின் மகள் பாத்திமா. போர்த்துக்கீசியரின் படைத்தளபதி கொன்சாலோ. இவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது. இவர்கள் வாழ்ந்திட்ட நிலப் பகுதி அவ்ராணா அவ்ரம்.  இவர்களுக்குப் பின் இந்த இடமே பாத்திமா நகராயிற்று. இப்பட்டணம் இன்று போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனிலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ மேற்கே கோவாதா ஈரிய என்னும் மலைப் பாங்கான சமவெளிப் பகுதியே மாதா காட்சியளித்த மாண்புமிகு இடமாகும்.

காட்சி பெற்றோர்:

                லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய மூவரும் நெருங்கிய உறவினர். இவர்கள் முறையே 10,9,7 வயதினர். பக்திமிக்க பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்த இவர்கள் ஆன்மீகச் சிந்தை கொண்டோராவர். ஏழை, எளிய  மனங்கொண்ட இவர்களே மரியாவின் காட்சி காணும் பாக்கியம் பெற்றனர்.

அன்னையின் காட்சிகள்:
                முதல் உலகப் போரினால் மிரண்டிருந்த மக்களுக்கு ஆறுதலாக திருத்தந்தை 15‡ஆம் பெனடிக்ட் அமைதி காக்க வேண்டி உலகோருக்கு வேண்டுகோள் விடுத்தார். 1917 ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் நாள் நண்பகல் வேளை லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா என்னும் இவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மூவேளை செபம் சொல்கின்றனர். என்ன ஆச்சரியம். அதோ அங்கே அசின்ஹோர் மரத்தின் உச்சியில் ஓர் ஒளிமணடலம். அதன் நடுவில் வெண்ணிற ஆடை அணிந்து, புன்னகை தவழ்ந்திடும் முகத்தோடு குவிந்த  கரங்களில் செபமாலை ஏந்தி ஓர் அழகான பெண்மணி.

                 சிறு  குழந்தைகள் பயம் சூழ்ந்து விழிகள் கலங்கி நிற்கின்றனர். ‘ பிள்ளைகளே அஞ்சாதீர்கள் நான்தான் விண்ணிலிருந்து மண்ணகம் வந்துள்ள இயேசுவின் தாய். பாவத்தில்  ஊன்றி, பாவிகள் வெகுவாகி கடவுளை வேதனைப் படுத்துகின்றனர். பாவிகள் மனத்திரும்பிட உங்களின் துன்பங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுங்கள். உலகில்  போர் நீங்கி, அமைதி நிலவிட தினசரி செபமாலை செபியுங்கள்’ எனறாள் அப்பெண்மளி..

              தாங்கள் காண்பது காட்சியா? பகல் கனவா? இல்லை. இல்லை. மாதா காட்சிதான் என்றறிந்து அவர்கள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ததும்புகின்றது. வீட்டிற்குச் சென்று இதனைப் பகிர்ந்து கொண்ட போதோ. ஏளனம், பரிகாசம், எகத்தாளம். பெற்றோரே அந்த இடத்திற்குச் செல்லக் கூடாது எனத் தடை செய்தனர்.

தொடர் காட்சிகள்: 

               தொடர்ந்து வந்த  ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காட்சிகள் நம்பத்தக்கதாகத் தோன்றிட மக்கள் எண்ணிக்கை பெருகியது. மாதாவின் காட்சியினை இம்மூவர் மட்டுமே பிரதிமாதம் 13 ஆம் நாள் காண முடிந்தது. இச்சகமாக பேச்சுகள், சக வயதினரின் கேலி, கிண்டல் ஆகியவை இந்த இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் வேதனைகளை உருவாக்கின. ஆனால்  அவையனைத்தையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தனர். மனத்திடம் பெற்று மரியன்னையின் பிள்ளைகளாக வீறு கொண்டு எழுந்தனர்.

காட்சிகளின் செய்தி:

               ‘ கேழ்வரகில் தேன் ஒழுகுகின்ற தென்றால் கேட்பவனுக்கு மதி எங்கே போச்சு?’ என்ற விவாதங்கள் ஆங்காங்கே எழுந்தன. ஆனால்  உண்மையினை உறங்க வைக்க முடியுமா? 

  இக்காட்சிகள் தந்த  செய்திகளில் முக்கியமானைவ:
 1. போர் முடிவுக்கு வந்து  உலகில் அமைதி நிலவிடல் வேண்டும்.
 2. ரஷ்யா மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்படல் வேண்டும்.
 3. கிறிஸ்தவர்கள் அதிக வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக திருத்தந்தை ஒருவர்  கொடூரமாகத்  தாக்கப்படுவார்.
 4. பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய இருவரும் விரைவில் விண்ணகம் செல்வர். பாத்திமா ரகசியங்கள்  உலகெங்கும் பரவிட லூசியா நீண்ட காலம் வாழ்வார்.
      
 திருச்சபையின் பதில்:

மனிதர் எப்போதெல்லாம் தடம் மாறித் தவறுகளில் வீழ்ந்து செயல்படுகின்றார்களோ அப்போதெல்லாம் தடுமாற்றம் போக்கிட  மாதா பல்வேறு இடங்களில் காட்சி மூலம் இறைத் திருவுளத்தினை வெளிப்படுத்தியதனை வரலாறு பதிவு செய்துள்ளது. பாத்திமாக் காட்சிகளும் அப்படியே. ஆனால் விசுவாசக் கண் கொண்டு மட்டும் இவற்றினை நோக்காது. அறிவியல் ரீதியாகவும்  திருச்சபை இதனை அணுகியுள்ளது.

இறைவெளிப்பாட்டுக் கூறுகள்:

அன்பின் வெளிப்பாட்டு சமூக அமைப்பினை உருவாக்குதலே திருச்சபையின் முக்கியப் பணி. எனவே கிறிஸ்தவம் அன்பினை அடித்தளமாகக் கொண்ட சமயம். இச்சமயம் தழைத்திட விவிலிய நூல்களிலும் பல இறை வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளைக் காணுகின்றோம். இவை பொது வெளிப்பாடு ( Pற்ணுயிஷ்உ யூeஸeயிழிமிஷ்லிஐ), தனி வெளிப்பாடு ( Prஷ்ஸழிமிe யூeஸeயிழிமிஷ்லிஐ), எனப்படுகின்றன.

இந்த  வெளிப்பாடு, மனித மீட்பின் வெளிப்பாடாக  விவிலிய நூல்களில் துவங்கி, கிறிஸ்துவில் முழுமையடைந்து திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக மக்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் மனிதர் கிறிஸ்து அளித்த மீட்பினை  உணர்ந்து, அனுபவித்து ஏற்றுக் கொள்ள திருச்சபையின் அருளடையாளங் களோடு  அவரைப் பயிற்றுவித்து, விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்து நிற்கச் செய்யப் பாத்திமாக் காட்சிகளும் அவை தரும் செய்திகளும் உதவியாகத் திகழ்கின்றன.

பாத்திமா இரகசியங்கள்:

பாத்திமாவில் நடைபெற்ற பொதுக் காட்சிகள் மூலம் வெளிப்பட்டவை ஒரு சிலவே. தனிக்காட்சிகள் மூலம் இம்மூவராலும்  பெற்ற வெளிப்பாடுகள் இரகசியமாகக் காக்கப்பட்டன. அவை மூன்று  இரகசியங்கள் எனப்படுகின்றன.

 அ. நரகம்:

           1941 ஆம் ஆண்டு லூசியா எழுதிய ‘தனது நினைவுகள்’ என்னும் குறிப்பேட்டில் 1917 ஜீலை 13‡இல் மாதா கீழ்க்கண்ட காட்சியினை தங்களுக்கு வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். பூமிக்கடியில் தீச்சூளையில் வெந்து மடியும் மனித ஆன்மாக்களைக் கண்டோம். அதில் கொத்துக் கொத்தாக மனிதர்கள் விழுந்து கொண்டிருந்தார்கள்.

 ஆ. இரண்டாம் உலகப்போர்:

              உலகப் போரினால் சீரழிக்கப்பட்டிருந்தாலும், உலகம் இன்னொரு அழிவினைச் சந்திக்கும். அதுவே இரண்டாம் உலகப் போர்.  இது ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதியில் கம்யூனிசக் கொள்கையினால் கடவுள் மறுப்புத் தத்துவம் கொண்டுள்ள ரஷ்யா மனம் திரும்பிட வேண்டும். இதற்காக மரியாவின் மாசற்ற திரு இருதயத்தினுக்கு ரஷ்யா அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

 இ. கிறிஸ்தவர்களின் வேதனை:

இந்த மூன்றாவது இரகசியத்தினை  லூசியா வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது மறைமாவட்ட ஆயர் சில்வா அவர்களின்  ஆணையின் படியே வெளியிட்டார். இதன்படி கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பத்தினுக்கு உட்படுத்தப்படுவர். ரஷ்யாவிலும், பிறநாடுகளிலும் கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றும். திருத்தந்தை ஒருவர் மரணவாயில் வரை சென்று  திரும்புவார். முதல் சனிக்கிழமை பக்தி அவசியம் அனுச்சரிக்கப்பட வேண்டும்.

பாத்திமாக் காட்சிகளின் உண்மைத் தன்மை:

பாத்திமாக் காட்சிகள் அனைத்தும் இறைவெளிப்பாட்டின்  அடையாளங்களே. இவற்றிற்கான  வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்கள்.
   1. இரண்டாம் காட்சியில் கூறப்பட்டுள்ளவாறு பிரான்சிஸ், ஜெசிந்தா இருவரும் முறையே 1919, 1920 இல் விண்ணகம் சென்றனர்.
   2. லூசியா கார்மேல் சபையின் துறவு வாழ்வு  பூண்டு தனது 97 ஆம் வயதில் விண்ணகம் சென்றார்.
   3. திருத்தந்தை ஜான்பால் 1981 மே 13ல் அலி அக்கார் என்னும் இளைஞரால் சுடப்பட்டார். தனக்கு மறுபிறவி கிடைத்ததும் 
       தனது நன்றிக் காணிக்கையாக தன் உடலில் பாய்ந்த இரவைக் குண்டினை பாத்திமா மாதாவின் கீரிடத்தில் பதித்து வைத்தார்.      

   4. 1991 ல் சோவியத் யூனியன் பிளவுப்பட்டு ரஷ்யா என்ற தனி நாடாகியது.
  5. ‘ஓ  என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் 
       சிறப்பாக  உமது இரக்கம் யார், யாருக்குத் தேவையோ அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்’ என்னும் செபம் செபமாலையோடு
       இணைந்து செபிக்கும் பழக்கம் நடைமுறையாகியது.
  6. முதல் சனிக்கிழமை பக்தி பாத்திமா மாதா பக்தியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.

 பெண்ணியத்தின் மேன்மை:

              ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்களுக்கு அளிக்கப்பட்ட காட்சிகள் அவனியயங்கும் பரவி பெருமை படுத்தப்படுகின்றது. பெண்ணியலை ஐந்து பிரிவுகளாகப் பார்க்கலாம்.
 1. ஏற்பு நிலைப் பெண்ணியல்
 2. ஒதுக்கு நிலைப் பெண்ணியல்
 3. மறுபார்வைப் பெண்ணியல்
 4. பெண்தன்மையை உணர்த்தும் பெண்ணியல் 
 5. விடுதலைப் பெண்ணியல்

               பெண்மையின் தூய்மையே தாய்மை. தன்னலங் கருதாது பிள்ளை நலம் பேணுதலே தாய்ம்மை போற்றின்  சீரிய பண்பு. இப்பண்பின் வெளிப்பாடுகளே பாத்திமாக் காட்சிகள். இக்காட்சிகள் கூறும் செய்தியினை வாழ்வாக்கினால் வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திடும்.

மாதாவின் நேசம்

மாதாவின் நேசம்

அருட்பணி.ச.இ. அருள்சாமி

 திருத்தலங்களுக்கு மக்கள் வந்து வேண்டுதல் செய்வது, நன்றி சொல்வது, நம் மனதை உருக்கும் காட்சியாகும். முடியயடுப்பது அல்லது மொட்டையடிப்பது என்பது அவமானச் செயல். எதிரிகளை மொட்டையடிக்கும் வழக்கம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1குறி 19:4). 

எனக்குசிறுவயதாயிருக்கும் போது எழுநீர் என்ற வியாதி இருந்தது.இந்த  வியாதியால் திடிரென்று முச்சடைத்து, கைகால் வலிப்பு வந்தது போல் இழுக்கும். அப்பொழுதெல்லாம் சரியான  மருத்துவம் இல்லை. என் அம்மா வேளாங்கன்னி மாதாவிடம் நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டு ஜெபித்தார்கள்.  எனது நோய் குணமானால் மும்மொட்டை அடித்து நன்றி செலுத்துகின்றேன் என்று, மும்மொட்டை என்றால் தாய், தந்தை , பிள்ளை முவரும் முடியயடுத்து கொள்ளுதல், எனக்கு முற்றிலும் நீங்கியது. 

எனக்கு19 வயது  நடந்த போது என் அன்னை எனக்கு நினைவூட்டி, நேர்த்திகடனை நிறைவு செய்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 35 வயதுள்ள பெண். என் அன்னை  தன் பிள்ளைக்காக  மொட்டை அடித்துக் கொண்டார்கள் என்றால், மாதாவின் கருணையை எவ்வளவு ஆழ்ந்து உணர்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. திருத்தலங்களில் முடியயடுப்பது, முழங்காலில் சென்று செபிப்பது போன்ற நேர்த்தி செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய கதையை சுமந்து நிற்கும்.

            மாதா, நம் செபங்களை ஆண்டவர் முன்பாக, நம் சார்பாக வைக்கிறாள். இதுதான் இறையியல் விளக்கம். நம் தேவைகளுக்காகத்தான் மாதாவை நோக்கி ஜெபிக்கிறோம். ஆனால் மரியாவின் முதல் செபம், மரியா எலிசபெத்தை சந்தித்து பாடிய புகழ் பாடல், நன்றி  செபம். இந்த புகழ்ச்சி செபத்தில் நம்மை கலந்துக் கொள்ளத்தான் மரியன்னை நம்மை அழைக்கிறார்கள். இந்த புகழ்ச்சி, நன்றி செபம் கடவுளின் பிள்ளைகளின் நாவிலிருந்து அகலக் கூடாது என்கிறார் இரேனியுஸ் என்ற அறிஞர். 

               மரியன்னை இயேசுவின் முழுமையான முதல் சீடர். எனவே அவர் நமக்கு முன்னோடி.

               குடந்தை மறைமாவட்டத்தில் 3 முக்கிய மாதா திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

 பூண்டி திருத்தலம்,  இறையடியார் லூர்து சேவியர் அவர்களின் பெரும் முயற்சியால், அவரது புனித வாழ்வினால், மாதாவின் உதவிகள் வழிந்து வரும் தலமாக விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.

17ஆம் நூற்றாண்டில், வீராமமுனிவர், ஏலாக்குறிச்சி என்ற உள்ளாந்திர கிராமத்தில், தஞ்சை மன்னரால், கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை தங்க செய்து அவர்களை பாதுபாத்தார்.மரியன்னை¼, கிறிஸ்தவ மக்களுக்கும், மற்றவர்களுக்கும் அடைக்கலமாக விளங்குபவர் என்று மக்கள் அறிய செய்தார். இங்கும்  ஏராளமான மக்கள் சென்று அடைக்கல அன்னையின் உதவியைப் பெற்று  வருகிறார்கள்.

 17ஆம் நூற்றாண்டிலிருந்து ( 1674) பல பெயர் பெற்ற மறைப்பணியாளர்கள், வீரமாமுனிவர், அருளானந்தர் போன்றவர்கள் பணி செய்த இடம் வடுகர்பேட்டை. இங்கு ஆரோக்கிய மாதா திருத்தலம் வளர்ந்து வருகிறது. 
             
தூய மரிய வியானி அருளப்பர் கூறுவார், மரியன்னைக்கு உலக முடிவுரை ஓய்வென்பதில்லை. ஏனென்றால் எப்போதும் தன் பிள்ளைகளைப் பற்றியே கவலை உள்ளவளாய் இருக்கிறார். 

மரியாவின் வழி  செல்லாது. இயேசுவின் பணியாளராய் விளங்க முடியாது என்கிறார், ஆயர் தேகோன்சஸ் மாசற்ற மரியன்னை இறைவனின் இதயத்திற்கு உகந்த அரசியாக விளங்குகிறார். எனவே அவளின் பரிந்துரையுடன் செய்கின்ற செபம் எல்லையில்லா வல்லமையுள்ளது. என்கிறார் தூய மாக்ஸ்மில்லியன் கோல்பே. 
தமிழகம் வரட்சியால் காய்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வருகிற ஆண்டில் பருவமழை சீராக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. வான் பொழியும் நீரை தகுந்த முறையில் சேமிக்க அரசு ஆவன செய்ய வேண்டும. குளங்களை துர்ர்எடுத்தல், துVர்க்கப்பட்ட குளங்களை மீட்டெடுத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளை இணைத்தல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

தமிழக விவசாயிகள் டெல்லியில் பல விதமான முறையில் கடந்த 45 நாட்களாக போராடி வருகிறார்கள். ஏழையின் குரல் அம்பலம் ஏறுமா என்பதைப் போன்று அரசு தன் முகத்தை திருப்பிக்கொண்டிருக்கிறது. 

சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. பணம. பட்டுவாடாக் காரணமாக இது செய்யப்பட்டிருக்கிறது. கொடுக்கும் போது வாங்கினால் என்ன என்ற தவறான எண்ண போக்கு நம் மக்களிடையே உள்ளது. இது மாற வேண்டும். பணம் வாங்குதல் ஊழலடின் முதலெழுத்து. நேர்மை என்ற நேர்க்கோடுதான் உயர்வின் சிறந்த வழி. 
                

Monday, 17 April 2017

தேள் விடமா?

தேள் விடமா?

1. உப்பு + மிளகு அரைத்து கடிவாயில் பூசு.

2. நமச்சாரம் + உப்பு கடிவாயில் தடவு.

3. தேங்காய் பால் + வெல்லம் கலந்து குடிக்கவும்.

4. பிம்மத் தண்டு இலைச்சாறு கொட்டு கடிவாயில்  தடவு.

5. பழம் புளி + சுண்ணாம்பு சூட்டோடு கடிவாயில் பூசு.

6. தும்பை பூ + துளசி சம அளவு அரைத்து  வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.

7. நாயுருவி வேர்சாறு மென்று குடி.

8. கனியாத பூவன் வாழைப் பழத்தை குறுக்கே அரிந்து கடிவாயில் தேய்த்துப் பார். வி­ம் இறங்கும்.

9. பெருங்காயம் நீரில் குழைத்து தடவு. அனலில் காட்டவும்.
10. துளசியை மென்று கடிவாயில் தடவு.

11. வெற்றிலையில் 9 மிளகு வைத்து மென்று சாப்பிடு.

12. பப்பாளிக் காய் பால் தடவு, வி­ம் இறங்கும்.

13. வெற்றிலை + குப்பை மேனி + உப்பு கசக்கி சாறு எடு. கரண்டியில் நல்ல எண்ணெய் காய்ச்சி அதில் ஊற்று. கொட்டு வாயில் தடவி ஆவி பிடி.

14. தும்பைப் பூ + தும்பை இலை சாறு சாப்பிடு. கொட்டு வாயில் தடவு.

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்

தொகுப்பு : ம. இராசரெத்தினம், ஆடுதுறை

1. அடிக்கடி டீ, காபி சாப்பிடாமல் காலை, மாலை இருவேளை மட்டுமே சாப்பிடலாம்.

2. நெய், இனிப்பு பண்டம், கேக், பிஸ்கட், பிரட், சாக்லெட், எண்ணெய் பண்டங்கள் , மசாலா உப்பு போன்றவற்றை தவிர்க்கவும், முடியாவிட்டால் குறைக்கவும்.

3. முந்திரி, பாதாம், பிஸ்தா, பருப்பு வகைகள், நிலக்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி இவைகளை குறைக்க அல்லது தவிர்ப்ப நல்லது.

4. மோர் அல்லது தயிர் கூடாது.

5. ஒரு வேளை மட்டும் அரிசி உணவு, மற்ற வேளைக்கு புஞ்செய் தானியங்களை சேர்க்க.

6. காலை உணவு பலகாரங்கள் அல்ல, பழ ஆகாரமே சிறந்தது. பச்சை காய்கறிகள், சாலட் சாப்பிடலாம்.

7. காலை, மாலை சிற்றுண்டிகள் கூடாது.

8. நாக்கை கட்டுப்படுத்துங்கள்.

9. இரவு 7 மணிக்குமேல் உண்ணாதீர்கள். இரவு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்து உறங்க செல்லுங்கள். தூக்கம் வரவில்லையானால் படுக்காதீர்கள்.

10. பகலில் தூங்கவே கூடாது. தூங்கினால் எடை கூடும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மட்டும் பகலில் தூங்கலாம்.

11. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அளவோடு சாப்பிடுங்கள்.

12. உடல் பருமனைக் குறைக்கும் உணவுகள், வாழைத்தண்டு, கீரைத்தண்டு உணவில் அடிக்கடி சேர்க்கவும். வெதுவெதுப்பான நீரில் தேன்விட்டு சாப்பிடுங்கள். கோழிக்கீரை பருப்புடன் சமைத்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

13. உணவுக்கு ஏற்ற உழைப்பு கட்டாயம் தேவை.
14. காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் உபயோகிக்கவும்.

15. இரவில் படுக்க போகும்முன் திரிபாலா முன் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

16. வாரம் இருமுறை கசப்பு உணவு சாப்பிடவும்.

17. காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் கொஞ்சம் உலர்ந்த திராட்சை சாப்பிடலாம்.

18. உணவில் ஒருநாள் மட்டும் தேவைப்பட்டால் புலால் உணவு. நோயாளிகள் கட்டாயமாக மாமிச உணவு உண்ணக்கூடாது.

20. முட்டை உணவில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். பிராய்லர்  கோழி முட்டை சாப்பிடுவது நல்லதல்ல.

21. விதையில்லாத பழங்களை சாப்பிடக்கூடாது. அதில் உயிர் ஆற்றல் இருக்காது.

22. துவர்ப்பு உணவு தினமும் சேர்த்துக்  கொள்வது நல்லது.

23. அமிலத்தன்மையுள்ள உணவுகளை சேர்க்காமல் இருப்பது மிக மிக நல்லது.

24. மாவு பண்டங்கள் சேர்க்காமல் இருப்பது நல்லது. மாவு நோயைத் தரும். மலச்சிக்கல் உண்டாக்கும்.

25. உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்யவும். தொந்தி  குறைய பெல்ட் போடவும்.

26. யோகாசனம் உடல் பருமனுக்கு ஏற்றது. உடல் பருமனைக்  குறைக்கும் முறை  மூலம் உழைப்பாளிகளும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

27. தினமும் சாப்பிடும் முன் வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்கும்.

28. தினமும் அதிகாலை நடந்து, செல்வது நல்லது. “நடை நோய்க்குத் தடை”.

29. தேன் + பூசணிச் சாறு + எலுமிச்சை பழச்சாறு சாப்பிடலாம்.

சிறுவனின் கோபம், பாட்டியும் வாலிபமும்

சிறுவனின் கோபம்



ஹைதராபாத்தில் சஞ்சீலி ரெட்டி நகரிலுள்ள காவல் நிலையத்திற்கு இரண்டாவது  படிக்கும் சிறுவன் வெகுகோபத்துடன் நுழைந்தான். “சார் எங்க பாட்டிய உடனே கைது செய்யுங்க” என்றான். காவலர்கள் அசந்து போனார்கள். என்னப்பா வி­யம்? உங்க பாட்டி யாரையும் கொலை செய்திட்டாங்களா? என்று கேட்டார். இல்லை சார். என்னால தாங்க முடியல சார். எத்தனை நாளுக்குதான் பொறுத்துகிறது? என்னை விளையாடவே விடமாட்டேங்ராங்க சார். காவலர்கள் அதிர்ச்சியுடன் சிறுவனை நைசாக சமாதானபடுத்தினர்.  நைசாக பைவ்  ஸ்டார் சாக்லெட்டை கொடுத்தனர்.கோபம் குறைந்து வீடு திரும்பினான் பையன்.


பாட்டியும் வாலிபமும்

தியேட்டரில் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது.

          நம்மாள் பக்கத்தில், ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர் பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என சிறிது சிறிதாக குடிப்பத்தைப் பார்த்து எரிச்சலடைந்தார்.    

நம்மாள் பாட்டியிடமிருந்து  குளிர் பானத்தை  பிடுங்கி மடக்...மடக் என ஒரே மூச்சில் குடித்து விட்டு   நம்மாள், பாட்டி கூல்டிரிங்சுன்னா இப்படி குடிக்கனும்..... தெரியுதுங்களா

பாட்டி       : அடப்பாவி மவனே அவசர பட்டியேடா....
 நம் மாற : ஏன்? என்ன?

பாட்டி       : அதுலதான் நான் வெத்தலைய துப்பிக்கிட்டு இருந்தேன் இவ்ளோநேரம்

அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்   
                                                                                                                                                                  - சவரி - கெரி
                 
இந்த வாரம் உங்களுடன் அமெரிக்காவில் தவக்காலம், கிறிஸ்து உயிர்ப்பு விழா கொண்டாட்டம் பற்றி  பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். தவக்காலத்தில் இங்குள்ள மக்கள் நோன்பிருந்து நிறைய தர்ம செயல்கள்  செய்கிறார்கள். மீனை தவிர மற்ற எல்லா மாமிசங்களையும் சாப்பிடாமல் தவிர்கிறார்கள். வெள்ளி கிழமைகளில் மாலை நேரத்தில் சிலுவைப்பாதை  செபித்து, சமூகமாக கஞ்சியையும், மீன் வருவலையும் (Fishfry) சாப்பிடுகிறார்கள். இங்குள்ள கத்தோலிக்கர் இத்தவக்காலத்தில் பிற சமயத்தையைச் சார்ந்தவர், பிற  கிறிஸ்துவ  சபைகளில் உள்ளவர்கள் ஆகியோரை கத்தோலிக்க திருச்சபைக்கு அழைத்து வரும் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த 40 நாள்களும் மறைக் கல்வியைக் கற்பித்து, கிறிஸ்து  உயிர்ப்பு திருநாள் அன்று  திருமுழுக்கு தந்து கத்தோலிக்க  மறைக்கு அழைத்து வருகிறார்கள். நான் செல்லும் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து  உயிர்ப்பு திருநாளன்று சுமார் 25 முதல் 30 பேர் கத்தோலிக்க திருச்சபையில் சேருக்கிறார்கள்.
                இப்பணியில் என்னை மிகவும் கவர்ந்தது, உணவு வங்கி (Food Bank) . உணவு வங்கி  என்பது விவசாயிகள். உணவு அங்காடிகள் ( Food Stores) உழவர் சந்தை ( Farmer Market) இவர்களுடன் இணைந்து  பெரும்பாலும்  தன்னார்வு தொண்டர்களால் ( Volunteer)  இது இயக்கப்படுகிறது. உணவு வங்கிக்கு  விவசாயிகள், உணவு அங்காடிகள் (Food Stores) , உழவர் சந்தைகள்  ஆகியவை உணவு பொருட்களை இலவசமாக கொடுக்கிறார்கள். அதை எடுத்து வந்து தரம்  பிரித்து தேவைபடுவர்களுக்கு குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும் உணவு பொருட்கள் கெட்டு விடும். எனவே உணவு பொருட்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கவும், அதை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கவும் நிறைய தன்னார்வு தொண்டர்கள்  (Volunteer) இதில் ஈடுபடுகிறார்கள்.  உதவி தேவைப்படுவோர்களின்  தேவையை இங்குள்ள ஆலயங்களிலிருந்தும், தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, அவர்களின் முகவரி, அவர்களின்  வீட்டிற்கு செல்ல வேண்டிய வழிகள்  ஆகியவற்றில் தயாராக வைத்திருக்கிறார்கள். உணவு பொருள் வந்தவுடன் அதை பிரித்து, கட்டி (Pack) தேவைப்படுவர்களுக்கு உடனடியாக கொண்டு சேர்கிறார்கள்.  இந்த  தவக்காலத்தில்  இங்குள்ள மக்கள்  இது  போன்ற அமைப்புகளுக்கு தங்களின் நேரத்தையும், உதவியையும் அளிக்கிறார்கள்.

                  நாமும் இந்த கிறிஸ்து  உயிர்ப்பு  நாளில் பிறருக்கு தொண்டு செய்து  இறைவனின் கருணையையும், அன்பையும் பெறுவோம்.
     
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
 பாரை  உயர்த்திட வேண்டும்.                                                                                                             - பாரதியார்.  

Thursday, 6 April 2017

பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

நூல் - 1  பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

1  தி. மொ 1 : 5 நான் ஒரு பாவி என்று எண்ணுவது.

1  யோ 1 : 8 நாம் பாவம் செய்யவில்லை என்றால் நம்மை ஏமாற்றுகிறோம்.

1  யோ 1 - 10 நம்முடைய பாவங்களை ஒப்புகொள்ளுதல்.

1  தி.மொ 1 - 15 பாவிகளை மீட்க மீட்பர் இயேசு வந்தார்.

மத் 9‡13 நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்

லூக் 19 - 10    இழந்துபோனதை தேடி மீட்க வந்தேன்

யாக் 5: 15, 16 ஒருவர் மற்றவரிடம் பாவ அறிக்கை செய்துகொள்ளுதல்

1 யோ  2 : 1 - 2  நமது பாவத்துக்கு கழுவாய இயேசு

யோ 1 - 29 இவரே கடவுளின் ஆட்டுகுட்டி

1  யோ 1 : 7 - 10 இயேசுவின் ரத்தம் சகலவித பாவத்தைப் போக்கும்


நூல் - 2  ஏன் பாவ அறிக்கை செய்ய வேண்டும்?


மலா 2 : 7 குருவானவர் ஆண்டவரின் பிரதிநிதி ‡ மருத்துவர், வழக்கறிஞர்

லேவி 4 : 26 குரு பாவ கழுவாய் பலியை நிறைவேற்றுபவர், எபி 9 = 14, :22; 10:9-10

2  சாமு 12 - 13 தாவீது ‡ நாத்தானிடம் பாவம் அறிக்கை செய்தான்

மத் 18 - 18 இயேசுவுக்கு பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உண்டு

லூக் 19 - 5 சக்கேயு தம் பாவத்தை அறிக்கையிட்டான்

திபா 32 : 3 பாவத்தை அறிக்கையிட்டு  விட்டு விடாதவரை உடல் வியாதி  உண்டு

லூக் 15 : 21 ஊதாரி மகன் தன் பாவத்தை அறிக்கையிட்டான்


நூல் - 3 பாவத்துக்குரிய பட்டியல்

கலா 4 - 10 நாள், கிழமை, மாதம் பார்த்தல் பாவம்

2  தீ.மொ 3:2-4 கடவுளுடைய காரியங்களைவிட உலக காரியங்களை விரும்புவது

கொல 3 : 5 பேராசை சிலை வழிபாட்டுக்கான தூண்டுதல்

2 தெச 3 : 6 பெற்றுக்கொண்டதை மற்றவருடன் பகிர்ந்து  நூல் ‡ 1


பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

1 திமொ 1 : 5 நான் ஒரு பாவி என்று எண்ணுவது.

1 யோ 1 : 8 நாம் பாவம் செய்யவில்லை என்றால் நம்மை ஏமாற்றுகிறோம்.

1  யோ 1 : 10 நம்முடைய பாவங்களை ஒப்புகொள்ளுதல்.

1  திமொ 1 : 15 பாவிகளை மீட்க மீட்பர் இயேசு வந்தார்.

மத் 9:13 நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்

லூக் 19 ; 10    இழந்துபோனதை தேடி மீட்க வந்தேன்

யாக் 5 : 15, 16 ஒருவர் மற்றவரிடம் பாவ அறிக்கை செய்துகொள்ளுதல்

1 யோ  2 :1 - 2  நமது பாவத்துக்கு கழுவாய இயேசு

யோ 1 : 29 இவரே கடவுளின் ஆட்டுகுட்டி

1 யோ 1 : 7 - 10 இயேசுவின் ரத்தம் சகலவித பாவத்தைப் போக்கும்

Ads Inside Post