வெற்றி உங்கள் கையில் ...
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M. Ed; M.Sc; M.Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி,
சமயபுரம்
அது பெரிய மருத்துவமனை. நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டிருந்தது. அம்மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால் அங்குள்ள பணியாளர்கள், மருத்துவர்கள் அவ்வளவு ஆர்வமாக செயல்படுவர். நோயாளிகளை அவர்கள் அன்புடன் கவனிப்பதிலேயே நோயாளர்களின் நோய்கள் பாதி தீர்ந்துவிடும். அங்குள்ள பணியாளர்கள் அவ்வளவு ஆர்வமாக பணிசெய்ய என்னக் காரணம் என்று எல்லோரும் அதிசயத்தினர். அங்கு புதைந்திருந்த இரகசியம் இதுதான். மருத்துவமனையின் தலைவர், பணியாளர் ஒவ்வொருவரையும் அவரின் பிறந்த நாளில் சந்தித்து, வாழ்த்துக்களையும், பரிசுகளையும் கொடுப்பார். இன்னும் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளைத் தெரிந்துக் கொண்டு, தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்வார். பணியாளர் ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற கொள்கையில் செயல்படுவார்.
அதேபோல, பெங்களூரில் ஒரு புகழ் பெற்ற பொறியாளர், தான் சம்பாதிப்பதையயல்லாம் தன் பணியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். தனக்கென எதுவும் சேர்த்து வைப்பதில்லை. எனவே பணியாளர்கள் ஆர்வமுடன் பணிசெய்வர். அவரது தொழில் பலுகியது, பெருகியது.
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதோடு பிறரையும் மகிழ்ச்சி அடையச் செய்வதுதான் வெற்றியாளனுக்கு உரிய பண்புகளில் ஒன்று.
குடும்பத்தில், அப்பா, தான் அணிந்து கொள்ள நல்ல உடைகள் இல்லாவிட்டாலும், அறுந்துபோன செருப்புகளை பயன்படுத்தினாலும், பழைய சைக்கிளில் பயணம் செய்தாலும் தன் மகன் புத்தாடை உடுத்தி, றீஜுலிe போட்டுக்கொண்டு ளீழிr ‡ ல் நுக்ஷூக்ஷூஷ்உe - க்கு போகும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அம்மா தன்னுடைய வசதி, வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு தன் மகள் படித்து பெரிய வேலைக்கு சென்று மகிழ்ச்சியோடு வாழும்போது அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இப்படி பிறரை மகிழ்ச்சிப்படுத்தும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, கணவன், மனைவி அனைவருமே வெற்றியாளர்களே. ஆகவே, உலகில் வாழும் அனைவரும் தம் மகிழ்ச்சியோடு பிறரையும் மகிழ்ச்சிக்கடுத்துகின்றபோது வெற்றியாளர்களாக உருவாகிறார்கள். Hello!எங்க கிளம்பீட்டிங்க? பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வெற்றியாளராக மாறவா? All the very best.
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை
‡‡ சார்லி சாப்ளின்
No comments:
Post a Comment