Pages - Menu

Monday 1 May 2017

பாஸ்கா காலம் 6 ஆம் வாரம், 21-05-2017

பாஸ்கா காலம் 6 ஆம் வாரம், 
 21-05-2017
திப 8:5-8, 14-17;1 பேது 3:15-18; யோவா 14: 15-21

ஆவியில் நிறைந்து சத்தியம் பேச அழைக்கப்படும் இயேசுவின் இனிய சகோதர, சகோதரிகளே, தூய ஆவியாரால் நாம் ஆட்கொள்ளப்படவும், அவர் நம்மை வழிநடத்தவும் நம்முடைய இதயக் கதவுகளை எளிமையோடு திறந்து எதார்த்தங்களோடு ஏற்றுக்கொண்டு முழுவதுமாக நம்பிக்கை கொள்ள இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் அழைக்கின்றன.

ஆண்டவரின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு, தூய ஆவியாரை பெறும் சமாரியர்களைப் பற்றி முதல் வாசகத்தில் வாசிக்கும் நாம்,  எந்த பின்னணியில் ஆவியாரை அவர்கள் பெற்றார்கள் என்பதை சிந்திப்பது சிறந்தது. யயருசலேம் நகரில் வேதகலாபனை பரவி (திப4) முடியப்பர் கொல்லப் படுகிற போது (திப4) நம்பிக்கை கொண்டவர்கள் எல்லா திசைகளிலும் சிதறடிக்கப் பட்டு துரத்தப்படுகிறார்கள். அப்படி சென்ற திருத்தூதர் பிலிப்புதான், சமாரியர்களிடம் நற்செய்தி அறிவிக்க, அவர்கள் அதை ஏற்றுக் கொள்கின்றனர். தீய ஆவி துரத்தப்படுகிறது. இறுதியாக திருத்தூதர்கள் அவர்கள் மீது கைகளை வைத்து செபிக்கிறபோது தூய ஆவியாரை பெற்றுக் கொள்கின்றனர்.  ஆகவே எவருக்கெல்லாம் தூய ஆவியார் துணை வேண்டுமோ அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இதே கருத்தைத்தான் பேதுரு தூய ஆவியாரின் இருப்பைக் கொண்டு வாழ புதிதாக திருமுழுக்குப் பெற்றவர்களை அழைக்கிறார். வேத சாட்சியம் அளிக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் குறை காணுவதையோ, குற்றம், பழி சுமத்துவதையோ நாம் கொண்டிருக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார். மாறாக பணிவோடும், மரியாதையோடும், பேசவும் ஆண்டவரை அறிவிக்கவும்  அறிவுறுத்துகிறார். நன்மைக்காக துன்புறவும் தயங்கக் கூடாது.( 3:17)  என்று கூறுகிறார். ஆண்டவரை போல பாவம் எதுவும் செய்யவில்லை, அவர்கள் பழித்துரைத்த போது  எதிர்த்து பேசவோ, அச்சுறுத்தவோ இல்லை ( 1 பேது 2: 22‡23) என்ற  வாழ்வை நாம் வாழும் போது நாமும் தூய ஆவிக்குரிய இயல்பை கொண்டவர்களாய் வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறார். ஆவியார் நம்முள் செயல்படவும், ஆவியாரின் இயல்பை நாம் கொள்ளவும் அழைக்கும் வாசகங்களோடு, ஆண்டவர் இயேசு கூறும் துணையாளரின் உதவியை நாம் பெற முயற்ச்சி மேற்கொள்வது அவசியம். என்னை துன்புறுத்தியவர்கள் உங்களையும்  துன்புறுத்துவார் கள் ( மத் 10:24)  நானே துணையாக இருப்பேன்  (1 பேது 2: 1‡2) மற்றொரு துணையாளரை அனுப்புவேன் ( யோவா 14:16)  என்கிறார் ஆண்டவர். இந்த துணையாளர் கிரேக்க மொழியில் Pழிrழிவயிeமிலிவி என்ற வார்த்தையால் அழைக்கப்படுகிறார். ஸ்ரீழிrழி- வழியிeஷ்ஐ  என்று பிரித்து பார்க்கிற போது ‘பக்கத்திலிருந்து நம்மை அழைத்துக்கொண்டிருப்பவர்’என்று பொருள்படுகிறது. ஆகவே ஆண்டவர் இயேசு அனுப்புவதாகச் சொல்லும் இந்த  துணையாளர் நாம் அழைக்கிறபோது சிறப்பாக துன்பத்தில், வேதனையில், குற்றம் சுமத்தப்படுகையில், அடிமை படுத்தப்படுகையில் நம் பக்கத்தில் நிற்கிறார்.
ஆண்டவர் அளிக்கும் துணையாளர் நம்மோடு எப்போதும் இருந்தாலும், நாம் அவரது துணையை எப்போதும் நாடுகிறோமா? என்று சிந்திப்போம். பல நேரங்களில் உலகத் துணையை நாடும் நாம் அவரின் துணையை  நாடுவதில்லை. ஆனால் அந்தத் துணையாளர் நம்மோடு இருப்பது மட்டுமல்ல, 14:26இல் வாசிப்பது போல நமக்கு எல்லாவற்றையும் அறிவுறுத்துகிறார் என்பதையும் நாம் ஏற்க வேண்டும். ( 1 யேவா 2:1) வாசிப்பதைப் போல அவரின் துணையை நாடுவோருக்காக அவர் பரிந்து பேசுவார் என்பதையும் நாம் ஏற்று ஆண்டவரின் துணையாளரின் உதவியை நாடுவோம்.                            

No comments:

Post a Comment

Ads Inside Post