திருச்சபைச் செய்திகள்
9/4/17 எகிப்தில் குருத்து ஞாயிறன்று இரண்டு கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிக்குண்டு தாக்குதல் நடந்திருக்கிறது. முஸ்ஸம் தீவிரவாத இயக்கம் இக்கொடுர செயலை செய்திருக்கிறது.
தாந்தா என்ற ஊர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வழிபாடு நடந்துக் கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது. 27 பேர் இறந்தனர். 78 பேர் காயம் அடைந்துள்ளனர். 2 மணி நேரம் கழித்து, அலெக்சாந்திரியா நகரில் மார்க் பேராலயயத்தில், தற்கொலை குண்டு தாக்குதலால், இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 16 பேர் இறந்தனர். இவ்வாலயம் காப்திக் வழிபாட்டுமுறை சபையினர் தலைமையிடம். இங்குள்ள ஆயர் காப்திக் சபையினர் திருத்தந்தை ( போப் ) என்று அழைக்கப்படுகிறார்.
21/3/17 - ஜெருசலேமில், இயேசுவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு 22/3/17 முதல் மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. புதுப்பிக்கும் பணியை கிரேக்க பொறியாளர்கள் 9 மாதங்களில் செய்து முடித்துள்ளனர். இப்புதுப்பிக்கும் பணியின் போது 4ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டன் அரசனால் பதிபிக்கப்பட்ட சலவைக் கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் -The Hindu 21/3/17 பக் .20
No comments:
Post a Comment