Pages - Menu

Saturday, 25 February 2017

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்..

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
,பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

விழித்தெழுந்த விழுமியங்கள்

இந்த உலகமே தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தார்கள் நம் இளைஞர், இளம்பெண்கள். ஆம் ஜனவரி 17ஆம் தேதி நம் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆரம்பித்த அறவழிப் போராட்டம் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்தர சட்டமாக ஆக்கப்பட்டதற்கு அடிப்படை காரணமாக இருந்தது. இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கூடிய அந்த அமைதி  போராட்டத்தில் எந்தவித வன்முறையும் நிகழவில்லை. அவர்கள் கைகளில் தடியோ, அரிவாளோ, கத்தியோ, துப்பாக்கியோ, வெடிகுண்டோ, கற்களோ இல்லை. ஆனால் மனதில் இலட்சியம் இருந்தது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டது. விழுமியங்கள் விண்ணை தொடும் அளவிற்கு அவர்கள் இதயத்தில் இடம் பிடித்திருந்தது. அவர்களின் வெற்றிக்கு காரணம் அவர்கள் செயலில் வெளிப்படுத்திய அறவழி மதிப்பீடு னிலிrழியி Vழியிற்eவி என்பதை யாருமே மறுக்க முடியாது. யார் இதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்? யார் இவைகளை அவர்களுக்கு வழங்கினார்கள்? ஆம்! நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும், உறவினர்களும், நண்பர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது.  இந்த போராட்டத்தினால் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி கனிகள் பல. அவற்றுள் சிலவற்றை உங்கள் முன் படைக்கின்றேன்.
வீட்டில் அம்மாக்கள் “உன் இடத்தை  சுத்தமா வெச்சுக்க மாட்டியா” எனக் கேட்ட பொழுது எளிதாக எடுத்துக்கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும், சாப்பிட்டு  போட்ட  குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். டிராபிக் போலீஸ் மாதிரி டிராபிக்கை ஒழுங்கு செய்தார்கள். போராட்டக் களத்தில் “தண்ணி இந்தாங்க சிஸ்டர்”, “சாப்பாடு இந்தாங்க பிரதர்னு” சகோதரத்துவத்தை வளர்த்தாங்க. பீட்சா கார்னர்களில் செல்ஃபிகள் எடுத்த இந்த இளைய தலைமுறை இன்று அந்த செல்ஃபிகளை நினைத்து வெட்கப்படுகிறது. ‘இனி  உங்கள் வாசலை மிதிக்க மாட்டோம்’ என்ற சூளுரை வேறு. இரவு பகல் பார்க்காமல் பனி, வெயில் பார்க்காமல் கொசுக்கடியில் தூங்கி எழும் ஒவ்வொருத்தரும் வீட்ல அம்மா மறந்து போய் ஆல்‡அவுட் ஆன் பன்னலைன்னாக்கூட கொசுக்கடிக்காக கடிந்து கொள்ளும் கோபக்காரர்கள்தான். பெண்களைப் பாதுகாத்த விதம் ஆயிரம் இல்லை ... இல்லை... எண்ணிக்கைக்கு அடங்காத லைக்ஸ் அவர்களுக்கு, ஒரு ராயல் சல்யூட்டும் கூட. உணவு பொட்டலங்களை முதல்ல அவங்க சாப்பிடறேன்னு சொல்லாம, சில இளைஞர்களை அழைத்து “உள்ளே இருப்பவர்களுக்கு கொடுத்துட்டு வந்திடலாம் வாங்க ப்ரோ” என்றனரே, வளரும் குழந்தைகளிடையே பகுத்துண்ணும் பழக்கத்துக்கு காக்கையை எடுத்துக்காட்டா சொல்லாதீங்க. இந்தப் பசங்களைச் சொல்லுங்க. அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்புச் செய்யனும்னு வாய் வார்த்தையா சொல்லாம, களத்துக்குள்ள செய்தும் காட்டியது இந்தப்படை.
பீச்சில் கூடையில் பிஸ்கெட், சுண்டல், சோளம் எல்லாம் இலவசமாகவே தந்த பாட்டித் தாத்தாக்களும், வரும்போதே 4 பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் கொடுத்த தாய்க்குலங்களும், பெண்களுக்கு தேவைப்படுதுன்னு எங்கிருந்தோ கொண்டு வந்து மொபைல் டாய்லெட் வைத்தவர்களும், பச்சிளங் குழந்தையோடு வந்தவர்களுக்கு குடையும், போர்வையுமாய் ஆதரவு தெரிவித்து ரெஸ்ட் எடுக்க வைத்த தம்பிகளும் ... அட ... அட ... அட ... நம்ப ஊறா இதுன்னு புல்லரிக்க வெச்சிட்டாங்க. இது எழுச்சிப்போராட்டம் என்பதைத்தாண்டி இது ஒரு நெகிழ்ச்சிப் போராட்டம் என்று உண்மையிலேயே உணர வச்சிட்டாங்க. மேற்கண்ட நிகழ்வுகளில் எல்லாம் இந்தப் போராட்டம் வெற்றியை பதிவு செய்தது. நாமும் அந்தப் படையோடு இணைந்து விழுமியங்களை விதைப்போம். வெற்றிகளை அறுவடை செய்வோம்.

வருந்திடு, திருந்திடு, மகிழ்ந்திடு தவக்காலச் சிந்தனைகள்

வருந்திடு, திருந்திடு, மகிழ்ந்திடு
தவக்காலச் சிந்தனைகள்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், 
பாபநாசம்.

தவஞ் செய்வார் தங்கபடுஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு- (குறள் 266)


தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் சாத்வீகமான ஆன்மீக செயல்பாடுகளே தவம் எனப்படுகிறது. உடலையும், மனதையும் உருக்கிச் செய்யப்படும் நோன்பு, தியானம், விரதம், பதயாத்திரை, தீர்த்த யாத்திரை, செபம் சொல்லுதல் போன்றவை தவச் செயல்பாடுகளே.

இந்து சமயத்தில் திருநீற்றின் விளக்கம்

நாம் வெளியில் செல்லும்போது அங்கு இருக்கம் அதிர்வுகளை பல வழிகளிலும் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நமது உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது என்கின்றனர். அதனால்தான் நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இடம் பெற்றுள்ளது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல்தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி  உண்டு என்றும், விபூதி இட்டுக் கொள்ளும்போது வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றனர். நம்மைச் சுற்றிலும் இறைமை மிளிரும். இதனால் தீயவனவற்றைத் தவிர்க்க முடியும். 

விவிலியம் கூறும் சாம்பல் அல்லது திருநீறு 
:
சாம்பல் என்ற சொல் 56 முறையும், நெருப்பு என்னும் சொல் 641 முறையும் விவிலிய நூல்களில் காணப்படுகின்றது. இது கீழ்க்காணும் அடையாளங்களைக் குறிக்கின்றது.
எசேக் 27 : 30 அவமானத்தின் அடையாளம்
லேவி 6 : 11 பலியிடுதலின் அடையாளம்
தொநூ 37 : 34 துக்கத்தின் அடையாளம்
யோபு 42 : 6 மனமாற்றத்தின் அடையாளம்
எபி 9 : 13 தூய்மைப்படுத்துதலின் அடையாளம்

திருநீறு பூசி தொடங்கும் தவக்காலம் :

தொடக்ககாலத் திருச்சபையிலேயே சாம்ல் பூசித் தவக்கோலம் பூண்ட வரலாற்றினைக் காணுகின்றோம். புனிதர்களாகிய பொலிக்கார்ப் மற்றும் ஐரேனியஸ் விவிலிய நிகழ்வுகளின் அடிப்படையில் சாம்பல் பூசி ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் காலத்தைக் கொண்டாடியதாகத் தெரிவிக்கின்றனர். அது மட:மன்று 325இல் கூடிய நிசேயா திருச்சங்கம் இயேசுவின் உயிர்ப்பு விழாவினைக் கொண்டாடுவதற்குத் தயாரிப்பாக சாம்பல் பூசி 40 நாட்கள் துக்க நாட்களாகக் கடைப்பிடி;க வேண்டும் என்கின்றது.
மேலும் 4, 5ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனிதர்களாகிய அத்தானிசியுஸ் அவர்களின் விழாக்காலக் கடிதங்கள்
(க்ஷூeவிமிஷ்ஸழியி யிeமிமிerவி), எருசலேம் நகர் புனித சிரில். அலெக்சாண்டிரியா நகரத்து புனித சிரில் மற்றம் புனித முதலாம் லியோ ஆகியோரின் மடல்களும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கப்பட வேண்டியதின் கருத்தினை வலியுறுத்துகின்றன.
ஏன் 40 நாட்கள்?

40 என்ற சொல் 98 முறை விவிலிய நூல்களிலும், இஸ்லாமியரின் குரானில் 5 முறையும் பயன்படுத்தப்படுகிறது.

- நோவா காலத்து 40 நாள் பெருவெள்ளம். (தொ நூ 6 : 1 - 10 : 32)

- மோசேயின் 40 நாள் சீனாய் மலை அனவபம் (விப 19 : 1 -24 : 18)

- ஒரேபு மலையினை அடைந்திட இறைவாக்கினர் எலியா நடந்த நாட்கள் 40 (1 அரசர் 19 : 1 - 7).

- ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைப் பாலை வனத்தில் காத்த ஆண்டுகள் 40 (இச 29 : 5)

- புதிய ஏற்பாட்டு நாயகன் கிறிஸ்து சோதிக்கப்பட்ட நாட்கள் 40 (மாற்கு 1 : 13).

வெற்றியின் சின்னம் திருநீறு :

இந்த உலக வாழ்வே ஒரு போராட்டக் களம். சோதனைகளைச் சாதனைகளாக்கிட்ட இயேசுவின் அடியார்களாகிய நாமும் நம் வாழ்வின் பாவச் சோதனைகளை வென்று வாழ்ந்திட திருநீறு பூசுகிறது திருச்சபை. தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசன்னா ( மத் 21 : 9) என்று வெற்றி முழக்கம் செய்திட்ட மக்கள் தங்களின் கரங்களில் குருத்தோலைகள் ஏந்தி ஆண்டவரை யயருசலேம் நகரினுள் சரவேற்கின்றனர். இந்தக் குருத்தோலை வெற்றியின் அடையாளம் (1 மக் 13 : 51, திவெ 7 : 9). இந்தக் குருத்தோலைகளை எரித்துச் சாம்பலாக்கி அதனை நமது நெற்றியில் அணிந்து வாழ்க்கையில் வீறு கொண்டு வாழ அழைக்கப்படுகின்றோம்.

பொய்தீர் ஒழுக்க நெறி : 

மனித மனம் இளமையிலிருந்தே தீமையின் மீத நாட்டம் கொண்டுள்ளது (தொ நூ 8 : 21). எனவே மனிதன் பொய்தீர் ஒழுக்க நெறி கொண்டு வாழும்போது மட்டுமே தீமையின் மீதுள்ள கவர்ச்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

இதனையே திருவள்ளுவர்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றான் நீட வாழ்வார் என்கின்றார்.

ஐம்புலன்களினால் விளையும் அவா அறுத்து பொய்மையில்லாத ஒழுக்க நெறியின்படி வாழ்பவரே உலகம் உள்ளளவும் அவர் புகழ் நிலைபெற வாழ்வார். பொய்தீர் ஒழுக்க நெறி வாழ்வதற்கான பயிற்சிக் காலமே இத்தவக்காலம். எனவே பொய்தீர் ஒழுக்க நெறி வாழ்வு பற்றி இவண் ஆய்வோம்.

புனிதமான நோன்பு (யோவேல் 1 : 15) :

வாழ்வின் உயர்வினுக்காக தான் விரும்புவதனை ஒதுக்கி வாழ்தலே நோன்பு. இந்து மதம் மாதத்திற்கு 15 நாட்கள் நோன்பு அனசரிக்க அழைக்கின்றது. இஸ்லாம் மதத்தவர் ரமலான் மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மிக கடினமான நோன்பினை ஒன்றும் சாப்பிடாமல்க் கடைப்பிடிக்கின்றனர். ஆன்ம ஈடேற்றம் கருதிச் செய்யும் சாதனைகளில் ஒன்றே விரதம் அல்லது நோன்பாகும். இதனோடு தொடர்புடைய மற்றொரு சொல் உபவாசம். உண்ணும் உணவு, செய்யும் தொழில், உறங்கும் நேரம் இவற்றின் அளவைக் குறைத்து செபம், தியானம், இறைவார்த்தை வாசிப்பு ஆகிய புனித காரியங்களில் ஈடுபடுதலே தூய ஆவிக்குரிய உபவாசம் எனப்படுகின்றது. 

புலனைந்தும் பொறி கலங்கி
நெறி மயங்கி அறவழிந்திட்டு  என்கின்றார் திருஞான சம்மந்தர். 

அறவழி வாழ்வே கிறிஸ்தவ வாழ்வு. புலனைந்தினையும் அடக்கிடும் பயிற்சிக் காலமே தவக்காலம். தவக்கோலம் பூண்டு வாழும் நோன்புகளின் பன்முதல் பண்புகள் இதோ ...
தவக்கால நோன்புகள் : வாய்மையும், நல்லுறவும் நாடும் நாள்களே நோன்பு நாட்கள். இது களிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நாள்கள் (செக் 8 : 19).

அ. சிந்தனை நோன்பு : 

எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால் உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு (எரே 4 : 14) என்கின்றார் ஆண்டவர். நன்மை, தீமைகளின் பிறப்பிடம் சிந்தனை. எனவே நல்லரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்தி, அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் (தி பா 119 : 27). அறிவுக் கூர்மை கொண்ட சிந்தனையில் அமைந்த உள்ளம் சுவரை அழகு செய்யும் பூச்சுப் போன்றது (சீஞா 22 : 17).

ஆ. சொல் நோன்பு :

நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே (திபா 52 : 4). கடுங்சொல்லோ சினத்தை எழுப்பும் (நீமொ 5 : 1). இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும். பண்பான பேச்சு உன் மதிப்தைப உயர்த்தும் (சீஞா 6 : 5).

இ. செயல் நோன்பு :

என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள் (தொநூ 19 : 7). உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், கடவுளுக்கும் இடையே பிளவை  உண்டாக்கியுள்ளன. உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளனர் (எசாயா 59 : 2). ஆகவே இறைவன் விரும்பும் நோன்பு என்ன? மத்தேயு நற்செய்தி 25 : 31 ‡ 46 பகுதி. இதற்குப் பதில் தருகின்றது.

1. பசியாய் இருப்போருக்கு உணவளித்தல்.
2. தாகமாய் இருப்போரின் தாகத்தைத் தணித்தல்.
3. அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல்.
4. ஆடையின்றி இருப்போரை உடுத்துதல்.
5. நோயுற்றிருப்போரைக் கவனித்துக் கொள்ளுதல்.
6. சிறையிலிருப்போரைத் தேடிச் செல்லுதல்

ஈ. ஊடக நோன்பு :

இன்றைய சூழலில் ஊடகங்கள் மனித வாழ்வினை அதிகம் பாதிக்கின்றன. இவற்றினை அளவோடு பயன்படுத்தி  நேர்மறை சிந்தனையோடு செயல்பட்டு சமூக மறுமலர்ச்சியினுக்குச் செயல்படல் காலத்தின் கட்டாயமாகும்.

இறுதியாக :

மனம் போன போக்கில் வாழ்ந்து சொத்துக்களையயல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்து தந்தையின் அரவணைப்பினை தேடிவந்த ஊதாரி மகன் போன்று விண்ணகத் தந்தையோடு நம்மை இணைந்துக் கொள்வோம். பாவங்களை எண்ணி மனம் வருந்திடுவோம். பாவப் பரிகாரமாக உடலை வருத்திடுவோம். மனம் திருந்திடுவோம். மகிழ்வோடு வாழ்ந்திடுவோம் (லூக்கா 15 : 11 ‡ 31).

கொடுக்கப்பட்டிருக்கும் இத்தவக் காலத்தில் கெடுதலை தருபவைகளை தவிர்ப்போம். ஏதாவது ஒரு செயலை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட முன்வருவோம். அச்செயலை இப்போதே தேர்ந்தெடுப்போம். ஒரு தவக்காலத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு ஏழையுடன் சேர்ந்து உண்ணுதல் என்ற செயல்பாட்டை முன்நிறுத்தி ஒருவர் செயல்பட்டார். அதாவது, காலை உணவு உண்பதில்லை. மதியம் ஒரு ஏழையை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து உணவு அருந்தினார். மிகவும் திருப்தியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்றார். இதோபோன்ற அன்பு செயல்களை நடைமுறைபடுத்தி தவக்காலத்தை வளர்ச்சியின் காலமாக்குவோம்.

பெண்மையைப் போற்றுவோம்

பெண்மையைப் போற்றுவோம்

உலகில் உயர்ந்த உயிரினமாகிய மனிதர், உலகில் உதிப்பது தாய்மையினால்தான். மனித பிறப்பிலும், அவர்களின் வளர்ப்பிலும் உண்டாகும் பாரங்கள், துன்பங்களையயல்லாம் வரவேற்று மகிழ்வது தாய்மை. உலகை உண்டாக்கினார் இறைவன், என்று தொடக்க நூலில் படிக்கிறோம். படைப்புகளின் உச்சமாகிய மனிதரை இன்றும் நிதர்சனமாக உருவாக்கி தருபவர்கள் பெண்கள்.

மார்ச் மாதம் 8ஆம் நாள் மகளிர் நாள் என்று சிறப்பிக்கப்படுகிறது. மனிதர் பெண்களின் அருமையையும், பெருமையையும்  உணர்ந்து அவர்களின் மாண்புடன் இணைந்து வாழ அழைக்கிறது  இந்நாள்.

பெண்கள் அழகின் நிழல், உணர்வுகளின் உள்ளுணர்வு, உறுதியின் இருப்பிடம், இளகிய மனதின் ஓடை, தாய்மையின் தெய்வ நிலையில் நிற்கும் பெண்களிடைமே காதல் என்ற தேனருவி தோன்றி கவர்ச்சியில் மனிதரை மயங்க வைக்கிறது. எனவேதான் திரைபட பாடல்கள், காதல் மோகத்தையே மையமாக வைத்து வடிக்கப்படுகின்றன. பெண்களின் மயங்கும் அழகை ஒரு கவிஞர் இப்படி வர்ணிக்கிறார்.
‘நீயா பேசியது, என் அன்பே,
தீயா வீசியது’
‘ஊருக்குள் வெளிச்சமெல்லாம்
உன் கண்களை திறப்பதனால்
பூவுக்குள் பனித்துளிகள்
உன் முகத்தினை கழுவுவதினால்’

இந்த  உடல் அழகு, மாறிவிடும். இளமை மறைந்தவுடன் அழகும் மாறி மறைந்துவிடும். ஆனால் பெண்மையில் மறைந்திருக்கும் மாண்புகள் தொடர்ந்து நிற்கும். 

கிரிஸ் என்பவர் கூறுவார், ‘பெண்களுக்கு தேவையானவை மூன்று : உணவு, நீர், பாராட்டு’ என்பார். ஆஸ்கார் வில்த என்பவர் கூறுகிறார், ‘பெண்கள் அன்பு செய்யப்பட வேண்டும். அவர்களை புரிந்துக் கொள்ள முயற்சிப்பது  தேவையில்லாதது’ என்கிறார்.
 
ஆண் - பெண் உறவு இனிது. ஆண், பெண் ஆகியோரின் தனித்தன்மைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். உணர்வலைகளின் கொதிகலன்கள் பெண்கள். ஆண்களின் அறிவு கூட்டலில், பெண்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள தவறி விடுகின்றனர். மறைந்த இங்கிலாந்து பிரதமர், இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மார்கிரேட் தாட்சர் கூறுவார், அரசியலில் ஒரு கருத்து சொல்லப்பட வேண்டுமென்றால், ஓர் ஆணிடம்  சொல்லுங்கள். ஏதாவது செய்யப்பட வேண்டுமென்றால் ஒரு பெண்ணிடம் சொல் என்கிறார்.

இந்நாள்களில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடைபெறுகின்றன. கற்பழிப்பு, கொலை, பெண் சிசு கொலை, வரதட்சணை, குடும்பத்தில் கொடுமைகள் ஆகியவை பெண்மையை தாழ்வுபடுத்துகின்றன. தாய்மையின் உயர்வை கொண்டாடி போற்ற இத்திங்கள் நம்மை அழைக்கிறது. 

ஒரு கவிதையில் இவ்வாறு சொல்லப் பட்டிருக்கிறது. ‘அம்மா... அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்’.  நம்மிடையே  உலவிவரும் தெய்வ நிழலான தாய்மையை, பெண்மையை போற்றி வளர்வோம்.

இம்மாதத்தில் நொடிக்கு நொடி அரசியல் நிகழ்ச்சிகள் வெடியாக வெடித்தன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதவி துறந்தது, தான் மிரட்டப்பட்டதாக துணிவுடன் வெளியிட்டு, திருமதி.  சசிகலாவிற்கு எதிராக போர்கொடி உயர்த்தியது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆடம்பர விடுதிகளில் அடைக்க வைக்கப்பட்டிருந்தது, திருமதி. சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், இருபது வருடங்களாக இழுக்கடிக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்து, அவர்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

சட்டசபையில் பெரிய அமலிகளுக்கிடை யில் திரு.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனவை எல்லாம், தமிழ்நாடு அரசியலில் இன்னும் நாகரிக முதிர்ச்சி பெறவில்லை என்றுதான் சொல்கின்றன. தெய்வமாக போற்றபெற்ற முன்னாள் முதல்அமைச்சர் செல்வி. ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் முதல் குற்றவாளி என்று நூறு கோடி ரூபாய் தண்டனையும், அவர்களுடைய சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டும் உள்ளன. மக்களின் பணத்தை அரசியல் தலைவர்கள் சூரையாடி வருகிறார்கள் என்பது அப்பட்டமாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களிடம் வெடித்த புரட்சியை போல் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் அவலங்களை அகற்றவும் மற்றொரு எழுச்சி தோன்ற வேண்டும்.

இறை வார்த்தையின் இன்றைய புரிதல்



இறை வார்த்தையின் இன்றைய புரிதல்


26-2-17 ‘எதை உண்போம்? எதை குடிப்போம? எதை அணிவோம்? ஏன கவலைக் கொள்ளாதீர்கள்’; (மத் 6:32)

இறைவனை விட்டு பிரிந்த அபலைகளுக்குத்தான் கவலை உண்டாகும்

27-2-17; ‘செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகக் கடினம். அவர்கள் இழறளாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ (மாற் 10: 24)

இருட்டில் பொருள்கள் தெரிவதில்லை.
செல்வ செழிப்பில் உண்மைகள் புரிவதில்லை

28-2-17 ‘முதன்மையானோர் பலர் கடைசி ஆவர். கடைசியானோர் முதன்மை ஆவர்’ (மாற் 10: 31)

உயர்வு என்பது பண்பிலே பதிந்தது.
தாழ்வு என்பது பண்பில் சிதைந்தது

1-3-17 ‘மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் அறசெயல்களை செய்யாதீர்;’ (மத் 6:1)

அகந்தையின் வெளிப்பாடான ஆடம்ரத்தை அகற்றுவதும்
அன்பின் வெளிப்பாடான பணிவை ஏற்பதும்தான்
நோன்பான தபசு செயல்

Friday, 10 February 2017

துணுக்குகள்,; சிரிப்புகள்

வயிறு எரியுது டாக்டர்.
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்

ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகனும்?
நோயோட தான்

கடைக்காரரிடம் கறாராக நிற்பது போல் மனைவியிடமோ / கணவனிடமோ நிற்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை என்பது ஐந்து நிமிடத்தோடு முடிந்துவிடும் வியாபாரம் அல்ல

மகள் சைக்கிள் கேட்டாள். ‘நீ சிறுசிறு வேலைகள் செய்து பணம் சேமி, பிறகு வாங்கித் தருகிறேன்’ என்றார் தந்தை. சுமார் 1000 ரூபாய் சேர்த்தது அந்தப் பிள்ளை. ஆனால் சைக்கிள் 2000 ரூபாய் விலை. கடைக்கு சென்று விலையை விசாரித்து வருகிறபோது, ஏழை பிள்ளைகளுக்கு உதவி செய்யும் நிறுவனம் உதவி கேட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அந்த பிள்ளை ‘அப்பா எனக்கு சைக்கிள் வேண்டாம். ஏழை பிள்ளைகளுக்கு இந்த பணத்தை  கொடுக்கிறேன்’ என்று கொடுத்து விட்டது. இதை பார்த்த தந்தைக்கு வெட்கமாகிவிட்டது. அவரும்  சேர்த்து அந்த நிறுவனத்திற்கு 2000 ரூபாய் கொடுத்தார். அந்த நிறுவனத்தில் நன்கொடையாளர்களுக்கு பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. அந்த  குலுக்களில் அந்த  குழந்தைக்கு பரிசாக  சைக்கிள் விழுந்தது. தாராள குணத்திற்கு பரிசு கிடைத்தது!

ஏன் சார் படிக்கிற பையன இப்படி போட்டு அடிக்கிறீங்க?
அட போங்க சார்,பரிட்சைக்குக் கூட போகாம படிக்கிறான் சார்.

அரசின் கொள்கை விளக்கங்கள்

அரசின் கொள்கை விளக்கங்கள்

வழக்குரைஞர். பு.அருள்தாஸ், 
கும்பகோணம்

மத்தியிலாகட்டும், மாநிலத்திலாகட்டும் ஓர் அரசு என்னென்ன கொள்கைகளை தலையாயக் கடமைகளாகக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி  சுட்டிக்காண்பிக்கிறது. அனைவருக்கும் நல் ஆட்சி தருவதற்கும் ஏற்றத்தாழ்வற்ற சமூகம் காண்பதற்கும் வித்திடப்பட்டிருக்கிறது. ஆணானாலும், பெண்ணானாலும் வேலைக்கு ஏற்ற ஊதியம் சமமாக வழங்கல், குறிப்பிட்ட நபர்களிடம் செல்வம் தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வது. குழந்தைகள், இளைஞர்கள் நல்ல குடிமக்களாக உருவாகி வாழ வழி வகுத்தல், இலவச சட்ட உதவி, கிராமிய பஞ்சாயத்துக்களை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் கடைக் கோடியிலுள்ள சாமானியர்களுக்கும் நிர்வாகத்தின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இளமையில் கல், கல்லாதவன் முகத்தில் இருப்பது கண்களல்ல இரு புண்கள். கேடில் விழுச்செல்வம் கல்வி, ஏன்றெல்லாம் முழங்கிவிட்டால் போதுமா? அதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற பெரு நோக்கோடு குழந்தைகள் 14 வயது வரை இலவசமாகக் கல்வி கற்கவும், அதைக் கட்டாயமாக்கவும் அரசு முனைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பின்னர் அடிப்படை உரிமையாக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேன்மையடையச் செய்வது அரசின் கடமை, நம் வீட்டாரும் அண்டை அயலாரும் தூய்மையுடன் வாழச் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாடு என்பது  உலகின் ஒரு கிராமம் ஆக குறுகி உள்ளது என்பது உண்மை. எனவே, நமது நாடு, பிற நாடுகளிலும் உள்ள மக்களுடன் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்குப் பாடுபடவேண்டும் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அண்டை வீடு பற்றி எரியும்பொழுது நாம் வீணை வாசிக்க முடியுமா? சுருங்கச் சொன்னால் நமது ஒட்டுமொத்த கனவுகளின் கூட்டுத்தொகை இந்த கொள்கை விளக்கப்பகுதி என அறியலாம்.

நமது கடமை

அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளில் சிலவற்றைத்தான் சுட்டிக்காட்டி  உள்ளேன். சொல்லப்போனால் நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் உன்னதமான போற்றுதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. எடுத்துக்காட்டாக எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அச்சமின்றி நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் செயல்பட பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நமது  உரிமைகளைக் காக்கின்ற அதே நேரத்தில் நமது கடமைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையைச் சரிவர செய்யவேண்டுமெனில் மக்களாகிய நாம் முனைப்புடனும், விழிப்புடனும் நாள்தோறும் செயல்படவேண்டும். ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? ‡ என்ற மனப்போக்கை மாற்றிக்கொள்ள  வேண்டும். இது  நமது நாடு. நாம் அதன் புதல்வர் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கின்ற மக்கள் மன்ற உறுப்பினர்கள் நேர்மை உள்ளவர்களா? நீதியின் மீது பசி, தாகம் உள்ளவர்களா? தன்னலத்தைக் கருத்தில் கொள்ளாது சமூக நலத்தை முன்னிறுத்துபவர்களா? பண்பாளர்களா? பதவி சுகம் கண்டதும் பாதை மாறிப் போவார்களா? தொலை நோக்குள்ளவர்களா? என்பதையயல்லாம் ஆய்ந்தறிய வேண்டும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  ஜான் எஃப் கென்னடி சொன்னது போல் ‘நாடு எனக்கு என்ன செய்தது?’ என்ற கேள்வியை மாற்றி ‘நான் நாட்டிற்கு என்ன செய்தேன்?’ என்ற கேள்வி நம்முன் எழுந்து நமது செயல்பாடு ஒரு வேள்வியாக அமைந்திடல் வேண்டும். சும்மா பெற்றதா சுதந்திரம்? எத்தனையோ இன்னுயிர்களை இழந்திருக்கின்றோம். பொங்கி எழும் உணர்வுகளுடன் சிறைச்சாலைக்குள் சென்ற இளைஞர்கள் நீண்ட சிறைவாசத்திற்குப் பின் அழகொழிந்த ஓவியங்களாக, பிணிகளின் கூட்டுக் கலவையாக வெளியே வர வேண்டியிருந்தது.  உடைமைகளை, உரிமைகளை, மனைவி மக்களை இழந்தவர்கள் ஏராளம், ஏராளம். அந்தத் தியாகச் சீலர்கள் நமக்குத் தந்த கருணைமிகு காணிக்கையல்லவா இந்த சுதந்திரம். அன்னாரது தியாகம்  வீண்போகலாமா? வாராது போல் வந்த மாமணியைத் தோற்கலாமா? முண்டாசுக் கவி பாரதி  சொன்னது போல் நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ! சிந்திப்போம்! செயல்படுவோம். உயர்வடைவோம்.

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம், ஆடுதுறை

முகப் பருவைத் தவிர்க்கலாமே!

முக அழகைக் கெடுக்கும் முகப்பருவைத்  தடுப்பதே  சிறந்த வழி. வந்த பின் தீர்ந்தது  என்றால் அது குறைபாடானதாகும். எனவே முகப்பருக்களைத் தடுக்க சில வழிமுறைகளைக் காண்போம்.

13 வயது தாண்டும்போதுதான் முகப்பரு தோன்றும். அந்த வயதில் தினசரி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் இளம் சூடான நீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியைக் கலந்து அதனை பஞ்சினால் நனைத்து முகத்தில் அழுத்தத் துடைத்து வர முகப்பருக்கள் தோன்றும் காரணங்கள் விலகும்.

கொழுப்புப் பதார்த்தங்களான முட்டை, இறைச்சி, மீன், மசாலா பொருட்களை மிதமான அளவில் உண்பது நல்லது.

கொள்ளு ரசம், பூண்டு ரசம், தினசரி உணவில் சாப்பிடுவது நல்லது. இளநீர், மோர் பருகுவது நல்லது.

பப்பாளிப் பழம், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை வெட்டினால் மேற்புறம் உறைந்து கிடக்கும் மெல்லிய சோற்றினால் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெந்நீரில் கழுவி வர முகப்பரு வராது
.
கீரைகளையும், இங்கிலீஷ் காய்கறிகளையும் சாப்பிடலாம். நொறுக்குத் தீனிகளை கைவிடுவது, காபி பருகுவதை நிறுத்துவது நல்லது.

இராசாயன களிம்பு, முகப்பூச்சுகளை பூசாமல், மேற்கண்டவற்றை மட்டும் பின்பற்றி வர முகப்பரு வராது தடுக்கலாம்.

புற்றுநோய் எதிர்ப்புணவு பட்டியல்

இந்தியாவைப் பொறுத்தவரை ‘புற்றுநோய்’ பாதிப்பு தவறான உணவுப் பழக்கம், போதை  மருந்துகளால் மட்டுமே ஏற்படுகின்றது. புகையிலை நஞ்சினால் நுரையீரல்புற்று, கன்னப்புற்று, அதிக காரம், அதிக புளிப்பு உண்பதால் வயிறு மற்றும் மலவாய் புற்றுநோய்கள் உண்டாகின்றன.

மகளிரைப் பொறுத்தவரை சுகாதார உணர்வின்றி அசுத்தமாக கருப்பையை வைத்திருப்பதால் மிகுதியாக புற்றுநோய்  ஏற்படுகின்றது. அத்துடன் ‘தாய்ப்பால்’ தரும் வழக்கம் குறைந்து வருவதால் மார்பகப் புற்றுநோயும் வருகின்றது. இவற்றை, வருவதற்கு முன் தடுக்கும் முறையே சிறந்ததாகும். அதற்கு “புற்றுநோய் எதிர்ப்புணவு”  உறுதுணையாகும்.

சார்கோமா மற்றும் கார்சினோஜின் ஆகிய வகை சார்ந்த புற்றுநோய்களை வராமல் தடுக்கக் கீழ்க்கண்ட அன்றாட உணவிலோ அல்லது அடிக்கடியோ உண்டுவர அந்த வகைப் புற்றுநோய்களிலிருந்து முற்றிலும்  உடம்பைப் பாதுகாக்கலாம்.

காரட் :

தினசரி காரட் 1 எடுத்து அத்துடன் வெங்காயம் 1 வெட்டி மோருடன் கலந்து உப்பின்றி பச்சடிபோல் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள ‘பீடா கரோட்டின்’ சத்து, புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை ஊக்குவிக்கின்றது. இவ்வாறு கல்லீரல் இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும்.

தூதுவளை துவையல் :

தூதுவளை இலைகளை வாரம் 3 நாட்கள் நெய்யில் வதக்கி (புதினாவுடன்) புளி சேர்க்காமல் துவையல் செய்து 1 பிடி சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வர புகையிலை காரணமாக புண்ணாகிவிடும் நுரையீரலை சீர்படுத்தி நுரையீரல் புற்றுநோய் வராமல் செய்யலாம்.

மாங்காய் பச்சடி :

மாங்காய் பச்சடி பெருங்குடலில் வரக்கூடிய புற்றுநோயை, வராமல் தடுக்கும். சுண்டைக்காய், வற்றல், மாதுளை சர்பத் 

Ads Inside Post