Pages - Menu

Thursday, 6 April 2017

ஏப்ரல் மாத புனிதர்கள்

ஏப்ரல் மாத புனிதர்கள்  

 அருட்சகோ.G.பவுலின்மேரி , FSAG
கும்பகோணம்
ஏப் . 5  புனித வின்சென்ட் பெரர் - மறைபணியாளர் (1350 - 1419)

இவர் ஸ்பெயினில் வலன்சியா நகரில் கி.பி 1350 இல் பிறந்தார். புனித தோமினிக் சபைத் துறவிகளுள் ஒருவராகி,  இறையியல் கற்றுக் கொடுத்தார். பல மாவட்டங்களுக்கும் சென்று , மறையுறைகள் நிகழ்த்தி , மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். தவறான கொள்கைகளுக்கு எதிராக உறுதியுடன் வாதாடினார். இவர் கடுந்தவ முயற்சிகள் மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் 4 மறையுறைகள் நிகழ்த்துவார்.சில நேரங்களில் 3 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவார். மறையுறைகளுக்கு நன்கு தயார் செய்வார். 1419 ‡ ல் ஏப்ரல் 5 - ஆம் நாள் பிரான்சு நாட்டில் வான் என்னும் இடத்தில் போதிக்கும் போது இறந்தார்.

ஏப் . 7  புனித ஜான் பாப்டிஸ்ட் ‡ மறைபணியாளர் (1651 - 1719)

  பிரான்சு நாட்டில் ரெய்ம்ஸ் நகரில் கி.பி. 1651 இல் பிறந்தார். மறைபணியாளராகிய பின், முக்கியமாக இளைஞர்களுக்குக்  கிறிஸ்தவ கல்வி புகட்டுவதற்கென்றும்,  ஏழைச் சிறுவர்களுக்காகப் பள்ளிகளை நிறுவதற்கென்றும்,  தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்முடன் உழைத்த தோழர்களையயல்லாம் துறவற சபையினராக ஒன்றுசேர்த்தார். இச்சபையை ஏற்படுத்துவதற்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். இவரின் சபை உலகெங்கும் சபை பரவியது. நம் நாட்டிலும் இச்சபை பணியாற்றுகிறது.1719‡ல் பிரான்சில் ரூவான் என்ற இடத்தில் இறந்தார்.

 ஏப் . 11  புனித தனிஸ்லாஸ் ‡ ஆயர் , மறையாட்சி (1030 - 1079)

   போலாந்து நாட்டில் ஜெசப்பனாவில் கி.பி 1030 இல் பிறந்தார். பாரீஸ் நகர் சென்று படித்தார். பெற்றோர் இறந்ததும்  உடமைகளை விற்று  ஏழைகளுக்கு வழங்கிவிட்டு குருப்பட்டம் பெற்று ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்தார். 1071 இல் ஆயரானார். ஒரு நல்ல ஆயராய் இருந்து , திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவினார். தம்மால் கண்டிக்கப்பட்ட போலஸ்ஸால் மன்னரால் 1079 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.

ஏப் . 13  புனித மார்ட்டின்  ‡ திருத்தந்தை, மறைசாட்சி (656)

இத்தாலியில் உம்பிரியா மாவட்டத்தில் உள்ள டோடி என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையின் மறைப்பணியாளர்களுள் ஒருவராகி , திருதந்தையாக கி.பி.649‡ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே ஆண்டில் உரோமையில் ஒரு திருசங்கத்தைக் கூட்டி இயேசுவிடம் மனித இயல்பு இல்லை என்ற தவறான கொள்கையை கண்டித்தார். அதனால் இவரின் மன்னரால் 653 இல் சிறைப்படுத்தப்பட்டார். பின்பு கிரிமியாத் தீவில் உள்ள கெர்சோனுக்கு  நாடுகடத்தப்பட்டு அங்கு 656 இல் இறந்தார்.

ஏப் . 20 புனித ஒன்பதாம் சிங்கராயர் (1002 - 1059)

 இவர் தம் 25- ஆம் வயதில் ஆயராகி 20 ஆண்டுகள் மறைமாவட்டத்தை வழிநடத்தும் போது பல சவால்களை சந்தித்தார். தற்செயலாக திருயாத்திரையாக உரோமைக்குச் சென்ற போது, இவரை பாப்புவாக தேர்ந்தெடுத்தார்கள். திருச்சபையின் நலனுக்காக பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவுக்கு எதிரான தவறான கருத்துகளை மறுத்து உண்மை கொள்கைகளை நிலைநாட்டினார். தகுதியற்ற குருக்களை பணியிலிருந்து நீக்கினார். பல நாடுகளின் ஆயர்களை ஒன்று சேர்த்து ஒரு திருசங்கத்தைக் கூட்டினார். அவரின் உரையை மக்கள் ஆர்வமுடன் கேட்டனர். எதிரிகள் இத்தாலி நாட்டின் மீது  படையயடுத்து வந்த வேளையில் இவரையும் கைது செய்து 9 மாதங்கள் சிறையில் வைத்தார்கள். விடுதலைப் பெற்றபின் பலர் இறந்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார். புனித இராயப்பர் பேராலயத்தின் நடுப்பீடத்தின் முன் உயிர் நீத்தார்.

ஏப் . 25  புனித மாற்கு - நற்செய்தியாளர்:

 இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் மறை பயணத்தில் அவரோடு கூடச் சென்றவர். அவரின் மூன்றாம் பயணத்திலும் உரோமை வரையிலும் சென்றிருக்கின்றார். இவர் பேதுருவின் சீடர் என்ற பாரம்பரியம் உண்டு. எகிப்தில் உள்ள அலெக்ஸாந்திரியா நகர் திருச்சபையை இவர் நிறுவினார் என்ற பாரம்பரியமும் உண்டு. காப்டிக் தல திருச்சபையும் புனித மாற்குவின் விழாவை இன்று கொண்டாடுகின்றது.

ஏப். 29 புனித சியான்னா கேத்தரின் ‡ கன்னியர், மறைவல்லுனர் (1347-1380)

  இப்புனிதை இத்தாலியில் சியான்னா நகரில் கி.பி 1341 இல் பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். புனித தோமினிக்கின் 3‡ ஆம் சபையில் சேர்ந்து இறையன்பு, பிறரன்பு ஆகியவைகளில் சிறந்து விளங்கினார்.  
திருச்சபையின் ஒற்றுமைக்காக பெரிதும் உழைத்தார். திருத்தந்தையின் தலைமையை அனைவரும் ஏற்று வழிநடக்க வலியுறுத்தினார். இவரின் ஆன்மீகக் கருத்துகளை இவர் வாய்ப்பட சொல்லி , பிறகு அவை நூலாக அச்சிடப்பட்டன. இவரின் ஆழ்ந்த இறையியல் கருத்துகளுக்காக மறைவல்லுநர் என்ற பட்டம் இவருக்குத் தரப் பட்டது.1380 இல் உரோமையில் இவர் இறந்தார்.

ஏப்.30  புனித ஐந்தாம் பயஸ் ‡ திருத்தந்தை (1504-1572)

           இவர் இத்தாலியில் அலெக்சாந்திரியாவுக்கு அருகில் கி.பி. 1504இல் பிறந்தார். புனித தோமினிக்கன் சபையில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொடுத்தார். ஆயராகவும், கர்தினாலாகவும் 1566 இல் திருத்தந்தையாகவும் உயர்த்தப் பெற்றார். திரிதெந்தின் திருசங்க திருச்சபையில் தொடங்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். மறைபரப்புப் பணியை ஊக்குவித்து, திருவழிபாட்டு முறைகளை சீர்படுத்தினார். 1572 இல் இப்புனிதர் இறந்தார். 

இரட்சணிய யாத்திரிகம், உயிர்த்தெழுந்த காட்சி


இரட்சணிய யாத்திரிகம்

உயிர்த்தெழுந்த காட்சி

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லையயன்றால் கிறித்துவ சமயமே இல்லை. கிறிஸ்து சிலுவையில் அறைய பட்டதைக் கண்டு அஞ்சியோடிப் போனார்கள் சீடர்கள். அவரை மூன்று முறை மறுதலித்தவர் இராயப்பர். அவர் கரங்களிலும், விலாவில், கையை விட்டுப் பார்த்தாலொழிய நம்ப மாட்டேன் என்ற தோமா முதலியோர் அவரது உயிர்த்தெழுதலைக் கண்டு, விசுவாசித்து  ஊக்கம் பெற்று உலகெங்கும் போய் நற்செய்தியைப் பரப்பினார்கள். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் காலையில்,  தாம் கூறிய வண்ணமே  உயிர்த்தெழுந்தார்.
இரட்சணிய யாத்திரிகம் உயிர்த்தெழும் காட்சியினை இலக்கிய நயத்துடன் புனைந்துள்ளது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையின் காலைப் பொழுதில்,இருள் விலகும் நேரமான வைகறையைப் பார்த்துத் திங்கள் (நிலா) ஒளி குன்றியது. அந்தச் செயல் உண்மையைக் கண்டவுடன், பொய் தோற்றுப் போனது போல இருந்தது. கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட கள்வனின் செல்வம் போல் விண்மீன்கள் மறைந்தன. பொய்யைக் கண்டு மருளும் நல்ல உள்ளங்களைப் போல்,தீபங்கள் ஒளி இழந்தன. இத்தகைய காலை நேரத்தில் உலகிற்கெல்லாம் மீட்பினைத் தமது சிலுவை மரணத்தால் சம்பாதித்து, யோக நித்திரையில் ஆழ்ந்தவர் துயில் நீங்கி எழுவது போல உன்னத தேவ மைந்தனாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என இரட்சணிய யாத்திரிகம் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறது.

“இன்னதோர் அமையந் தன்னில் இருநில உலகுக்கெல்லாம்
பன்னரு நலத்த ஆய பரகதிப்பயனை ஈட்டித்
துன்னிய சடவியோகத் துயிலுணர் சூழ்ச்சியே போல்
உன்னத தேவமைந்தன் உயிர்த்தெழுந்தருளிப் போந்தார்” (பா.304)

வள்ளல் இயேசு உயிர்த்தெழுந்ததைக் கண்டு,உலகில் வாழும் அளவில்லாத அனைத்து  உயிர்களும் மகிழ்ந்தன. செடிகளும், கொடிகளும் மலர்களைப் பூத்து மகிழ்ந்தன. நீங்குதற்குரிய துன்பம் நீங்கி உண்மையான இன்பம், உண்மை ஒளி போன்றவை மனங்களில் நிறைந்தன. உலகம் முழுவதும் இருள் நீங்க, ஞாயிறு உதயம் செய்தது. பறவை இனங்கள் இன்னிசைக் கீதங்கள் எழுப்பிப் போற்றின. கிறிஸ்து பெருமான் உயிர்த்தெழுந்த காட்சி மானிடமே புதிய உயிர்பெற்று விட்டதைப் போல் தோன்றிற்று.
இரட்சணிய யாத்திரிகம் மீட்பின் சரித்திரத்தைச் சொல்லி முடிக்கும் ஒரு முத்தாய்ப்பான பாடல் ஒன்றைக் கீழே காண்போம்.
“சிந்திக்க நெஞ்சடியேன் சென்னியிரைஞ்சக் கரங்கள்
வந்திக எஞ்ஞான்றும் வாழ்த்துவாய் ‡ 
புந்திக்குள் வீற்றிருக்கும் சேசுவீரை மலர்பூஞ்  சேவடிக்கே ஆற்றுக மெய் அன்பின் பணி”
 (பா. 496)
மூன்றாம் நாள் காலையில் கல்லறையைக் காண வந்த மகதலேன் மரியாள் முதலிய பெண்கள்,கல்லறை வெறுமையாய் உள்ளதைக் கண்டு திகைத்தனர். இறைதூதன் அவர்களுக்கு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை அறிவித்தான். கிறிஸ்து தாமே தோன்றி அப்பெண்களுக்கும், எம்மாவூருக்கு வழிப்பயணம் செய்து கொண்டிருந்த சீடர்களுக்கும், யூதர்களுக்கு அஞ்சி ஒளிந்து கொண்டிருந்த பதினொரு சீடர்களுக்கும் காட்சி தந்தார். உயிர்த்தெழுந்த பின் நாற்பது நாள் சஞ்சரித்தார். பின் விண்ணகத்திற்கு எழுந்தருளி பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுவதே அவரது கருணை செயலாக உள்ளது.
வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, கிறிஸ்து உயிர்த்தேழுந்த காட்சியினை, பகைவர் தந்த துன்பத்தினால் கிறிஸ்து  தமது  உயிரை அளித்த பின், அந்துன்பமெல்லாம் நீங்கப் பெற்று, உலகத்தினை மீட்டல் என்னும் இறைவனது குறிக்கோள் நிறைவேறுமாறு, தனது விலா, இரண்டு கை, தாள்பட்ட (இரண்டு பாதம்) ஐங்காய அடையாளங்களோடு ஒளிவீச உயிர்தெழுந்தார் எனப் பாடியுள்ளது. 
மறைதிரு ஆசீர்வாதம் எழுதிய திருஅவதாரத்தில் கிறிஸ்து  உயிர்த்தெழுந்த மாண்பினை ஜெயகாண்டம் என்ற பகுதியில் வினாக்கள் சிலவற்றையயழுப்பி அவைகளுக்கு விடைகளை உய்த்துணர்ந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தியுள்ளது. இதனை
“மண்ணவர்க் கெனவுயி ரீந்தவரை மரணமே தடைசெயக் கூடியதோ
அண்ணலா ருடலையே கல்லறையுள் ளடக்கிவைத் திருப்பதுங் கூடியதோ
கண்ணயர் கிறிஸ்துவே யயழும்புவதைத் தடைசெய்ய முடியுமோ கல்லினாலே
விண்ணவர் மகிபனே உயிர்தெழுந்தார் வெளிப்பாடு மொரு ஜெயவேந்த னென”

என வந்துள்ளதை திரு அவதாரப் பாடல் வழி அறிய முடிகின்றது.
ஆசுகவி ஆரோக்கியசாமி இயற்றிய சுடர்மணி என்னும் நூலில் இக்காட்சியினை,

“அடக்கம் செய்த மூன்றாம்நா ளவரே சொன்ன முன்னுரைபோல்
தொடங்குங்காலை விண்ணவர்கள் தோன்றிக் கல்லைப் புரட்டிவிட
அடங்கா வொளியி லாண்டவரு மழகே யுருவாய் வெளியேற
குடலே நடுங்கக் காவலர்கள் குருவிடமோடிச் செப்பினரே”
எனப் புகன்றுள்ளது.

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம், இயேசு உயிர்த்தெழுந்த காட்சியை மகிமை எனத் தலைப்பிட்டுக் கூறியுள்ளது. இயேசு காவியம் கிறிஸ்து  உயிர்த்தெழுந்த மகிமையினை,

“வெள்ளியன்று பிற்பகலில் மரித்த இயேசு
வேதமுறை மாலையிலே அடக்கமானார்
கள்ளர்களும் ஓய்வெடுப்பார் சனியில் அன்று
கட்டாய விடுமுறைநாள் யூதருக்கு,
பிள்ளைகளும் பெரியோரும் மாதர் தாமும்
பேதலித்து சனிமுழுதும் ஓய்ந்திருந்தார்!
வெள்ளிமுளைத் தேஎழுந்து ஞாயிறன்று
விடிகின்ற போதினிலே குறியித்தெழுந்தார்”

என இயேசு காவியம் கூறுகிறது.
கிறிஸ்துவ  சமயத்தின் வாழ்வும், வரலாறும், வளர்ச்சியும், நம்பிக்கையும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற அடிப்படை கோட்பாட்டைத் , தமிழ் கிறிஸ்துவ இலக்கியங்களில் கற்பவர் நெஞ்சைக் கனிந்து உருகச் செய்கின்ற பான்மையில் பாடப்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்வளிக்கும் வள்ளல் இயேசுவின் வாழ்வுக் காட்சிகள் பலவற்றையும் அறிந்து  இன்புறுதல் சாலப் பயனளிப்பதாகும்.

எல்லாம் நிறைவேறிற்று, ( இயேசுவின் பாடுகளைக் காணும் உணர் வலைகள்)

எல்லாம் நிறைவேறிற்று  


         பேராசிரியர் ச. சாமிமுத்து
( இயேசுவின் பாடுகளைக் காணும் உணர் வலைகள்)

கள்வர்கள் மத்தியில் , சிலுவையிலே துடிதுடித்துக் தொங்குகின்ற செம்மறியே , அன்னையின் அரவனைப்பிலே நசரேத்து வீட்டிலே விழுந்து எழுந்து நடைப்பயின்ற  படைப்பாற்றலனே, கடையனையும் தேற்ற வந்த  மாற்றறியாப் பசும் பொன்னே, பூமானே விண்ணக்கும் , மண்ணக்கும் இடையே உறவைப் புதுப்பிக்க வந்த புத்துயிரே,  பூபாளமே , பூங்கா வனத்திலே அழுது அங்கலாய்த்த துடிதுடிப்பின் இறுதிக்கட்டம்  நிறைவேறுவதற்கு முன்பு , இந்த பாவிகான பொய்யான கோலமே மெய்யயனக் கொண்டலையும் இந்த புல்லனுக்காக ‡ உண்ணுவதிலே, உடுத்துவதிலே , அதிகாரம் செலுத்துவதிலே நாயினும் கேடுகெட்டு ஆசை வலைப்பட்டலையும் இந்த அறிவிலிக்காக ‡ மனிதர்களை மட்டும் அல்லாமல் உன்னையே ஏமாற்றிவிட்டதாக  எண்ணி, கொண்ட கொள்கையைக் குழிக்குள் தள்ளிவிட்டு குறுக்கு வழிநடக்கும்  இந்த  குறுமதியாளனுக்காக விண்ணகத் தந்தையிடத்திலே என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகின்றாயே! ஐயோ தலை சாய்கிறதே எல்லாம் நிறைவேறிற்று ! ஆம் அவர்  உயிர் பிரிகிறது.

Wednesday, 5 April 2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 2-4-2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு        2-4-2017

  தி.ப  2 : 42-47;   1 பேதுரு 1 : 3-9 ;  யோவா 20 : 19 - 31  
  
 மார்ட்டின் லுVத்தர் கிங் என்பவர்,  நம்பிக்கை  என்பதை  கீழ்க்காணுமாறு விளக்குகிறார், “நம்பிக்கை  என்பது மாடிபடிகள்        அனைத்தையும் நாம் காணாவிட்டாலும், அதன் முதல்படியில் அடி எடுத்து வைக்கிறோம். அதுதான் நம்பிக்கை” என்கிறார். இன்றை வாசங்களில் நம்பிக்கை  என்பது  மையக் கருத்தாக விளங்குகிறது.
                    
  முதல் வாசகத்தில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும்  ஒன்றாயிருந்தனர் (தி.ப 4:32)  என்று பார்க்கிறோம். இரண்டாம் வாசகத்தில், “நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காக கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்” (1 பேது 1 :5)  உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள் (1 பேதுரு 1 :7)   இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும்  மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்  (1 பேதுரு 1 :7) . இப்பொழுதும் நீங்கள்   அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கைக் கொண்டு  சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து  பேருவகைக் கொள்கிறீர்கள் (1 பேதுரு 1 : 8).  “நீ என்னை கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” ( யோவா 20 : 29)  நம்பிக்கையினால் பகிர்வு ஒற்றுமை ஏற்படுகிறது. நம்பிக்கை பாதுகாப்பைத் தருகிறது. நம்பிக்கை பெருமையையும் மாண்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இவ்வாறு வாழ்வின் போது செழுமையாக விளங்குகிறது நம்பிக்கை.  புனித  அகுஸ்தினார் கூறுவார், “நம்பிக்கை என்பது நாம் காணமுடியாததை ஏற்றுக் கொள்வது. ஆனால் நம்பிக்கையின் கைமாறு என்னவென்றால் காணமுடியாததைக்  காண்பதாகும்” என்கிறார் . ய்ழிஷ்மிஜு ஷ்வி மிலி ணுeயிஷ்ஸe ழஜுழிமி தீலிற் dலி ஐலிமி விee, மிஜுe reழழிrd லிக்ஷூ க்ஷூழிஷ்மிஜு ஷ்வி மிலி விee ழஜுழிமி தீலிற் ணுeயிஷ்eஸe?  உயிர்த்த இயேசு தம் சீடர்களை சந்திக்கிறார். சீடர்கள் என்பவர்கள் தேர்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். சீடர்கள் இயேசுவை கண்டதும் மகிழ்ச்சியடைகிறார்கள். அமைதி உரித்தாகுக என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். பிறகு  சீடர்களுக்கு துVய ஆவியை அளித்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் அளித்து அனுப்புகிறார். இயேசு தோன்றியதும் சீடர்கள் நம்பினார்கள். தோமா, அவர்களோடு இல்லாததால் அவர்கள் கூறியதை ஏற்க மறுக்கிறார். இயேசுவே மறுமுறை தோன்றி தோமாவின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். இயேசு, ஒரு விதத்தில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். இதுதான் இயேசு தன் சீடர்களுக்கு அளித்த காட்சியின் பொருள். அதே நேரத்தில் நம் வாழ்வினால்  நாம் பெற்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. இதனைத்தான் முதல்வாசகம் விளக்குகிறது. திருவருட்சாதனங்களிலும் அன்பு செயல்களிலும் இறைவன் வெளிப்படுகிறார்.

                      அண்மையில் ஒரு சகோதரிக்கு சிறந்த சமூக  சேவையாளர் விருதினைத் தந்தார்கள். மருத்துவமனைச் சந்திப்பு, சிறை சாலை சந்திப்பு, வீடு சந்திப்பு, செபக்  கூட்டங்கள் நடத்துதல் என தன் உடல் நலத்தையயல்லாம் பாராமல் பணியாற்றுகிறார். எப்படி இத்தகைய ஆர்வம் உங்களுக்கு கிடைத்தது என்றால்,  “எல்லாம் எனது கடவுள் நம்பிக்கை  தந்த பலம்”  என்றார்.  

நம்பிக்கையின்றி எதனையும் சாதிக்க முடியாது. நம்பிக்கையிருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இருக்க முடியாது -  மேரி மேக்லேயோட் பெத்துVன்.  
                                                                                                                                         
 Without Faith nothing is possible; With Faith Nothing is impossible

பாஸ்கா ஞாயிறு 16 - 4 - 2017

பாஸ்கா  ஞாயிறு 16 - 4 - 2017

  திப 10: 32 ,37 ‡ 43;  கொலோ 3: 1 ‡4 ;   யோவா 20 : 1 ‡9 
                                                                                                                                                    -
                 
பேறு பெற்ற நாள் இதுவே .......
  உயிர்ப்பின் மகிழ்வு என்பது இயேசுவைத் தவிர வேறு எவரும் முன் பின் அறிந்திராத  ஓர் அனுபவம். வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாத  உணர்வு. இயேசு தன் பாடுகளையும் உயிர்ப்பையும் மும்முறை அறிவித்தபோது, சீடர்கள் அதனை கற்பனை செய்து கூடப் பார்த்தார்களா என்பது நமக்குத் தெரியாது. கொடூரமாகக் கொலை செய்து சிலுவையில் அறையப்பட்டவர் , மூன்றாம் நாள் உயிர்ப்பெற்று விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் , சிதைந்த முகமும், சிதறிய உடலுமே நினைவிற்கு வந்திருக்கும்.

 “நடுங்க வைக்கும் இருள் நல்லிரவிற்கு மேல்  தெரிவதில்லை , என்னும் கூற்று உயிர்ப்பு தரும் நம்பிக்கையை உணர வைக்கிறது. எல்லா நற்செய்திகளும் இயேசுவின் உடல் இல்லாத காலியான கல்லறையைத்தான் முதலில் குறிக்கப்பிடுகின்றன. (மத் 28:2 ; மாற் 16:5‡6 ; லூக் 24:2 ; யோவா 20: 1 ) எனவே தான் சாம் மோரிஸ் கூறுவார்,  இயேசுவின் கல்லறையின் வெறுமையினால்தான் அது பெறுமை பெற்றது” என்பார்.எனவே தான் பவுல் , “கிறிஸ்து உயிருடன் எழுப்பபடவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1 கொரி 15:14). ஆங்காங்ககே ஓரிரு வீடுகள் இருந்த காலங்களில் உறவுகளில் நெருக்கம் இருந்ததை போல அருகருகே வீடுகள் நெருக்கமாக இருக்கும்  இன்றைய காலங்களில் உறவுகளில் நெருக்கம் இல்லை. யாரும் யாரையும் பற்றிக் கவலை கொள்வதில்லை. பல்வேறு காரணங்களை முன் வைத்து உறவுகளும் விலகியிருக்கவே விரும்பும் இத்தகைய நிலையில், இயேசுவுக்கு நிகழ்ந்தவற்றில் உடனிருந்து , விடியற்காலையில் கல்லறையில்  காத்திருந்து  இழந்த இயேசுவை உயிரோடு கண்ட மதலேன் மரியாளும், சீடர்களும் மகிழ்ந்ததைப் போல , எப்போதெல்லாம் வலிகளைத் தொடர்ந்து உயிர்தரும் நிகழ்வுகளுடன் உலகம் கரம் சேர்க்கிறதோ, அங்கெல்லாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

           அன்பு அச்சத்தைத் தகர்த்தெறியும் ஆக்கப்பூர்வமான சக்தி வாய்ந்தது. உலகத்தை இருளை நோக்கி இழுத்துச் செல்லும் இன்றைய சூழல்களிலும் மனித வாழ்வில் நம்பிக்கை தரும் நற்செய்திகளும் நம் செவிகளைத் தேடி வராமல் இல்லை. 
இருண்ட மேகத்தைக் கடந்து வரும் விடியலும், வறட்சியைக் கடந்து வரும் வசந்தமும்  வறுமையைத் துடைக்க நீளும் கரங்களும்,  துன்பத்தைக் கடந்து வரும் புன்னைகயும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும், உயிர்த்த இயேசுவின் வெற்றியின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. 

           இயேசுவின் அற்புதங்களும் அடையாளங்களும் அவருடைய மகிமை நிறைந்த வாழ்வைக் கண்முன் கொண்டதாகவே இருந்தன. எனவே  உயிர்ப்பு என்பது எளிதாக அமைந்து விடவில்லை. மனித நிலையில் துன்பம் நிறைந்தாக தோன்றினாலும் , இறை விருப்பத்தோடு இணைந்து  சென்றதால் மகிமைக்கு இட்டுச் செல்வதாக இருந்தது.

                 நமது புரிதலும் இறையனுபவமும் வளர வளர,  துன்பங்கள் நமக்குப் பாரமாக அமைவதில்லை. இன்றைய புரிதலுடன் நேற்றைப் பிரச்சினையைப் பார்க்கும் போது,  அவை பிரச்சனைகளே அல்ல என்பது புரிகிறது. உண்மைதான் . இயேசுவின் மகிமையான இறைநிலைக்கு  முன் சிலுவைத் துன்பமும் , உயிரிழப்பும் வலிகளைக் கடந்து, பிறந்த குழந்தையின் வசந்தப் புன்கையே. 

                     எனவேதான் பவுலடிகளார், நீங்கள் கிறிஸ்துவோடு  உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் (கொலோ 3:1) என்கிறார். நம்பிக்கை இருளான நிலையிலும் , நம்முயற்சிகள் தொடர்ந்தால் உயிர்ப்பின் வெற்றி நிச்சயமே.

          உயிர்த்த யேசு நமது இல்லங்களில் வாழட்டும். உயிர்ப்பின் மகிமை  நமது உள்ளங்களில் ஒளிரட்டும் பேறுபெற்ற நாளாக நமது வாழ்நாட்கள் மாறட்டும்.

புனித வெள்ளி

 புனித வெள்ளி
  எசா 52 : 13 - 53:12;     எபி 4:14-18; 5:7-8;      யோவா 18: 1 -19 :42


                         துன்பங்கள் பயத்தைத் தரும்.  அது ஒருவரை நிலை குலையச் செய்யும் . ஆனால் இயேசு துணிவுடன் தன் துன்பங்களை சந்திக்கிறார். அவருக்கு கொடுமை செய்பவர்கள்தான் நிலை  குலைந்து போகின்றனர். ஷேக்ஸ்பியர் கூறுவார் . “எல்லா நற்பண்புகளின் மறுபெயர் துணிவு”  என்கின்றார். (Virtue is bold).  

முர்ரே  என்பவர், “துணிவுக்கு ஞானம்  உண்டு , வல்லமை உண்டு.  அது ஒரு மாந்திரிகம்  (Magic) ”  என்பார்.  பவுல் அடிகளார் , “தூய ஆவி அருளிய திருப்பணி மாட்சியுடையதாய் இருந்தது என்றும் , அதனால், நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்” என்கிறார் (2கொரி 3:12).  

யோவான்,  இயேசுவின் பாடுகளுக்கு முன்பாக மற்ற ஒத்தமைப்பு நற்செய்திகளில் காணப்படும்  கெஸ்தமணி தோட்ட நிகழ்ச்சியை முன் வைக்கவில்லை. இயேசு பிடிபடும் போது ,  “ தானே முன்சென்று  யாரைத் தேடுகிறீர்கள் ” என்று கேட்டு , “ நான்தான்” , என்று தன்னையே தருகிறார். தலைமை குரு இயேசுவின் பணியைப் பற்றி கேட்கும் போது ,   “ ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.  

நான் பேசியதை கேட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்”  என்று துணிவாகக் கூறுகிறார் (யோவா 18 : 19-20).  “தலைமை குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்”  என்று அறைந்தவனிடம்,   “சரியாக பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” (யோவா 18: 23)  என்று கேட்கிறார். பிலாத்து , இயேசுவை சிலுவையில் அறைய தனக்கு   அதிகாரம் உண்டு என்று கூறிய போது , மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது என்று துணிந்து பதில் கூறுகிறார் (யோ 19:11)   லூக்கா நற்செய்தியில் சிரேன் ஊரைச் சேர்ந்த , சிமியோனை இயேசுவின் சிலுவையைச் சுமக்கச்  செய்யும் செய்தியைப் பார்க்கிறோம்  (லூக் 23: 25 ‡ 26) . ஆனால் யோவான் ,  “இயேசு சிலுவையை தாமே சுமந்து கொண்டு,  மண்டை ஓடு  என்னுமிடத்தற்குச்  சென்றார்”  என்கிறார் (யோவா 19 : 17). 

ஒத்தமைப்பு நற்செய்திகளில் ,  இயேசு சிலுவையில் ,  “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” (மாற் 15 : 34;  மத் 27 : 46) என்று இயேசு கூறுகின்ற வார்த்தைகளைத் தருக்கின்றனர்.  ஆனால் யோவான் “தாகமாய் இருக்கிறது” என்று இயேசு கூறியது, மறைநூல் நிறைவேற என்றும் ,   “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி “ஆவியை கையளித்தார்” என்றும் விளக்குகிறார்  (யோவா 19: 28 ‡30). இவ்வாறு இயேசு தன்னையே துணிவுடன் பாடுகளுக்குக் கையளித்ததால் நீரும் = தூய ஆவி  (யோவா 7 : 37 ‡ 39)  இரத்தமும் = தியாகமும்  (1 யோவா 5; 6 -7 : 1:7) வெளிப்பட்டன. 
                                       
துன்பங்கள்  வாழ்வின் நியதி. அதனைக் கண்டு பயந்து ஒதுங்க தேவையில்லை.  

துன்பம்  தருவது பயம்.  பயம் தருவது தோல்வி .  ஆனால் துணிவுத்  தருவது வெற்றி.  

மேக்கில் என்பவர், “துன்பங்கள்,  வாழ்வின் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர் ”  என்கிறார். 

ரூமி என்பவர்  “காயங்கள் வழியாகத்தான் வாழ்வின்  ஒளி உன்னில் நுழைகிறது” என்கிறார்.  

நாம் தாங்கும் துன்பங்கள்  நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும்  பெரும் பலன்களைத் தருகிறது.  

ஓர் ஆசிரியர்,  அவர்க்கு  கைநிறைய சம்பளம், வாழ்க்கை நன்கு ஓடியது. மற்றவர்களுக்கும் தாராளமாக உதவி செய்வார். அவரின் தங்கைக்கு   திருமணமாகவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு  உதவி செய்கிறேன் என்று லட்சக்கணக்கில் கடன் வாங்கி விட்டாள்.  அவள் ஒருமன பேதகம் போல செய்து விட்டாள் ,  இப்போது அப்பெண்ணின்  அண்ணன்  தங்கையின்  சுமையைத்  தாங்கி கொண்டு , தங்கைக்காகத்  துன்பங்களை தாங்குகிறார். அப்பெண்ணிற்கு வியாதிவந்து சாகும் நிலையில் தன் அண்ணனின்  கைகளைப்  பிடித்துக் கொண்டு ,  “எனக்கு வாழ்வு கொடுத்ததற்கு நன்றி அண்ணா”  என்று  சொல்லி  இறந்தாள்.

Sunday, 2 April 2017

குருத்து ஞாயிறு 9 - 4 -2017

குருத்து ஞாயிறு 

        9 - 4 -2017                                                                                             

 அருள்பணி.சிரில் ரிச்சர்ட் கிருபாகரன்

 எசா 50 : 4 -7;    பிலி 2: 6 -11     மத் 26:14 - 27
   
தவக்காலத்தின் இறுதியில் வரும் இஞ்ஞாயிறு, இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் உயிர்ப்புக்கு முன்னதாக இயேசு எருசலேம் நகரத்தில் நுழையும் நிகழ்வை முன்வைக்கிறது. உயரிய அந்தஸ்தை கொண்ட  (அல்லது)  உயரிய அதிகாரத்தை,  பதவியை பெற்ற ஒருவருக்கு  குருத்தோலைகளை விரித்து வரவேற்பு அளிப்பார்கள். ஆனால் இயேசுவை அவரை பின்பற்றியவர்கள் ஏன் இத்தகையை உயரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இஞ்ஞாயிறு  பாடுகளின் ஞாயிறு  என்றும் அழைக்கப்படுகிறது. அதனால்தான் மத்தேயு நற்செய்தியிலிருந்து  இயேசுவின் பாடுகள்  இன்று வாசிக்கப்படுகின்றன. 

குருத்தோலை: 

                குருத்தோலை  ஏந்தும் பவனியானது  ஒரு குறிப்பிட்ட சிறப்பான வெற்றியை கொண்டாடுவதன் வெளிப்பாடு ஆகும்.                    வெற்றியை ஆர்ப்பரிக்கும் விதமாக குருத்தோலை  ஏந்தி அசைத்து கொண்டாடுவது  கிரேக்க ரோமானிய காலகட்டத்தின் பாரம்பரியம்  ஆகும். இயேசு ஒரு குறிக்கப்பட்ட மனிதனாக,  பகிரங்கமாக ஜெருசலேம் நகரத்தில் நுழையும் இந்த நாள், மக்களுக்கு சுதந்தர உணர்வை மேலும் அதிகப்படுத்தியது. மக்களின் நுகங்களை அகற்ற ஒரு அரசன் தங்களுக்கு கிடைத்துவிட்டார் என்கின்ற  உணர்வே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. அவர்கள்   உரைத்த  “ஓசான்னா ”, “ காப்பாற்று ”, “உதவு”  என்கின்ற கருத்துகளை வெளிப்படுத்தும்  எபிரேய வார்த்தையின் விளக்கமாக இருந்தது. ஆக,  இயேசு அவர்களின் சுமைகளை  போக்க வாக்களிக்கப்பட்ட மெசியா  (அல்லது) அரசராக உயர்த்தப்பட்Vர்.


கழுதை : 

          ஒரு கழுதையின் மீது சுமர்ந்து  ஊர்வலம் வந்தது , இந்நிகழ்வின் சாரத்தை திசை திருப்புகிறது. அரசர் என்பவர் குதிரையின் மீது வருவார். இவ்வாறு குதிரையில் வரும் போது  அது  போரின்  அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் கழுதை என்பது அமைதியைக் குறிக்கும்  அறிகுறியாக மாறியது. அது செக்கரியா 9:9வின் வார்த்தைகளை நினைவூட்டும் நிகழ்வை குறித்து காட்டுகிறது. “சீயோன் மகளே! உனது அரசர், கோவேறு  கழுதையின் மீது அமர்ந்து  வருகிறார்”என்கிற வார்த்தைகள், அமைதியை வழங்கும்  அரசர், மக்களை காப்பாற்ற வருகிறார்,  அவரின் வருகை அரசியல் ரீதியான சுதந்திரத்தை நிரந்தரமாக கொடுக்க வந்தார்  என்பதையே  உணர்த்தியது.

மக்கள் கூட்டம் : 

     மூன்று வகையான கூட்டம் இயேசுவை வரவேற்றது. 1.ஜெருசலேம் நகரில் பாஸ்கா திருவிழா சிறப்பிக்க வந்த யூதர்கள். 2. யூதர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட, ஜெருசலேமிற்கு வெளியில் தங்கிய யூதர்கள் ( Diasphora).  3. புறவினத்தார். ஆக இயேசு அனைவருக்காகவும் வந்தார் என்பதையும் , தன்னுடைய  மீட்பு  இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்பதையும் தெளிவுப் படுத்தவே மூவரின் வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.  இயேசுவை பற்றிய  மக்களின் புரிதல்,  இயேசுவின் இலக்கில் மாற்றம் கொண்டு வரவில்லை. மாறாக தன்னுடைய நோக்கத்தில், இறைதிட்டத்தை நிறைவேற்ற மக்களின் ஆர்ப்பரிப்போடு சாவின் மீது இயேசு வெற்றிவாகை சூட சென்ற நிகழ்வாகவே குருத்து ஞாயிறு இன்றும் நினைவு கூறப்படுகின்றது . 

                மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் பாடுகள் பகுதியில் சில தனிப்பட்ட கருத்துகளைப் பார்க்கிறோம். இயேசுவை கைது செய்த போது  பேதுரு,  தலைமைக் குருவின் ஊழியரை   தாக்கி, அவரின் காதை துண்டித்தபோது , இயேசு, “உன் வாளை அதன் உறையில் போடு . ஏனெனில் வாளை எடுப்போர் வாளால் அழிந்து  போவார்” (மத் 26 : 52) என்ற குறிப்பை மத்தேயு மட்டும்  தருகிறார். யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டதும் , பிலாத்துவின் விசாரணையின் போது , பிலாத்து கை கழுவுதல், யூதர் , இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் , எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் என்று கத்துதல் (மத் 27:25), பிலாத்துவின் மனைவி கனவு கண்டு, பிலாத்துவை  எச்சரித்தல் (மத் 27:19) ஆகியவை மத்தேயு நற்செய்தியில் மட்டும் கூறப்படுகின்றன. மத்தேயுவின் , இயேசுவின் பாடுகளின் தொகுப்பில் , இயேசு மெசியா என்ற கருத்தை வலியுறுத்தப்படுகிறது (மத் 26 : 68 ; 27: 14 -22). இரண்டாவது, இயேசுவின் இறப்பில்  யூதர் தலைவர்களின் பொறுப்பு  நன்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாடுகளின் நடுவில் இயேசுவின் பொறுமை, சீடர்களின் முன் மாதிரிகை ஆகியவை முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய மகத்துவமிக்க குருத்து நாளை சிறப்பிக்கும்  நாமும் பொருளுணர்ந்தவர்களாய்  இயேசுவின் எருசலேம் பயணத்தில் அவரை ஆரவாரத்தோடு வரவேற்று இறைதிட்டம் நிறைவேற துணை நிற்போம். 

Ads Inside Post