Pages - Menu

Tuesday, 4 July 2017

ஜுன் மாதப் புனிதர்கள்

 ஜுன்- 5 புனித போனிப்பாஸ் - ஆயர், மறைசாட்சி

இவர் இங்கிலாந்தில் ஏறத்தாழ கி.பி.673இல் பிறந்தார். எக்ஸ்ட்டர் என்னுமிடத்தில் உள்ள மடத்தில்  துறவற வாழ்வு மேற்கொண்டார். 719இல் நற்செய்தியைப் போதிக்க ஜெர்மனி சென்றார். அங்கு சிறப்பாக பணியாற்றியதால் மயின்ஸ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். தம்முடைய தோழர்களின் துணைகொண்டு பவேரியா, துரிஞ்சியா, பிராங்கோனியா போன்ற பல இடங்களிலும் திருச்சபையைப் புதிதாக நிறுவினார். ஆட்சிமுறைப் பேரவைகளை நடத்தி, சட்டதிட்டங்களைப் பலரும் அறியச் செய்தார். ஹாலந்தில்  பிரிசியர் நடுவில் உழைக்கும் போது, பிற மறையினரால் 754இல் கொல்லப்பட்டார்.

ஜுன் - 9 புனித எபிரேம் ‡ திருத்தொண்டர்,  மறைவல்லுநர்

இவர் மெசபெத்தோமியாவில் உள்ள நிசிபிஸ் என்னும் இடத்தில் ஏறத்தாழ கி.பி 306இல் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். திருத்தொண்டர் பட்டம் பெற்று, தம் சொந்த நாட்டிலும், எடெஸ்ஸாவிலும் பணியாற்றினார். இறையியல் கற்றுத் தேர்ந்தார். பிறகு தவ வாழ்வை தேர்ந்து வாழ்ந்தார். அந்நேரத்தில் தவறான போதனைகளை எதிர்த்து தன் எழுத்தாலும் போதனையாலும் போராடினார். 540இல் எழுதப்பட்ட எடெஸ்ஸா வரலாற்று குறிப்பேட்டின்படி, புனிதர் எடெஸ்ஸாவில் 373இல் இறந்தார்.

 ஜுன் - 11  புனித பர்னபா - திருத்தூதர்

இவர் சைப்பிரஸ் தீவில் பிறந்தார். எருசலேமின் முதல் கிறிஸ்தவர்களில் இவரும் ஒருவர். இவர் அந்தியோக்கியாவில் நற்செய்தியைப் போதித்தார். திருத்தூதரான புனித பவுலைப் பின்பற்றி, பவுலின் முதல் மறைபரப்புப் பயணத்தில் அவருக்குத் துணைபுரிந்தார். எருசலேமில் நடந்த திருச்சங்கத்தில் இவர் பங்குப் பெற்றார். பிறகு தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கு நற்செய்திப் பணி செய்து அங்கேயே இறந்தார்.

ஜுன்-13 புனித அந்தோணியார்-மறைப் பணியாளர், மறைவல்லுநர்.
             
இவர் போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். முதலில் புனித அகுஸ்தினார் துறவறச் சபையில் சேர்ந்தார். மறைப்பணியாளராகிய சிறிது காலத்தில் ஆப்பிரிக்க மக்களுக்கு பணியாற்ற விரும்பி கப்புச்சின் துறவியர் சபைக்கு மாறினார். ஆனால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் மறைபோதகப் பணியாற்றப் பணிக்கப்பட்டார். அங்கு சிறந்த முறையில் பணியாற்றினார். திருச்சபைக்கு எதிராக பேசிய பலரை மனந்திருப்பினார். சபையின் முதல் இறையியல் வல்லுநராகி மற்ற சகோதரர்களுக்கும் இறையியல் கற்றுக்கொடுத்தார். கருத்து நிறைந்த நயமான மறையுரைகளும் எழுதி வெளியிட்டார். 1231இல் இத்தாலியில் பதுவா நகரில் இறந்தார். அடுத்த வருடமே இவர் புனிதர் என்று அறிவிக்கப்பட்டார்.

 ஜுன்- 21  புனித அலோசியஸ் கொன்சாகா - துறவி.

              இவர் இத்தாலியில் லொம்பார்டி மாவட்டத்தில் மாந்துவா நகருக்கருகில் கி.பி 1568இல் காஸ்டிலியோனோ என்னும் அரசக் குடும்பத்தில் பிறந்தார். தம் தாயிடமிருந்து பக்தி நிறைந்த கல்வி பெற்று, சமய வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு உடையவராய்த் திகழ்ந்தார். அரச குடும்ப பிறப்புரிமையைத் தம் சகோதரனிடம்ஒப்படைத்து விட்டு, உரோமையில் இயேசு சபையில் சேர்ந்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தொண்டு செய்த போது, இவரும் நோய்வாய்ப்பட்டு, 1591இல் இறந்தார்.

 ஜுன் - 24  புனித திருமுழுக்கு யோவானின்  பிறப்பு

                இவர் இயேசுவின் முன்னோடி. அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன் பிறந்தார். இவரின் தந்தை சக்கரியாஸ் ‡ தாய் எலிசபெத்தம்மாள். இவர் புனித கன்னிமரியாவின் நெருங்கிய உறவினள். யோவான் தாயின் உதரத்திலேயே அர்ச்சிக்கப்பட்டார். பெண்களிடம் பிறந்தவர்களில் இவரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று இயேசுவால் புகழப்பட்ட இவர், பாலை வெளியில் வாழ்ந்தார். மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத்23:2) மக்களை எச்சரித்தார். யோர்தானில் இவர் இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தார். இயேசுவின் முன்னோடியாகத் துணிவுடன் பணியாற்றி, தன் தலையையே அர்ப்பணித்து தியாகியாக இறந்தார். 

 ஜுன் - 27   புனித சிரில் ‡ ஆயர், மறைவல்லுநர்.

               இவர் கி.பி370 ஆம் ஆண்டில் பிறந்தார். முதலில் துறவு வாழ்வு மேற்கொண்டார். பிறகு குருவாகி, பின்பு அலெக்ஸ்சாந்திரியாவின் ஆயராக 412இல் நியமனமானார். கிறிஸ்துவைப் பற்றி தவறாகப் போதித்து வந்த நெஸ்தோரியுசைத் திறமையுடன் எதிர்த்து உண்மையைப் போதித்தார். 431இல் எபேசில் நடந்த பொதுசங்கத்தில் முதன்மையான பொறுப்புகளை ஏற்று நடத்தினார். கத்தோலிக்க நம்பிக்கைக்கு விளக்கமாகவும், அதனைப் பாதுகாக்கவும் பல நூல்கள் எழுதினார். 444இல் இறந்தார்.

ஜுன்-29  புனிதர்கள் பேதுரு, பவுல்- திருத்தூதர்கள்

பேதுரு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரில் வாழ்ந்த மீனவர். இயேசுவால் தம் சகோதரன் பிலவேந்திரருடன் அழைக்கப்பட்டார். திருச்சபையின் தலைவராகவும், முதலில் அந்தியோக்கியாவிலும், பிறகு உரோமையிலும் திருச்சபையை தலைமையேற்று நடத்தினார். நீரோ மன்னன் ஆட்சியில் 67இல் இவர் கொல்லப்பட்Vர். பவுல் சிறிய ஆசியாவில் உள்ள தார்சுஸ் நகரில் பிறந்தார். இவரின் தந்தை உரோமை குடிமகன். தமஸ்கு செல்லும் வழியில்  புதுமையாக இவர் மனம் திரும்பி கிறிஸ்துவை புறவினத்தார்க்கு அறிவிக்கும் பணிக்கு இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்டார். பல ஆண்டுகள் நீண்ட மூன்று  பயணங்கள் செய்து, பல துன்பங்களுக்கு உட்பட்டு இறுதியில் உரோமையை அடைந்தார். அங்கு பேதுருவுடன் சேர்ந்து திருச்சபையை நிறுவினார். இவர் உரோமை குடிமகன் என்பதால், சிலுவையில் அறையாமல் தலையை வெட்டிக் கொன்றார்கள். 

விவிலிய விடுகதைப் போட்டி

விவிலிய விடுகதைப் போட்டி 
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

ஜுன்-2017 விடுகதைகள்,  மாற்கு 9 முதல் 16 முடிய

அன்றாடம் காய்ச்சியவள்
அயராது உழைப்பவள்
கிடைச்சக் கூலி இரண்டு காசையும்
மொத்தமாய் போட்டு உயர் இடம் பிடித்தாள்
இவள் யார்?

2. மீனப் பிடிச்சவரு
மனிதனைப் பிடிச்சாரு
காதையும் வெட்டினாரு ‡
கர்த்தரக் கைவிட்டாரு ‡ பின்
கதறி அழுதாரு ‡ யார் இவர்?

3. அரிது அரிது அரிது
ஆண்டவரின் வீட்டுக்கு போவது அரிது
சொத்தே, பெரிது, பெரிது,பெரிது
மனமோ அதிலே இருக்குது இருக்குது
இறையாட்சிக்குட்படுவது அரிது, அரிது
இவர்கள் யார்?

4. ஊரில் இருக்குது ஒன்று
இதுவரை அமராதது ஒன்று ‡ அதை
அவிழ்த்து வாருங்கள் இன்று
ஆண்டவருக்குத் தேவை சொல்வீர் நன்றே
அது எதை?

5. போர் போர் முழங்குது
பஞ்சமும் பஞ்சாய் பறக்குது
தாகம் தண்ணீர் ஏங்குது
பசிப் பிணி வறுமை வாட்டுது
நில நடுக்கமும் துளைக்கிறது.
ஆனால் ஆரம்பம் என மிரட்டுது
அது எது? வேதனைகளின் தொடக்கமே.

6. பால் போன்ற நிறம்
சுவைப்பின் இது கரிப்பு
மூன்றெழுத்து உடையது ‡ இது
இல்லா பண்டம் குப்பையிலே ‡ அது என்ன?

7. கணவன் மனைவி உறவு எல்லாம்
இப்போ சகஜமாய் மாறிப் போகுது
நீயா? நானா? போட்டியில்
நீண்ட உறவு முறியுது ‡ அது எதனால்

8. கேட்க முடிந்தது; பார்க்க முடியல
மேலுடை பறந்தது; குதித்தெழுந்து
வந்தவர்க்கு இரு இதழ் மலர் விரிந்தன
நம்பினான்; நலமாயிற்று.
யார் இவண்?

9. க்ஷிeழிஸeஐனும்  eழிrமிஜுதும் dழிவிஜு ஆகும்
ஆனால் அது மட்டும் ஐeஸer dழிவிஜு ஆகாது
அது என்ன?

10. பாதை வழி வந்தார்
பாங்குடனேப் பார்த்தார் ‡ அது
பசுமை இலை நிறைந்திருந்தது ‡ ஆனால்
பசிக்கு கனியில்லை  ‡ இனி
யாரும் உன் கனியை உண்ணக்கூடாது
என்றார் எதனை?

11. கட்டளைகளில் சிறந்த கட்டளை
தேவன் தந்த கட்டளை
மறைநூல் அறிஞர்  வினாவிற்கு
தெளிவுப்படுத்தியக் கட்டளை ‡ இது
எத்தனை கட்டளை. ‘பு’வில் முடிவில்
அது  என்ன?

12. இம்மனிதன் பிறவாதிருந்தால்
அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்
யார் இவன்? கூறியது  யார்?

13. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன்
பணப் பேய் கண்களை மறைத்தது
பாசங்குடன் பாசமாக முத்தமிட்டவன்
ரபி என்று அழைத்தவன். யார் இவன்?

14. வயல் வெளியிலிருந்து வந்தவர்
அலெக்ஸாந்தர், ரூபுவின் தந்தையிவர்
மூன்றெழுத்து உடைய  சீமான்
இயேசுவுக்காக கட்டாயப்படுத்தினர்
இவர் யார்?

15. தைலம் நறுமணத் தைலம்
விலைமிக்கத் தைலம், கலப்பற்றத் தைலம்
ஒரிஜனல் தைலம். இதன் முழுமையான
பெயர் என்ன?



பொதுக் காலம் - 12 வது வாரம்

பொதுக் காலம் - 12 வது வாரம்
25-06-2017
எரே 20:10-13; உரோ 5:12-15;  மத் 10:26-33
அருட்பணி. இ, அந்தோனிதாஸ்
           
  படைத்த கடவுளை 3 நிமிடம் பிராதிக்க ஒதுக்க முடியாத பலர் எதுவுமே புரியாத படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்க முற்படுகின்றனர். உள்ளத்தளவில் கடவுளை உணர்ந்து, உலகளவில் அதை வாழ்ந்து காட்ட இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

எத்துணை இடர் வந்தாலும் உண்மையை உணர்ந்தால்,  அதனை வாழ்ந்தால் இறை நம்பிக்கை என்ற இறைகரம் நம்மை மீட்கும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. ஏன் சொந்த மக்களே எரேமியாவை எதிர்கிறார்கள்? அவர் வாழ்ந்த காலத்தில் இஸ்ராயேல் பாபிலோனுக்கு அடிமை நாடாக இருந்த காரணத்தினால் கப்பம் கட்ட வேண்டிய நிலையில் இஸ்ராயேலர் இருந்தனர். இதை எதிர்ப்பதற்காக எகிப்துடன் இணைக்கின்றனர். ஆகவே எரேமியா எகிப்துடன் அவர்கள் இணைவதையும், அதன் வழியாக அடையபோகும் அழிவை எடுத்துரைப்பதனால்தான் அவர்கள் அவரை கொல்ல முடிவெடுக்கிறார்கள். எகிப்துடன் சேர்வதால் யயருசலேம் நகரம் அழிக்கப்பட்டு“பரதேச வாழ்வு” வாழ்வீர் என்று எச்சரிக்கிறார் ஏரேமியா. பரதேச வாழ்வு என்பது அனாதை வாழ்வு. ஆலயம் இல்லா வாழ்வு, அரசன் இல்லா வாழ்வு, சொந்த இடம் இல்லா வாழ்வு. அவர்கள் வாழ்வில் நடைபெற போகிற தீமைகளை எடுத்துரைத்தபோது அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. உண்மை கசப்பாக  இருக்கிறது. ஆகவே அவரை சிறையில் அடைத்து, துன்புறுத்துகின்றனர். விவிலிய வரலாற்றிலேயே இறைவாக்கினர் எரேமியாதான் அதிகமாக துன்புறுத்தப்படுகிறார். இன்று பலர் சொல்வதை நாம் கேள்விபடுகிறோம். ‘என்னுடைய சொந்த பந்தங்கள்,  நான் நேசித்தவர்கள், என்னை ஏமாற்றிவிட்டார்கள்.  என் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என்று புலம்புவதை  நாம் கேட்கிறோம்’. இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட, அழைக்கப்பட்ட,  எரேமியா இறைவாக்கினரையே  அவரின் சொந்த மக்களே அவரை கொல்லும் போது, நம்முடைய இனம், நம்முடைய மக்கள் நம்மை எதிர்ப்பதோ, நம் வளர்ச்சியை தடுப்பதோ புதிதல்ல என்பதை நாம் உணர வேண்டு. இறை நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும் போது இறைவனின் துணை நம்மை வழிநடத்தும், நம்மை காப்பாற்றும் என்பதை எரேமியாவின் வாழ்வின் வழியே நாம் கற்றுக் கொள்கிறோம் (எரே 20:13).   பாவத்தையும் அதன் விளைவு யாவையும் கொண்டு வந்தான் ஆதாம். புதிய ஆதாயமாகிய கிறிஸ்து மீட்பையும் அதன் வழியாய் வாழ்வையும் கொண்டு வந்தார்.   

 “ஆதாமா” என்றால் மண் என்பது பொருள். ஆகவே மண்ணிலிருந்து வந்ததால் அவன் ஆதாம் என்றழைக்கப்பட்டான். “கிறிஸ்து” என்றாலே அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பது பொருள். ஆகவே அந்த கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்  மீட்பு பெறுவர். இறைவனோடு  நெருங்கி தொடர்பு கொண்டு பகிர்ந்து வாழ அழைக்கப்பட்ட மனிதர், இறை தொடர்பை பாவத்தின் பலனால் துண்டித்துக்  கொள்கிறார்.  இதுதான் உண்மையான சாவு. ஆனால் இறை உறவு இல்லாத வாழ்வு செத்த வாழ்வு. ஆகவே பாவம் செய்தாலும் இறை உறவை விட்டு விலகாத போது, இயேசு சொன்ன மீட்பு எல்லாருக்கும் உண்டு என்று பவுலடியார் இன்றைய 2 ஆம் வாசகம் வழியாக அழைக்கிறார்.

           ‘உண்மைக்கு சான்று பகிரவே வந்தேன்’  என்ற ஆண்டவர், அதன் விளைவாக , தன் உயிரையே தந்தார். உண்மையை எடுத்துரைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வெறும் வார்த்தைகளால் அல்லாத வாழ்வால் காட்டுகிறார். இன்றைய நற்செய்தி பகுதியில் துணிவிற்கு எதிரான அச்சத்தைக் குறியிட்டு காட்டுகிறார் இயேசு.

“அஞ்சவேண்டாம்” என்று மூன்று முறை இன்றைய நற்செய்திபகுதியில் கூறப்படுகிறது. பயம் என்பது தீமை வரப்போகிறது என்ற பதற்ற உணர்வு.  உடலைக் கொல்லக் கூடியவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அனைவருக்கும் அனைத்தையும் தரும் இறைவன் அருகில் இருக்கிறார். எனவே தீமைகள் நம்மை தாக்காது. பய உணர்வு, உடல் நலத்தையும் தாக்கும். தென் அமெரிக்காவில் 1946 ஆம் ஆண்டு ஒரு வதந்தி பரவியது. அந்த ஆண்டு, பெரிய பஞ்சம் வரப் போகிறது என்பது வதந்தி. ஆனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தன. இந்த வதந்தியை நம்பி 20000 விவசாயிகள் தங்களின் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு சென்றார்கள். அதனால் பயிர்கள் காய்ந்து, உண்மையாகவே பஞ்சம் ஏற்பட்டது.

          “வாழ்வைப் பற்றிய பயம்தான் சாவை பற்றிய பயத்திற்கு அழைத்து செல்கிறது. நிறைவாழ்வு வாழ்பவர்கள், சாவைப் பற்றி பயம் கொள்ளமாட்டார்கள்” -  மார்க் டுவைன் 
          “புயலைப் பற்றி பயமில்லை.  ஏனென்றால் என் படகை எந்நிலையிலும் சரியாக ஓட்ட கற்றிருக்கிறேன்.”  - லூயிசா மே அல் கோப்.
        
 2 மக் 7 ஆம் அதிகாரத்தில் விசுவாசத்தை காக்க 7 பிள்ளைகளோடு தானும் வாளுக்கிறையான வீர பெண்மணியன் விசுவாசமும், சொந்த மக்களின் எதிர்ப்புகிடையே உண்மையை உரைத்த எரேமியாவுடன் துணிவும், எந்நிலையில் இருந்தாலும் என்னை மீட்கும் இயேசுவின் அருள் எனக்குண்டு என்ற பவுலடியாரின் நம்பிக்கையும் நாமும் பெறுவோம்.

இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா

இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா 
(யோவான் 6:51-57)
18-06-2017
 அருட்பணி. டேவிட் ராஜேஸ்,
 குடந்தை. 
                      உணவு நமது வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று. கருவரை  முதல் கல்லறை வரை உள்ள பயணத்தை உணவு  தான் முடிவு செய்கிறது. பசியை யாரும் விரும்புவதில்லை. வியர்வை சிந்தி பாடுபடுவது அறை ஜான் வயிற்றுக்குத்தான் என்று சொல்வார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது கூட நம்முடைய உறவினருக்கும் நண்பருக்கும் விருந்து கொடுத்துதான் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். யோவான் 6 வது அதிகாரத்தில் 6:1‡5 உடல் உணவையும் 6:3-‡50 உள்ள உணவையும் பேசிய யோவான் நற்கருணை உணவு பந்தியும் இன்றைய  நற்செய்தியில் பேசப்படுகிறது. ஆனால்  யூதர்கள் இயேசுவின் சதையை உண்பதையும் இயேசுவின் இரத்தத்தை குடிப்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இயேசு (யோவான் 6:53) அழுத்தமாக மீண்டும் கூறுகின்றார். “என் சதையையும், இரத்தத்தையும் குடிப்பவர் நிலைவாழ்வு பெறுவர், மற்றும் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”. திருஉணவு  உறவின் பாலமாய் அமைகின்றது.
       
 நாம் அமர்ந்திருக்கின்ற கோயில் இது ஒரு கோயில் மட்டும் அல்ல இது ஓர் உணவு கூடம், ஆம் வியப்புற வேண்டாம். இயேசு சொல்வது இந்த செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் என்று சொல்லி நம்மை திருவிருந்துக்கு அழைக்கிறார்.

        பேராயர் ஃபுல்டன் சீன் (ய்ற்யிமிலிஐ மூ.றீஜுeeஐ) தன்னுடைய புத்தகம் “ ஸிஷ்க்ஷூe லிக்ஷூ ளீஜுrஷ்விமி” இல் இயேசு  எவ்வாறு நமக்கு வாழ்வளிக்கும் உணவு என்று விளக்குகிறார். இயேசு பிறந்த ஊர் பெத்லேகம்.  எபிரேய மொழியில் அதன் பொருள் “ க்ஷிலிற்விe லிக்ஷூ யreழிd” அதாவது, அப்பத்தின் வீடு என்பது பொருள். இயேசு ஏன் அந்த உணவு வீட்டில் பிறந்தார் என்றால் எல்லோருக்கும் உணவாகப் போகிறார் என்பதை சுட்டிக் காட்டவே என்கிறார்.

           இயேசு பிறந்தவுடன் அன்னை மரியா அவரை எதில் கிடத்தினார்? தீவனத் தொட்டியில் தானே! இது ஒரு நாள் இவர் உலகுக்கே உணவாக போகிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான்.
இயேசு மற்றவர்களோடு உணவருந்திய போது  போசன பிரியன் என்று சொன்னார்கள். ஆனால் இயேசு ஒவ்வொரு  விருந்திலும் இயேசுவின் உணர்வும், உறவும், செய்தியும் பரிமாறப்பட்டது. அங்கு ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது.

கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி விருந்தினரை மகிழ்விக்கிறார். திருமண வீட்டின் மானத்தைக் காப்பாற்றுகின்றார்.  கப்பர் நாகூமில் 5 அப்பங்களையும்  2 மீன்களையும் பகிர்ந்து கொடுத்ததன் பொருளை விளக்குகின்றார் (யோவா 6). 
பரிசேயர் சீமோன் வீட்டில்  முன்னிலையி லும் தன் பாதங்களை கழுவியப் பெண்ணை மன்னித்து மன்னிப்பைப் பற்றி எடுத்துரைக்கின்றார். சக்கேயு வீட்டில் இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்று சொல்லி பாவிக்கு மன்னிப்பு கொடுக்கிறார். இப்படி ஒவ்வொரு விருந்திலும் இயேசு ஒரு செய்தியைக் கூறி தன் உறவை பலப்படுத்து கிறார். ஆக உணவு வழியாக உறவு பரிமாறப் படுகின்றது.

இன்று இப்போது நம்மிடையே நற்கருணை வடிவிலே நம் உள்ளத்தில் வருகின்றார் தன் உடலையும், தன் இரத்தத்தையும் கொடுக்கின்றார். பல வேளைகளில் நாம் இந்த அப்பத்திலும் இரத்தத்திலும் எழுந்து வரும் இயேசுவை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

தூய தாமஸ் அக்குவினாஸ் நற்கருணை யைப் பற்றி பேசும் போது ஆயன் தன் மந்தைக்கு உணவளிப்பது போல கிறிஸ்து தன் சொந்த உடலையும், இரத்தத்தையும் தன் விசுவாசிகளுக்கு ஆன்ம உணவு வழங்குகிறார். தூய அகுஸ்தினார் கூறுவது திருச்சபை நற்கருணையை உருவாக்குகிறது. நற்கருணை இறை சமூகத்தை உருவாக்குகிறது என்று கூறுகிறார். ஆகவே நற்கருணை மீது விசுவாசம் கொள்வோம். ஆண்டவர் என்றும் நம்மோடு இருப்பாராக. 

மூவொரு கடவுள் பெருவிழா

மூவொரு கடவுள் பெருவிழா
11-06-2017

விப 34: 4-6,8,9;  2கொரி 13:11-13; யோவா 3: 16-18

 தாமஸ் ஆடம்ஸ் கூறுவார். ‘மூவொரு கடவுளைப் பற்றி ஆய்வு செய்வது, அது அறிவு சார்ந்த செயலாகாது,  ஆனால் மூவொரு கடவுளின் மறையுண்மையை நம்பிக்கையாகக் கொள்வது இறைத்தன்மையானது.  மூவொரு இறைவனைப் பற்றி போதிப்பது   பாதுகாப்பானது, மூவொரு இறைவனை அறிந்துக் கொள்வது விண்ணக மகிழ்வினைத் தருவது’ என்பார்.
ஜான்வெஸ்லி கூறுவார், ‘மண்ணில் நெளியும் ஒரு புழு மனிதரைப் புரிந்துக் கொள்ள முடியுமென்ற நிலை ஏற்படுமானால், மனிதர், மூவொரு இறைவனின் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்’ என்பார்.

ஒரே கடவுள் ஆனால் மூன்று ஆட்கள் என்ற உண்மையை இயேசுதான் நமக்கு வெளிப்படுத்தினார். நற்செய்தி நூல்களில்  மூன்று இடங்களில், மூன்று ஆள்களைக் குறிப்பிட்டு, மூவொரு இறை உண்மை குறிப்பிடப்படுகிறது. (மத்28:19; யோவா 14:26; 15:26)  பவுல் சுமார் பத்து இடங்களில் மூவொரு இறைவனைப் பற்றி குறிப்பிடுகிறார். (2கொரி 13:14; கலாத் 4:6; எபேச 1:17;  2:18-22;  3:14-19;   4:4-6) 1 தெச 1:3-5;   2தெச 2:13-14;   தீத் 3: 4-6;  எபி9:14; மற்றும் 1 பேது 1:1-2வும் குறிப்பிடுகிறார். இதையன்றி, மகன், தூய ஆவியார் இவர்களை இணைத்தும் (உரோ1:4;  8: 9;  14:17-18;    1 கொரி 2:2-5;  6:1;  12: 4-6), தந்தை  மகனை இணைத்தும் (1 கொரி 8:6;  யோவா 1:14), தூய ஆவியைத் தனித்தும் (மத்3:16; 12:28;   லூக் 3:22) வருகின்ற குறிப்புகளைக் காண்கிறோம்.

 டைஸ் டேவிட்ஸ் என்பவர் கூறுவார், ‘நீ  உன்னை அறிந்தால், இறைவனை அறிய முடியும்’  என்பார்.

எனது மறையுரைகளில் மூவொரு இறைவனின் பண்புகள் நம்மில் புதைந்திருக்கின்றன என சுட்டிக் காட்டுவேன். நமது விசுவாச  அறிக்கைகளில் தந்தையின் பணியாக படைப்பவராகவும், பராமரிப்பவராகவும் காண்பிக்கப் ‡படுகிறார். மகன் விடுதலைத் தருபவராகவும், இறைவனின் வழியாகவும் விளங்குகிறார். தூய ஆவி, புனிதப்படுத்துபவராகவும், வழி நடத்துபவராகவும், உண்மைகளை விளங்க செய்பவராகும் செயல்படுகிறார். மனிதர் கடவுளின் சாயலைத் தாங்கி நிற்கும் வேளையில், புதியதைப் படைக்கும் பண்பு, பராமரிக்கும் பண்பு, மற்றவர்களைத் தீமைகளிலிருந்து விடுதலையளிக்கும் பண்பு, உலகினை புனிதமாக்கும் பண்பு ஆகியவை மனிதரிடத்தில் புதைந்துள்ளன. மனிதர், இப்பண்புகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
மனிதர் உண்டாக்கும் புதிய படைப்புகளில் தந்தையின் பண்பு இடம் பெறுகிறது. பெற்றோர்களைப் போல மற்றவர்களைப் பராமரிப்பதிலும் தந்தையின் பண்பு மறைந்திருக்கிறது. தீமைகளில் சிக்கி உள்ளவர்களை விடுவிக்கும் தியாகச் செயல்களில் மகன் இயேசுவின் பண்பு மறைந்திருக்கிறது. தூய ஆவி புனிதப்படுத்துகிறார் என்றால், அது அர்ப்பணத்தை குறிக்கும். நமது அர்ப்பணிப்பிலும், முழு ஈடுபாட்டிலும் தூய ஆவியின் புனிதத்தன்மை மறைந்திருக்கிறது. எனவே நம் வாழ்வை பிரித்துப் பார்த்தாலே மூவொரு இறைவனின் பண்புகளை உணர்ந்துக் கொள்ளலாம்.  
                                          

தூய ஆவியார் திருவிழா

தூய ஆவியார் திருவிழா
 04-06-2017  
அருள்பணி. ச.இ. அருள்சாமி
திப 2 : 1 -11 ;  1 கொரி 12 : 3 -7; யோவா 20: 19 - 23  
         
‘உணர்வுகள் வெளியிலிருந்து மனிதரில் நுழைகின்றன. ஆனால்  உள்  ஊக்கம், தூய ஆவியார் மனிதரின் மனதோடு ஒன்றிக்கும் போது தோன்றுகின்றது’ என்கிறார் வாட்ச்மேன் ரே என்பவர்.

‘மனிதரின் மனம் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்படும்போதுதான், கிறிஸ்துவின் பண்புகள் அவரில் ஊற்றெடுக்கின்றன’ என்கிறார் ஸ்டேன்லி ஜோன்ஸ்.  ‘ஊன் உடலான மனிதர் தூய ஆவியாரைத் தங்களில் தாங்க முடியுமா? முடியும் என்பதை காட்டத்தான் இயேசுவை இவ்வுலகிற்கு கடவுள் அனுப்பினார்’  என்கிறார் பென்னி ஹின் என்பவர். தூய ஆவியார் நம்மில் செயல்படுகின்றவர். அவரோடு இணைந்து நின்றால் நம்மில் செயல்படுகிறார்.

              நம் திருத்தந்தை பிரான்சிஸ் யோவா 16:13 ஐ சுட்டிக்காட்டி தூய ஆவியாரின்  முக்கிய செயல்பாடாக  அவர் ‘முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார்’ என்பதை குறிப்பிடுகிறார். 1 கொரி 12:3 இல், பவுல் அடிகளார், ‘தூய ஆவியால் ஆட்கொள்ளப் ‡பட்டவரன்றி எவரும்  ‘இயேசுவே ஆண்டவர்’  என சொல்ல முடியாது’ என்கிறார். பிலாத்து இயேசுவைப் பார்த்து ‘உண்மையா? அது என்ன?’ என்று கேட்கிறான்.  உண்மையின் உருவமான இயேசு அவன்முன் நிற்க  ‘ உண்மையா?  அது என்ன? என்று உண்மையிடமே கேட்கிறான்’ ( யோவா 19:38) என்று சுட்டிக் காட்டுகிறார் திருத்தந்தை.
        
திருத்தூதர் பணிகளில் பேதுரு (திப 4:31) சமாரியர் (திப 8:15),  சீடர்கள் (திப 13:52),  எபேசு மக்கள் (திப 19:2) ஆகியோர் ‘தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆள்கொள்ளப்படுதல் என்பதற்கு இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
ஒன்று ‘நிரப்புதல்’ என்ற பொருள்படும் ‘ப்ளேரோவோ’ என்ற கிரேக்க வார்த்தை (காண். திப 2:4;  4:31;  11:24; 13: 9,52), மற்றொன்று ‘எடுத்துக்கொள்ளுதல்’ என்று பொருள்படும்‘லம்பானோ’ என்ற வார்த்தை (திப 8:15-17;  19:2).

இயேசு விண்ணகம் சென்ற பிறகு, இறைவனின் பிரசன்னத்தை தனது தூய ஆவியின் வழியாக நமக்குத் தந்துக் கொண்டிருக்கிறார். இதைதான் இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். யோவான் நற்செய்தியில், இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றியப் பின், அதே நாளில் தன் சீடர்களுக்குத் தோன்றுகிறார். 12 சீடர்கள் மட்டுமல்ல மற்ற சீடர்களும் அங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தூய ஆவியாரை இயேசு அளிக்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் பொறுப்பையும் தருகிறார்.                                       
ஆக, தூய ஆவியார் நமக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீகக் கொடை. பரிசு பொருட்களையயல்லாம் காட்சிப் பொருள்களாக கண்ணாடிப் பேழையில் வைப்பார்கள். ஆனால் தூய ஆவியார் என்ற கொடையைப் பயன்படுத்தி வாழத்தான் இயேசு நமக்குத் தந்திருக்கிறார்.
 
முதல் வாசகத்தில் சீடர்கள் மீது தூய ஆவியார் எழுந்து வந்த நிகழ்வைப் பார்க்கிறோம். அவர்கள் தூய ஆவியாரால் ‘ஆட்கொள்ளப்பட்டார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு நேரடிப் பொருள்‘நிரப்பப்பட்டார்கள்’ என்பதுதான். ஆக, தூய  ஆவியார் இறைவனால் கொடுக்கப்பட்ட  கொடை என்பது தெளிவாகிறது.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், தூய ஆவியார் நம்மில் எப்படி செயல்படுகிறார் என்று விளக்குகிறார். தூய ஆவியார், அடிப்படையான நம்பிக்கை என்ற  கொடையைத் தருகிறார். ‘இயேசு, ஆண்டவர்’ என்று உணரும் உள்ளொளியைத் தருகிறார். இந்த நம்பிக்கை இல்லையயன்றால் இறை உறவு நம்மில் இயங்க முடியாது.

இரண்டாவதாக, தூய ஆவியாரின் கொடைகளை பொறாமைக்கு இடமின்றி ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். அருள்கொடைகளும் திருத்தொண்டும் பலவகைப் பட்டவை. பொது நன்மைக்காகவே இவ்வரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே தற்பெருமைக் கொள்ளவோ, பொறாமைப்படவோ இடம் கொடுக்காமல் வரங்களை செயல்படுத்த வேண்டும். ஞானம், அறிவு, நம்பிக்கை, பிணி தீர்த்தல், வல்லசெயல் செய்தல், இறை வாக்குரைத்தல், பகுத்தறியும் ஆற்றல், பரவசப் பேச்சு,பரவசப் பேச்சை விளக்குதல் ஆகிய  அற்புத வரங்கள்.
   
         பல ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் அருட்பணியாளர் தியானம் நடத்தினார். அப்போது தன் ஆன்மீக அனுபவத்தைப் பகிர்ந்தார். ஒரு முறை அவர் கூட்டுத் திருப்பலியில் பங்குக் கொண்டார். அத்திருப்பலி முழுவதும் அவர் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. அதனை தூய ஆவியின் செயல்பாடு என்று உணர்ந்ததாகக் கூறினார். 

ஒருவர் கூறினார், ஒருவர் நன்றாகப் பாடி பரிசு பெற்றால் தனக்கு அந்தத் திறமை இல்லையே என்று நொந்துக் கொள்வாராம். அதேபோல ஒருவர் சிறப்பாக பேசினால், சிறப்பாக வாதிட்டால், அழகான உருவத்தைப் பெற்றிருந்தால், தனக்கும் அந்த வரங்கள் இல்லையே என்று வருந்துவாராம். மறைந்த சோ அவர்கள், திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பாக சொற்பொழிவாற்றியது அவரின் தனிப்பட்ட வரம் என்று குறித்துப் பேசினார். எனவே நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை வரம் உண்டு. எல்லா வரமும் நம்மிடையே இல்லை என்று வருந்தத் தேவையில்லை.
    
   அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்                 (குறள். 170) 

பொறாமைப்பட்டு வளர்ந்தவரும் இல்லை
பொறாமையில்லாமையினால் குறைந்தவரும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
   

பணிவு என்னும் இனிய பாதை அருள்பணி. மகுழன், பூண்டி மாதா தியான மையம்

பணிவு என்னும் இனிய பாதை

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

என் எழுத்தை வாசிக்கிறவர்கள் என்னிடத்தில் கேட்கிற கேள்வி, உங்கள் கதைகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கின்றன? நான் அவர்களிடத்தில் சொல்வேன். பல கதைகள் நான் வாசிக்கும் புத்தகங்களில் இருந்து எடுப்பேன். 
(வாசிப்பது வாழ்வின் நடுப்பகுதியாக மாறும்போது வாழ்வில் மகிழ்ச்சி கூடுகிறது). ஒரு சில கதைகளை நான் கேட்டதிலிருந்து பகிர்ந்து கொள்வேன் என்பேன். அதுபோல நான் கேட்ட ஒரு கதை இது.

அந்த இளம் தம்பதி அந்த குடியிருப்புப் பகுதிக்கு புதிதாக குடிவந்தனர். காலை எழுந்தவுடன் கணவர் காபி குடித்துக் கொண்டே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டு தன் மனைவியிடத்தில், “என்ன இந்தப்பகுதி மக்கள் சுத்தத்தை சுத்தமாக மறந்து விட்டார்கள்” என்று சொன்னார். அடுத்த நாள் காலையும் எழுந்தவுடன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். “இந்த பகுதி மக்கள் குளிப்பதே இல்லை போலிருக்கிறது. எவ்வளவு அழுக்காக இருக்கிறார் கள்”என்று  தன் மனைவியிடத்தில் அலுத்துக் கொண்டார். மூன்றாம் நாள் காலையிலும் கணவர் எழுந்தவுடன் ஜன்னல் வழியே பார்த்தார். குப்பை கூளங்களை கண்டவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது.  ‘இந்த மக்களைப் போல அசுத்தமான மக்களை நான் பார்த்ததே இல்லை’ என்று தன் மனைவியிடம் முறையிட்டார். அப்போது அந்த இளம் மனைவி என்னதான் நடக்கிறது என்று வந்து ஜன்னலைப் பார்த்தார். ஜன்னலைப் பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார். ஜன்னலின் கண்ணாடிகள் துடைக்கப்பட்டு பல மாதங்கள் இருக்கும். எங்கும் ஒட்டடை. அந்த அழுக்கான ஜன்னல் வழியாகப் பார்த்ததால் அந்த கணவருக்கு அனைத்தும் அழுக்காய் தோன்றின. உடனே ஒரு துணியை எடுத்து வந்து துடைத்தாள். அப்போது கணவன் வெளியே பார்த்து விட்டு,  “மக்கள் நன்றாக தூய்மையாகத்தான் இருக்கிறார்கள். நான்தான் தவறாக நினைத்து விட்டேன்” என்று வருத்தமுற்றார். 

பணிவு அல்லது தாழ்ச்சி என்பதன் பொருளை பலவிதங்களில் நாம் விளக்கலாம். அதில் ஒன்று பணிவு என்பது  உண்மையான வி­யங்களை, உண்மையான மனப்பான்மையோடு பார்ப்பது.
* நான் கடவுள் அல்ல, கடவுளின்  சிறு படைப்பே என்று ஏற்றுக்கொள்வது.

* என் வாழ்வில் துன்பங்கள் மட்டுமல்ல. அல்லது, என் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிஜமல்ல. இன்பமும், 
 துன்பமும், வெற்றியும், தோல்வியும், இருளும், ஒளியும் என் வாழ்வில் தோன்றி மறையும் என்று உணர்வது.

* நான் 100% நல்லவன் அல்ல. அறிவாளி  அல்ல. திறமை மிகுந்தவன் அல்ல. என்னிடத்தில் குறைகள் உண்டு. அதைப்போல மற்றவர்களிடத்திலும் ஏராளமான நன்மைகள் உண்டு.  (அந்த கணவரைப் போல) நாம்தான் அதனை புரிந்து கொள்வதில்லை. மற்றவர்களிடத்தில் உள்ள சிறிய குறைகளைக் கூட நாம்தான்  பெரிதுபடுத்துகிறோம்.

* என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்பாக கடவுளின் திட்டத்திற்கு நான் செவிசாய்க்க வேண்டும். அதற்கு நான் அவரிடத்தில் செல்ல வேண்டும். அவரோடு  பேச வேண்டும். அமைதியில் வாழ வேண்டும். 

இந்த உலகில் வாழும் மனிதருள் பெரும்பாலும் (90 சதவீதத்திற்கு மேல்) ஆணவம்தான் அவர்களை ஆட்சி செலுத்துகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் தாழ்வுமனப்பான்மையும் ஒரு சிலரை  ஆட்டிப் படைக்கிறது. எனக்கு திறமை இல்லையே, என்னிடத்தில் எல்லாவிதமான பாவங்களும் இருக்கின்றனவே, என்னை யாரும்  அன்பு செய்வதில்லையே என்று ஒரு சிலர் தம்மை தாழ்வாகக் கருதி பிறரை உயர்வாக எண்ணி வாழ்வார்கள். இவர்கள் செய்யும் மிகவும் தீமையானக் காரியம், இவர்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கவிட மாட்டார்கள். கட்டாயம் நாம் அனைவரும் பாவிகள். நாம் அனைவரும் தவறு செய்கிறோம். நாம் பாவத்தை விலக்குவதற்கு சிரமப்படுகிறோம். நம்மிடத்தில் நல்லப் பண்புகள் அதிகம் இல்லை. நாம் ஒரு சிலரைப் போன்று திறமையானவர்கள் இல்லை.

ஆனால் இவை நம்மை நாம் தாழ்வு மனப்பான்மை என்னும் படுகுழியில் தள்ளுவதற்கு  (றீeயிக்ஷூ- க்ஷிற்துஷ்யிஷ்ழிமிஷ்லிஐ)   அழைத்து செல்லக் கூடாது. மாறாக இவை  உண்மையான தாழ்ச்சிக்கு (க்ஷிற்துஷ்யிஷ்மிதீ) அழைத்து செல்ல வேண்டும். கடவுளின் அருள் இருந்தால்தான்  நாம் முழுமை அடைவோம் என்ற புரிதலுக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். என்னோடு வாழ்பவர்கள் எனக்கு முக்கியம். அவர்களோடு நல்உறவோடு நான் வாழ வேண்டும். அவர்களின் நல்வாழ்விற்கு என்னால் இயன்ற உதவிகளை நான் புரிய வேண்டும் என்ற நல்மனப்பான்மைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.     
      
           “குழந்தாய், பணிவிலே நீ  பெருமை கொள். உன் தகுதிக்கு ஏற்ப உன்னையே நீ மதி. தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான் காண யார் கணிப்பர்?” தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யார் பெருமைபடுத்துவர்?   ( சீஞா 10: 28‡29).

ஜான் கிறிஸ்டர் என்னும் அறிஞர் இவ்வாறு கூறுகிறார். பணிவு அல்லது தாழ்ச்சி என்பதின்  ஆங்கில பதம் “க்ஷிற்துஷ்யிஷ்மிதீ”,“க்ஷிற்துஷ்யிஷ்மிதீ” என்ற ஆங்கில வார்த்தை “க்ஷிற்துற்வி”என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. க்ஷிற்துற்வி    என்றால் “நிலம்” என்று பொருகள். நிலம் தம்மை மிகவும் உயர்வாக எண்ணுவதில்லை. தம்மையே மிகவும் தாழ்வாகவும் கருதுவதில்லை. அதைப்போல பணிவு உள்ளவர்கள் அவர்களாக நடந்துகொள்வார்கள். அவர்கள் தங்களைப் பற்றி மகிழ்ச்சி  கொள்கிறார்கள். எனவே எப்படிப்பட்ட குழுவிலும் அவர்கள் மகிழ்ச்சியோடு உறவாட முடியும். ஏனென்றால் அவர்களுக்கு அவர்களைப்பற்றி  நன்குத் தெரியும். அவர்களைப்பற்றி  அவர்களுக்கு நன்குத் தெரிவதால் அவர்கள் வாழ்க்கை இலகுவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் மற்றவர்களின் வழிகாட்டுதலுக்கு, மற்றவர்களின் கருத்துகளுக்கு திறந்த மனத்தோடுக் காத்திருக்கிறார்கள்.
          
   பணிவு மிக்கவர்களோடு சேர்ந்து  வாழ்வது ஓர் இனிய அனுபவம். ஏனென்றால் அவர்கள் வேடம் போடும் பரிசேயர்கள் அல்ல. மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி தம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஒரு குழுவில் இருக்கும்போது தாங்கள் பெரியவர்கள் எனக் காட்டிகொள்வதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அவர்கள் அவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களைவிடப் பெரியவர்களும் யாரும் இல்லை. சிறியவர்களும் யாரும் இல்லை. எல்லாம் சரிசமமாக கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.
( தொடரும்)... 

Ads Inside Post