Pages - Menu

Monday, 4 December 2017

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
 17 - 12 - 2017
எசா 61: 1-2, 10-11; 1தெச 5:  16-24; யோவா 1: 6-8, 19 - 28;

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று,  அருள்வாக்குகள், திருமுழுக்கு யோவானைப் போல, நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் நிலையினை ஏற்றுக் கொண்டு வாழ அழைக்கின்றன.

சென்ற வாரம், திருமுழுக்கு யோவான் இயேசுவிற்காக எவ்வாறு பாலைவனத்தில், மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.  எவ்வாறு வழியை தயார் செய்தார் என்ற கருத்து  நம்முன் வைக்கப்பட்டது. இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் தன் நிலையைப் பற்றி சாட்சியம் அளித்து, அதே நேரத்தில், மக்களின் நடுவில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயேசுவைச் சுட்டிக் காட்டுகின்றார்.

இயேசுவே, தான் யார் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று சீடர்களிடம் கேட்டு, தன்னைப் பற்றிய புரிதலை சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மத் 16: 13 ‡ 20). ஆனால் இங்கு, யூதர்கள் திருமுழுக்கு யோவானை, நீர் யார்? என்று கேட்க, யோவான் தன் நிலையை பணிவுடன் விளக்குவதை இன்றைய நற்செய்திப் பகுதியில் பார்க்கின்றோம். யோவான் நற்செய்தியில் யூதர்கள், இயேசுவின் எதிரிகளாகவே முன் நிற்கிறார்கள் (யோவா 5: 10-15,16-18;  7:1-13;  8: 48 - 52 -57;   9: 18 - 22;  10: 24-31,33;   11:8;  18:12,14,31,36,38;   19: 7-12,14;    31:38;    20: 19).  அத்தகைய யூதர்கள் திருமுழுக்கு யோவானையும் சுற்றி வலைக்கின்றார்கள். எருசலேமிலுள்ள யூதர்கள் என்றும் (1:19), பரிசேயர் என்றும் (1:24) அவர்கள் விளக்கப் படுகிறார்கள். அவர்கள் ‘நீர்  யார்?’ என்ற அடிப்படையான கேள்வியைக் கேட்கின்றார்கள், தான் மெசியா அல்ல என்றும், எலியா அல்லது இறைவாக்கினர் என்பவரும் நானல்ல என்கிறார்.

ஆண்டவருக்காக வழியை செம்மை யாக்குங்கள் என்று பாலைவனத்தில் ஒலிக்கும் ஒலி என்ற எசா 40:3 குறிப்பினைக் கூறி, தன்னைப் பற்றி பணிவாக விளக்குகிறார். (லூக் 3:15) இல் திருமுழுக்கு யோவானை, மெசியா என்றே மக்கள் கருதியதாக கூறப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில், தன்னை வழியைக் காட்டும் வெறும் ஒளி என்று விளக்குகிறார்.

வழி என்பது விவிலியத்தில் காணப்படும் ஒரு முக்கியமான கருத்துக் கோட்பாடு. கடவுளின் வழி என்றும் (இச 32:4; விப 18:25), ஆண்டவரின் வழி என்றும் (மாற் 1:3) இயேசுவே, தானே வழி என்றும் (யோவா 14:6), கிறிஸ்தவ மறை தனிவழி என்றும் (திப 9:2;    19: 9‡23) நெறி குறிப்புகளைப் பார்க்கிறோம். திருமுழுக்கு யோவான் இயேசுவின் வழிக்கு வழி செய்கிறார். தன்னை பாலைவனத்தில் ஒலிக்கும் ஒலி என பணிவாகக் கூறுகிறார்.

முதல் வாசகத்தில், இயேசு தன் பணியை ஆரம்பிக்கும்போது, நாசரேத்தூர் தொழுகைக் கூடத்தில் வாசித்த அப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது (எசா 61). இதில், ‘அருள்பொழிவு செய்துள்ளார்’ என்ற வார்த்தை  தனிப்பட்ட பொருள் கொண்டதாகும். அருள்பொழிவு என்பது இறைவன் செயல். அதனால் மக்களின் உள்ளம் ஒளிர்விக்கப்படுகிறது. இதன் துணைக் கொண்டு, மனிதர் இறைவனின் செயல், அதனால் மக்களின் உள்ளம் ஒளிர்விக்கப்படுகிறது. இதன் துணை கொண்டு, மனிதர் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதனை வாழ்வாக்கும் வல்லமையைப் பெறுகிறார்கள். 

திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கான வழியை தயார் செய்யும் பணியினை முழுமையாக உணர்ந்துக் கொண்டு அதற்காக தம்மையே அர்ப்பணிக்கிறார். பலர் அவர் பணியை ஏற்றுக் கொண்டனர். பலர் அவரை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். இறுதியில் அவர் தலையே துண்டிக்கப்படும் சாட்சிய வாழ்வுக்கு தன்னை உட்படுத்தினார்.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளை புறக்கணிக்க வேண்டாம் (1 தெச 5: 19-20) என்று தெசலோனிக்கருக்கு அறிவுறுத்துகிறார்.

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
10 - 12 - 2017
எசா 40: 1-5, 9-1 1,  2 பேது 3: 8 - 14;   மாற் 1: 1-8

பெரிய அரசியல் தலைவர்கள் ஓர் இடத்திற்கு செல்கிறார்கள் என்றால் பல மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை மற்றும் காவல்துறை, வருவாய் துறை போன்றோர், அவ்விடத்தைப் பார்வையிட்டு, தலைவரின் வருகைக்குத் தயார் செய்வார்கள். இயேசுவும்  தான் செல்ல விருந்த இடங்களுக்கு, தன் சீடர்களை  அனுப்பி வைக்கிறார் என்று பார்க்கிறோம். ‘தமக்கு முன்  தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய் சேர்ந்தார்கள்’  (லூக் 9:52) . 

இயேசுவின் முன்னோடியாய் திருமுழுக்கு யோவான், இறைவனால் அனுப்பப்படுகிறார். இயேசுவும், திருமுழுக்கு யோவானும் அவரவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்திப்  பகுதியில் பாலைவனத்தில் திருமுழுக்கு யோவானின் பணியைப் பற்றி பார்க்கிறோம். ஏசாய  நூலில் எழுதியுள்ளபடி, ‘ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வார்’....  என்பது  (விப 23:20) (மலா3: 1) (ஏசா 40:3) ஆகிய குறிப்புகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. பாவ மன்னிப்படைய மனமாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் போதிக்கின்றார். ‘யூதேயாவில் அனைவரும், எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்’ (மாற் 1:5) என்று கூறப்பட்டுள்ளது.  ‘இதோ எனக்குப் பின்வருகிறவரின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தகுதியற்றவன்’ என்று தன் நிலையை பணிவோடு கூறுகிறார். ‘எனக்கு பின்னால் வருகிறவர் தூய  ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்’ என்கிறார். திருமுழுக்கின் பொருள் என்னவென்றால்,  ‘என்னை மாற்றிக் கொள்ள முன் வருகிறேன் என்பதும் அதே நேரத்தில் இறைவன் என் பாவங்களை மன்னிக்க முன் வருகிறார்’ என்பதாகும்.  முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமை தனத்தினால் மனம் ஒடிந்து போயிருந்த மக்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை ஏசாயா கூறுகிறார். ‘கனிமொழி கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள். புதிய வழியை தயார் செய்யுங்கள். ஆண்டவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய வருகின்றார். ஆயனைப் போல் தம் மந்தையை மேய்ப்பார்’.

ஆக ஒரு பக்கம் நமது மனமாற்றம், இறைவனை நெருங்கி செல்வது, மற்றொரு பக்கம், கடவுள் நம்மை நெருங்கி வருவது. இந்த அனுபவங்கள் இன்றைய வாசகங்களால்  எடுத்துச் சொல்லப்படு கின்றன.

இந்த  அனுபவம்தான்  திருவருகைக்  காலத்தின்   இரண்டாம்   வாரத்திலும்   நம்மிடம்   இடம்  பெற  வேண்டும். மனமாற்றத்தினால்  கடவுளின் ஆற்றலினுள் நாம் நுழைகிறோம். மனமாற்றத்தின் இனிமையை பலர் உணராது இருக்கின்றனர். மதுபானங்களின் விலையை அரசு அண்மையில் உயர்த்திய போது, குடிமகன்கள் வேதனைப்பட்டார்கள். ‘எங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை. எங்களுக்காக பேச யாரும் இல்லை’ என்று புலம்பினர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பேதுரு, ‘அவர் உங்களை மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுரை வழங்குகிறார்.

இத்திருவகைக் காலத்தில், நம்மை இன்னும் தூய்மையாக்க முயற்சி செய்வோம். நம்மிடமுள்ள பள்ளத்தாக்குகள், குன்றுகள், கோணலானவை, கரடுமுரடானவை ஆகியவைகளை சீர் செய்வோம். வாகனத்தில் ஒருபாகம் கெட்டுப் போனாலும் வாகனம் ஓடாது. அதேபோல சிறு குறைகளும் இறைவனின் உறவை நிறைவு செய்யாது. 

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு B

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
03 - 12 - 2017

எசா 63: 16 - 17; 64: 1,3 - 8; 1 கொரி 1: 3-9;   மாற் 13: 33-38

தூங்காமை கல்வி துணிவுடைமை  இம்மூன்றும்
நீங்காமை நிலனாள் பலருக்கு  (குறள் 383)

‘விழித்திருக்கும் போதே விழியை பிடுங்குவது’ என்பர். பெரும் தலைவர்களுக்கு வரும் பாதுகாவலர்கள், கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு, சுற்றிலும் கவனித்துக் கொண்டேயிருப்பர். விழிப்பாயிருந்தால் ஆபத்து களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவாகவும் சிறப்பாகவும் செய்யலாம்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு இன்று, இறைவன் நம்மை சந்திக்கும் நேரம் நமக்குத் தெரியாத நிலையில் சோர்வுக்கும், சொகுசுக்கும் இடம் கொடுக்காது நம் சாட்சிய வாழ்வை தொடர்ந்து  கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் இன்றைய நற்செய்திப்பகுதி கூறுகிறது. நெடும் பயணம் செல்லவிருக்கும் ஒருவர் பணியாளர்களைப் பார்த்து  ‘விழிப்பாயிருந்து  உங்கள் பணியை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தி செல்கிறார். எந்த நேரத்தில் அவர் வருவாரென்று தெரியாது. அவர் வரும்போது நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கக் கூடாது என்ற அறிவுரையுடன் முடியும் அந்த உவமையின் பொருளாக, இயேசுவும், ‘விழிப்பாயிருங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். விழிப்பாயிருங்கள் என்ற வார்த்தை நான்கு முறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு கிரகரி என்ற பெயர் உண்டு. விழித்திருங்கள் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கிரகோரேயா (Gregoreo) என்பதாகும்.

‘மனதில சுருக்குனு இருந்தா தூக்கமே வராது’ என்பர். என் மகளுக்கு வேலை கிடைக்காத நிலையில் எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது என்றார் ஒருவர். இறைவனுக்காக நம் பணிகளை செய்கிறோம் என்ற கருத்து நம் மனதில் நின்றால் விழிப்பாயிருக்கும் நிலை ஏற்படும். பொதுவாக தனது பணி என்றால் பொறுப்பாக செய்வார்கள். மற்றவர் பணி என்றால் ஏனோதானோ என்று செய்வர். அலுவலகங்களில் ஏதாவது சான்றிதழ் பெற வேண்டுமென்றால், பல காரணங்கள் கூறி உடனடியாக தரமாட்டார்கள். பணம் கொஞ்சம் கொடுத்து விட்டால் எல்லாம் விரைவாக நடக்கும்.

பத்து கன்னியர் உவமையும் (மத் 25: 1- 13) ‘விழிப்பாயிருங்கள் ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது’ (மத் 25:13) என்று விழிப்பாயிருந்து ஆண்டவருக்காக காத்திருக்கும் கருத்தை தெரிவிக்கிறது.

முதல் வாசகத்தில், ‘பாவியான மக்களை திருத்திட இறைவனே உதவி செய்ய வேண்டும்’ என்ற கருத்து இடம் பெறுகிறது. ‘ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை. உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமை சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும்... நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்’. (ஏசா 63: 16-17; 64:8)

இரண்டாம் வாசகத்தில் பவுல், கொரிந்து மக்களுக்கு இறைவன் அளித்துள்ள கொடைகளுக்காக நன்றி கூறுகின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை (1 கொரி 1:7).
   
மூன்று வயது பையனுக்கு பிறந்த நாள். அவரின் மாமா, ஒரு கையில் 500 ரூபாயை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் தங்க மோதிரத்தை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒன்றை மட்டும் நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார். அப்பையன் விழிப்பாக, ‘மோதிரத்தை ரூபாய் நோட்டில் மடித்து ஒன்றாக கொடுங்கள்’ என்றான் விபரமான பையன்.
நிரந்தர விழிப்புணர்வு தான் நிரந்தர வளர்ச்சியை தரும்.                                  -  ஹோம்டோன் ஹிங்கிலி.

சுதந்திரத்தினை காப்பதில் நாம் விழிப்புணர்வுடன் இல்லை யயன்றால் பெரும்பான்மையானவரின் அதிகாரம் ஒரு சிலர் கைகளில் சென்றுவிடும். -  எவன்டெல் பிலிப்ஸ்

போர், அமைதி ஆகியவைகளின் விதைகள் மற்றவர் களிடத்தில் விதைக்கப்பட்டுள்ளன. எனவே விழிப்பாயி ருங்கள்.  - கிரிபோர்ட் கோகன்

Sunday, 3 December 2017

வெற்றி உங்கள் கையில், விந்தையைப் பிறப்பிக்கும் வித்தியாசம்

வெற்றி  உங்கள்  கையில் 

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

விந்தையைப்  பிறப்பிக்கும் வித்தியாசம்

Fatherஎது  செஞ்சாலும் Different ஆக செய்யனும். அப்பத்தான் அது Success ஆக  முடியும். இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள், என் குடும்ப நண்பரின் வீட்டில்  இருக்கும் நபர்கள். அவர்கள் இவ்வார்த்தைகளை  சொல்வதோடு நின்று விடாமல்  செய்தும் காட்டினார்கள். ஆம்! அவர்கள் வீட்டில் நடைபெற்ற திருமண ஒப்பந்தம் மற்றும் திருமண விழாவில் Different ஆக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு வெற்றியும் பெற்றார்கள். அக்குடும்பத்தில் உள்ள மகனின் திருமண ஒப்பந்த விழாவிற்கும், திருமணத்திற்கும் நான் சென்றிருந்தேன். அதில் எப்படி அவர்கள் Different ஆக செய்தார்கள் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
  
திருமண ஒப்பந்த விழாவில் தட்டுகளைமற்றும் சடங்கினை Different ஆக செய்திருந்தார்கள். ஒரு தட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி அது ஒளியாம் இறைவனை குறிப்பதாக சொல்லிக் கொடுத்தார்கள். இரண்டு தட்டுகளில்  திருமணம் செய்ய இருக்கும் இருவரின் ஆடைகளை வைத்துக் கொடுத்தார்கள். மூன்று தட்டுகளில் முக்கனிகள், நான்கு தட்டுகளில் அச்சம், மடம், பயிர்ப்பு, ஞானத்தை குறிக்கும் வகையில் இனிப்பு மற்றும் காரவகைகளைக் கொடுத்தார்கள். ஐந்து தட்டுகளில் பஞ்ச பூதங்களை  குறிப்பதாக சொல்லியும், ஆறு தட்டுகளில் அறுசுவைகளை குறிப்பதாக சொல்லியும், ஏழு தட்டுகளில் வானவில்லின் வண்ணங்களைக் குறிப்பதாகச் சொல்லியும், எட்டு  தட்டுகளில் திசைகளை மேற்கோள் காட்டியும், ஒன்பது தட்டுகளில்  நவதானியங்களை அறிவுறுத்தியும் பெண் வீட்டாரிடம் கொடுத்தார்கள். மொத்தம் 61 தட்டுகளை கொடுத்தார்கள். அவர்கள் அனைத்து பொருட்களையும் அர்த்தத்தோடு கொடுத்தார்கள். அதாவது வரப்போகும் மருமகள் எல்லா வகையான விவரங்களையும், நற்பண்புகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று பிறந்த வீட்டிற்கு பெருமையையும், புகுந்த வீட்டிற்கு நற்பெயரையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அனைத்து தட்டுகளையும் அளித்தார்கள். அனைவரும் அவர்கள் செய்ததை மனமுவந்து பாராட்டினார்கள். திருமண விழாவிலும் ஆலயத்தில் ம்ஷ்க்ஷூக்ஷூereஐமி ஆக செய்தார்கள்.

அருட்பணியாளர்கள் பவனியாக பீடத்திற்கு வந்த பிறகு மணமகன் அவருடைய தோழர்களோடு ஆலயத்திற்கு வந்தார். பிறகு மணமகளின் தந்தை மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு, பீடத்திற்கு முன் வந்து மணமகனிடம் ஒப்படைக்கிறார். திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தை விட்டு வெளியே சென்று அனைவரும் மணமக்களுக்கு மலர்தூவி வாழ்த்து கூற பலூன்கள் பறக்கவிடப்பட்டு கரம் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், அவர்கள் அளித்த திருமண விருந்திலும், திருமணத்தில் கலந்துக் கொண்டு சென்றவர் களுக்கு கொடுத்த அன்பளிப்பிலும் Different ஆக நிறைய செய்தார்கள். திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுள் பலர் நல் வார்த்தைகளை சொல்லி பாராட்டிச் சென்றார்கள். எப்படி அக்குடும்பத்திற்கு இப்படிப்பட்ட பாராட்டு கிடைத்தது? அவர்கள் என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை நினைவுகூர்கிறேன். Different  ஆக செய்யனும். அப்பத்தான் அது Success ஆக முடியும். ஆம், அக்குடும்பத்தினர் Different ஆக செய்தார்கள். பாராட்டு மட்டுமல்ல வெற்றியும் கைக் கூடியது
நமது நாட்டில் 1019.5 மில்லியன்  Mobile Connection உள்ளதாக TRAI  மே மாதம் 2017ல் அறிவித்திருக்கிறது. நாம் பயன்படுத்தும் செல்போன் பல்வேறு நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், அமெரிக்க நாட்டின் தயாரிப்பான Apple  நிறுவனத் தயாரிப்பில்  வரும்  Phoneகளுக்கு உள்ள சிறப்பே தனிதான்.  எப்படி இப்படிப்பட்ட வெற்றியை அந்த நிறுவனம் பெற முடிந்தது என்றால் அந்நிறுவனத்தின் Slogan   “THINK DIFFERENT”  என்பதுதான். இந்த Sloganஐ
 Apple நிறுவனம் 1997லிருந்து 2002 வரை தனது பொருட்களை விற்பனை செய்வதற்கு விளம்பர Sloganஆக பயன்படுத்தியது.  Slogan மட்டுமல்ல தயாரிப்புகளும் Different ஆகவும் தரமானதாகவும் இருப்பதால் உலகம் முழுவதும் தனது வெற்றிப் பயணத்தை  இன்றும் தொடர்கிறது. எந்தப் பணியைச் செய்தாலும் அதில்  Different ஆக செய்பவர்கள் வெற்றியை அதிகமாக பெறுகிறார்கள். Different  ஆக பணிபுரியும் ஆசிரியர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், நாட்டுதலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீக வாதிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், சமூக சேவர்கள், திரைப்பட நடிகர்கள், மாணவர்கள் மற்றும் பல துறையை சார்ந்த பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை அறுவடை செய்தவர்கள் தானே. சென்ற ஆண்டில் ஏற்கனவே Different  ஆக செய்து வெற்றிக் கனிகளை சுவைத்தார்கள் மீண்டும் தொடர்ந்து சுவைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் Different ஆக செய்து வெற்றிப்பயணத்தை துவங்க வாழ்த்துகிறேன்.
அன்றாட வாழ்வின் சாதாரான வி­யங்களையும், அசாதாரன முறையில் செய்யும் போது உலகத்தின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.   - George Washington Carver

ஒளியின் விடிவு, இருளின் முடிவு, கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

ஒளியின் விடிவு, இருளின் முடிவு 
 கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை 

ஒளி, இருள் இரண்டும் முரண்பட்டு நிற்பவை. படைப்பு முழுவதும் இருள் பரவியிருந்த வேளையில் ஒளி தோன்றுக (தொநூ 1:3) என்னும் சொல்லால் உருவமற்று வெறுமையாக இருந்த படைப்பு புத்துயிர் காணுகின்றது. இருளை விரட்டும் சக்தி ஒளிக்கு மட்டுமே உண்டு. ஒளியான இயேசு உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது (யோவான் 1:10) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் (யோ 3:16).
அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை  இருதியாக - பூதத்தாழ்வார்.

 ஒளியாம் கிறிஸ்துவின் பிறப்பு: 

யூதா நாட்டின் மலை நகர் பெத்லகேம். இங்குதான் சாமுவேல் இறைவாக்கினரால் தாவீது அரசனாக முடி சூட்டப் பெற்றார் (1 சாமு 16: 4‡13). விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு நானே ( யோவா 6:51)  என்றவர் அப்பத்தின் வீடு எனப் பொருள்படும் பெத்லகேம் என்னும் ஊரில் பிறக்கின்றார். சத்திரத்தில்  இடம் இல்லாத காரணத்தினால் மாட்டுத் தொழுவமே உலக மீட்பரின் பிறப்பிடமாகின்றது (லூக் 2: 1-7). நன்கு மக்கிய கழிவுகளாகிய தாவரக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், கோமியம் கலந்த மண் மற்றும் தீவனக் கழிவுகள் நிறைந்த இடமே மாட்டுத் தொழுவம். ‘உலகின் ஒளி நானே’ என்றவரின் பிறப்பினால் மாட்டுத் தொழுவம் தெய்வக் குழந்தையின் இல்லமாக மாற்றம் பெறுகிறது.

ஒளியாகிய ஆண்டவரின் மாட்சி: 

நாளெல்லாம் உழைத்து களைத்து சோர்ந்து போய் உடலெங்கும்  அழுக்கடைந்து பஞ்சப் பரதேசிகளாய்த் திகழும் பாட்டாளி வர்க்கத்தின் சொந்தங்களாகிய இடையர்கள், தங்கள் கிடையைச் சாமக் காவல் காத்து வருகின்றனர். ஆண்டவரது பிறப்பின் செய்தி இவர்களுக்கே முன்னறி விக்கப்படுகின்றது. ஆண்டவரின் தூதர் இடையர் முன் வந்து நின்ற போது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது (லூக் 2:9). மேலும், ‘அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்’ (லூக் 2:10-12). என்ற செய்தியும் அறிவிக்கப்படுகிறது. ஏழ்மையில் உதயமான இயேசு, ஏழையரில்  ஏழையாக உள்ள இடையர்களுக்குத் தனது பிறப்பின் செய்தியை அறிவித்து ஏழைகள் மீது தனக்குள்ள பேரன்பினை வெளிப்படுத்துகின்றார்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடிபுகு அரசே!
அன்பெனும் வலைக்குப்படும் பரம்பொருளே!
அன்பெனும் காத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிரொளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்த போரளியே! - திருவருட்பா.

மனிதர் வாழ்வில் ஒளியேற்றிட இறைமுகம் களைந்து மனித முகம் ஏற்ற தெய்வம்:

முகம் ஒரு மனிதரின் அடையாளம். முகவரி ஒரு மனிதரின் இருப்பிடத்தைச்  சுட்டிக் காட்டுவது. முகம் உணர்வை, உறவை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சி, சோகம், ஆனந்தம், அருள், பக்தி, பசி, வறுமை, வலி, வெற்றி, தோல்வி, இழப்பு போன்றவற்றினை ஒருவரின் முகத்தை வைத்தே நாம் அறிந்து கொள்கின்றோம்.          வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) என்னும் இறைவார்த்தை தெய்வமுகம் களைந்து நமது முகமெடுத்து நம்மில்  ஒருவரானதையே சுட்டுகிறது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில், மனிதர் தனது முகத்தைக் தொலைத்து முகவரியிழந்து நிற்பதனால் நமக்காக இயேசு  முகமானார். உணவு, அரசியல், பேச்சு, உறவு, மொழி வழக்கு எல்லாமே கலப்படம்தான். அசலை அதாவது ஒரிஜினலை மறைத்து நகலை அதாவது  வெளிவேடத்தையே மனித முகம் காட்டி நிற்கின்றது. சொகுசு வாழ்க்கைக்காக பிள்ளைகளைப் பாசத்தோடு வளர்க்க நேரமில்லாத பெற்றோர்கள். இதன் காரணமாக வன்முறை, மதுவுக்கு அடிமையாகும் வாலிப உள்ளங்கள். சமூக வலைத்தளங்களில் மூழ்கி  யயிற்e நிஜுழியிe போன்ற தீய இன்டர்நெட் விளையாட்டில் ஈடுபட்டு தங்களையே தொலைத்து நிற்கும் நிலை. கரங்களில் கத்தி, துப்பாக்கி, மதுபாட்டில்கள் ஏந்தி இருப்பதும் முகவரியிழந்த நிலையே. இப்படிப்பட்டோரின் வாழ்வில் ஒளியேற்றி சுய முகம் அளித்து வாழ்ந்திட அழைப்பதுவே கிறிஸ்து பிறப்பு விழா.
எல்லாருக்கும் இன்று  திருவிழா
ஏழை மக்களுக்குப் பெருவிழா 
பொல்லார்க்கும் நல்லார்க்கும்
பொழிகின்ற மழை போலவே
பொல்லார்க்கும் அருள் வழங்கும்
இயேசு பிறந்த திருவிழா.

முதல் துறவு இல்லம் திருக்குடும்பம்:

கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நாயகர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியா, புனித சூசையப்பர். இவர்கள் உருவாக்கி வாழ்ந்து வந்த குடும்பமே முதல் துறவு இல்லம். கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை போன்றவற்றினை அனுசரித்த முதல் துறவிகள் இவர்களே. ஏழ்மையின் உச்சம் திருக்குடும்பம். தாழ்ச்சியின் ஊற்று திருக்குடும்பம். கற்பு நெறி தவறாது வாழ்ந்த பெற்றோர் மரியாவும் வளனாரும். ஏழ்மை தவழ்ந்த மாட்டுத் தொழுவமே  இயேசுவின் பிறப்பிடம். விண்ணகத் தந்தையின் நிலையை விட்டிறங்கி மனித முகம் எடுத்த நிகழ்வு தாழ்ச்சி. விண்ணகத் தந்தையின் திருவுளம் நிறைவேறிட முழுமையாக தன்னையே முழுமையுமாக அர்ப்பணம் செய்தது கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. பல்வேறு தியாகங்களை அனுசரித்து வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பம்.

ஆனால் இன்று ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் போன்ற சொற்கள் வெறும் வெளிப்பகட்டுக்கான விழாக்களாகி விட்டன. ஏழ்மை இல்லாவிட்டாலும் எளிமையாவது வேண்டும். எதிலும் ஆடம்பரம், பகட்டு, பந்தா, ஊதாரித்தனம், தற்பெருமை. துறவு இல்லங்கள் என்றழைக்கப்படும்இடங்களில்கூட மேற் கூறப்பட்டி ருப்பவற்றின் ஆக்கிரமிப்பே அதிகமாகத் தெரிகிறது. இயேசு என்னும் ஒளியின் வெளிச்சத்தில் நாம் வாழ விரும்பினால் தாழ்ச்சி, எளிமை, கிடைத்ததை ஏற்கும் தியாக உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு நமது இல்லத்தில் பிறப்பார். ஒளி  உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது (யோவா 3:19).

கிறிஸ்மஸ் விழாவை அர்த்தமுள்ளதாக்கிட ஒரு சில பரிந்துரைகள்:

 1. ஈகோவை விட்டொழிந்து வெறுக்கும் நபரைத் தேடிச் சென்று பிளவுபட்ட உறவினைப் புதுப்பித்துக் கொள்ளுதல்.

2. இறைவனை மையமாகக் கொண்ட மகிழ்ச்சி மிகுந்த நிகழ்ச்சிகளை நடத்துதல்.

3. முன்பின் அறிமுகம் இல்லாத பிற சமயத்தினரை அணுகி இயேசுவின் அன்பினை வெளிப்படுத்தும் அறச் செயல்கள் புரிதல்.

4. உங்கள் பெயரை முன்னிலைப்படுத்தாது முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லம் சென்று இயேசுவை மட்டுமே முன்னிலைப்படுத்துதல்.

5. குடும்ப உறவுகளைப் பயன்படுத்தும் நாளாகக் கொண்டாடுதல்

6. விதவையின் காணிக்கையினை  ஆண்டவர் பாராட்டினார். குறைந்த விலையிலான பொருளே ஆகினும் ஆத்மார்ந்தமாக பரிசுகள் வழங்குதல்.

7. நாம் எவரிடமிருந்து  திரும்பப் பெற முடியாதோ அவர்களுக்கு உதவிகள் செய்தல்.

8. இயேசு உலகோர் அனைவரின் மீட்பர். எனவே இதனை சர்வ சமய விழாவாகக் கொண்டாடுதல்.

9. கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு போன்ற தீய குணங்களை அகற்றி அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு போன்றவற்றினைக் கடைப்பிடித்தல். 

10. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் உயிர் வாழ உணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவுத் தொழிலே முதன்மையானது. வாழ்வுக்கு ஆதாரமானது என்பதனை உணர்ந்து, விவசாயத் தோழர்களின் நியாயமான போராட்டங்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாயிருத்தல்.

‘உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்’ என்பது வெளியாகும் (யோ 3:21).

ஆண்டவரின் அருள் வழங்கும் புத்தாண்டு:

நிகழாண்டு தொடக்கத்திலிருந்து இந்த நாள் வரை நடந்த நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்ப்போம். ‘கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கின்றேன். நன்றியோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்’ என்று நன்றிப் பண் இசைப்போம். வாழ்வின் வெற்றிக் களிப்பில் மிதந்து விடாமல்  தோல்வியில் துவண்டு விடாமல் புத்தாண்டில் அடியயடுத்து வைப்போம்.

2018 ஆண்டவரின் அருள் வழங்கும் புத்தாண்டு. ஏனெனில் ஆண்டவர் ஆண்டு முழுவதும் தமது நலத்தால் முடிசூட்டுகின்றார். அவரது  வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன(திபா65:11). ‘உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்கள் வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர் (எரே23:11). நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கியிருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1).

மங்கலம் பொங்கும் பொங்கல் விழா: 

உலகில் முதன்மையான தொழில் உழவுத்தொழில். அதுவே தமிழரின் தொழில். எனவேதான்

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

என்று வள்ளுவர் கூறுகின்றார். படைப்பிற்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் தமிழரின் பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பெருவிழா. இதுவே பொங்கல் விழா. பருவமழை பொய்த்துப் போனதாலும், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்றவற்றாலும் சாகுபடி நிலங்கள் குறுகிக் கொண்டே வருகிறது. ஊருக்கெல்லாம் சோறிடும் உழவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிக் கொண்டே வருகிறது. தை மகளின் வருகையினாலே விவசாயிகளின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றப்படட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்

இருள் எரித்து ஒளி வளர்ப்போம்:

‘கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம். உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.’
(1 யோவா 1: 5-7).

அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்.... 

Saturday, 2 December 2017

புது வருடம் நல் உள்ளங்களைப் பிறப்பிக்கட்டும்

புது வருடம் நல் உள்ளங்களைப் பிறப்பிக்கட்டும்

அண்மையில் நான் கேட்ட செய்தி என்னை மிகவும் வியக்க வைத்தது. நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மகிழ்ச்சியுற்றேன். புறத்தாக்குடி பங்கு மாணிக்கபுரத்தில் ஒருவர் 93 வயது. தனது வயதான நிலையில், தான் சேர்த்து வைத்திருந்த 25 லட்ச ரூபாயை, அவ்வூரில் கோவில் கட்டுவதற்கு நன்கொடையாக தந்திருக்கிறார். அவரின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்கள் உதவி கொடுக்க, கோவில்  1.5 கோடி ரூபாயில் வளர்கிறது. 

இது ஒரு பக்கம், மற்றொரு பக்கத்தில், வருமான வரி துறையினர் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் தோண்டி எடுத்து வருகிறார்கள். கோடி கணக்கில் சொத்துகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அரசியலில், தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி சுருட்டியிருக்கிறார்கள். எல்லாம் மக்களின் வரிப்பணம், இதைப் போன்ற அரசியல் ஏமாற்று சித்துக்கள் தமிழ்நாட்டில்தான் வெகுவாக நடைபெறுகின்றன. ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முன்னிலையில் நிற்பதுபோல  தமிழ்நாடு அந்த ஊழல் நாட்டிலேயே முன்னிலையில் நிற்கிறது என்றால் நாம் தலைக்குனியத்தான் வேண்டும்.

35 வயதில் ஐந்து பெண் குழந்தைகளுடன் வளர்க்க அந்த விதவைத் தாய் போராடுகிறாள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தாள். தற்காலிக வேலைக்கு அழைப்பு வந்தது. வாய் கூசாமல், வேலை வழங்கும் அதிகாரி ஒன்றரை லட்சம் நன்கொடையாக கேட்டிருக்கிறார். ஊழலை ஒழிப்போம் என்று மார்பு தட்டும் அரசு முன்பாக நாம் என்ன செய்ய முடியும்? விதவைத் தாயின் வயிற்றெரிச்சல் இத்தகைய இதயமில்லா மனிதர்களை நிச்சயம் தாக்கும். லஞ்சம் வாங்கி வீடு கட்டுவார்கள், ஆடம்பரமாக நகை உடை வாங்குவார்கள். பிறகு மருத்துவச் செலவிற்காக எல்லாவற்றையும் செலவிடுவார்கள். அவர்களின் பிள்ளைகள் சொகுசில் வாழ்ந்து, சோம்பேறிகளாக, மதுவிற்கு அடிமையாகி இவர்கள் நொந்து நுVலாக செய்வார்கள்.

கிறிஸ்து பிறப்பு விழாவில் இயேசுவின் எளிமையின் முன் உதாரணத்தை இவ்விதழில் பல கட்டுரைகள் விளக்கிக் காட்டுகின்றன. மேலும் மேலும் வசதிகளைப் பெருக்குவதே இன்றைய நாகரிகமாக நிற்கிறது. இச்சூழலில் இயேசுவின் எளிமை கேளிக்குரியதாகக் கூட கருதப்படலாம். எளிமை, பகிர்வினை பிறப்பிக்கும். எல்லோருக்கும் வாழ்வளிக்கவே, தீமைகளிலிருந்து விடுபடவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
வாட்ஸ் அப்பில் வந்த ஒரு வாக்கியம்,‘ வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்கக் கூடாது. ஆனால் ஏமாற்றியவர்களை ஜெயிக்காமல் விடக் கூடாது?’ மக்கள் ஏற்றம் பெறவே உலகிற்கு வந்தார். அவர் நமக்காக இறங்கி வந்தார். நமக்காக ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார். ‘ அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.’ (யோவா 1, 11).

இயேசுவின்  வழியில் செல்பவர்கள் ஒருவேளை ஏமாளிகள் போல் தோன்றலாம். ஆனால் ஒளியில் நடப்பவர்கள் (1 யோவா 1.7) நம்பிக்கை கொண்டவர்கள், கடவுளின் பிள்ளைகள் (யோவா 1.12). நமது திருத்தந்தை பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறை உலக ஏழைகள் தினம் என்று அறிவித்து கொண்டாடியிருக்கிறார். சென்ற ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக, பல சமய உரையாடல் பணிக்குழுவிருந்து பல இஸ்லாம், இந்து மத சகோதர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினோம். வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து வாழ்த்துக் கூறும்போது, ‘அன்னை தெரசா கொல்கத்தாவில் செய்தது போல, ஏன் கும்பகோணத்தையும் பிச்சைக்காரர் இல்லாத இடமாக மாற்றக் கூடாது’ என்றார். அந்த வார்த்தைகள் மிகவும் சிந்திக்க வைத்தது. ‘மீனை இலவசமாகக் கொடுக்க கூடாது. மீன்பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும்’ என்று சொல்வார்கள்.

வாட்ஸ்அப்பில் ஒரு நிகழ்ச்சியைக் காட்டினார்கள். ஒருவர் தன் காலை மடித்துக் கட்டிக் கொண்டு பிச்சையயடுக்கிறார். மற்றவர்கள் அதனைக் கண்டுபிடித்து அவரை கட்டுகளை பிரிக்கச் சொல்லி நடக்க வைத்து அனுப்பிகிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியையும் பார்த்தேன். ஒரு பையன், பிச்சையயடுத்துக் கொண்டிருந்த தாய், அவரின் மகள் இருவருக்கும் தினமும் பணம் கொடுக்கிறான். சில நாள்களில் பிச்சையயடுத்துக் கொண்டிருந்த சிறுமி பள்ளிக்குச் செல்கிறாள். பையன் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்து மகளைப் படிக்கவைக்க பயன்படுத்தியிருக்கிறாள்.

பொருள்களின் விலைகள் கூடிவரும் இந்நாள்களில், அன்னையின் அருட்சுடரின் சந்தா தொகையை ஆண்டிற்கு ரு 150/- என்றும், ஆயுள் சந்தா ரு 3000/- என்றும் உயர்த்தியிருக்கிறோம். தொடர்ந்து உங்களது ஆதரவைத் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அன்னை யின் அருட்சுடர் இதழ் உங்களுக்கு நல்லக் கருத்துக்களைத் தாங்கி வர நாங்கள் மிகவும் முயற்சி எடுக்கிறோம். அனைவருக்கும் எங்களது கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Friday, 3 November 2017

புனிதர்களின் தினம்

புனிதர்களின் தினம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி

கற்பனை சிறுகதை

நவம்பர் மாதம் என்றாலே சகல ஆன்மாக்களின் தினம் ஞாபகத்துக்கு வரும். கிறிஸ்துவர்கள் எல்லோரும் கல்லறை தோட்டத்திற்கு சுற்றுலா சென்று தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பூ, சாம்பிராணி போடுவது வழக்கம். பணக்காரர்கள் செய்யும் அலங்காரம் இருக்கே அது அவர்களின் பெருமையின் தம்பட்டம். போட்டிப்போட்டுக் கொண்டு அலங்காரம் இவர்கள் செய்வதன் அர்த்தம்தான் என்ன?, அடுத்த நாளே வாடி வதங்கிவிழும் பூவுக்கா, இந்த செலவு?, வாடி வதங்கி நிற்கும் ஏழைகளுக்கு இவர்கள் செய்யும் தானமும் போலிதானே... ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்து அலுத்தவிட்டது. 

இந்த வருடம் சகல புனிதர்களின் தினத்தை எப்படி கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடு, நவம்பர் முதல் தேதியன்று கோவிலுக்குப் போனேன். சகல புனிதர்களின் திருநாள் பூசை நடந்து கொண்டிருந்தது. சர்ச்சில் அதிகம் கும்பலை காணோம். சாமியாரும், கன்னியர்களும் மட்டும் ஒருவருக்கொருவர்  “HAPPY FEAST”  சொல்வார்கள் என்று பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை.

ஒன்றும் சுவாரசியமாக இல்லையே என்று நினைத்துக் கொண்டே சர்ச் வாசலில் புதிய பங்கு சாமியார் “ புனிதர்களின் தோட்டம்”  என்று ஒரு இடத்தில் பூச்சட்டிகளை வைத்து கார்டன் போல் அமைத்து புனிதர்களின் சில சிலைகளை வைத்து அழகு  படுத்தி இருந்தார். ரம்யான இடம். சோலையின் மூலையில் சவுகரியமாக அமர்ந்து கொண்டேன். வேப்ப மரக்காற்று ஜில்லென்று என் மேலே பட என்னை மறந்து சில நிமிடங்கள் அயர்ந்தேன்.

தேவலோகம் செல்லும் வழி எல்லாம் விதவிதமான பூச்செடிகள், கொடிகள் வாசம் நிறைந்த பூக்களை கொண்ட மரங்கள் இனிமையான மணத்துடன் காற்றில் கலந்து என்னை தொட்டது. திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம், சின்ன வயதில் ளீழிமிeஉஜுஷ்விது   கிளாஸ்சில் சிஸ்டர் நரகத்தைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மோட்சத்துக்கு போகும் வழி கரடு முரடாகவும், துன்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று சொன்னார்களே?, நரகத்துக்கு போகும் வழிதான் சோலைகளும், மலர்களும், கேளிக்கைகளும் நிறைந்த இடமாக இருக்கும் என்று சொன்னார்களே?, டிராக் மாறி வந்து விட்டேனோ?

என்ன தொல்லை இது? எப்படி புனிதர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது ஒரு ஸிழிஐd னிழிrவ  இல்லை. ஒரு மைல் ஸ்டோன் இல்லை.  சகல புனிதர்களின் கொண்டாட்டத்திற்கான எந்த அறிகுறியும் இல்லையே...

சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கான விளக்கமாக சிஸ்ட்டர் அப்படி சொல்லி இருப்பார்களா?  அப்படி என்றால்  உண்மை தான் என்ன? உலக காரியங்களில் மூழ்கி கடவுளை மறந்து தப்பாக வாழ்வது தப்பு, அந்த இன்பம் நிலையானது அல்ல என்று சொல்வதற்காக  அப்படி சொல்லி இருப்பார்களா?

கரடு முரடான பாதையில் கஷ்டப்பட்டு நடந்தால், நேர்மையாக வாழ்ந்தால் ( அது எல்லோருக்கும்  எளிதல்ல) கடவுளின் வழியில் நடந்தால் தான் மோட்சத்துக்கு போக முடியுமோ? அங்கே ஒரு அமைதியான சுத்தமான பாதை தெரிகிறதே அதுதான் உண்மையான வழியாக இருக்குமோ?, சென்று பார்ப்போம். வாவ்.. அழகான வாசல்... வாசலில் வாட்ச்மேனை காணோமே?, ஏதாவது Tips  குடுத்து உள்ளே நுழைந்து விடலாம். பூலோக புத்தி இது. என்ன செய்ய?, பழக்க தோசம், லஞ்சம் குடுத்து காரியம் சாதித்தே பழக்கம். ஆனால், லஞ்சம் குடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இது எங்கள் ஸ்லோகம். வாட்ச்மேன்தான் இல்லை, காலிங் பெல்லாவது இருக்குமே என்று தேடினேன். ஒன்றையும் காணோம். என்ன செய்யலாம்? கதவை தட்டலாமா? என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே இரண்டு இறக்கைகளுடன் அழகான ஒரு சம்மனசு என் முன்னே தோன்றினார்.

ஆஹா... என்ன அழகு... இதுதான் தெய்வீக அழகோ.. என்னைப்பார்த்து புன்னகித்தார். எனக்கு ரொம்ப சந்தோ­மாக இருந்தது. கோவிலில் உள்ள சம்மனசு சுரூபத்தைவிட அழகாக இருந்தார். தேவதூதர்களுக்குத்தான் எல்லா மொழியும் தெரியுமே என்று தமிழில் பேசினேன்.

‘அழகான தேவதூதரே, நான் உள்ளே வந்து சகல புனிதர்களையும் சந்திக்க வேண்டும்’ என்று கூறினேன். தேவதூதர் ‘நல்லது.... ஆனால் நீங்கள் சாதாரணமாக உள்ளே நுழைய முடியாது. அதற்கான  ID Proof   வேண்டும்.

‘அய்யோ... இங்கேயும்  ID Proof,  ஆதார் அட்டை,  Pan card,  ரே­ன்கார்டு கேட்பார்கள் போலிருக்கிறதே. இங்கேயும் மோடி  Formula  வரி?, என்ன  ID Proof ?, தேவதூதரே...

‘நீங்கள் தேவனும் புனிதர்களும், நல்ல ஆத்மாவும் வாழும் இந்த இடத்திற்குள் நுழைய தகுதி பெற்றவர் என்ன சான்றிதழுடன் உங்களது ஒரிஜினல்  ID Proof  வேண்டும்.

‘அப்படியா..  என்னிடம் எதுவும் இல்லையே... வேணுமென்றால் எங்கள் ஆடுயு வை போனில் சிபாரிசு  செய்ய சொல்லட்டுமா?’
‘என்ன சொல்கிறீர்கள்?, எனக்கு ஒன்றும் புரியவில்லை’.

‘சரி ... எங்க மினிஸ்டரைவிட்டே Phone பண்ண சொல்கிறேன்’.
‘என்னப்பா... தப்புதப்பா பேசுகிறீர்கள், நீங்கள் பேசுவது சரியல்ல.

‘என்ன இவருக்கு சிபாரிசு பிடிக்காது போல, பணம் ஏதும் எதிர்பார்ப்பாரோ?, லஞ்சம் கொடுத்த பழக்கதோ­ம், பணம்தான் பாதாளம் மட்டும் பாயும் என்கிறார்களே.. தேவலோகத்திலும் பாயலாம் இல்லையா?, என் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்போம்’ எனது பேண்ட் பாக்கட்டை துழவினேன்.

ரொம்ப எதுவும் இல்லை, மோடியின் பண மதிப்பு குறைப்புக்குப்பின் வெளிவந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்று இருக்கிறது, ரூபாய் ஐயாயிரம் கொடுப்போம். எப்படி கொடுப்பது? ஆறாயிரம் இல்ல இருக்கிறது, எப்படியும் அவரிடம் ஏற்கனவே பலரிடம் வாங்கிய பணம் இருக்கும், அதில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு வாங்கிக்கலாம்.

‘சரி உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?, சொல்லுங்க’

‘எனக்கு விளங்காத பொருளில் பேசுகிறீர்கள், நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது, நீங்கள் கடவுளின் வார்த்தையின்படி நல்லவராக, ஒழுக்கமுள்ளவராக, கடவுளின் கட்டளைகளின்படி வாழ்ந்து மரித்து, புனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் தகுதி பெற்றவர் என்ற சான்றிதழ் வழங்கபட்டிருந்தால் அதை பார்த்து உங்களை உள்ளே அனுமதிப்பேன் என்றுதான் தங்களிடம்; ID Proof கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு விளங்காத, இந்த இடத்தில் இல்லாத நடைமுறைகளைப் பற்றி பேசுகிறீர்கள் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்”, தேவதூதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து விட்டார். தேவதூதர் மறைஞ்சிட்டாரே, இப்ப என்ன பண்றது? நம்ப கிரிமினல் வேலை எல்லாம் இங்க ஒத்துவராது போல, தப்பு பண்ணிட்டோம், திரும்ப போக வேண்டியதுதான். புனிதர்களை பார்க்கனும்ன்னா நாம முதல்ல கல்லறைக்கு போணும், அப்புறம் தான் நமக்கு சிஐமிrழிஐஉe கிடைக்கும். அதுக்கும் முன்னால நான் பாவம் செய்யாம,  நல்லவனா, கடவுளோட அன்புக்குரியவனா மாறுனாத்தான் Entrance ID  கிடைக்கும். முதல்ல என் கெட்டபழக்கத்த எல்லாம் விடனும்.

வேப்பம் மரம் என் முகத்தில் விழுந்தோன படார்னு முழிச்சேன்.
“நான் இப்ப எங்க இருக்கேன்?, இப்ப நான் பார்த்தது எல்லாம் கனவா? பகல் கனவு கண்டிருக்கேன்.

சரி, முதல்ல கல்லறைக்குப் போனத்தானே, பரலோகம் போக முடியும், அப்ப ஏன் புனிதர்கள் தினத்தை முதல்லைçயும், கல்லறைத் திருநாள இரண்டவதா வெச்சிருக்காங்க, நம்மள  கேட்டிருந்தா சொல்லியிருக்கலாம்.

சகல புனிதர்களோட கொண்டாட்டத்த நாம அங்க போகும்போது பார்த்துக்கலாம்.

Ads Inside Post