Pages - Menu

Sunday, 3 April 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை, பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 03 - 04 - 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை

அருட்பணி. சி. குழந்தை, காணியிருப்பு

                      பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு            03 - 04 - 2016

 தி.ப. 5 : 12 - 16,  திவெ 1 : 9 - 11அ, 12 - 13, 17 - 19 , யோவா 20 : 19 - 31

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அன்று தமிழ்த் தாய்மார்களிடம் ஒரு நல்லப் பண்பு இருந்ததாம். தம் மகன்களை போருக்கு அனுப்பும்போது நெற்றியில் வெற்றித்திலகமிட்டு அனுப்பி வைப்பர். நெஞ்சில் பாய்ந்த ஈட்டிகளோடு வீடு திரும்கிய மகன்களை மீண்டும் வெற்றித்திலகமிட்டு வரவேற்பர். முதுகில் அடிபட்டு வந்தவர்களை மீண்டும் போர்க்களத்துக்கே அனுப்பி வைப்பர்.
உலகமெல்லாம் அமைதிக்காக ஏங்கிக் கிடக்கிறது. உலகில் உண்டான போர்களினால் அமைதியை நிலை நாட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம். உண்மையான அமைதியை அளிக்கவல்லவர் உயிர்த்த இயேசு மட்டுமே. தான் உயிர்த்தபின் தன் சீடர்களுக்கு முதற் கொடையாக வழங்கியது அமைதி, அமைதியின் ஊற்றான தூய ஆவியார். தூய ஆவியாரின் அருளில் உருவான மன்னிப்பு. மன்னிப்பு அளித்தவர் புனித தோமாவையும் மன்னித்து திடப்படுத்தினார்.
யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருக்கையில் இயேசு தோன்றி, உங்களுக்கு அமைதி உண்டாகுக என்றார். சீடர்கள் தங்களையே பயத்தில் சிறைப்படுத்திக் கொண்டனர். பயம், வெட்கம், துரோகம் ‡ இவைபோன்ற குற்ற உணர்வுகள் அவர்களைத் தலைகுனியச் செய்து கூடத்திலே முடக்கிப் போட்டிருந்தது. ஒருவர் மறுதலித்து இருந்தார், மற்றவர்கள் புறமுதுகுக் காட்டி ஓடியவர்கள். இந்தப் பின்னணயில் தான் உயிர்த்த ஆண்டவர் அவர்களுக்குத் திடம், துணிவு, மன்னிக்கப்பட்டதன் உணர்வு, இய¼சுவின் ஏற்பு ‡ இதை சீடர்களின் இரண்டாவது அழைத்தல் எனலாம். இவைகளின் ஊற்றான தூய ஆவியார் ‡ போன்ற கொடைகளை வழங்கினார்.
இந்த அமைதியை ­லோம் என்ற எபிரேயச் சொல் குறிக்கிறது. ­லோம் என்ற வார்த்தை எல்லா நன்மைகளாலும் இணைந்து அதனால்வரும் கறைபடாத, களவாடமுடியாத அமைதியைக் குறிக்கிறது. இந்த அமைதியை பொன்னும், பொருளும், பெண்ணும், புகழும், பதவியும் கொடுக்க இயலாது. இறைவன் மட்டுமே ‡ கொடுக்க முடியும். எனவேதான் ஆண்டவர் இயேசு தன் உயிர்ப்பின் முதற் கொடையாக அமைதியை அளித்தார். எனவேதான் திருப்பலியில் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் என உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே என்று நினைவு கூறுகிறோம். இஸ்லாமியச் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் என்ற வார்த்தையைச் சொல்லித்தான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
உலகின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அமைதியின் சூழலில்தான் உருப்பெற்றன. அமைதியான சூழலில்தான் தெளிவுகள் பிறக்கும். தீர்மானங்கள் தெளிவுபெறும். கோபம், வர்மம், வைராக்கியத்தோடு களத்தில் எவர் பணியாற்றினாலும் பலன் தரமுடியாது. எனவேதான் ஆண்டவர் இயேசு தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகையில், யூதர்களையும் மன்னித்து, பயமின்றி பணியாற்றுங்கள் என்று சொல்லி அனுப்பினார். தன் நெஞ்சில் ஈட்டி ஊடுருவிய காயத்தழும்பையும் தோமாவுக்கு காண்பித்து, தானும் அவர்களை மன்னித்த உணர்வோடு புறப்படச் செய்தார். தூய ஆவியாரின் துணை கொண்டு, தொடர் துயர்களையும் வெல்ல முடியும் என தூய ஆவியாரை அவர்களுக்குக் கொடையாக வழங்கினார். யூதர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்த போது இந்த ஆவியார்தான் அவர்களை வெற்றிப் பாதையில் வழி நடத்தினார். இவர்களின் இத்தகைய செயல்பாட்டை முதல் வாசகம் தெளிவாகவே விளக்கிப் பேசுகிறது. அஞ்சாமல் பணியாற்றும் பண்பைத்தான் இரண்டாம் வாசகமும் விவரிக்கிறது. தூய ஆவியாரின் துணையோடுதான் யோவான் பணியாற்றியதாக இரண்டாம் வாசகத்தில் விளக்கினார். நாமும் பயமற்ற மனநிலையில் பணியை ஆற்ற அழைக்கப்படுகிறோம்.



No comments:

Post a Comment

Ads Inside Post