“தாழி மாண்டதை மீட்போம்”
(ஓர் இலக்கியக் கட்டுரை)
அருட்சகோதரி. விமலி,
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
அன்பும் அறிவும் நிறைந்த என் அருமை நெஞ்சத்தீரே!... வணக்கங்கள்.
என் பெயர் தாழி!
திடுமெனப் பார்க்கும் பிறருக்கும், புத்தம் புதியவளாகத் தோன்றினாலும் நான் மிகமிகப் பழமையானவள்!... மேலும் மிகமிக மூத்தவள்!... இச்செய்தியை இவ்வுலகம் நன்கு அறியும்!
என் காலமோ ஆயிரம் ஆண்டுகள்தாம் என்கின்றனர் சிலர்! 3000 ஆண்டுகள், 5000 ஆண்டுகள், 10,000 ஆண்டுகள் என்றவாறு வேறுவேறு காரணங்கள் கூறி, மாறுபட்டும், கூறுபட்டும் கருத்துரைத்து வருகின்றனர் சிலர்! ஆமாம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலையிலாக!...
இவையாவற்றையும் தாண்டி மிகப் பல தலைமுறைகளுக்கும் மிக முன்னேயே உருவாகி ‡ பயனாகி ‡ நிறைவாக நிலைத்து நிற்பவள் நான்!...
இம்மண் நிரம்பவும் நன்மனம் நிரம்பியவராய் முந்தி வாழ்ந்தவர்கள் ‡ நான் வீழாது உயர்ந்திருக்கும், உருநிலைத்திருக்கும் இடங்களிலெல்லாம் நிலைத்து வாழ்கின்றார்கள். மிகப் பல்லாயிரம் ஆண்டுகள் காலப் பழமையினால், மிகப் பல இடங்களில், நான் மண்ணோடு மண்ணாகிப் போனேன்! அவர்களும் என்னோடு மண்ணாகி மட்கிக் கரைந்து மறைந்தனர்!
தாழிய பெருங்காடு என்றவாறு, புறநானூற்றுள் 364 ஆம் பாட்டினுள் 13 ‡ ஆம் வரியுள் வரும் வரலாற்று பதிவுத் தொடர் ‡ பண்டைய புதைப்பு முறை நெறிவழக்கையும், செயற்பாட்டுப் பெரும்பரப்பையும் தெரிவிப்பதாகும்.
பிறப்பு எப்படி இயல்பானதோ ... அவ்வாறே இறப்பு என்பதும் இயல்பான நிகழ்ச்சிதானே! ... பிறந்த உயிரிகள் ஒவ்வொன்றும் உரிய கால இறுதியில் இறப்பனவே! இறந்து தீர்வனவே!
எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டவைதாம் என்னும் இயற்கைப் பெரு நெறிக்கு இந்த பிறப்பும், இறப்பும் உட்பட்டனவே. என்றேனும் ஒருநாளில் நாம் இறப்பது உறுதி என்னும் மெய்த் தெளிவை அனைவர்க்கும் உருவாக்குதற்கு அவ்வக்கால அறிஞர் பெருமக்களும் “நிலையாமை” பற்றி மிக நிரம்ப எடுத்துரைத்திருக்கின்றார்கள்!
என் பெயர் தாழி என்றவாறு மிகப் பண்டைய நம் முதுமுன்னோர் சுட்டியுள்ளமையுள். அதாவது சுட்டிக் குறிப்பிட்டுள்ளமையுள் அமைந்துள்ள மொழியியல் உண்மைகள் சிலவற்றை உங்களுக்கு நான் விளக்க விரும்புகின்றேன்!
“தாழ்தல்” என்னும் சொல்லுக்குக் “கீழிருத்தல்” என்பது பொருளாகும்! பள்ளம் பறித்து - அதாவது ஆழ்ந்த குழியினைத் தோண்டி அதனுள்ளாக அடலினை இட்டு மூடிப் பொந்தியிருக்குமாறு அமைப்பதற்குப் பெறும் பெரிய மண்கலம். இத்“தாழ்தல்” என்னும் கருத்தின் அடிப்படையில் தாழ்+இ = “தாழி” என்றவாறு குறிப்பிடப் பெற்றுள்ளது! அப்படியாக நான் குறிக்கப்பட்டுள்ளேன்.
நிலைபெறுமாறு உள் அமையும்படியும் - தாழ் நிலையாகிக் கீழமைந்திருக்கும்படியாகவும் நின்று புதைப்புக்கெனப் பயன்பட்ட “தாழி” என்னும் நான் பிணத்தை உள்ளடக்கிக் கிடத்தற்கெனவே உருவாக்கப்பெற்ற பண்டைய மண்கலம் ஆவேன்! அதாவது ஆனேன்!
இறந்த உடலினை உள்ளிட்டு மூடிப் புதைக்கப் பயன்பெற்ற “தாழி” என்னும் பெயரில் என் மண்கல வகை - பிற பயன்பாடுகளுக்கும் காலச் சுழற்சிக்கிடையே மாந்தர் வாழ்வில் மேற்கொள்ளப் பெற்றுள்ளது.
உள்ளே வைத்து மூடப்பெறாத “தாழி” என்பதே இல்லை! எல்லாம் மூடப்பெற்றவைதாம்! அனைத்தினுள்ளும் பெரும் பண்பும் பேரறிவும் உயிரினுக்கும் அன்பு உணர்வும் வாய்த்திருந்த நம் முன்னோர் அடக்கம் செய்யப்பெற்றுள்ளனர். கடுங்களிமண் சேற்றுக் கட்டியை எடுத்து உருண்டையுருவாக உருட்டிக் கொண்டு அவ்வுருண்டையை மெல்ல மெல்லக் குடைந்து உட்பகுதி மண்ணைத் தோண்டியயடுத்துக் காயவைத்துப், பின்னர் விறகு செத்தைச் சருகுகளால் மூடித் தீயிட்டு வேக்கித் திடமான குடமாக வெளியிலெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் மாந்தர் நம் மூதாதையர் என்னும் உண்மையை, உலகினர் அனைவரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்!
‘குடம்’ என்னும் சொல்லே, குடைதல் எனும் வினைக் கருத்து அடிப்படையில் தோன்றியுள்ளது! “குழிசி” என்றவாறு பானையைக் குறித்து வழங்கிய தமிழ்ச்சொல்லும் குழிப்படுத்திய, மட்கலம் (பொருள்) என்னும் சொல்லுக்குள்ளும் அடிப்படையாகக் கொண்டதுவே! “கலம்” என்னும் சொல்லுக்குள்ளும் கல்லுதலாகிய தோண்டுதல் கருத்தே உட்கருவாகக் கிடக்கின்றது! “தோண்டி” என்னும் பொது மக்கள் பயன்பாட்டுப் பரவற் சொல்லுக்குள்ளும், உலகிலேயே முதன் முதலில் கலத்தினை ‡ அதாவது மண்கலத்தினைச் செய்து பயன்படுத்தியவர் நம்முடைய முன்னோரே என்னும் மட்கிக் கரைந்து மறைந்தனர்!
தாழிய பெருங்காடு என்றவாறு, புறநானூற்றுள் 364 ஆம் பாட்டினுள் 13 ‡ ஆம் வரியுள் வரும் வரலாற்று பதிவுத் தொடர் ‡ பண்டைய புதைப்பு முறை நெறிவழக்கையும், செயற்பாட்டுப் பெரும்பரப்பையும் தெரிவிப்பதாகும்.
பிறப்பு எப்படி இயல்பானதோ ... அவ்வாறே இறப்பு என்பதும் இயல்பான நிகழ்ச்சிதானே! ... பிறந்த உயிரிகள் ஒவ்வொன்றும் உரிய கால இறுதியில் இறப்பனவே! இறந்து தீர்வனவே!
எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டவைதாம் என்னும் இயற்கைப் பெரு நெறிக்கு இந்த பிறப்பும், இறப்பும் உட்பட்டனவே. என்றேனும் ஒருநாளில் நாம் இறப்பது உறுதி என்னும் மெய்த் தெளிவை அனைவர்க்கும் உருவாக்குதற்கு அவ்வக்கால அறிஞர் பெருமக்களும் “நிலையாமை” பற்றி மிக நிரம்ப எடுத்துரைத்திருக்கின்றார்கள்!
என் பெயர் தாழி என்றவாறு மிகப் பண்டைய நம் முதுமுன்னோர் சுட்டியுள்ளமையுள். அதாவது சுட்டிக் குறிப்பிட்டுள்ளமையுள் அமைந்துள்ள மொழியியல் உண்மைகள் சிலவற்றை உங்களுக்கு நான் விளக்க விரும்புகின்றேன்!
“தாழ்தல்” என்னும் சொல்லுக்குக் “கீழிருத்தல்” என்பது பொருளாகும்! பள்ளம் பறித்து - அதாவது ஆழ்ந்த குழியினைத் தோண்டி அதனுள்ளாக அடலினை இட்டு மூடிப் பொந்தியிருக்குமாறு அமைப்பதற்குப் பெறும் பெரிய மண்கலம். இத்“தாழ்தல்” என்னும் கருத்தின் அடிப்படையில் தாழ்+இ = “தாழி” என்றவாறு குறிப்பிடப் பெற்றுள்ளது! அப்படியாக நான் குறிக்கப்பட்டுள்ளேன்.
நிலைபெறுமாறு உள் அமையும்படியும் - தாழ் நிலையாகிக் கீழமைந்திருக்கும்படியாகவும் நின்று புதைப்புக்கெனப் பயன்பட்ட “தாழி” என்னும் நான் பிணத்தை உள்ளடக்கிக் கிடத்தற்கெனவே உருவாக்கப்பெற்ற பண்டைய மண்கலம் ஆவேன்! அதாவது ஆனேன்!
இறந்த உடலினை உள்ளிட்டு மூடிப் புதைக்கப் பயன்பெற்ற “தாழி” என்னும் பெயரில் என் மண்கல வகை - பிற பயன்பாடுகளுக்கும் காலச் சுழற்சிக்கிடையே மாந்தர் வாழ்வில் மேற்கொள்ளப் பெற்றுள்ளது.
உள்ளே வைத்து மூடப்பெறாத “தாழி” என்பதே இல்லை! எல்லாம் மூடப்பெற்றவைதாம்! அனைத்தினுள்ளும் பெரும் பண்பும் பேரறிவும் உயிரினுக்கும் அன்பு உணர்வும் வாய்த்திருந்த நம் முன்னோர் அடக்கம் செய்யப்பெற்றுள்ளனர். கடுங்களிமண் சேற்றுக் கட்டியை எடுத்து உருண்டையுருவாக உருட்டிக் கொண்டு அவ்வுருண்டையை மெல்ல மெல்லக் குடைந்து உட்பகுதி மண்ணைத் தோண்டியயடுத்துக் காயவைத்துப், பின்னர் விறகு செத்தைச் சருகுகளால் மூடித் தீயிட்டு வேக்கித் திடமான குடமாக வெளியிலெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் மாந்தர் நம் மூதாதையர் என்னும் உண்மையை, உலகினர் அனைவரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்!
‘குடம்’ என்னும் சொல்லே, குடைதல் எனும் வினைக் கருத்து அடிப்படையில் தோன்றியுள்ளது! “குழிசி” என்றவாறு பானையைக் குறித்து வழங்கிய தமிழ்ச்சொல்லும் குழிப்படுத்திய, மட்கலம் (பொருள்) என்னும் சொல்லுக்குள்ளும் அடிப்படையாகக் கொண்டதுவே! “கலம்” என்னும் சொல்லுக்குள்ளும் கல்லுதலாகிய தோண்டுதல் கருத்தே உட்கருவாகக் கிடக்கின்றது! “தோண்டி” என்னும் பொது மக்கள் பயன்பாட்டுப் பரவற் சொல்லுக்குள்ளும், உலகிலேயே முதன் முதலில் கலத்தினை ‡ அதாவது மண்கலத்தினைச் செய்து பயன்படுத்தியவர் நம்முடைய முன்னோரே என்னும் உண்மையும் புதைந்து கிடக்கின்றமையை சற்றே உற்று எண்ணினாலும் உணரமுடியும்! ... “தாழி” என்னப்பெறும் என்னுடைய கலவகையில் பதின்மூன்று எண்ணிக்கையிலான மண்கலப் பெயர் வகைகள் இன்றைய தமிழக மக்களின் பேச்சு வழக்கிலும், மரபுத் தொடர்ச்சிகளைப் பதிவு செய்து வைத்துள்ள இலக்கிய வழக்கிலும், தொல்லியற்பதிவு வழக்கிலும், பரவலான பதிவுகளாக நின்று பயன்பாடு கொண்டுள்ள உண்மையை, உலகினர் யாவரும் உணர்தல் வேண்டும்!
இவ்வழக்காறுகளுள் ஒன்றான “ஈமத்தாழி” என்றவாறு தொன்முதுகாலத்திலேயே சுட்டப் பெற்றவளான நானே, இன்று பண்டைப் பழம், பழைய புதைவிலிருந்து வெளிவந்து நிலைநின்று உங்கள் சிந்தனைக்கென, எண்ணத்திற்கென - கருத்திற்கெனச் சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றேன்!
பெருமைக்குரிய அன்பு மாந்தர்களே! இதனை நன்றாக நினைவில் நிறுத்துங்கள்! இலட்சக்கணக்கான பெரும்பெருஞ் சான்றோர்கள், ஆன்ற அறிஞர்கள், அறிவியல் நோக்கார்ந்த நுண்ணியர்கள், அறநெறியில் நிலைநின்று வாழ்வியல், உலகியல் பற்றிய கருவுண்மைகளைக் கண்டறிந்து, அம் மெய்ம்மங்களைக் கண்டறிந்து, வெளிப்படுத்திய முனைவர்கள் என்றவாறு, மிகப் பெரும்பாலோர் ஆகிய நம் முதுமுன்னோர்கள், என் போன்ற தாழிகளுக்குள்தான் அடக்கமாயினர்!
அவர்கள் அனைவரும் - தம் பிறங்கடையினராகிய நாம், நலமும் வளமும் மனச்செழுமையும் உடையோராகச் சிறந்து வாழ வேண்டும் என்று நினைத்து, உய்ந்து மேம்படுதற்கெனப் படைத்தளித்த அறிவுக் களஞ்சியங்களை மதிப்போடு பயன்படுத்தினோமா? ... அவர்களின் நாகரிகப் பாங்குகளை, அவர்கள் மேற்கொண்டொழுகிய பண்பாட்டு முறைகளை, நாம் நம் வாழ்க்கையில் மேற்கொள்ளுதற்குச், சற்றேனும் முயற்சி மேற்கொண்டோமா? அவர்களின் நோக்கங்களை எண்ணிப் பார்த்தோமா? நாம் எதனையுமே செயற்படுத்த முனையவில்லையே! அவை பற்றியயல்லாம் சிந்திக்கவே நமக்கு நேரமில்லாது போயிற்றே! ...
நம் பண்டைய மாட்சிமையை நாம் உணருவது எப்போது? ... நம் மறத்தை ‡ அறத்தை - மாண்பை - மானத்தை - ஈகைப் பேருணர்வைத் தெளிவாக உணர்வது எப்போது? ...
உங்களின் பெருமைக்குரிய திறமும், அறமும் செறிந்த முதுமுன்னோர்களைச் சுமந்து புதைபட்டுக் கிடக்கும் தாழிகளாகிய, ஈமப் பேழைகளின் சார்பாகப், புத்துணர்வு, எழுச்சியுடனும் பண்டைப் பழைய வீரவுணர்வுடனும், தெளிவார்ந்த உணர்வுப் பெருக்கம் வாய்ந்த, நல்லூக்கத்துடனும், வேட்கையுடனும் செந்நிறத் தாழியாகிய நான் உங்கள்முன் ஒரு நம்பிக்கையுடன் நிலைநிற்கின்றேன்! ...
“என்னுள் புதைந்திருக்கும்
அரிய பல செய்திகளையும்ஆழமிகு சவால்களையும்
அழுத்தமிகு சாத்தியங்களையும்
தோண்டி யயடுப்பது ...!
தேடி ... பெறுவது
என்பதே என்றும் வலிமையானது”.
நன்றாக உள்ளது.
ReplyDeleteஇக்கட்டூரையின் மூலம் பழந்தமிழரின் வாழ்வியலை அறிந்துக்கொள்ள முடிகிறது.
ReplyDelete