Pages - Menu

Monday, 2 May 2016

அமெரிக்கக் கடிதம், திட்டமிடுதல்

அமெரிக்கக் கடிதம்
  திட்டமிடுதல்
-
 சவரி, கேரி, அமெரிக்கா

எடுத்தோம், கவிழ்த்தோம் என்றும் அரக்கப்பரக்கச் செய்தல் என்றும் நமது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. செய்வன திருந்த செய் என்பது ஒளவையாரின் முதுமொழி. அரசு செய்கின்ற பணிகள் அனைத்தும் அரைவேக்காடாகவே இருக்கின்றன என்று சொல்லலாம். அரசு அமைக்கும் சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள் அனைத்தும் ஓட்டை உடசலாகலே உள்ளன. வரும்காலத்தைப் பற்றி நாம் கவலைபடவதில்லை. திட்டமிடுவதில்லை. இதனால் நமது பொருள்களும், பணமும் பாழாகின்றன. இதற்கு நேர் எதிர் நிலையில் அமெரிக்கர், ஐரோப்பியர் செயல்படுவதைப் பார்க்கமுடிகிறது. இதனைத்தான் இங்கு இக்கட்டுரை ஆசிரியர் பகிர்ந்துக் கொள்கிறார். இயேசுவே, அரசன் ஒருவன் தன் எதிரியை சந்திக்க, எப்படி சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுகிறான் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறார் (லூக் 14 : 31). நமது தனிப்பட்ட பொருளாதார ஆளுமையில் சரியாக திட்டமிடாததால், பல இழப்புகளுக்கு ஆளாகிறோம். 

இந்த வாரம் உங்களுடன் திட்டமிடுதல் ((Planning) பற்றி பேச விரும்புகிறேன். அமெரிக்கர்கள் எந்த செயலை தொடங்குவதற்கு முன், அக்கு வேரு, ஆணி வேராக ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பதற்கு புள்ளி விவரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு சாலையில் ஒர் இடத்தில் விபத்து நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த விபத்தைப் பற்றி ஆராய கீழ்வரும் கேள்விகளை முன் வைக்கிறார்கள்.
கடந்த பத்து வருடங்களில்,

1. எத்தனை விபத்துகள் இந்த இடத்தில் நடந்துள்ளன?
2. எந்த நேரங்களில் (அதி காலை, மதியம், இரவு, நடுச்சாமம்) நடந்துள்ளன?
3. வாகனத்தை ஓட்டியவர்களின் வயது என்ன?
4. ஓட்டியவர்கள் பெரும்பாலனோர் ஆண்களா? பெண்களா?
5. விபத்து நடந்த போது மழை பெய்ததா? வெயில் அடித்ததா?
6. விபத்து நடந்தபோது வாகனம் எவ்வளவு வேகத்தில் வந்துள்ளது?
7. வாகனத்தை ஓட்டியவர்கள் குடித்திருந்தார்களா? அல்லது மற்ற கவன குறைவு காரணமா?
8. வாகனப் பழுது காரணமா?

இந்த கேள்விகளின் பதில்கள் அந்த இடத்தில் விபத்துகளை பிற்காலத்தில் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய உதவும். உதாரணமாக பெரும்பாலான விபத்துக்கள் மழை காலத்தில் நடந்திருந்தால் அங்கு மழை தண்ணீர் வடிய ஏற்பாடு செய்யலாம். அல்லது காலை நேரத்தில் அலுவலகம் ஆரம்பிக்கும் நேரத்தில் நடந்தால், அங்கு  traffic light வைக்க ஏற்பாடு செய்யலாம். வாகனம் வேகமாக வந்து விபத்து நடந்தால் அ வியாதி என்ன என்று தெரிந்தால் தானே சரியான மருந்து கொடுக்க முடியும். கடந்த காலத்தில் நடந்த புள்ளி விவரங்கள், பிரச்சனை என்ன என்று துல்லியமாக கணிக்க உதவுகின்றன. இந்த புள்ளி விவரங்களை சேகரித்து கணணியில் பதிவு செய்ய நிறைய பணத்தை செலவிடுகிறார்கள். எந்த ஒரு முடிவையும் புள்ளி விவரங்கள்(data) இன்றி எடுப்பது இல்லை.

நாமும் எதையும் ஆய்ந்து அறிந்து நல்ல முடிவுகளை எடுப்போம். திட்டமிடுதலைப் பற்றி அந்தோணிமுஸ் என்பவர் கூறுகிறார்,

திட்டமிடுதலை தவிர்த்தால் தோல்வியை தவிர்க்க முடியாது.

Wednesday, 6 April 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 - 1 புதிய வாழ்வியல் தொடர்
- அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்.

(அன்பு ஒன்றே போதும்! என்ற அழகிய புத்தகத்தைப் படைத்த தந்தை மகுழன் அவர்கள் இத்தொடரை தொடங்குகிறார்கள்)

1. விண்ணகத்தின் திறவுகோல் பணிவே


ஒரு நாள் இராயப்பர் மிகவும் கவலையுடன் கடவுளைச் சந்தித்தார். “ஆண்டவரே, மோட்சத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சாத்தான் ஏதோ சதிவேலை செய்து எல்லாரையும் அவன் பக்கம் திருப்பி விடுகிறான். நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டினார். கடவுள் இராயப்பரிடம், “இராயப்பரே! ஒன்று செய்யுங்கள். அவனிடம் சென்று சில நாட்கள் தங்கி அவனுடைய சித்து வேலைகளை எல்லாம் கற்று வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

இராயப்பர் சாத்தானை சந்திக்கச் சென்றார். இராயப்பரை பார்த்தவுடன் சாத்தானுக்கு அதிர்ச்சி. அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “வாருங்கள் இராயப்பரே! தாங்கள் என்னிடம் வருவதற்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டுமே?” என்றுக் கேட்டான். இராயப்பர், “ஆமாம். எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேண்டும். உனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் தருகிறேன். நீ எவ்வாறு கோடிக்கணக்கான மக்களை உம் பக்கம் இழுக்கிறாய்? என்ற இரகசியத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். சாத்தான் அவரிடம், “இராயப்பரே, தங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். சரி, எவ்வளவு தங்கம் தருவீர்கள்?” என்று கேட்டான். “நூறு மூட்டை தருகிறேன்” என்றார் இராயப்பர். “100 மூட்டையா?” என்று கேட்டுவிட்டு சிரித்தான் சாத்தான். “சரி, அதற்கு தகுந்த ஓர் இரகசியம் சொல்கிறேன். மனிதர்களை பொய் சொல்ல வைப்பேன். அதுவே அனைத்து பாவங்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்” என்றான். சாத்தானுக்கு இன்னும் அதிகமாக பொன் தேவைப்படுகிறது என்பதை இராயப்பர் உணர்ந்து கொண்டார். “சரி, 1000 மூட்டை தங்கம் தருகிறேன்“ என்றார் இராயப்பர். “சரி, அதற்கு தகுந்தாற்போன்று மற்றொரு இரகசியம் சொல்கிறேன். மனிதரிடத்தில் கெட்ட எண்ணத்தை விதைப்பேன். அவர்கள் அடுக்கடுக்காக பாவம் செய்வார்கள்” என்றான். இராயப்பர், “சரி, உனக்குத் தேவையான பொன் தருகிறேன். முழுமையாகக் காரணத்தைச் சொல்“ என்றார் இராயப்பர். சாத்தானோ “இராயப்பரே, எனக்குத் தேவையான பொன்னை உங்களால் தரமுடியாது. ஏனென்றால் என் பேராசை அப்படி. சரி, உங்கள் காரியத்திற்கு வருகிறேன். மனிதரை எளிதில் என் வழியில் கொண்டுவர நான் இதைத்தான் செய்கிறேன். அவர்கள் மனதில் ஆணவத்தை விதைப்பேன். அதன் பிறகு அவர்கள் அனைத்து பாவங்களுக்கும் அடிமையாகி விடுவார்கள். சரி, நான் இதனை இலவசமாக உங்களுக்கு சொல்கிறேன். ஏன் தெரியுமா? ஆணவம் உடையவர்கள் அத்துணை விரைவில் அதை கைவிட மாட்டார்கள்” என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்தான்.

விண்ணகத்தில் உள்ள புனிதர்களில் சிலர் உலகில் வாழ்ந்தபோது தானதர்மம் செய்யாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய ஏழ்மை அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

விண்ணகத்தில் உள்ள புனிதர்களில் சிலர் உலகில் வாழ்ந்தபோது தவமுயற்சியை மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய உடல்நலக் குறைவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் விண்ணகத்தில் உள்ள புனிதர்களுள் எவரும் உலகில் வாழ்ந்தபோது தாழ்ச்சியை, பணிவை கடைபிடிக்காமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தாழ்ச்சி, பணிவு இல்லாமல் எந்த நல்லப் பண்பும் அவர்களிடத்தில் இடம் பெற முடியாது.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும், மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 11 : 28 ‡ 29).

இயேசு, அவரது பள்ளியில் பாடம் பயில அழைக்கிறார். எதற்காக அழைக்கிறார்? அவரைப் போல வல்ல செயல்களை செய்வதற்காக அல்ல. அவரைப் போல அதிகாரம் கொண்ட போதனையை கற்றுக் கொள்வதற்காக அல்ல. மாறாக, அவரிடத்தில் உள்ள கனிவை, சாந்தத்தை, பணிவை, புனிதத் தாழ்ச்சியை அணிந்து கொள்வதற்காக அழைக்கிறார்.

நம் வாழ்வின் பாதையை இனிமைப்படுத்தும் தாழ்ச்சியை, பணிவை கற்றுக் கொள்ள இயேசுவோடு சேர்ந்து பயணம் செய்வோமா?

அமெரிக்கக் கடிதம் - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்
- சவரி,
கேரி, வடகரோலினா
இந்த வாரம் உங்களுடன் அமெரிக்கர்களின் கடின உழைப்பைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை கடுமையாக உழைக்கிறார்கள். சனி, ஞாயிறு நன்றாக ஓய்வு எடுக்கிறார்கள். அவர்கள் உழைப்பிற்கு ஓர் உதாரணம் சொல்லி விளக்க விரும்புகிறேன்.

அப்போது, என்னுடைய மகன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். துவக்க பள்ளிகளில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆசிரியர் - பெற்றோர் கூடி பேசுவார்கள். அப்போது குழந்தைகளின் வளர்ச்சி பற்றியும், எதில் பின்வாங்கி இருக்கிறார்கள் என்பது பற்றியும் கலந்து பேசுவார்கள். அந்த கூட்டத்திற்கு முன்பே ஆசிரியரிடம் பேசி நேரம் ஒதுக்க வேண்டும். “நான் ஆசிரியரிடம் நான் அலுவலகத்துக்கு போகும் முன் சந்திக்க விரும்புகிறேன்” என்றேன். அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்த வைத்தது. அவர் “நான் காலை 5 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிடுவேன். பள்ளி காலை 7. 45 க்கு ஆரம்பிக்கிறது. இந்த 2. 45 மணி நேரத்தில் இன்றைக்கு நடத்த வேண்டிய பாடங்கள், Prலிளூeஉமி இவைகளுக்காக தயார் செய்வேன். காலை 5 முதல் 7. 30 வரையுள்ள நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், பேசுவோம்” என்றார்கள். இவர் மூன்றாம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்.

அமெரிக்கர்கள் வளரும் அறிவியலுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்து கொள்கிறார்கள். என்னுடன் வேலை செய்யும் நண்பருக்கு 68 வயது. அவரிடம் “எப்படி கணணி கற்று கொண்டீர்கள்?” என்று கேட்டேன். அவர் சொன்னார், “நான் பதினெட்டு வயதில் இராணுவத்தில் ஹிழிஸதீ பிரிவில் சேர்ந்தேன். 5 வருடங்கள் வேலை செய்தேன். நான் ஆங்கிலத்தில் கல்லூரியில் பட்டம் பெற்றவன். அதனால் கல்லூரியில் இருக்கும் போது கணணி கற்று கொண்டேன். என் ஆங்கில அறிவையும், கணணி அறிவையும் வைத்து, கணணி துறையில் துழிஐற்ழியி தயார் செய்யும் வேலை கிடைத்தது. அதற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது. அப்போதே கணணியில் ஸ்ரீrலிஆrழிது செய்வது என்பதையும் கற்று கொண்டேன். அதற்கு இன்னும் அதிகம் சம்பளம் கிடைத்தது. என் 69 வயதில் ஓய்வு பெற்று மாலை நேரங்களில் கல்லூரியில் மாணவர்களுக்கு மீண்டும் ஆங்கிலம் கற்று கொடுக்க போகின்றேன்” என்றார்.

இப்படி அமெரிக்கர்கள் கொடுத்த வேலையை கண்ணும், கருத்துடனும், விருப்பத்துடனும் செய்கின்றனர்.

இது அவர்களின் உயர்வுக்கு காரணம். நாமும் கடினமாக உழைத்து, புதியவைகளை கற்று புது உலகம் படைப்போம்.

கடின உழைப்பை பற்றிய டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வரிகளை கூறி முடிக்கிறேன்.
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும்
தோல்வி என்னும் நோயை கொல்லும் மருந்துகள்
                                                                                        - டாக்டர். அப்துல் கலாம்

Tuesday, 5 April 2016

ஆசிரியர் பேனா, மகிழ்ச்சியும், எழுச்சியும்

ஆசிரியர் பேனா

மகிழ்ச்சியும், எழுச்சியும்
ஏப்ரல், மே மாதங்களில் நம் கிராமங்கள், விழா தோரணையில் ஊஞ்சலாடும். தேர் ஊர்வலங்கள், வண்ண, வண்ண  வான வேடிக்கைகள், உறவினரின் ஒன்றுகூடல் ஆகியவைகளுடன் கலகங்களும், கைகலப்புக்களும், பிளவுகளும் மக்களை சந்திக்கும்.
தி.பா 37 : 4 அருமையானதொரு வாக்கியத்தைத் தருகிறது.
“ஆண்டவரிலேயே மகிழ்ச்சிக் கொள்.
  உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்”.
இறைவனிடமிருந்து  உதவிகளை பெறுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் முன்வைக்கும் நிபந்தனை, ஆண்டவரிலேயே 
மகிழ்ச்சிக் கொள் என்பதாகும்.
“மகிழ்ச்சி என்பது ஒரு வழி, அது ஒரு இடமில்லை” என்கிறார் சிட்னி ஹேரிஸ் என்பவர்.
“வழிபாடுகள் ஆன்மாக்களின் மகிழ்வு கொண்டாட்டங்களாக அமைய வேண்டும்” என்கிறார் கோர்டன் ஹிங்லி என்பவர்.
பாஸ்கா மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக நமது பங்குகளில் விழா கொண்டாடப்படுகிறது. விழாக்கள் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்றன. உறவுகளை வளர்க்கின்றன. எனவே விழாக்கள் தங்களின் பெருமைக்குரிய பண்புகளிலிருந்து விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவதே நமக்கு உண்மையான மகிழ்வைத் தரும்” என்ற செய்தியை இம்மாத இதழின் ஒரு கட்டுரையில் காணலாம்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பணம் பட்டுவாடா மிக திறமையான முறையில் திரைமறைவில் செய்யப்பட்டு வருகிறது. ஓர் அம்மையாரிடம், ஏன் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உங்கள் உரிமையை கொச்சைப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்றேன். “ஐநூறு ரூபாய் யார் தருவார்? கிடைப்பது லாபம் தானே?” என்றார் அவர். பணம் கொடுத்து சாமி படங்களில் கைவைக்கச் சொல்லி, சத்தியம் வாங்குகிறார்கள். பாமர மக்கள் இந்த தந்திர வழிகளுக்கு பலியாகி விடுகிறார்கள்.
திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் தன் அனுபவத்தை ஒரு கூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டார். மதுரையில் ஒரு தொகுதியில் தேர்தலுக்கு பொறுப்பாளராக இவரை நியமித்து, ஊழலில்லாமல் நடத்துங்கள் என்ற உத்தரவு அவருக்கு கொடுக்கப்பட்டது. ஊர் தலைவர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியவர்களை சந்தித்து தேர்தலுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டாராம். இதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அவர்கள் சொல்லிவிட்டார்களாம். பிறகு கல்லூரிகளுக்குச் சென்று, கல்லூரி மாணவர்களை சந்தித்து நேர்மையான தேர்தலை நடத்த உங்களால் முடியும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் எழுச்சிக் கொண்டனர். தங்கள் பெற்றோர்களை, நண்பர்களை, உறவினர்களை ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுபோட்டனர். மற்ற இடங்களிலும் சென்று அறிவுறுத்தினர். சிறப்பாக தேர்தல் நடந்ததாக திரு.சகாயம் அவர்கள் பகிர்ந்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற வேட்கை வெடித்திருக்கிறது. ஊழலற்ற அரசு, மக்களின் நலனை முன்னெடுக்கும் அரசு என்று மக்கள் காத்து நிற்கிறார்கள். திரு.சகாயம் அவர்கள் மீண்டும் கூறினார், மக்கள் நேர்மையாக மாறினால்தான் நேர்மையான தலைவர்கள் அரசு உண்டாக முடியும் என்று.
கவிக்கோ அப்துல்ரகுமான், முன்னோட்ட சமுதாயத்தில் வாக்கெடுப்பு எப்படி நடக்கும் என்று கனவு காண்கிறார். 

வாக்குப் பெட்டிகளை 
செயற்கை முறையால் 
சினையாக்க முடியாது. 
கருச்சிதைவு செய்யும் 
காரியமும் நடக்காது.

முன்னோட்ட சமுதாயத்தின் பண்பு என்ன என்பதையும் குறிப்பிடுகிறார்.

கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவரி
புன்னகை அங்கே பொதுமொழி
ஆன்மீக மகிழ்ச்சி சமுதாய எழுச்சியைத் தரட்டும்.

வெற்றி உங்கள் கையில் ...

வெற்றி உங்கள் கையில் ...
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M. Ed; M.Sc; M.Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி,
சமயபுரம்

அது பெரிய மருத்துவமனை. நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டிருந்தது. அம்மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால் அங்குள்ள பணியாளர்கள், மருத்துவர்கள் அவ்வளவு ஆர்வமாக செயல்படுவர். நோயாளிகளை அவர்கள் அன்புடன் கவனிப்பதிலேயே நோயாளர்களின் நோய்கள் பாதி தீர்ந்துவிடும். அங்குள்ள பணியாளர்கள் அவ்வளவு ஆர்வமாக பணிசெய்ய என்னக் காரணம் என்று எல்லோரும் அதிசயத்தினர். அங்கு புதைந்திருந்த இரகசியம் இதுதான். மருத்துவமனையின் தலைவர், பணியாளர் ஒவ்வொருவரையும் அவரின் பிறந்த நாளில் சந்தித்து, வாழ்த்துக்களையும், பரிசுகளையும் கொடுப்பார். இன்னும் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளைத் தெரிந்துக் கொண்டு, தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்வார். பணியாளர் ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற கொள்கையில் செயல்படுவார்.

அதேபோல, பெங்களூரில் ஒரு புகழ் பெற்ற பொறியாளர், தான் சம்பாதிப்பதையயல்லாம் தன் பணியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். தனக்கென எதுவும் சேர்த்து வைப்பதில்லை. எனவே பணியாளர்கள் ஆர்வமுடன் பணிசெய்வர். அவரது தொழில் பலுகியது, பெருகியது.
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதோடு பிறரையும் மகிழ்ச்சி அடையச் செய்வதுதான் வெற்றியாளனுக்கு உரிய பண்புகளில் ஒன்று.
குடும்பத்தில், அப்பா, தான் அணிந்து கொள்ள நல்ல உடைகள் இல்லாவிட்டாலும், அறுந்துபோன செருப்புகளை பயன்படுத்தினாலும், பழைய சைக்கிளில் பயணம் செய்தாலும் தன் மகன் புத்தாடை உடுத்தி, றீஜுலிe போட்டுக்கொண்டு ளீழிr ‡ ல் நுக்ஷூக்ஷூஷ்உe - க்கு போகும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அம்மா தன்னுடைய வசதி, வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு தன் மகள் படித்து பெரிய வேலைக்கு சென்று மகிழ்ச்சியோடு வாழும்போது அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இப்படி பிறரை மகிழ்ச்சிப்படுத்தும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, கணவன், மனைவி அனைவருமே வெற்றியாளர்களே. ஆகவே, உலகில் வாழும் அனைவரும் தம் மகிழ்ச்சியோடு பிறரையும் மகிழ்ச்சிக்கடுத்துகின்றபோது வெற்றியாளர்களாக உருவாகிறார்கள். Hello!எங்க கிளம்பீட்டிங்க? பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வெற்றியாளராக மாறவா? All the very best.

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை

‡‡ சார்லி சாப்ளின்

ஆத்தாவும், தாத்தாவும்

ஆத்தாவும், தாத்தாவும்
‡ வாயாடி வண்ணக்கிளி

‡ என்னடியம்மா, ஏதோ பத்திரத்தை கொண்டு வந்து கொடுக்கிற.
‡ படிச்சு பாருய்யா, இனிமே என்ன ஏமாத்த முடியாது. இத்தனை வரு­மா ஏமாளியா நான் வாழ்ந்திட்டேன்.
‡ என்ன வி­யம் சொல்லு. மே மாசம், வெயில் காலம் இன்னும் வரல. நீ இப்பவே குழம்பி போனது போல தெரியுது.
‡ அதிகமா பேசாதீங்க, பேசினீங்க பின்னிப்பிடுவேன் பின்னிப்பிடுவேன்.
‡ என்ன பின்னி பிடுவியா? நான் என்ன சடையா?
‡ முதல்ல அந்த பத்திரத்த பாருய்யா.
‡ என்ன விவாகரத்து பத்திரமா? குழியில போற வயசில எப்படிடி இந்த எண்ணமெல்லாம் உனக்கு வருது?
‡ இதான்யா இன்றைக்கு டிரன்ட், மற்றவங்க உதவி எனக்கு தேவையில்லை. நான் தனியா நின்னு ஜெயிச்சு காட்டுறேன் 
   பாருங்க.
‡ இனிமே என்னத்தடி ஜெயிக்க போற?
‡ சொத்து, நகை, பாங்க் பணம் இதெல்லாம் என் கைவசம் கொண்டு வரப் போறேன்.
‡ தாராளமா எல்லாத்தையும் எடுத்துக்கடி. உன்னுடைய பிச்சுபிடுங்கள் இல்லாம வனவாசம் போறேன்.
‡ ஏன்யா, இன்றைய அரசியல் நிலவரம் தெரியாம உளருற.
‡ வாங்க, வாங்கன்னு, கால்லுல விழுந்து கும்பிடாதபடி சில கட்சிகள் கூட்டணிக்கு கூப்பிடுது. அட போய்யான்னு தனியா 
  நின்னு ஜெயிக்கிறேன்னு சில கட்சிகள் ஒதுங்குது.
‡ ஏண்டி, அரசியல நம் குடும்பத்தில இழுத்துக்கிட்டு வர? அது சாக்கடை. நல்லவனையும் கெட்டவனா மாத்திர பேய் 
   கூடம். அரசியல் கட்சிகாரங்க அப்படி, இப்படினா நாம அப்படி நடக்க வேண்டியதில்லை.
‡ என்னய்யா புரியாமா பேசுற. அரசு, அதிகாரமெல்லாம் ஆரம்பமாகிற இடம் குடும்பந்தான். உன்னை அடக்கி    
   வைச்சிருந்தா, எனக்குத் தெரியாம நேத்து சினிமாவுக்கு போயிருப்ப? இன்னைக்கு சொல்லி வைச்சு அதே 
   சினிமாவுக்கு போயிட்டு வரேன் பாரு.
‡ ‘விசாரணை’ என்ற படத்துக்குதான் போனேன். அய்யோ, போலீஸ் செய்ற அட்டூளியத்தை அப்படியே 
   படத்தில பிழிஞ்சு வைச்சிருக்காங்க,
‡ உங்களையும் அப்படி நான் சித்திரவத பண்ணாம போயிட்டேன். அவ்வளவு தூரம் உலகம் தெரியாத 
  பொம்பளையாயிட்டேன்.
‡ போதுமடியம்மா, உன் உணர்ச்சியையயல்லாம் மூட்டை கட்டி வை. உன்னை எனக்கு மனைவியா கொடுத்ததற்கு 
   கடவுளுக்கு தினமும் கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்.
‡ ரொம்ப ஐஸ் வைக்காதீங்க. வருகிற தேர்தல யாருக்கு ஓட்டு போடலாம்னு யோசிங்க. ஓட்டு உரிமை தீமைக்கு வேட்டு 
   வைக்கும் பெருமை.
‡ சரிடியம்மா, ஓட்டு உரிமை பூமாலையை போல. மணமக்கள் எப்படி பயன்படுத்துவாங்களோ அப்படி 
   பயன்படுத்துவோம்.
‡ பன்றிகளுக்குமுன் போடப்பட்ட முத்தினை போல, விபரம் தெரியாதவங்களா இல்லாம பாத்துக்குவோம்.
‡ இந்தா, விவாகரத்து பத்திரத்த நீயே கிழிச்சு போடு.

தமிழில் உறவு முறைகள், கலியாண சிரிப்பு

   
தமிழில் உறவு முறைகள் 

        நாம் = முதல் தலைமுறை
தந்தை + தாய் = இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி = மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி = நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி = ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் = ஆறாம் தலைமுறை
பரன் + பரை = ஏழாம் தலைமுறை
பரன் + பரை = பரம்பரை

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச்சிறப்பு!...



 கலியாண சிரிப்பு  

 ஒரு புலி தன் கல்யாணத்துக்கு காடடுல எல்லா அனிமல்சுக்கும் இன்விடே­ன் கொடுக்கப் போச்சு...
      அப்போ அங்கே ஓடிவந்த ஒரு பூனை பயங்கரமா உருண்டு உருண்டு சிரிச்சுது...!
      பயங்கர காட்டமான புலி, ஏண்டா சிரிக்கிறேன்னு கேட்டுச்சு?
      அதுக்கு அந்த பூனை கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு, நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாத்தான்  
     இருந்தேன்டான்னு சொல்லிட்டு ஓடிப்போய்ருச்சு.

Ads Inside Post