Pages - Menu

Monday, 2 April 2018

புகுமுக அருளடையாளங்கள்

புகுமுக அருளடையாளங்கள்...

3. புகுமுக அருளடையாளங்கள் கொண்டாட்டதை புதுப்பித்தல்
-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

காலப்போக்கில் புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட்டங்களில் சீர்குலைவு ஏற்பட்டது என்றும், அது காலத்தின் கட்டாயமானதாக இருந்தது என்றும், முந்திய சிந்தனையில் எழுதப்பட்டது. இப்பொழுது எவ்வாறு இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இச்சீர்குலைவைச் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன எனப் பார்ப்போம்.

1. புதுப்பிக்கும் திட்டம்

காலபோக்கில் அருளடையாளங்கள், அருள் வேண்டல் குறிகள் ஆகியவற்றின் சடங்குகளின் இயல்பும், நோக்கமும் இக்காலத்தில் தெளிவாகத் துலங்கா வண்ணம் ஒரு சில கூறுகள் புகுத்தப்பட்டன. இதன் விளைவாகத் தற்கால தேவைகளுக்கு ஏற்பவும், தொடக்கக் காலத்தில் இடம் பெற்றக் கொண்டாட்ட முறையை மீட்டெடுக்கும் முறையிலும், புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட்டம் புதுபிக்கப்பட வேண்டும் என்று திருவழிப்பாடு கொள்கை விளக்கம் பரிந்துரைத்தது. (காண்: தி.வ. எண்.62)

தொடக்க திரு அவையில் கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி வைத்த படிநிலைகள் திரும்பவும் நிறுவபட வேண்டும். மேலும் திருமுழுக்குப் புகுநிலைகாலம் (ளீழிமிeஉஜுeஐதுeஐழிமிe) ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிட்ட காலத்தினுள் நிறைவேற்றபட சடங்குகள் உருவாக்கப்பட வேண்டும். (காண்: தி.வ.எண்.64) என்பதும் சங்கத்தின் போதகம்.

கிறிஸ்தவ சமயம் தழுவும் தொடக்கச் சடங்கு முழுவதுடன் உறுதிபூசுதல் என்னும் அருளடையாளம் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு அதிகத்தெளிவாக வெளிப்படும் வகையில் இதன் சடங்கு திருத்தி அமைக்கப்பட வேண்டும். (தி.வ.எண்.71) என்று சொல்லப் பட்டது.

2. புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட் டத்தில் மறுமலர்ச்சி

மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை செயலாக்க திருவழிபாட்டு குழு ஒன்று நிறுவப்பட்டது. இது புகுமுக அருளடையாளங்கின் சடங்கு முறையைத் தயாரித்து அளித்துள்ளது. சிறுவர்களின் திருமுழுக்கு சடங்குமுறை 1971-லும், முதியோருக்கான திருமுழுக்கு சடங்குமுறை 1972‡யிலும் வெளிவந்தன.

புகுமுக அருளடையாளங்களின் முதல் கட்டமாக வருவது திருமுழுக்கு அருளடையாளம் இதைப் பெறுவதினால் ஒருவர் முடிவில்லா வாழ்வைப் பெற தகுதியுடையவர் ஆகிறார். இந்த அருளடையாளம் பெற நம்பிக்கை (விசுவாசம்) முன்னதாகவே தேவையாகிறது. அது தொடர்ந்து பேணி வளர்க்கப்படுகிறது. 

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருளடையாளத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறுகின்றனர். குழந்தைப் பருவத்தில் திருமுழுக்கு பெற்ற முதியவர்கள், தகுந்த தயாரிப்புப் பெற்ற பின் உறுதிபூசுதலையும், நற்கருணையையும் ஒரே பொது கொண்டாட்டத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொருத்தமட்டில் உறுதிபூசுதல் ஏறத்தாழ ஏழுவயதிற்குப் பின்னர் வரை தள்ளிவைக்கப்படுகிறது. திரு அவை சட்டம் 891 புத்தி விவரம் அடைந்த சிறுவர்களுக்கு உறுதிபூசுதல் கொடுக்க வேண்டும் என பணித்துள்ளது.

உறுதிபூசுதல் சடங்குமுறையை அறிமுகப்படுத்த வரைந்த   திருத்தூது   அமைப்பு    விதித் தொகுப்பில்   புஸ்ரீலிவிமிலியிஷ்உ உலிஐவிமிஷ்மிற்மிஷ்லிஐ திருத்தந்தை ஆறாவது பால் பின்வருமாறு குறிப்பிடுகிறார். திருமுழுக்கில் மறுபிறப்படைந்த நம்பிக்கை யாளர் உறுதிப்பூசுதல் அருளடையாள த்தைப் பெறுவதினால் வலிமைப்படுத் தப்படுகிறார். இறுதியாக நற்கருணை உணவால் போழிக்கப்படுகிறார். இவ்வா றாக இந்த புகுமுக அருளடையாளங்கள் வழியாக இறைவாழ்வின் செல்வங் களைப் பெற்று நிறைவை அடைகிறார்கள்.

இதைத் தொடர்ந்து திருவழிபாட்டில் வல்லுநரும், சிறந்த அருள்பணியாளருமாகிய கிரிக்டென் (ளீஜுrஷ்உஜுமிலிஐ) என்பவர், திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்ற வரிசை முறையிலேயே புகுமுக அருளடையாளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று புகுமுகம் பற்றிய எல்லா ஆவணங்களும் குறிப்பிடுகின்றன என்கிறார். இந்த வரிசை முறையில் முரண்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் அருள்பணியா ளர்களும் உறுதிபூசுதல் அருளடையாளத்தை வழங்க லாம் என்கின்றனர், என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

 3. செயலாக்கத்துக்கு வராத புதுப்பித்தல்

மேலே நாம் விவரித்த புதுபித்தல்கள் ஏட்டளவில் தான் உள்ளனவே  தவிர இன்னும் செயலாக்கத்திற்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால் திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் என்ற நிலை இன்னும் மாறவில்லை. தமிழக ஆயர் பேரவை அருள்பணியா ளர்களுக்கு வழங்கிய செயலுரிமைகளில் (ய்ழிஉற்யிமிஷ்eவி)  உறுதிபூசுதல் கொடுக்கக் கூடிய வயது 12 முதல் 14 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அகில இந்திய ஆயர் பேரவை  திருஅவைச்சட்டம் 891‡ ன்றை தழுவி அமைத்த துணைச்சட்டத்தை (ளீலிதுஸ்ரீயிeதுeஐமிழிrதீ யிeஆஷ்வியிழிமிஷ்லிஐ)  மேற்கோலாகக் காட்டுகிறது. இத்தகையைத் துணை சட்டம் உறுதிபூசுதல் பக்குவ வயதானவரின் அருளடையாளம் (றீழிஉrழிதுeஐமி லிக்ஷூ  னிழிமிற்rஷ்மிதீ),   திருத்தூது   பணிக்கு    அர்ப்பணிக்கத்    தகுதியுடையவரின்  அருளடை யாளம்   (றீழிஉrழிதுeஐமி லிக்ஷூ ழிஸ்ரீலிவிமிலியிழிஉe லிr ளீலிதுதுஐஷ்மிதுeஐமி) போன்ற பழைய, திருஅவையின் வரலாற்றின் இடைக்கால இறையியல் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயர்களின் இத்தகைய மனப்பாங்கைப் பற்றி குறிப்பிடும்போது சீர்கேடான இறையியல் மேல் சரியான அருள்பணியை கட்டியமைக்க அல்லது உருவாக்கக் கூடாது என்று பிரான்சு வழிபாட்டு வல்லுநர் தோம் போத்தே (ம்லிது யலிமிமிeயி)  “தீலிற் உழிஐஐலிமி ணுற்ஷ்யிd ழி விலிற்ஐd Pழிவிமிலிrழியி லிஐ ஆலிலிd மிஜுeலியிலிஆதீ” குறிப்பிடுவது இச்சூழ்நிலைக்குப் பொறுத்தும்.

இத்தகைய துணை சட்டமும், அதை தமதாக்கிக் கொண்ட தமிழக ஆயர் பேரவையும், குழந்தைகளைப் பொறுத்தமட்டில், இலத்தீன் திரு அவையில் உறுதிபூசுதல் ஏறத்தாழ ஏழுவயதிற்குப் பின்னர் வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று உறுதிபூசுதல் சடங்கு முறையில் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதையும் (எண். 11 &2)
“நம்பிக்கையாளர்களுக்கு உறுதிப்பூசுதல் அருளடை யாளம் அவர்கள் புத்தி விவரம் அடையும் வயதில் கொடுக்கப்பட வேண்டும்”  என்று திருஅவை சட்டம் 891 குறிப்பிட்டிருப்பதையும் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவு. இது ஏற்புடையதன்று. மேலும் குழந்தைகளுக்கான சடங்குமுறை பரிந்துரையும், வயதானவர்களின் (புdற்யிமிவி) திருமுழுக்கு சடங்கு முறையின் பரிந்துரையும் இன்னும் செயலாக்கப்பட வில்லை என்பதும், அதற்காகன எந்த முயற்சியும், வழிகாட்டல்களும் தமிழக திரு அவையில் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

முடிவுரை:
ஒரு செடியில் மலர் திடீரென ஒருநாளில் பூத்துவிடுவதில்லை. முதலில் மலர் அரும்பாகத் தோன்றுகிறது. பின்னர் மொக்குவிட்டு மலர்கின்றது. அதன்பின் மலர்ந்து மணங் கமழ்கின்றது. அதுபோலவே கிறிஸ்தவ வாழ்வு இறைவாழ்வில் பங்கு பெறுவதாகும். இதை நாம் ஒரு நாளில் அடைவதில்லை. அடையவும் முடியாது. திருமுழுக்கு அருளடையாளத்தில் நம்பிக்கை யாளரில் அரும்பாகி, உறுதிபூசுதல், அவர் பெறும்போது மொக்குவிட்டு மலர்ந்து, பின் நற்கருணை விருந்தில் பங்கு பெறும்போது மணங்கமழ்கின்றது. ஒரு வாழை இலை தோன்றுவதும் இதே போல்தான் என்பதை நாம் கவனிக்கலாம். மலர்ந்த பின்புதான் கிறிஸ்தவ வாழ்வு காய்த்துக் கனி கொடுக்க முடியும்.

இனிவரும் சிந்தனைகளில் எவ்வாறு புகுமுக அருள் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் முறையான வரிசையில் பொருளும் பயனும் உள்ள விதத்தில் கொண்டாடலாம் என்பது விளக்கம் பெறும்.
    ‡ (தொடரும்...)

No comments:

Post a Comment

Ads Inside Post