விவிலிய விடுகதை
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
2 கொரிந்தியர் 1 முதல் 13 முடிய
அண்ட புளுகு திருத்தூதர்களும் உண்டு
ஆகாசப் புளுகு திருத்தூதர்களும் உண்டு
வஞ்சக வேலையாள்கள்
கிறிஸ்துவின் தூதர்களாக நடிப்பவர்கள்
இவர்களை எப்படி அழைக்கலாம்?
2. தீயவை சொல்பவன்
தீமைக்குத் தலைவன்
நடிப்பிலே கில்லாடி
பொய்யுக்கு அப்பன்
பாம்பாய் வந்து கெடுத்தவன்
பாரெங்கும் சுற்றுபவன்
இவன் யார்?
3. அந்தப்படைக்கலத்தை தங்கள்
இடக்கையிலும், வலக்கையிலும்
எவற்றால் தாங்கியுள்ளனர்.
4. அன்று முக்காடிட்டு முகத்தை மறைத்தார்
இரண்டெழுத்துக்காரர்.
இன்று முக்காடின்றி முகத்தினராய் பிரதிப்பலிப்போம்
எனக் கூறியவர் இவர் யார்? அவர் யார்?
அது என்ன?
5. நாங்கள் வீதியில் கிடந்தோம்
எங்களை எடுத்தவர்கள் அவர்கள்
தட்டினர், மிதித்தனர், அடித்தனர்,
சுற்றினர், கழற்றினர், உருட்டினர்
அசைந்துக் கொடுத்தேன்.
நாங்கள் யார்? இயக்கியவர் யார்?
6. கையில் அணியா பூ
இதயத்தில் இருக்கும் பூ
மனதை இறுக்கும் பூ
அது என்னப் பூ
7. சூப்பரா சொல்றேன்க
சூதும் வாதும் தெரியாதுங்க
சிறைப்பட்டேன், அடிப்பட்டேன்
கல்லெறிப் பட்டேன்.
ஆழ்கடலில் அல்லலுற்றேன்
பட்டினிக் கிடந்தேன், குளிரினில் வாடினேன்
நான் யார்?
8. மிகுதியாய் சேகரித்தவருக்கு
எதுவும் மிஞ்சவில்லை
குறைவாகச் சேகரித்தவருக்கும்
எதுவும் குறைவுபடவில்லை
என்று எங்கே எழுதியுள்ளது?
9. கொடுக்கிற தெய்வம்
கூரையப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம் அதுபோல
வாரி வாரி வறியவர்க்கு வழங்குவது
பெற்ற பெருவாழ்வை மற்றவர்களோடு பகிர்வதின்
கிடைத்த வெகுமதி இரண்டெழுத்தில்
நிலைத்திருக்கும் அது என்ன?
10. நெறிக் கேட்டோடு உறவு NO NO NO
இருளோடு இருப்பவரோடு NO NO NO
சாத்தானோடு உடன்பாடு NO NO NO
நம்பிக்கையற்றோருடன் NO NO NO
பின்னர் நாம் யார்?
11. விடுவித்தார் இதிலிருந்து - எதில்?
இனிமேலும் விடுவிப்பார்- எவற்றால் ?
12. கூடையில் குந்திய கோமகன்
கோபுர மேல் மாட வழியே
தப்பிய பேரறிவாளர் யார்?
13. எழுதப்பட்ட அதனால் விளைவது இரண்டெழுத்து
அவரால் விளைவது இது மூன்றெழுத்து
எப்படி?
14. திருத்தூதர்க்குரிய அறிகுறிகள் இவைகளே?
மஉ, அஅ, அசெ, வசெ
இவைகளை தன்னகத்தே கொண்ட தூதர் யார்?
15. பாசத்துக்கு உரிய தம்பி
நேசத்துக்கு உரிய தம்பி
அன்பின் தங்கக் கம்பி
அவருக்கு உகந்த தம்பி
இந்த தம்பி யார்? யாருக்கு உகந்தவர்?
No comments:
Post a Comment