Pages - Menu

Monday 1 May 2017

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 14-05-2017

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு
14-05-2017

 திப 6:1-7;-1 பேது 2:4-9;      யோவா 14:1-12   

ஒருவர் மீது  நம்பிக்கை இருந்தால், அவரிடம் பொறுப்புகளைக் கொடுப்பீர்.  இறைவன் மீது நம்பிக்கை இருந்தால், அவர்  வழியில் செல்வோம். இயேசு, “வழியும் உண்மையும்  வாழ்வும் நானே” என்கிறார்.  இயேசு, அவர் இறைமகன், மானிடமகன். தந்தையுடன் ஒன்றானவர். மனிதருடனும்  ஒன்றானவர். எனவே மனிதருக்கும்  இறைவனுக்கும் பாலமாக விளங்குகிறார். இரண்டாம் வாசகத்தில், “கிறிஸ்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர். அவரது உரிமை சொத்தான மக்கள்”  என்கிறார்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் நான்குமுறை“நம்பிக்கை” என்ற வார்த்தையும், ஏழுமுறை “தந்தை” என்ற வார்த்தையும், பயன்படுத்தப்படுகின்றன. நம்பிக்கை என்பது  இயேசுவும் தந்தையும்  ஒன்றாயிருப்பதை  ஏற்றுக்கொள்வது.  இயேசுவும் தந்தையும்  ஒன்றாயிருப்பதைப் போல, நாமும் இறைவனுடன்  ஒன்றான அனுபவத்தில் வாழ வேண்டும்.
இறைவனுடன் ஒன்றாயிருக்கும் ஆன்மீக அனுபவத்தால் ஏற்படும் விளைவு பற்றி இன்றைய முதல் வாசகப்பகுதி  பேசுகிறது. வேறுபாடுகள் இன்றி ஒன்றித்து வாழ்ந்த  முதல் கிறிஸ்தவ சழுதாயத்தில் வாழ்ந்த பிளவு வெடிக்கிறது. யூதர்களுக்கும்  கிரேக்கர்களுக்கும் வேறுபாடு உணர்வு உண்டாகிறது. கிரேக்க கைம்பெண்கள் சரியாகக் கவனிக்கப் படவில்லை என்பது குற்றச்சாட்டு. எனவே திருத்தூதர் சீடர்களை ஒன்று சேர்த்து பிரச்சனைக்கு முடிவுக் காண்கிறார்கள். புதிய அமைப்பை உருவாக்கு கிறார்கள். பந்தி பரிமாறும் பணியை செய்ய, “தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த எழுவரைத் தேர்ந்தெடுத்து”அவர்களிடம் அப் பணியை  ஒப்படைக் கிறார்கள். இந்நிகழ்ச்சியில் நாம் காண்பது  என்னவென்றால், அதிகாரத்தைத் தங்களிடம்  மட்டும் தக்கவைத்துக் கொள்ளும் பிடிவாத குணத்தைத் தவிர்த்து வாழ்கிறார்கள். திறந்த மனதுள்ளவர்களாக, பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்கிறார்கள். ஆன்மீக வாழ்வுதான் முக்கியம் என்று, இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள் திருத்தூதர்கள். துறவற வாழ்வில் கூட தற்போது, நிர்வாகத்தில் இருப்பவர்களும்,பணத்துடன் தொடர்புள்ளவர்களும்தான் சிறப்பாக பணியாற்று பவர்கள் என்ற கருத்து உள்ளது.
ஒருவர் தனது கதாகலாட்சபத்தில்   விளக்கினார். கணவன் ‡ மனைவிக்குள்ளாக கருத்து வேறுபாடு, கருத்து மோதல்கள் ஏற்பட  வேண்டும். ஆனால் அடுத்தநாள் ஒருவர் புன்னைகிக்க முன்வர வேண்டும்.ஒருவர் சமாதானம் செய்துக் கொள்ள முன் வந்தால், அதனால்  நாம் தோற்றுப் போகிறோமோ என்ற எண்ணம் உண்டாகும். அதனால்தான் நாம் இறங்கி வருவதில்லை.
இயேசுவின் உயிர்ப்பு ஒருவரின்  ஆன்மீகத் திற்கும், பணிவிற்கும் சீடர்களை அழைத்துச் சென்றது. நம்மிலும் அந்த பண்புகள் பதியுமானால்உயிர்த்த இயேசு நம்மில் வாழ்கிறார்.
             
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 
 பெருமிதம்  ஊர்ந்து விடல்           - (குறள்)

பெருமிதம் இல்லாததுதான் உண்மையான பெருமை என்கிறார் வள்ளுவர். 

No comments:

Post a Comment

Ads Inside Post