Pages - Menu

Tuesday, 26 December 2017

கந்து வட்டி மோசடிகள்

கந்து வட்டி மோசடிகள்

கந்து வட்டி மோசடிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக் கொண்டிருக் கிருக்கின்றன. நாள் வட்டி, மீட்டர் வட்டி, குதிரை வட்டி என்று அநியாயமாக ஏழை மக்களின் பணத்தை சுரண்டி பணக்காரர் ஆகின்றனர். கடன் வாங்கியவர் பணம் கட்ட முடியாமல் தீக்குளிப்பதும், தற்கொலை செய்துக் கொள்வதும் நடைபெறுகின்றன. எல்லாம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பால் நடை பெறுகின்றன.
நான் கோவையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஓர் அம்மையார் காய்கறி வியாபாரம் செய்தார். 50 ரூபாயை கடனாக வாங்கி காய்கறி வாங்கி வீதிகளில் சுற்றித் திரிந்து காய் கறி விற்று, அன்றைய தினம் வாங்கிய கடனுக்கு 50 ரூபாய் வட்டியும், 50 ரூபாய் முதலும் கட்டுவார். இந்த அநியாயத்தை கேள்விபட்டு பேங்க் முதல்வரிடம் அப்பெண்ணுக்கு சிபாரிசு செய்தேன். 500 ரூபாய் கடனாக அப்பெண்ணுக்கு குறைந்த வட்டியில் கொடுத்தார். அந்த பெண் அந்த 500 ரூபாயை தம் மகளின் காதணிவிழாவிற்கு செலவழித்த பிறகு மீண்டும் 50 ரூபாய் கந்து வட்டிக்கு

இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா

இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா
புத்தாண்டு  விழா  ஜனவரி - 1, 2018
எண் 6:22-27, கலா 4,4-7, லுVக் 2,16-21

அருட்பணி.  பு. சிரில் ரிசர்ட் கிருபாகரன்

இன்று அன்னையாம் திருச்சபை கன்னிமரியாள் இறைவனின் தாய் என்கின்ற மறைப்பொருளையும், புத்தாண்டு தினத்தையும் சிறப்பிக்கின்றது. கன்னி மரியாள் இறைவனின் தாய் என்கின்ற நம்பிக்கைக் கோட்பாடு கி.பி.451 இல் எபேசு பொதுச்சங்கத்தில் கிறிஸ்துவின் மனித இயல்பிலும், இறையியல்பிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்டது. இந்த நம்பிக்கைக் கோட்பாட்டின் வழியாக தப்பறை கொள்கைகளை அகற்றி திருச்சபையின் வாழ்வை வளமையாக்கிய தினம் இன்று. ‘இலையுதிர் காலம் என்பது மரணமல்ல. இன்னொரு தயாரிப்புக்கான தொடக்கம்.  அஸ்தமனம் என்பது மறைவு அல்ல. இன்னொரு உதயத்திற்கான பதுக்கம்,’ என்ற வைரமுத்துவின் வார்த்தைகளைப் போல, இலையுதிர் காலம் போலவும், அஸ்தமனம் போலவும் 2017 ஆம் ஆண்டில் நடந்த நன்மை, தீமை அனைத்தும் மறைந்து, புதிதாக துளிர்த்துள்ள, புதிய உதயமாகிய 2018 ஆம் ஆண்டில் இறைவன் நமக்குக் கொடுக்கும் இன்னொரு வாய்ப்பை இரு கரத்தோடு வரவேற்போம்.

ஏவாள் என்கின்ற முதல் பெண்ணின் வழியாக பாவம் ஆட்சி செய்யத் தொடங்கினாலும், அன்னை மரியாள் என்கின்ற புதிய ஏவாள் வழியாக அருள் ஆட்சி செய்ய கடவுள் வழி வகுத்தார். இத்தகைய அளப்பெரிய அன்னையின் உதவியினால்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கலா 4.7இல் வாசிப்பது போல ‘நாம் அனைவரும் கடவுளுக்குரிய பிள்ளைகள் என்கின்ற அருள்நிலையை பெறுகிறோம்.’இத்தகைய பிள்ளைகளின் வாழ்வு எப்பொழுதும் பிறருக்கு வாழ்வு கொடுகின்ற, வெளிச்சம் கொடுக்கின்ற அற்புத ஜோதியாக மிளிர வேண்டும். நம் வாழ்நாளில் பல புத்தாண்டு கொண்டாட்டங்கள் வந்து போகலாம். பல சூளுரைகளுடனும், உறுதிமொழி களுடனும், உத்வேகத்துடனும் ஆரம்பிக்கும் புதுவருடம் சில  ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தளரா மனத்துடன் ஓடினோம் என்கின்ற எண்ணம் மேலோங்கும் பொழுதுதான் வெற்றி பரிசை சுவைக்க முடியும்.

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில் பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கின்றார்கள். அவற்றைத் தங்களுடைய அசாத்திய மனப்பாங்காலும், திடமான தன்னம்பிக் கையாலும் அயராத முயற்சியினாலும் தோல்விகளை முறியடித்து தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியை சுவைத்திருக்கிறார்கள். நிறைய சிந்தனை செய்து, குறைவாகப் பேசி, துல்லியமாகத் திட்டமிட்டு, கவனத்தோடு செயல்படுகின்ற மனப்பக்குவம் நமக்கு வேண்டும். தமிழருவி மணியன் அழகாக சொல்வார், ‘மரணமில்லா பெருவாழ்வு, நோயின் நிழல், தீண்டாத உடல் நலம், கட்டுப் பாடற்ற சுதந்திரம், துன்பமில்லாத இன்பம் முரணும் மோதலுமற்ற சமுகச்சூழல் அமைய வேண்டும் என்பது எல்லா மனிதர்களின் ஆசை. நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை.’ எந்த சூழ்நிலையிலும் நிறைவான மனம், கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை, பிறர் நலம் பேணும் செயல்கள் இவையே நம் சந்தோசத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. பூத்திருக்கும் புத்தாண்டில் புதிய முயற்சிகள், புதிய உறுதிமொழிகள், புதிய வாழ்க்கை, புதிய பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

Tuesday, 5 December 2017

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

சகோ. விமலி FHIM. இதயா கல்லுVரி, குடந்தை

வானதூதர்கள் வாழ்த்துப் பாட
வாஞ்சையோடு வந்த நிலவே
எளிய வாழ்வை எடுத்தியம்ப
இடையர்கள் இதயம் நனைய
இனம்புரியா இன்பம் அடைய
மரியின் மடியில் தவழ்ந்தாயே
மாசேதும் இன்றி மிளிர்ந்தாயே

மகிழ்ச்சி பிறக்க, அமைதி பிறக்க, மனித இதயங்களின் இயேசு ஆண்டவர் நமது இல்லக் கோவிலுக்குள் பிறக்கப்போகிறேன் என்றார். வலிமை பிறக்கும் ‡ இறைவலிமை பிறக்கும் (எசா 9:6) அருள் பிறக்கும் ‡ மீட்பரின் அருள் பிறக்கும் என்று எத்தனை ஆண்டுகளாக நாம் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிறோம். உலகில் பிறப்புகள் அத்தனையும் இறைவனின் கை வண்ணமாகத் திகழ்கின்றன. சிலரின் பிறப்பு  உலகிற்கு அழிவைத் தருகிறது. எனவேதான் நாம் சிலரைப் பார்த்து, ‘இம்மனிதர்  பிறவாமல் இருந்தால் நலமாய் இருக்குமே’ என்று சொல்கின்றோம் (கிட்லர், யூதாஸ், இன்றைய அரசியல் தலைவர்கள்).  சிலரது  பிறப்பு இவ்வுலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கியதால் ( ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, புனித அன்னை தெரசா, அருளாளர் இராணி மரியா...) நாம்   “இவர்களைப் போல் எல்லோரும் இருந்தால் இவ்வுலகம் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்” என்றும் சொல்கிறோம். ஆக, மனிதரின் பிறப்பு அவர்கள் வாழும் வாழ்வின் அர்த்தத்தைக் கொண்டுதான் புகழவோ அல்லது இகழவோப்படுகிறது. இவ்வுலகில் கடவுளாக வணங்கப்படுகிறவர்களில், இயேசு பெருமானின் பிறப்பு மட்டுமே மனித  குலம் முழுவதும் அமைதியின் அரசரை எதிர்நோக்கியிருந்தது என்று விவிலியம் சுட்டுகிறது.

  உயிரானார்

காலம் காலமாய் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் உழல்வதை அறிந்த  இறைவன் அவர்களின் கூக்குரலுக்குச் செவிகொடுத்து, மனித உருவில் தோன்றினார் (பிலி 2:7).  நன்மையே நிறைந்த இறைவன் பாவிகளின் உடல் எடுத்தார். நம்மைப் போலவே வாழ்ந்தார். எனவே அவருக்கு மனிதரின் பசி தெரியும். மனிதர்களின் வேதனையும் துன்பமும் தெரியும். அன்புள்ள மனிதராக எப்போதும் வாழ்வது கடினம் என்று நினைக்கின்ற நமக்கு, அவர் வாழ்ந்து காட்டினார். பாவமில்லாமல் பிறந்து, பாவம் செய்யாமலே  வாழ்ந்து, பரிவோடு மனித உயிரானவர். உயிரை இழந்தவர்களுக்கு உயிரளித்தார். (லாசர், நயின் நகர் கைம்பெண் மகன்). இவ்வாறு மனிதர்களின் மாண்பை உயர்த்தினார். அனைத்திலும் நன்மையையே நிறைந்து அனைத்திலும் முழுமையாய் விளங்கிய கடவுள், மனித உயிரெடுப்பது இவ்வுலக மக்கள் அனைவரின் சிறப்பே. அவர்  மண்ணில் மனிதராக  உயிரெடுத்தது மனித குலத்திற்குப் பெருமை  சேர்த்தது.

 உணவானார்

முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் விழாக்காலங்களில் சிறப்பான உணவை நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டாடுவதை விவிலிய வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. உணவு இஸ்ரயேல் மக்களின் பழக்க வழக்கத்தையும், விடுதலை வாழ்வையும் எடுத்தியம்புகிறது. இச்சூழலில் இயேசுவின் பிறப்பு இஸ்ரயேல் குலத்தில் நிகழ்ந்தேறுகிறது. அது மாட்டுக் கொட்டகையில் நிகழ்கிறது. மீட்பின் வரலாற்று நாயகனின் பிறப்பு விலங்குகளின் மத்தியில் நிகழ்கிறது (லூக் 2:12). ஆடு மாடுகள் தங்களுக்கான இரையை உட்கொள்ளும் தீவனத் தொட்டியில் இயேசு கிடத்தப்படுகின்றார். அவர் வாழ்ந்தபோதும் மக்களுக்கு உணவை வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இறைவார்த்தை கேட்க வந்த மக்கள் திரும்பிச் செல்லுகின்றபோது பசியோடு செல்வார்களே என்று அவர்கள் மீது பரிவு கொண்டு உணவு வழங்கினார் என்று நற்செய்தி நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. அவர் ஆன்மீகப் பசியையும் ஆற்றினார். உடல் பசியையும் ஆற்றினார். இவ்வாறு எல்லோருக்கும் உணவானார். “மரம் கனியால் அறியப்படுவது போல ஓர் ஆள் அவருடைய செயல்களால் விளங்குவார்”. நல்ல செயல் எதுவும் வீணாகாது. நமது வாழ்வில் மனித நேயச் செயல்களால் பிறரின் வாழ்வு சிறப்படைய வேண்டும். இந்தியாவில் 30 கோடி மக்கள் ஒருவேளை உணவில்லாமல் அன்றாடம் உறங்கச் செல்கிறார்கள் என்பது தெரிவதில்லை. உடல் பசி கொண்டவர்களுக்கு உடல்பசியைப் போக்கும் கருவியாகவும், சாதியக் கொடுமைகளை அனுபவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு விடுதலை பசி போக்கும் கருவியாகவும், உரிமைக்காகப் போராடும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிமை வழங்கும் கருவியாகவும், இயேசுவின் பிறப்பு என்ற இவ்வுணவு அமைய வேண்டும். எனவே உணவான இயேசுவை நம்பிக்கையையும், அமைதியையும், விடுதலையையும் வழங்கும் உணவாகப் பகிர்வோம். அப்போது இவ்வுலகில் இறைவன் பிறர் பசிப்போக்கும் உணவாவார்.

 உறவானார்

வரலாற்றின் தொடக்க காலத்தில் வலியோர் சிந்தனை ஓங்கிய காலக்கட்டத்தில் இயேசுவின் பிறப்பு, உறவும், உரிமையும், நீதியும் இல்லாமல் தவித்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு நம்பிக்கையைக் கொடுத்தது. காரணம் அவரின் பிறப்பைக் கண்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சினார்கள். அச்சூழலே ஒதுக்கப்பட்ட மக்களுக்கு விடியலாக இருந்தது. “எங்கள் சார்பாக எவரும் இல்லையே” என்று வாழ்வு கசந்து இருந்த  மக்களுக்கு அவரின்  பிறப்பு புதிய  உத்வேகத்தைக் கொடுத்தது. பாவிகளோடும், ஏழைகளோடும் உறவானார். யாரை உலகம் தேவையற்றவர்கள் என்று ஒதுக்கியதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கடவுளின் பிறப்பு, அவர் மகன் இயேசுவில் நிகழ்ந்தேறியது. அது உறவை முன்னிலைப்படுத்தியது. கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு ஒற்றுமையைத் தர வேண்டும். முழுமையான உறவு மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். நமது செயல்கள் உறவை உருவாக்க வேண்டும். பழைய உறவுகளைப் புதுப்பிக்க வேண்டும். பிளவுகளில் இருக்கும் உறவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகிலும், நமது சமூகத்திலும், இல்லத்திலும் சிறப்பானதாக அமையும்.

மானிட வரலாறு முழுவதும் கடவுள் உடனிருப்பவராக, நெருக்கமானவராக, அருள்பவராக, தூயவராக, இரக்கமுடையவராக எப்பொழுதும் இருந்து வருகிறார். அந்த இயேசுவை நம் வாழ்விலே உள்ளத்திலே, இல்லத்திலே ஏற்கும்போதும் நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியால் துள்ளும். அன்னை மரியா இயேசுவை ஈன்றெடுத்ததைப்போல, இயேசுவைப் பிறருக்கு ஒவ்வொருவரும் நமது மனித வாழ்வில் இப்புதிய (2018) ஆண்டில் பிறருக்கு அன்பின் உயிராய், உணவாய், உறவாகி நம்பிக்கையின் உரைவிடமாக இருப்போம்.

முடிவாக

மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும், பாலியல் பலவினமானவர்களிலும், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரிலும், சிறப்புப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் ஏராளமான மக்கள் அன்பிற்காகத் தவிக்கின்றார்கள். மனிதரின் மாண்பை உயர்த்த அவர்களை அரவணைப்போம். உரையாட, கவலைகளை கண்ணீர்களைப் பகிர்ந்து கொள்ள, ஆறுதல் கூற மனிதர்கள் இல்லையே என்று ஏங்குகிறார்கள். அவர்களின் வாழ்வில் நாம் நம்பிக்கை ஒளியேற்றுகின்ற போது, அம்மக்கள் புது உயிர்பெறுகின்றார்கள். “நல்ல வார்த்தைகளால் நல்ல உறவு மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்”. குழந்தை இயேசுவின் வழியாய் இவ்வாண்டு ஆண்டவரின் அன்பு, உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் என்றும் தங்குவதாக.

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள் 
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

திருத்தூதர் பணினள் இயல் 15 முதல் 28 முடிய

1. பூங்காற்று வந்தது. திடீரென அது
பேய்க் காற்றாய் மாறியது
கலக்கம் வந்தது. நடுக்கம் வந்தது.
    பவுல் வந்தக் கப்பலையும் உடைத்துப்போட்டது.
அது என்னக் காற்று ?

2. தீவு ஒன்று வந்தது.
      நல்ல மனம் கொண்டது.
     நன்கொடைகள் தந்தது
      பாச மழைப் பொழிந்தது
      பவுலை தெய்வம் என்றது.
      அது எந்தத் தீவு?

3.  நிலநடுக்கம் வந்தது
      சிறைக்கூடம் அதிர்ந்தது
     சிறைக் கதவுத் திறந்தது
     தற்கொலைக்கு துணிந்தது
      அவன் யார்?

4. அடிமைப் பெண்ணவள்
குறிசொல்லி வருமானத்தைக் கொடுப்பவள்
    கூவி உண்மையைச் சொன்னாள்
     வரால் ஆவி நீங்கப்பட்டவள்
     அவர் யார்? அவள் யார்?

5. மூன்றெழுத்து உடையவர்
      வியாபாரத்தில் கெட்டி
      நம்பிக்கையுள்ள மகராசி
      ஊழியர்களை  உபசரித்த சேவகி
      உள்ளம் திறந்த உத்தமி
இவள் யார்?

6. நம்பிக்கையின் தாய் யூதப் பெண்
    நம்பிக்கையின் தந்தை கிரேக்கம்
நம்பிக்கையின் பிள்ளை இவர்
இவர்க்கு விருத்தசேதனம் செய்து
நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றவர்

7. எல்லாம் தெரியும் கடவுளுக்கு
      கண் தெரியாத நேரம்
      அவர்களை பொருட்படுத்தவில்லை
      எவர்களை ? எப்போது ?

8. கண்ணிருந்தும் காணாததால்
    காதிருந்தும் கேளாததால்
    உள்ளத்தாலும் உணராததால்
    நீங்கள் தள்ளியப் பரிசை
    அடுத்த  இனத்தார்க்கு அளித்துள்ளார்
    அது என்ன? கூறியது யார்? பரிசு என்ன? யாருக்கு?

9. சண்டையிது சண்டையிது
விவாதத்தின் சண்டையிது
      உண்டென்றது ஒரு கூட்டம்
இல்லை என்றது மறுக் கூட்டம்
மத்தளத்துக்கு இருப்பக்கமும் அடி
     மாட்டிக்கொண்டார் இவர்?
இவர் யார்? அவர்கள் யார்?

 10.எனது ஊர் அலக்சாந்திரியா
நான் ஒரு யூதன், சொல்வன்மை மிக்கவன்
மறைநூல் புலமை உடையவன்
யோவானின் திருமுழுக்கை மட்டும் அறிந்தவன்
நான் யார்?

11. உங்களைப் பார்க்க வந்தேன்
உங்கள் சமயப்பற்றைக் கண்டேன்.
உங்கள் தொழுகையைக் கண்டேன்
சூப்பரான தலைப்பு ஒன்று   கண்டேன்
அது சும்மா கிடந்தது. அது என்ன?
சொன்னது யார்?

 12. இறைப் புகழ் பாட
சிறைக் கதவு திறக்க
கைதிகள் ஓடியிருப்பர் என்று நினைக்க
பட்டயத்தை உருவி மாய்த்துக்கொள்ளப் பார்த்தானே இவன் யார்?

13. ஆசை வந்தது முன்னே
பவுல் வணங்கும் இயேசுவின் பெயரை
சொன்னார் பின்னே
ஆவி தாக்கியது பின்னே
அலரி ஆடையின்றி ஓடினர் அண்ணே.
யார் இவர்கள்?

 14.பள்ளியில் தூங்கியவன்
படிப்பை இழந்தான்
கடையில் தூங்கியவன்
காசை இழந்தான்
ஜன்னலில் தூங்கியவன்
உயிரை இழந்தான்
இவன் யார்? 

15. நான் மூன்றெழுத்து உடையவன்
மூன்றெழுத்து ஊரைச் சார்ந்தவன்
     பவுலின் கச்சையைக் கட்டிக் கொண்டு
கணப்பொழுதில் இறைவாக்குரைத்தேன்.

பொதுக்காலம் 4ஆம் வாரம் B

பொதுக்காலம் 4ஆம் வாரம்
 அருள்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ், குடந்தை.
 28-01-2018
இச 18: 15-20;1கொரி 7: 32-35; மாற்கு 1: 21 - 28
பணிவின் அர்த்தமே அதிகாரம்

அமெரிக்காவில், கருப்பின மக்கள், வெள்ளையின மக்கள் என இருபிரிவுகள் இருக்கின்றன. ஒரு நாள், வெள்ளையினத்தை சார்ந்த மனிதன் ஒரு உணவு விடுதிக்கு சென்றான். அங்கே, ஒரு கருப்பினத்தை சேர்ந்தவனும் அமர்ந்திருந்தான். ஆகவே, இந்த கருப்பினத்தை சார்ந்தவனை வெறுப்பூட்ட வேண்டும் என்பதற்காக, மற்றவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவரிடம் இன்று எனது பிறந்தநாள். உயர்தர உணவு வகைகளை, இந்த கருப்பின மனிதனைத் தவிர மற்றனைவருக்கும் கொடுங்கள் என்று பலமுறை கூறி வெறுப்பேற்றி கொண்டிருந்தான். ஆனால் அவன் எவற்றிற்கும் கலங்காமல் இருப்பதைக் கண்டு, உணவு பரிமாறுபவரிடம் அவன் யார் என்று கேட்ட பொழுது, அவர்தான் இந்த உணவு விடுதிக்கு சொந்தக்காரர், முதலாளி என்று கூறியதைக் கேட்டதும் வெள்ளையின் மனிதன் மிகவும் மனம் நொந்துப் போனான்.

பணிவில்தான் பெருமையும், அதிகாரமும் அடங்கியிருக்கிறது என்பதை மையமாக வைத்து சிந்திக்க பொதுக்காலத்தின் 4வது வாரமாகிய இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. சிறப்பாக கடவுளாட்சியில் அதிகாரம் என்ற சொல்லிற்கு அர்த்தம் பணிவு என்பதே என்று இன்றைய வாசகங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் வந்து செல்கின்றன. யாரையேனும் யார் இந்த இயேசு என்று வினவினால், நமது பதில்கள் அவருடனான அனுபவங்களைப் பொறுத்தே அமையும். விவிலியத்திலும் கூட பவ்வேறு இடங்களில், மக்கள் தாங்கள் கண்ட புதுமைகளையும், பெற்ற நன்மைகளையும் அனுபவங்களின் வாயிலாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். உதாரணமாக, யோவான் 1:45இல் பிலிப்பு தான் கண்டு அனுபவித்த ஆண்டவரை நத்தனியேலுக்கு தெரிவித்து, நீரும் வந்து பாரும், பார்த்து அனுபவித்து மகிழும் என்றும் கூறுகிறார். அதுபோலவே, மத் 16: 13‡20, என்னை யாரென்று மக்கள் சொல்லுகிறார்கள்? என்று இயேசு கேட்டபோது, தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக இயேசுவை மக்கள் அறிந்து கொண்டர்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் மக்கள் வியந்து பார்ப்பது, இதுவரை நோயாளர்களை குணப்படுத்தியவர், ஏழைகளை அரவணைத்தவர் இன்று, பேய்களை அதிகாரத்தோடு விரட்டுகிறாரே என்பதுதான். எங்கிருந்து வந்தது இந்த  அதிகாரம். இயேசுவை பொறுத்த வரையில் அதிகாரம் என்பது பணிவோடு தொடர்புடையது.  இறைவிருப்பத்தை  ஏற்று நடக்க திருவுளமானதால், அந்த பணிவே அதிகாரம் என்ற தொணியில் பார்க்கிறார். இறையாட்சியில் அதிகாரமோ, பணிசெய்தலும், சுதந்திர உணர்வோடு  செயல்படுவதுமாகும். பணிசெய்தலே அதிகாரத்தின் உட்பொருளாக அமைகின்றது. ஆகவேதான் மத் 20: 16இல் முதலானனோர் கடைசியாவார், கடைசியாவோர் முதலாவார்  என்றும் உங்களுள் முதல்வராய் இருக்க விரும்புகிறவர் முதலில் தொண்டராய் இருக்கட்டும் என்கிறார். ஆக இந்த  அதிகாரத்தோடு இயேசு பேயினை ஓட்டியது மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதன் மூலம் அவர் மீது இருந்த இறைநம்பிக்கையும், இறைப்பற்றும் மக்களின் மனிதல் ஆழமாக பதிகிறது. மேலுமாக பேய்களும் கூட இயேசுவை யாரென்று அறிந்திருப்பதாக நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிகின்றோம். மாற் 1: 24இல் நாசரேத்தூர் இயேசுவே உமக்கு இங்கு என்ன வேலை? நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்  என்று தீய ஆவிகளும் அறிக்கையிட்டன. இதனால் மக்கள் வியப்புற்று இதென்ன புதிய போதனையாக இருக்கின்றது என்கின்றனர். அப்படிப்பட்ட  இயேசுவுடனான நமது அனுபவங்கள் என்ன? புனித ஜெரோம் அவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள் இறைவனை அறியாதவர்கள் என்று கூறுகிறார். அதுபோல இறைவனை அறியாதவர்கள் தன்னையே முழுமையாக அறியாதவர்கள். இறைவனை அறிய வேண்டுமெனில், அவர் பாதம் அமர்ந்து அவரது விருப்பத்தின்படி, படிப்பினைகளின் படி வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நடக்கின்றபோது, நாமும் கூட இயேசுவின் பெயரால் பணிவு நிறைந்த அதிகாரத்தோடு எந்த வல்ல செயல்களையும் செய்ய முடியும். அதனை தான் யோவா 14: 12, என்னில் நம்பிக்கை கொள்வோர் நான் செய்யும் செயலை விட பெரியனவற்றையும் செய்வார் என்று இயேசு கூறுகிறார்.

ஆகவே, இயேசுவை பற்றிய நமது அனுபவங்கள் என்ன? அவரை அறிந்திருக்கிறோ மென்றால், பணிவில்தான் அதிகாரம் அமைந்தி ருக்கின்றது என்பதை ஆழமாக உணர்வோம்.
  

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு
 21 - 01 - 2018
யோனா 3: 1,5-10;  1 கொரி 7: 29 - 31;  மாற் 14-20;   
        
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நீயா? நானா? என்ற தொடரில், ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அமெரிக்காவில் கணினி பிரிவில், மாதத்திற்கு 4 லட்சம் சம்பாதித்த ஒருவர், அந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்து விவசாயம் செய்து, பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறார். ஏன் நல்ல வருமானம் தரும் வேலையை விட்டு  விட்டார் என்றால், பணம் நிறைய சேர சேர, ஆசைகள் பெருகுகின்றன. தேடுகிறோம், இறுதியில் உடல் நலத்தை இழந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்கிறோம். விவசாயத்தில் மனநிறைவு கிடைக்கிறது என்று அவர் விளக்கினார்.

இன்றைய நற்செய்தி ப் பகுதியில், இயேசு முதல் நான்கு சீடர்களை (சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான்) அழைக்கும் நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்கிறோம். நால்வரும் மீனவர்கள். இயேசு அழைத்ததும் அவர்கள் தங்களின் படகுகளை, தங்களின்  தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப்  பின்தொடர்கின்றனர். இயேசுவை பின்தொடர்ந்த அந்த நால்வரும், மிக ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு படகுகள், வலைகள், வேலையாட்கள்  இருந்தன. எனவே அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார்கள் என்றால் அவர்களின் அர்ப்பணத்தையும், தியாகத்தையும் அது குறிக்கிறது.  மீன் பிடிப்பவர்களை மனிதரை பிடிப்பவராக்குகின்றார் இயேசு. (எரே 16:16)  இல்  இது போன்ற குறிப்பு வருகிறது.

முதல் வாசகத்தில் கடவுளின் அழைப்பை முதலில் மறுத்து ஓடிச் சென்ற யோனா, இரண்டாவது முறை அழைத்தபோது, அந்த அழைப்பினை ஏற்று, நினிவே மக்கள் மனமாற போதிக்கிறார். அவரின் அறைக் கூவலை ஏற்று நினிவே மக்கள் மனந்திரும்புகின்றனர்.

பல காதல் திருமணங்கள் தோல்வி யடைகின்றன.  முதலில் காதல் மயக்கத்தில் ஒன்று சேருகின்றனர். ஆனால் ஒன்றித்து வாழும்போது அவர்களின் சுயநல உருவம் வெளிப்படுகிறது.  உன்அப்பா வீட்டில் அதை வாங்கிவா, இதை வாங்கி வா என்று கொடுமைபடுத்த மாப்பிள்ளை முற்படுகிறார். திருமணத்திற்கு முன்பாக. தாங்கள் நுழையப் போகும் குடும்ப வாழ்வின் பொறுப்பையும், தியாகத்தையும் உணர்ந்து அதில் நுழைவதில்லை.   
மனிதர் வாழ்வு, மற்றவருக்காக செய்யும் தியாகத்தில் நிறைவு பெறுகிறது. தியாகம், இறைவனிடம் அழைத்துச் செல்லும் படகாக விளங்குகிறது.

பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு
  14 - 01 - 2018
1 சாமு 3: 3, 10-19;  1கொரி 6: 13-15; 17- 20;  யோவா 1: 35 - 42;

தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 7:7).
‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று ஒளவையும் கூறுகிறார். நடைமுறை வாழ்க்கையிலும், நாம் தேடலில்தான் வாழ்கிறோம். நல்ல வேலைக்காக தேடுகிறோம். நல்ல வரனுக்காக தேடுகிறோம். நல்ல வீட்டிற்காக தேடுகிறோம்.

இன்றைய நற்செய்திப்  பகுதியில் இயேசுவை சிலர் தேடுகிறார்கள். அதனால் இயேசுவை கண்டுக்கொள்கிறார்கள். கண்டுகொள்ளலின் தொடர்ச்சியாக அவரோடு தங்குகிறார்கள். தாங்கள் பெற்ற இந்த காணலின் அனுபவத்தை மற்றவரும் காண செய்கிறார்கள்.

திருமுழுக்கு யோவான்,  திருமுழுக்கு யோவானின் சீடருக்கு ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று இயேசுவை அடையாளம் காட்டுகிறார். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இருவர் இயேசுவை பின்தொடர்கின்றனர். இயேசு, அவர்களைப் பார்த்து என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்கிறார். தாங்கள் தேடியதை கண்டுகொண்டு விட்டோம் என்று சொல்லாமல் சொல்லி, தாங்கள் கண்டடைந்தவர் தங்களின் ஆசிரியர் (ரபி) என்று ஏற்றுக் கொண்டு, உங்களோடு தங்க விரும்புகிறோம் என்று எங்கே தங்கியிருக்கிறீர்? என்று கேட்கிறார்கள். யோவான் நற்செய்தியில் மெனோ (னிeஐலி) என்ற வார்த்தை தனித்த பொருள் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘இருத்தல்’ என்னும் ஆழ்ந்த பொருளைத்  தரும். உதாரணமாக யோவா 14:10 இல் ‘நான் தந்தையினுள்ளம் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?’ என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘இருத்தல்’ என்ற வார்த்தைதான் தங்கியிருத்தல் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேடியவர் கண்டார்கள், அதிலே ஒன்றானார்கள். இந்த ஒப்பற்ற அனுபவத்தை இயேசுவை பின் சென்ற திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களில் ஒருவர் அந்திரேயா, தன் சகோதரர் சீமோனை, நாங்கள் மெசியாவை (கடவுளால் அருள் பொழிவு பெற்றவரை) கண்டு கொண்டு விட்டோம். நீயும் வந்து கண்டு அந்த அற்புத அனுபவத்தில் இணைந்துக் கொள் என்று அழைத்து வருகிறார். இயேசுவும் அவரை வரவேற்று அவருக்கு ‘பாறை’ என்று பொருள்படும் ‘கேபா’ என்று அழைக்கப் படுவாய் என்கிறார்.

  முதல் வாசகத்தில் சிறுவன் சாமுவேல் கடவுளால் அழைக்கப்படுகிறார். முதலில் சாமுவேலால் அது கடவுளின் அழைத்தல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. குரு ஏலி அவனுக்கு கற்றுக் கொடுக்கிறார். ‘ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் மொழி கூற கற்று கொடுக்கிறார்.

இறைவன் தரும் அழைப்பினைக் கண்டுக் கொள்பவர்கள் விண்ணகத்தை மண்ணகத்திற்கு அழைத்து வருபவர்கள்.

Ads Inside Post