நான் எழுத்தாளன் ஆனேன்...
- லெயோ ஜோசப்
கச்சேரி தயார் செய்து வைத்திருந்தோம். ய்r. ஜார்ஜ் வந்தார். கூடவே ஜெர்மனியிலிருந்து ஒருவரும் வந்திருந்தார். ஃபாதர் ஞானப்பிரகாசத்தைக் கூப்பிட்டு, “பக்கத்திலிருக்கும் ஊர் எதிலாவது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்” என்று கூறினார்.
அவர் மலையடிப்பட்டியில் ஏற்பாடு செய்தார். மாலையில் எல்லாரும் வேனில் புறப்பட்டோம். ஒவ்வொரு நடனத்துக்கும் இடையில் நகைச்சுவையாக பேசுவேன். மக்கள் எல்லோரும் சிரிப்பபார்கள்.
“ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள்?” என்று ஜெர்மன்காரர் கேட்பார். Fr. ஜார்ஜ் நான் பேசியதற்கு விளக்கம் சொல்லுவார். அப்படியானால் எங்கள் நாட்டிலும் இந்நிகழ்ச்சியை நடத்துங்களேன். முக்கிய பகுதிகளில் நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார். இன்னொரு அம்மையார் வந்தார்கள். அவர்கள், “மற்ற பகுதிகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்கள். முடிந்தது, ஜெர்மனிக்கு கலைக் காவிரி நடனக்குழு போவது உறுதியாயிற்று. இப்போது நான் குழுவுடன் போவதா, வேண்டாமா என்பதில் பிரச்சனை எழுந்தது. நான் நன்றாக நடிப்பேன் என்பதால்,
நான் குழுவுடன் போக வேண்டுமென்பது பலரது விருப்பம். ஆனால், அச்சகத்திலும் ஒருவர் இருக்க வேண்டும். ஃபாதர் Fr. . ஜார்ஜ் சொன்னார். “லீமாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், ஒவ்வொரு சந்தேகத்தையும் ய்r. ஸ்தனிஸ்லாசைக் கேட்டுச் செய்ய வேண்டும். அவர் சற்று தூரத்தில் இருக்கிறார். ஆனால், லியோ ஜோசப் என்றால் கவலையே இல்லை. இயேசு காவியம் முழுவதும் அவருக்குத் தெரியும். எதிலாவது சந்தேகம் என்றால் அவரே சரி செய்துக் கொள்வார். 2 வாரத்துக்கு ஒரு தடவை அவர் குடும்பத்தை வந்து பார்த்து விட்டுப் போகட்டும்” என்றார். அப்படியே முடிவாயிற்று. அவர்கள் ஜெர்மனிக்குப் போனார்கள். நான் அச்சகத்துக்குப் போனேன்.
கண்ணதாசன் அமெரிக்காவுக்குப் போனார் ஜெனரல் செக்அப்புக்காக. அவரது குழந்தை விசாலி அப்போது ஐந்து வயது சிறுமி. அவரது போட்டோவைப் பாக்கெட்டில் வைத்து, கண்ணதாசன் அடிக்கடி பார்த்துக் கொள்வாராம். யார் அந்தச் சிறுமி? உடனே வரவழையுங்கள் என்று டாக்டர்கள் கூறி விட்டார்களாம். 3- வது மனைவியும் உடனே புறப்பட்டுப் போனார்களாம். Fr. ஜார்ஜ் அமெரிக்காவுக்குப் போனார். இயேசு காவியத்தில் அதுவரை அச்சாகியிருந்த பாரங்களை ஒரு புத்தகமாக எடுத்துப் போனார். கண்ணதாசனைப் பார்த்துத் அச்சாகி யிருந்த பாரங்களைக் காண்பித்தாராம். கண்ணதாசன்
தலையசைத்தாராம். “ஹிந்தியில்மொழிபெயர்க்கிறேன் என்கிறார்கள். அனுமதிக்கலாமா?” என்று Fr. ஜார்ஜ் கூறியிருக்கிறார். கண்ணதாசன் தலையை ஆட்டினாராம். தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் நோயாளியுடன் பேசுவதை மருத்துவமனை யின் தலைமை சகோதரி கவனித்திருக்கிறார். அவர் Fr. ஜார்ஜிடம் விசாரித்திருக்கிறார்.
“அவர் தமிழ்நாட்டின் பெரிய பொயட். இயேசுவின் வரலாற்றைக் கவிதையாக எழுதியிருக்கிறார்” என்று Fr. ஜார்ஜ் கூறியிருக்கிறார். உடனே ஒரு சிலுவையை தலைமாட்டில் மாட்டியிருக்கிறார் சகோதரி. அதன் பிறகு அவரைக் கவனிக்கும் பொறுப்பை சகோதரி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கண்ணதாசன் திடீரென்று மரணமடைந்தார். அங்குள்ள டாக்டர்களே சொன்னார்களாம், “இப்படி திடீரென்று போவார் என்று தெரிந்திருந்தால் கொஞ்ச நேரம் பேச வைத்திருக்கலாம்”என்று. தமிழகமே துயரத்தில் ஆழ்ந்தது.
Fr. ஸ்தனிஸ்லாசும், சந்திரமோகனும், நானும், டிராயிங் மாஸ்டரின் துணையுடன் ஒரு மலர் வளையத்தின் நடுவே, “இயேசு காவியம்” என்றெழுதி, கண்ணதாசனின் காலடியில் வைத்தோம்.
அமெரிக்காவிலிருந்து கேபிள் வந்தது, பாடி மேல் கெமிக்கல் அப்ளை செய்திருக்கிறோம். பல மாதங்களுக்குக் கெடாது. யாராவது தொட்டு விட்டால் உடனே சோப்புப் போட்டு கையைக் கழுவி விடுங்கள் என்று.
( இன்னும் சொல்வேன் )
No comments:
Post a Comment