Pages - Menu

Monday, 2 April 2018

உயிர்ப்புக் காலம் 2 ஆம் வாரம்

உயிர்ப்புக் காலம் 2 ஆம் வாரம்
8 - 04- 2018 ச.இ.அ
தி ப 2: 42-47;  1 பேது 1: 3-9;  யோவா 20: 19 - 31

நம்பிக்கைக் கொண்டவர்கள் கடவுளைக் கண்டவர்கள் (நற்செய்தி).
நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்ந்தார்கள் (முதல் வாசகம்).

நம்பிக்கைக் கொண்டவர்கள் உலகை வென்றவர்கள் (இரண்டாம் வாசகம்).

யோவான் நற்செய்தியின் படி உயிர்த்த  இயேசு, நான்குமுறை தோன்றுகிறார். 
1. மகதலா மரியாவுக்கு ( யோவா 20: 11-18), 2. மற்ற சீடர்களுக்கு (யோவா 20: 19‡23), 3. தோமாவுடன் மற்ற சீடர்கள் (யோவா 21: 1‡2), 4. ஏழு சீடர்கள்.

தோமாவுடன் மற்ற சீடர்களுக்கு இயேசு தோன்றிய நிகழ்ச்சியைத்தான் இன்றைய நற்செய்திப் பகுதியில் பார்க்கிறோம். சீடர்கள் என்பது 11 சீடர்கள் மட்டுமல்ல. பலர் அங்கு உள்ளனர். யூதர்களுக்கு அஞ்சி, கதவுகளை அடைத்து சீடர்கள் கூடியிருக் கிறார்கள். இயேசு அவர்கள் நடுவில் நின்று ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாழ்த்துகிறார். ‘அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்’ (யோவா 14:27) என்ற தன் வார்த்தைகளை உண்மையாக்குகிறார். கைகளையும், விலாவையும் காட்டுகிறார். இயேசுவை சீடர்கள் கண்டுக் கொள்கிறார்கள். இயேசு பெற்றியிருந்த காயத்தளும்புகள் அடையாளமாக  அமைகின்றன. இயேசுவைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சிக் கொள்கிறார்கள்.‘சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’. அப்போது உங்களின் துயரம் மகிழ்ச்சியாக மாறும்  ( யோவா 16:22) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கு உயிர் பெறுகின்றன. உயிர்த்த இயேசு, தன் சீடர்கள் தன் பணியை தொடர வேண்டுமெனப் பார்க்கிறார். ‘தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்’.

இவ்வாறு சீடர்கள் மகிழ்வுடன் இயேசுவைக் கண்டார்கள். தோமா, தானும் அத்தகைய அனுபவத்தை சந்தித்தால், அன்றி நம்பமாட்டேன் என்கிறார். இயேசு, எட்டு நாள்களுக்குப் பின் தோன்றுகிறார். தோமாவைப் பார்த்து, தன் காய தளும்புகளை காண்பது மட்டுமல்ல, தொட்டுப் பார்த்து நம்பிக்கைக் கொள் என்கிறார். “காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்று பிற்கால சீடர்களுக்கு உறுதி அளிக்கிறார். தோமா முற்றிலுமாக இயேசுவிடம் சரணாகதி அடைகிறார். ‘நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்’ என்று அறிக்கையிடுகின்றார். இதே போன்றே இயேசுவைப் பற்றிய அறிக்கையை ஆறு இடங்களில் பார்க்க முடிகிறது.

யோவா 1:49 நத்தனியேல்: “ரபி, நீர் இறைமகன்; நீரேஇஸ்ரயேலின் அரசர்”.

யோவா 4:42 சமாரியர் : “அவர் உண்மையிலே உலகின் மீட்பர்  எனக் கண்டு கொண்டோம்”.

யோவா6:69 பேதுரு: “நீரே கடவுளுக்கு அர்ப்பண மானவர் என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம்”.

யோவா 9: 37-38 பார்வை பெற்றவர்: “ஆண்டவரே, நம்பிக்கைக் கொள்கிறேன்”.

யோவா 11:27 மார்த்தா  : “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்”.

யோவா 16:30 சீடர்கள்: “இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்துவந்தவர் என்பதை நம்புகிறோம்”. 

‘உன் முன்னால் நிற்கின்ற எல்லா படிகளையும் உன்னால் பார்க்க முடியாவிட்டாலும் படியேர துவங்குகிறாயே அதுதான் நம்பிக்கை’ ‡ மார்ட்டின் ருVத்தர் கிங்

அன்மையில் வாட்ஸ்அப்பில் படித்த நிகழ்ச்சி. சென்னையில் ராஜம்மா என்ற ஆசிரியை மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றுகிறார். பிள்ளைகளை அப்படி அன்பு செய்தார். பிள்ளைகளும் அவரை அன்பு செய்தனர். குறிப்பாக ஒரு பிள்ளை அந்த ஆசிரியை மீது அளவற்ற அனபு வைத்திருந்தது. அந்தக் குழந்தையின் தந்தை இரானுவத்தில் பணிசெய்தார். எனவே அவர் மும்பைக்க மாற்றலானார். குழந்தை அந்த ஆசிரயையும் அவளுடன் வரவேண்டும் என்று அடம் பிடித்தாள். அப்படி இப்படி சொல்லி பிள்ளையை மும்பைக்கு அழைத்துச் சென்றனர். மும்பையில் இருக்கும்போதும் அக்குழந்தை ராஜம்மா ஆசிரியையை மறக்கவில்லை. அடிக்கடி போன் செய்வாள். அக்குழந்தை பத்தாவது படித்தபோது கிட்னி பிரச்சனை உண்டானது. டயாலிஸ் செய்யவேண்டிய நிலைமை. இனி பிழைக்க மாட்டாள் என்ற நிலையில், என் ஆசிரியையைப் பார்க்க வேண்டும் என்று அப்பெண் கேட்டுக்கொண்ட தற்காக, சென்னைக்கு அப்பெண்ணை அழைத்து வந்தார்கள். ஆசிரியையும் அவளும் சந்தித்தது அவ்வளவு  உருக்கமான நிகழ்வு. அதன் உச்சகட்டமாக அப்பெண் அந்த ஆசிரியையின் தோழில் சாய்ந்தபடியே உயிர் நீத்தாள். ராஜம்மா ஆசிரியை நம்பிக்கையின் வெளிப்பாடு. உலகிற்கு அன்பின் சாட்சியம்.

No comments:

Post a Comment

Ads Inside Post