Pages - Menu

Saturday, 2 July 2016

காமமும், காதலும், சிறுகதை

காமமும், காதலும் -  சிறுகதை

- திருமதி. கேத்ரின் ஆசா,
திருச்சி.

(திருமதி. கேத்தரீன் ஆசா அவர்களுக்கு, திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு ‘இயற்றமிழ் செம்மணி’ என்ற விருதினை சென்ற 31 / 5 / 2016 அன்று வழங்கி பாராட்டியிருக்கிறது. அன்னையின் அருட்சுடரில் கதைகள் , கட்டுரைகள் எழுதி சிறப்பிக்கும் கேத்தரீன் ஆசா அவர்களை அன்னையின் அருட்சுடர் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது),

இரவு மணி 12. காலையில் வேலை தேடி போன கணவன் சதீஷ் இரவு 12 மணி வரை காணவில்லை என்றபோது மஞ்சக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது. வரநேரம் ஆகுமென்றால், போன் செய்திருக்கலாமே. போனும் செய்யாமல், ஆளும் வராமல் இருந்தால், ஒருவேளை, அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? ஆக்சிடென்டில் மாட்டியிருப்பாரோ? பலவாறு மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் மஞ்சு. கொஞ்ச நேரம் பொறுத்துதிருந்து பார்ப்போம். அவன் செல்லுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. ஆக்சிடென்ட் ஏதும் நடந்திருந்தால் ஆஸ்பத்திரியிலிருந்து அவன் செல்லிலிலிருந்து எனது பெயரை கண்டுபிடித்து போன் செய்திருப்பார்களே! என் நம்பரை ஹனி என்றுதானே சேவ் செய்திருக்கிறான்.

மணி 4 ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மனசு சொல்லுதே. சதீ´ன் தேனான வார்த்தைகளை நம்பி  நகை, பணத்தோடு வீட்டை விட்டு இவனோடு ஓடி வந்தது, எவ்வளவு தப்பு என்று இப்போது புரிகிறது. அப்போது காதல் கண்ணை மறைத்துவிட்டதே. ஐம்பது பவுன் நகையும் போய், பணம் ஒரு இலட்சம் அப்பா பீரோவில் இருந்து எடுத்து வந்ததும் தீர்ந்து, இப்போது செலவுக்கு கையில் காசில்லாத போது சதீசும் என்னைவிட்டு ஓடிவிட்டான் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பத்தாதத்துக்கு மூன்று மாசம் கர்ப்பம் வேற. ஐயோ! கடவுளே, நான் இப்ப என்ன செய்வேன். கடந்த ஒரு வாரமாவே சதிசோட போக்கு சரியில்லை. வேளை கிடைக்காத விரக்தியில் அப்படி செயல்படுகிறான் என்று நான் நினைத்தது எவ்வளவு தப்பு. அறிமுகம் இல்லாத இந்த ஊரில் என்ன செய்வது? எல்லாம் என்னோட அறியாமை மட்டும் இல்ல, என் அப்பாவும், அம்மாவும்தான் காரணம் என்று பழியை அவர்கள் மேல் போடத் தோன்றியது.

அப்பா அலுவலகத்தில் அவருடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தெரிந்து கொண்டு அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு போனது மட்டும் இல்லாமல், மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அம்மா, சென்னைக்குப் போனதும் எங்களை, என் அண்ணனையும், என்னையும் கவனிக்க ஆளில்லாமல் வாடிப்போனோம்.

அப்பா தனது புது உறவுடன் சந்தோ­மாக ஊர் சுற்ற வீட்டின் நிலைமை தலைகீழாகனது. எங்கள் வீட்டுக்கு பேப்பர் போடும் சதீ´டம் எனக்கு ஈர்ப்பு வந்ததும், அவன் என் மேல் காட்டிய பரிவும், அன்பும் என்னை ஏமாற வைத்தது. கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு அவனுடன் வாழலாம் என்று முடிவெடுத்தபோது என்னை தடுக்கவோ அறிவுரை சொல்லவோ யாருமே இல்லாததால், தன்னிச்çயாக நானே முடிவெடுத்து, வீட்டிலுள்ள பணம், நகைகளை எடுத்துக் கொண்டு கேரளா சென்று புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற முடிவு  இப்போது பாதியிலேயே அறுந்து போனபோது என்னை தேற்ற யாரும் இல்லை.

நேரம் போய்க் கொண்டிருக்கிறது. அப்பேது என்ன செய்யலாம் என்று எனது மனம் குழம்பியது. அண்ணன் ஆனந்துக்கு போன் செய்து உதவி கேட்கலாம் என்றால், அவனது செல் நம்பரும் மாறியிருக்கிறது. அவன் எனக்கு முன்பே, டாக்டரான அவனுடன் வேலை பார்க்கும் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். இப்பேது என்ன செய்வது? என்ற சிந்தனையோடு எழுந்தேன்.

காலையிலிருந்து சாப்பிடாமல் சிந்தித்துக் கொண்டெ இருந்ததால் களைப்பாக இருந்தது. இன்னொரு உயிருக்கும் நான் உணவூட்டும் நிலையில் இருந்ததால் என் நிலைமை இன்னும் மோசமானதால் என் கையிலுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்று சாப்பிடலாம் என்று எழுந்து நடந்தேன். உலகமே சுத்துவதுபோல் ஓர் உணர்வு, நான் கண் விழித்துப் பார்க்கும்போது ஒரு மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்தேன். 

எனக்கு என்ன நடந்தது, நான் கண்விழித்தபோது என்னருகில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பார்வதிசேச்சி அமர்ந்திருந்தாள். அவர்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
‘என்ன மோளே! சுகமில்லையோ! எங்கே நிண்ட பாரியான் சதீஷ்’ அவர்கள் கேட்கும் முன் என்னை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. என் நிலைமை நான் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்து இருக்கும். வயதானவரின் அனுபவ அறிவு என் கதையை சொல்லாமலே புரிய வைத்துவிட்டது போலும். ‘கரிய வேண்டாம் மோளே, யானே சதீஷ்யை பற்றி உன்னிடம் சொல்லனும்ன்னு நினைச்சது. நேற்றே அவன் வீட்டு அட்வான்ஸ் பணம் 50 ஆயிரத்தையும் கொடுக்கச் சொல்லி கேட்டுது. வீடு காலி செய்யப் போறதா சொன்னது. நான் இன்று வீடு காலி செய்த பின்னே கொடுக்கலாம் என்று வீட்டை பார்த்து போக வந்தப்ப நீ கீழே விழுந்து கிடந்ததை பார்த்து ஆஸ்பத்திரியில சேர்த்தது’.

‘மேலும் ஒரு துக்க விசயம் மோளே! டாக்டரம்மா உன்னோட குழந்தை கரைஞ்சிப் போயிட்டதா சொன்னா! சோகம் வேண்டாம் எல்லாம் நல்லதுக்கே. பெரிய டாக்டர் இப்பவரும்ன்னு சொல்லி இருக்க, அவர் வந்து உன்னோட தேக சுகம் பற்றி சொன்னபிறகு போகலாம்’.

“சரி சேச்சி, நான் செஞ்ச தப்புக்கு இது சரியான தண்டனை”. “இதோ பெரிய டாக்டர் வர்றார்”. பெரிய டாக்டராக வருவது தனது அண்ணன் ஆனந்த் என்பதை மஞ்சுவால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நிலைமையில் தன் தங்கை மஞ்சுவை பார்ப்போம் என்று ஆனந்தும் நினைக்கவில்லை.

“அண்ணே! என்னை மன்னிச்சிருங்க. தப்புக்கு கடவுள் தண்டனை குடுத்துட்டாருண்ணே” மஞ்சு விம்பினாள். “மஞ்சு நான் எடுத்த முடிவும் தப்பா போயிடுச்சி. என்னை மதம் மாறச் சொல்லி அவளது குடும்பம், கட்டாயப்படுத்திய போதுகூட நான் கலங்கவில்லை. நம் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசி மனச நோகடிச்சதை என்னால் தாங்கிக்க முடியல. நிம்மதி இல்லா வாழ்க்கை, அவளை பிரிஞ்சி வந்துட்டேன். என் மருத்துவ கல்லூரித் தோழனை சந்திக்க நேர்ந்தது. அவன் பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சிட்டு அவன் லண்டன் போயிட்டான். குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அவனோட அப்பா, அம்மா, அக்கா, தங்கையோட சந்தோ­மாக, சமாதானமா இருக்கிறதை நான் பார்த்தப்ப என்னோட குற்ற உணர்வு குடும்பத்தை விட்டு பிரிஞ்சு வந்தது தப்புன்னு புரிஞ்சிது. நம்ப குடும்பத்திலேயும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஒத்துமையும் இருந்திருந்தா நாமும் இப்படி பிரிஞ்சி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்”.

“ஆமாம் அண்ணே! அப்பா செய்த தப்பை மன்னிச்சி குடும்ப ஒற்றுமைதான் முக்கியம், பிள்ளைகளோட எதிர்காலம் தான் முக்கியம்ன்னு அம்மா நினைச்சிருந்தா இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது”.

“ஆமாம் மஞ்சு! இதுல எல்லாருடைய தப்பும் இருக்கு”. “அப்பாவை பார்த்தீங்களா அண்ணே?” “சொல்ல மறந்துட்டேனே, அப்பா இந்த ஆஸ்பத்திரியிலத்தான் இருக்கார். பத்து நாளைக்கு முன்னாடி அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருச்சி. அப்பவோட இருந்த பெண் அப்பாவை விட்டுட்டு ஓடிருச்சி. அப்பா ஆபீஸ்லேயிருந்து எனக்கு போன் செஞ்சாங்க. நான் போய் அப்பாவை அழைச்சிக்குட்டு வந்து இந்த ஆஸ்பத்திரியிலேத் தான் ட்ரீட்மென்ட் குடுத்துக்குக்கிட்டு இருக்கேன்”.

“அம்மாவுக்கு தெரியுமா?” “அம்மாவுக்கும் அவுங்க ஆபீஸ் மூலமாக தகவல் குடுத்தேன். அவுங்களும் பழசை மறந்திட்டு இங்க வந்து அப்பாவை கூடயிருந்து பார்த்துக்கிறாங்க”. “அப்படியா! கேட்கவே சந்தோ­மா இருக்கு, உடனே நான் அம்மாவையும், அப்பாவையும் பார்க்கனும்”. மஞ்சு சந்தோ­த்தில் கட்டிலிலிருந்து குதிக்க, “மஞ்சு! மெதுவா வா அவசரம் இல்ல”.

“சரி அண்ணே!” “சேச்சி உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்க மூலமாகத்தான் என் குடும்பத்தோட சேர்ற பாக்கியம் கிடைச்சது”. “சரி மோளே! இனிமே எந்த தப்பும் செய்யாம குடும்பத்தோட சந்தோ­மாக, சமாதானமாக ஜீவிக்கனும்”.

ஆனந்தும், மஞ்சுவும், அப்பாவையும், அம்மாவையும் பார்க்க ஐசியு வார்டுக்குள் போனார்கள். வாழ்வில் காமத்திற்கும், காதலுக்கும் உள்ள பொருளினை குடும்பமே உணர்ந்துக் கொண்டது. இனி திருந்திய இந்த குடும்பத்திலே சதீசும், பானுவும் நுழைய முடியாது. இவர்கள் கூடி ஒற்றுமையாக எடுக்கும் எந்த முடிவும் தெளிவானதாகவும், அன்பானதாகவும் இருக்கும்.
“வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, எண்ணங்களில் தான் இருக்கிறது, ஒற்றுமையில் தான் உயர்கிறது”.

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

4. பணிவின் அடையாளங்கள்
- அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.

அரசர் ஒருவர் இருந்தார். அவர் மனதில் ஒரு தீராத வருத்தம் இருந்தது. அதாவது அவரின் மனைவியான அரசி நாளுக்கு நாள் உடல் இளைத்துக் கொண்டே வந்தாள். ஆனால் அவருக்குத்  தெரிந்த ஒரு மீனவரின் மனைவி நல்ல உடல்வளத்தோடு இருந்தாள். ஒருநாள் அரசர் அந்த மீனவரை அரண்மனைக்கு அழைத்து, “என் மனைவி இளைத்துக் கொண்டு போக, உன் மனைவியோ உடல்வளத்தோடு இருக்கிறாளே, அதற்கு என்னக் காரணம்?” என்று கேட்டார். மீனவரோ, “அது இரகசியம் அரசே; இருந்தாலும் உங்களுக்குச் சொல்கிறேன். நான் தினமும் அவளுக்கு நாவின் கறி கொடுக்கிறேன். நீங்களும் உங்கள் மனைவிக்குக் கொடுங்கள்” என்றார். அரசர் தன் நாட்டில் உள்ள எல்லாக்கறிக்கடைக்காரர்களையும் அழைத்து, நாவின் கறியை தினமும் தவறாமல் அனுப்பி வைக்கும்படி கட்டளையிட்டான். தினமும் நாவின் கறி சமைக்கப்பட்டு அரசிக்குத் தரப்பட்டது. ஆனாலும் அரசியின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது.

அரசர் மீனவரைத் திரும்பவும் அழைத்து, “என் மனைவியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அதனால் உன் மனைவியை எனக்குக் கொடுத்துவிடு. என் மனைவியை நீ அழைத்துச்செல். இல்லையயனில் உன்னை தூக்கிலிடுவேன்” என்று மிரட்டினார். மீனவரும் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டார்.

ஆறுமாதம் கழித்து அரசர் கடைவீதி வழியாகச் சென்றபோது பழைய மனைவியான அரசியை பார்க்க நேர்ந்தது. அரசி இப்போது மாறிப் போயிருந்தாள். சதைப்பிடிப்போடு இருந்தாள். மகிழ்ச்சியாகக் காணப்பட்டாள். அரசர் அவளை அழைத்து, “உன்னிடம் மாற்றம் தெரிகிறது. உன் உடல் முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் என்ன?” என்று வினவினார். “எல்லாம் அந்த நாவின் கறியின் மகிமையே” என்றாள் அரசி. மீனவரின்  மனைவி தற்போது இளைத்து துரும்பாகி விட்டாள். “நீ திரும்பவும் அரண்மனைக்கு வந்து விடு” என்றார். அரசியோ, “நான் உங்களோடு வரமாட்டேன். என் கணவர் என்னை தங்கமாக வைத்துக் கொள்கிறார். உங்களைப் போல வார்த்தைகளால் கொல்ல மாட்டார்; அன்பாக பேசுவார்;  பாராட்டுவார். அதைத்தான் நாங்கள் நாவின் கறி என்று சொல்கிறோம். நீங்களும் அதை கடைபிடியுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். உங்கள் மனைவியும் மகிழ்ச்சியாய் இருப்பாள்” என்று சொல்லி அனுப்பினாள்.

என்னிடத்தில் பணிவு அல்லது தாழ்ச்சி உள்ளது என்பதற்கான சில அடையாளங்கள் :

1. பிறரை மனதார பாராட்டுவேன்.
2. பிறர் பாராட்டும்போது மனமுவந்து புன்னகையோடு ஏற்றுக் கொள்வேன். 
3. பிறர் என்னை திருத்தும்போது அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து நன்றி சொல்வேன். 
4. எனக்கு உதவி தேவைப்படும்போது தயங்காமல் பிறர் உதவியை நாடுவேன். 
5. நல்லவை நடைபெறும்போது அதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்லாமல் பிறரின் பங்கையும் அங்கீகரிப்பேன். 
6. தவறுகள் நடைபெறும்போது அதற்கு பிறர் மட்டுமே காரணம் என்று சொல்லாமல் என் பங்கையும் ஏற்றுக்கொள்வேன். 
7. பொறுமையை கடைபிடிப்பேன். 
8. எளிமையாக இருப்பேன். 
9. என் வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக இருப்பதற்கு முயற்சி செய்வேன். 
10. மனிதகுல ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பேன். 
11. பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்வேன். 
12. பிறரிடம் மன்னிப்புக் கேட்பதற்கும் தயங்க மாட்டேன். 
13. சகிப்புத் தன்மையை அதிகரிப்பேன். 
14. புறணி பேசுவதைத்  தவிர்ப்பேன். 
15. ஒற்றுமைக்காக முயற்சி செய்வேன். 
16. உரையாடலை தவிர்க்க மாட்டேன். 
17. பிறர்மீது நம்பிக்கை கொள்வேன். 
18. இறைவனைச் சார்ந்து வாழ்வேன்.

மகளின் ஆசை - சிறுகதை

மகளின் ஆசை - சிறுகதை

மகிழம்பாடி. அந்தோணிசாமி

“ஜெயராணி! இங்க வா! வந்து உட்கார்!”

“ஏம்ப்பா?”

“ஒண்ணுமில்லேம்மா! எல்லாம் உன் சமாச்சாரமாத்தான்!”

“அதென்னப்பா என் சமாச்சாரம்?”

“வேற ஒண்ணுமில்லேம்மா! உன்ன ரெண்டு எடத்துலேயிருந்து பொண்ணு பாத்திட்டுப் போனாங்க. பொண்ணு எங்களுக்குப் புடிச்சிப் போயிருக்கு. ஒங்க அபிப்ராயம் என்னான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.

நம்பளும் கலந்து பேசி முடிவை அவுங்க கிட்ட சொன்னா தானே நல்லாயிருக்கும்” என்று கணவனின் கருத்தை ஆமோதித்துப் பேசினாள் ஜெயராணியின் தாயார்.

“கல்லூர்லேயிருந்து வந்தவங்களுக்கு ஒரே பையன். அரசாங்க வேலை. ஆளும் கதிராட்டம் செவத்த பையனா இருக்கான். சொத்து சுகம் நிறைய. வேற பிக்கல் பிடுங்கள், நாத்தி, நங்கைன்னு யாருமில்ல. வீடும் சொந்த வீடு. நல்லூர்லேயிருந்தும் வந்தாங்க. அவுங்களுக்கு ஆணொன்னு, பொண்னொன்னு. பையன் மாநிறம். பிரைவேட் கம்பெனியில வேலை செய்யிறான். ஆன்..னா.. மாமனார் இல்ல. மாமியார் மட்டும் இருக்காங்க. சுமாரான வீடு என்று இடையிடையே அடியயடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாயார்.

“உன் முடிவுன்னு ஒண்ணு இருக்குல்ல. அத மீறி நாங்க செய்திட முடியுமா? அதா..ன்” என்று இழுத்தார் தந்தை.
“அப்பா! உங்க மனசு கோணுற மாதிரி நான் என்னைக்கும் நடக்க மாட்டேன். ஆனா.. என் மனசுல இருக்குறத நான் சொல்லிடுறேம்ப்பா”.

“சொல்லும்மா! அதானே கேக்குறோம். உன் முடிவு எதுவா இருந்தாலும் அத நாங்க நிறைவேத்தி வைக்கிறோம்”.

“பொறந்த பொண்ணுங்க புகுந்த வீட்ல வாழ்றதுதானேப்பா பெருமை. அம்மா இத எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்க. எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எனக்கு வரப்போற புரு­ன் நல்ல குடும்பத்துக்காரனா, கைநிறைய சம்பாதிக்கிறவனா எதிர்ப்பாக்குறது நல்லதுதான்”. 

“ஆனா... அதவிட நான் போற இடத்துல கோயில் இருக்குமாப்பா... நம்ப ஊருல மாதிரி நான் தினந்தோறும் கோயிலுக்குப் போயி... திருப்பலி கண்டு தினந்தோறும் கடவுளை என் உள்ளத்துல வாங்குனும்ப்பா. நான் புகுந்த எடத்துல சொத்து சுகம் இருக்கிறதவிட வசதிக்கார குடும்பமா இருக்கிறதவிட, நான் அன்னாடம் கோயில் முகத்துல விழிக்க எனக்கு உதவி செஞ்சா போதும். மீதி வசதி வாய்ப்பெல்லாம் எனக்குத் தன்னால வந்துடும்”.

“நீங்க என்னை கேணியில தள்ளிவிட மாட்டீங்க. அம்மா, அப்பா பாத்து நீங்க யாரை கட்டிக்கச் சொன்னாலும் கட்டிக்குவேன். ஆனா .... எனக்குள்ள இந்த ஒரு ஆசையை மட்டும் எனக்கு நிறைவேத்தி வைங்க”. அழாக்குறையாகக் கேட்டாள் அந்த மகள்.

“முடிவை நான் சொல்றேம்மா! உனக்கேத்த புரு­ன் நல்லூர்லதான் இருக்கான். நானும், உங்களுக்குத் தெரியாம அங்க போயி எல்லாம் விசாரிச்சிட்டு வந்துட்டேன்”.  “அங்கதான் நம்ப ஊருமாதிரி கோயில் குளமெல்லாம் இருக்கு. உன் மனசுக்கேத்த இடம் அதுதாம்மா! உடனே நல்லூர்ல இருக்குறவங்களுக்கு நல்ல முடிவா சொல்லி அனுப்புங்க. இதான் தங்கச்சிக்கேத்த முடிவு” என்று தீர்க்கமாய்ச் சொன்னான் ஜெயராணியின் மூத்த சகோதரன் ராஜ்குமார்.

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

தண்ணீர் குடித்தல் :

சர்க்கரையே சொல்லுமடா கரை என்னை என்று
நீ அக்கறையோடு கரைத்திட்டால் உன் குறை என்ன?
சர்க்கரைதான் கரைத்திட்டால் கரையாதோ?
கரைந்திட்டால் உன் குறை யாது?

காலை எழுந்தவுடன் 1 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடித்து வந்தால் மருந்தில்லாமல் சர்க்கரை நோய் தீரும். காலை 4 1/2 அல்லது 5 மணிக்கு குடிக்கவும்.

தண்ணீர் குடிக்கும் முறை சித்தர் பாடல் :

1.தண்ணீர் அண்ணாந்துண்டால் சாரும் செவி மந்தம்
கண்ணக் குனிந்துண்டால் காசமுண்டாம் ‡ தண்ணீர்
குடிக்க வென்றால் பாத்திரத்தை வாயால்
கடிந்து அருந்த துன்பம் அரும் காண் ‡ சித்தர் பாடல்

2. ஆசார கேணி நீர் அருந்திட
வீசு சூடு பசி மெய்காந்தல் மாசூளை
மெய்யுள்வலி இடைதுளைப்பான் வீழ்
மயக்கம் - சோவை பித்தம்
பைய வரம் ஈனையாகும் போம் - அகஸ்தியர்

3. தூங்கி எழுந்தவுடன் சுத்தோதம் அருந்த
ஏய்கி நின்ற பித்தம் ஒழிவதன்றித் தேங்கும்
மலம் மூத்திரம் தங்கா வாதாதி தத்தம்
தல மாத்திரம் உலவும் காண் - தேரையர்.

சுத்தோதம் : சுத்தமான தண்ணீர்
 வாதாதி : வாத, பித்த, சிலேத்துமம் (மூன்று நாடி)
அதிகமான அளவு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் தீரும்.

4. சர்க்கரை நோய்க்கு ஆரைக்கீரை : தின்றாலும் உருசிதரும் தீராப்பயித்தியத்தை
பொன்றாத நீரழிவைப் புண்ணீரை என்றும் இந்த ஊராரைச் சாராமல் ஓட்டுவிடும் - நாலிதழார்
நீராரைக் கரையது நீ

இந்த கீரை வயல்களில் கிடைக்கும். நீராரைக் கீரை நீரைக் கட்டும் குணமுடையது. சத்து மிகுந்த கீரை. உடலுக்கு உரம் தரும். அதிக தாகம் தீரும். குடித்த நீரெல்லாம் சிறுநீராகசன கழியும். அடிக்கடி சிறுநீர் போகும். பித்தரோகம் கபாலத்தைப் பற்றிய நோய்கள் போகும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சிறுநீரில் இரத்தம் போதலைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. அதிக சிறுநீரைக் குறைத்து அளவோடு போக செய்யும். தேக புஷ்டியை உண்டாக்கும். நாவிற்கு இனிப்பாக இருக்கும். பைத்தியத்தை குணமாக்கும். நீரழிவு நோய் உள்ளவர்கள் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக குணமாகும். இலையை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடலாம். பொடி செய்தும் சாப்பிடலாம். பச்சையாக, சமைக்காமல் சாப்பிடுவது நல்லது.

நாவல் கனிகளை சாப்பிடலாம். கொட்டையை பொடி செய்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடடு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும். மேலும் வெந்தயம் - 500 கிராம், ஓமம் ‡ 200 கிராம், காட்டுசீரகம் ‡ 100 கிராம், கருஞ்சீரகம் - 100 கிராம், பிளவு சீரகம் ‡ 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்). அவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக இடித்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் எட்டு நாளில் சர்க்கரை நோய் குணமாகும். பொடியை வாயில் போட்டுக் கொண்டு 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

சர்க்கரை நோய்க்கு வல்லாரைக்கீரை :

அக்காரை நோய் அகலும் வயிற்றிழவு
தக்க ரத்தக்கடுப்பு தானேகும் பக்கத்தில்
வல்லாரையும் மருந்து என்றேயுரைத்து தன் மனையுள்
வல்லாரையை வளர்த்து வை

சர்க்கரை நோய் அகலும், வயிற்றுப்போக்கு தடுக்கும்
இரத்தக்கடுப்பு தானே போகும். ஞாபக சக்தி வளரும். இதற்கு சரஸ்வதி மூலிகை என்று பெயர்.

ஆலோசனை நேரம், நல்லை. இ. ஆனந்தன்

ஆலோசனை நேரம்
நல்லை. இ. ஆனந்தன்

1. திண்டுக்கல்லுக்குப் புதிய ஆயர் கிடைத்துவிட்டாரே....
- திருமதி. சுகன்யா, உடுமலைப்பேட்டை.

ஆமாங்க்கா, இருபது மாதங்கள் காத்திருப்புக்குப் பின் இறைவன் தந்த கொடைதான் மேதகு. ஆயர். தாமஸ் பால்சாமி. திண்டுக்கல் பகுதி பங்குகளில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவரே அதன் ஆயராக உயர்த்தப்பட்டிருப்பது எத்துணை மேலானது. இருபது மாதங்களும் அப்போஸ்தலிக்கப் பரிபாலகராக மறைமாவட்டத்தை வழிநடத்திய அருட்திரு. கே. எஸ். ஆரோக்கியசாமி அடிகளாரும் பாராட்டுக்குரியவரே. கடவுள் தாமதமாகத் தந்தால் தாராளமாகத் தருவார் போலும்.

2. நான் திருமணம் ஆகாத இளம்பெண். மிக மிக அழகானவள். ஆனால் வெளியே செல்லும்போது பிறரின் பார்வைகளும், பேச்சுக்களும், செயல்களும் என்னை மனவருத்தமடையச் செய்கின்றன. நான் என்ன செய்வது?
- செல்வி. சுந்தரிமேரி, மதுரை.

அன்புத் தங்காய்... உன் வயதில் உள்ள அனைத்துப் பெண்களும் சந்திக்கும், சாதாரண பிரச்சனை இது. அழகை ரசிப்பது உலகின் இயல்பு. ஆனால் பெண்களை கேலி செய்வது. அவர்களிடம் வெறி கொண்டவர் போல் செயல்படுவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது ஆகியவை இந்திய கலாச்சாரத்தின் கோடுகளாக, கேடுகளாக விளங்குகின்றன. இதனை தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் வெளிச்சமிட்டு காட்டி அதற்கு தூண்டுதலைப் போல் அமைந்துள்ளன. ஆனால் உங்களை மிக அழகாகப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள். ஆணவம் தலையில் ஏற அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அழகு என்பது மிகவும் தற்காலிகமானது, ஆபத்தானது. விபத்து, நோய், முதுமை இவைகள் அழகை சிதைத்துவிடக் கூடும். உங்கள் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும். எனவே கவலைப்பட வேண்டாம்.

3. உலகில் அதிக ஆலயங்கள் உள்ள புனிதர் யார்? 
- திரு. செபாஸ்டின், திருச்சி.

புனிதர் அல்ல, புனிதை. அவர்தான் மரியா. சனவரி முதல் டிசம்பர் வரை அவருக்குத்தான் அதிக விழாக்களை திருச்சபை எடுத்து மகிழ்கிறது. சனவரி முதல் தேதி, மரியா இறைவனின் தாய் ‡ விழா. மே மாதம் அன்னையின் மாதம், ஆகஸ்ட் 15 மரியாவின் விண்ணேற்பு விழா. செப்டம்பர் 8 மரியாவின் பிறப்பு விழா. டிசம்பர் 8 அமல உற்பவி மரியாள் விழா. எனவே ஆண்டு முழுவதுமே அன்னைக்கு விழாக்கள் எடுப்பதில் திருச்சபை பெருமகிழ்ச்சி அடைகிறது. பழங்காலத்தில் மாதாக் கோவில் எங்கே என்றுதான் வழிகேட்டுச் செல்வார்கள்.

4. கானாவூர் திருமணத்தில் எனது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்னபிற்பாடு மரியா அமைதியாக இருக்க வேண்டியதுதானே? அவர் உங்களுக்குச் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் என்று பணியாளர்களை அதிகாரம் செய்தது ஏன்?
- திரு. மனோகர், பாளையங்கோட்டை.

ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்கிறது. எல்லாரும் ஏறி அமர்கிறார்கள். ஓர் அம்மா மட்டும் வெளியே நிற்கிறார்கள். பெட்டிக்குள் உள்ள பயணிகள் பதைபதைக்கிறார்கள். அம்மா சீக்கிரம் ஏறி உள்ளே வாருங்கள். வண்டி இரண்டு நிமிடம்தான் நிற்கும். ரயில் கிளம்பிவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று அனைவருமே எச்சரிக்கிறார்கள். திடீரென்று ஒருவர் வந்து அவரை ஏற்றி உள்ளே அமர வைக்கிறார். அந்த அம்மா, நான் அமர்ந்துவிட்டடேன், நீ போய் வண்டியை எடு என்கிறார். ஏனெனில் அவர்தான் அந்த ரயிலின் டிரைவர். அந்த டிரைவர்தான் அந்த தாயின் ஒரே மகன். எல்லா காலத்திலும் மகனை அதிகாரம் செய்ய அம்மாக்களுக்கு உரிமை உண்டு. தாய்க்குக் கீழ்படிய மகன்களுக்கும் கடமை உண்டு மனோகரண்ணே. ரயில் கதை புரிந்ததா?

5. நான் கல்லூரி இளைஞன். நான் சாமியாராகப் போவதா அல்லது கல்யாணம் முடிப்பதா? எனக்கு எது நல்லது?                  
- திரு. ரெனால்டு, சென்னை.

இல்லறம், துறவறம் (குருத்துவம்) இரண்டுமே அருட்சாதனங்கள். ஆனால் ஏதாவது ஒன்றைத்தான் திருச்சபையில் பெறமுடியும். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதலை துறவறத்தார் வார்த்தைப்பாடு கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இல்லறத்திலும் அதேதான். இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் (ஏழ்மை) நான் உனக்குப் பிரமபணிக்கமாயிருந்து (கற்பு), என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் (கீழ்ப்படிதல்) வாக்களிக்கிறேன் என மணமக்கள் வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள். இரண்டு வாழ்க்கையிலும் வாக்குறுதிகளைக் கடைப்பிடித்தால்தான் வாழ்வு இனிக்கும், செழிக்கும். யோசித்து, செபித்து முடிவெடுக்கவும். வாழ்த்துக்கள்.

18 ஆம் ஞாயிறு 31 - 07 - 2016

18 ஆம் ஞாயிறு  31 - 07 - 2016

ச உ 1 : 2; 2 : 21 - 23; கொலோ 3 : 1 - 5,  9 - 11; லூக் 12 : 13 - 21

ஆசையே துன்பத்திற்கு காரணம்

வந்தவர் : வாழைப்பழம் எவ்வளவுங்க?
கடைக்காரர் : ஒரு ரூபாய் தாங்க.
வந்தவர் : ஐம்பது பைசாவுக்கு தர்றீங்களா?
கடைக்காரர் : ஐம்பது பைசாவுக்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்.
வந்தவர் : அப்ப இந்தாங்க, 50 பைசா. தோலை உரிச்சுகிட்டு பழத்தை மட்டும் தாங்க.

மண்ணே மனித உடலை திண்ண போகுது, மனித உடலை காக்க என்னென்ன வழிமுறைகள் கிடைக்கும் என மனிதன் அங்கலாய்க்கிறான். ஆசைகள் இருந்தால்தான் முயற்சியும், உழைப்பும் இருக்கும். அதே வேளையில் உழைக்காமல் உண்ணும் ஆசை அபத்தமானது. இந்த ஆசைகள் சுயநலத்தோடு ஒட்டிக்கொண்டால் மற்றவர்களின் நலனைப் பற்றியோ, பிறருடைய வளர்ச்சிப் பற்றியோ சிந்திக்காமல் தீமையே பிரதானம் என மனிதர் வாழ ஆரம்பித்துவிடுகிறார்.

பிற்கால வாழ்வின் பயனை அடைய நாம் பொதுவாக முன்னேற்பாடுகளை செய்து கொள்வது வழக்கம். பணம், பொருள், பதவி, வசதிகள் தேவைதான். ஆனால், அவைகளை பேராசையுடன் தேடிச் சேகரித்து வைக்கவேண்டாம் என்பதை இயேசு நமக்கு போதிக்கிறார். உலகப் பொருட்கள் நமக்கு உண்மையான மனநிறைவும், மகிழ்ச்சியும் தரப்போவதில்லை. அவைகள் சிறிது காலத்திற்குத்தான் நம்முடையதாக இருக்கும். இறந்தப் பிறகு நமக்குக் கிடைப்பது 5 அல்லது 6 அடி நிலம். அது கூட நமக்கு நிரந்தரமானதல்ல. ஆகவேதான் இன்றைய நற்செய்தியில், ‘முட்டாளே இன்று உனது ஆன்மாவை இழப்பாயே’ என்று செல்வந்தனிடம் இறைவன் எச்சரித்தாக சொல்லப்படுகிறது.

உலக செல்வம் நமது ஆன்மாவை அடிமையாக்க முடியும். இத்தகைய அடிமை கடவுளையும், அயலாரையும் நேசிக்க முடியாதபடி மாபெரும் தடையாக மாறிவிடும். நாம் விரும்புகின்ற சுதந்திர வாழ்வை பறித்துவிடும். நாம் இறக்கும்போது நமக்கு பயன்படப் போவது, நாம் இவ்வுலகில் சேர்த்து திரட்டி வைத்திருக்கும் ஆன்மீகச் செல்வங்கள்தான். இச்செல்வம்தான் நமக்கு முழு விடுதலையைத் தரும்.

“மண்ணுலகில் செல்வம் சேகரிக்க வேண்டாம். மாறாக விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள். அது நிலையானது” (மத் 6 : 19 ‡ 24). இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழவும், இருக்கும் செல்வத்தை தகுந்த முறையில் பயன்படுத்தவும், பிறரோடு பகிர்ந்து வாழவும் ஆசைப்படவேண்டும்.

தன்னதுசாயை தனக்கு உதவாது கண்டு
என்னதுமாடு என்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போமுடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொலி கண்டு கொளீரே (திருமந்திரம்)

“உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகிறது. இதனை நேரே கண்டும் புறமான பொருளை என்னுடையது என்று மடையர்கள் எண்ணி களிக்கின்றனர்” என்கிறார் திருமூலர்.

17 ஆம் ஞாயிறு (24 - 07 - 2016)

17 ஆம் ஞாயிறு  (24 - 07 - 2016) 
                  
தொ. நூ. 18 : 20 - 32; கொலோ 2 : 12 - 14;  லூக் 11 : 1 - 13

செபத்தால் ஜெயமாக்கு

ஐந்து வயது மகன் தனது தந்தையிடம் தனக்கு யானை வேண்டும் என்று அடம்பிடிக்கிறான். தந்தை அவனது பிடிவாத குணத்தை மாற்ற முடியாமல் அவனுக்கு விலையுயர்ந்த பெரிய யானையை வாங்கிக் கொடுத்தார். மகன் மறுபடியும் தனது தந்தையை நோக்கி, தனக்கு ஒரு பானை வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறான். பானையையும், தந்தை வாங்கிக் கொடுத்தார். அதோடு, விடவில்லை. மகன் தன் தந்தையிடம், அப்பா, இந்த யானையை இந்த பானைக்குள் போடுங்கள் என்றானாம். பெற்றோரிடம் அடம்பிடித்தால் எதையும் வாங்கலாம் என குழந்தை நம்புகிறது.

இன்றைய நற்செய்தி பகுதி, செபத்தின் பண்புகளைப் பற்றி பேசுகிறது. இதில் இயேசு கற்று கொடுத்த செபம் இடம்பெறுகிறது. பிறகு செபத்தில் இறைவன் ‡ அடியார் உறவு, உடன் நண்பர்கள், பெற்றோர் ‡ பிள்ளை போன்ற உறவு என்று விளக்குகிறார் இயேசு. இறைவன் நாம் கேட்பதைத் தருகிறார். சில வேளைகளில் நாம் கேட்கும் முன்பே தருகிறார். சில வேளைகளில் நாம் கேட்கும்பொழுது  தருகிறார்; சில வேளைகளில் நாம் கேட்ட பிறகே தருகிறார். வாழ்வை வளமாக்கி, பலவீனத்திலிருந்து பலப்படுத்த, மகிழ்ச்சியில் திளைத்திட, அனைத்திலும் வெற்றி பெற இறைவனது (அருள் ஆற்றல்) அருளாற்றல் மனித குலத்திற்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. இறை அருளாற்றல்தான் ஜெபத்தின் வழியாக மனிதனுக்கு பொழியப்படுகிறது.

இறைவனது அன்பையும், பரிவையும், இனிமையையும், இரக்கத்தையும், உறவையும், உடனிருப்பையும், மன்னிப்பையும், மாட்சிமையையும் நன்கு உணர்ந்த, அனுபவித்த இயேசுவின் சீடர்கள், தாங்களும் ஜெபிக்க வேண்டும் என்ற ஆசையினால் இயேசுவிடம் கற்றுத்தர சொல்கிறார்கள். எரே 33 : 3 என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவி சாய்ப்பேன்.

செபிப்பது ஒரு பிரச்சனை அல்ல, விடாமுயற்சியுடன் செபிப்பதுதான் பிரச்சனை. சோதோம் நகரை அதன் பாவங்களுக்காக தண்டிக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தபோது, ஆபிரகாம் கடவுளிடம் அந்த நகர மக்களை மன்னிக்குமாறு விடாது கெஞ்சினார். பத்து நல்லவர்களாவது அந்நகரத்தில் இருந்தால் (தொ. நூ. 18 : 32) மன்னித்து விடுவதாக கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.

ஏழைக்கைம்பெண் நம்பிக்கையோடு தொடர்ந்து மன்றாடியபோது நீதிக்கேட்டபோது, கடின இதயம் கொண்ட பொல்லாத நடுவனைக்கூட இரக்கப்பட வைத்தது இக்கைம்பெண்ணின் விடாமுயற்சி. இந்த விடாமுயற்சி என்பது தளரா நம்பிக்கை. இத்தகைய செபம்தான் இறைவனுக்கு உகந்த செபம்.

படைத்த ஆண்டவரைப் போற்றுவது நமது கடமை. படைக்கப்பட்டவைகளின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது அவரது உரிமை. எனவே நமது ஜெபம் தொடர் ஜெபமாக மாறட்டும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல
முயற்சி நின்றாலும் மரணம்தான்.

Ads Inside Post