Pages - Menu

Tuesday, 15 March 2016

தவக்காலம் 5ஆம் ஞாயிறு, குருத்து ஞாயிறு , ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா

தவக்காலம் 5ஆம் ஞாயிறு                               13 - 3 - 2016
எசா 43 : 16 - 21
பிலிப் 3 : 8 - 14
யோவான் 8 : 12 - 20
அந்தக் கிராமத்தில் பள்ளி ஆசிரியை சுதாவை அக்கிராமத்துப் பெண்மணி ஒருவர் திட்டித் தீர்ததுக் கொண்டு இருந்தார். காரணம் அவளது மகன் சுப்புவை, இந்த ஆசிரியை அடித்து விட்டாராம். கொண்டு இருந்தார். காரணம் அவளது மகன் சுப்புவை, இந்த ஆசிரியை அடித்து விட்டாராம். காரணம், சுப்பு அரிச்சுவடி எழுத்துக்களை கோழி சீக்சாப் போல சிலேட்;டில் கிறுக்கியிருந்தான். சுதா ஆசிரியை அவனை கோபத்தில் ஒரு தட்டுத்தட்டி விட்டார். இது அம்மாவுக்கு எட்ட, அந்த அம்மா குய்யோ, முறையோ என்று அழுதுக்கொண்டு பள்ளிக்குச் சென்று சுதாவை வாய்க்கு வந்தபடி வாங்கி எடுத்தாள். சுதா ஆசிரியை பொறுமையாக விளக்கம் தந்தாள். இங்க பாருங்கம்மா, உங்க பிள்ளை எழுதின எழுத்தை கோழி கூட நல்லா சீச்சிருக்கும் என்று சொல்லி சிலேட்டைக் காட்டினாள். தாய் அதனைப் பார்த்து என் புள்ள நல்லாதான் எழுதியிருக்கு. இதைவிட எப்படி நல்லா எழுதறதாம் என்று ஒரு போடு போட்டாள். சுதா ஆசிரியை சுதாரிக்துக் கொண்டு ஏம்மா, உங்களுககு எழுதப் படிக்கத் தெரியுமா? என்று வினவ, இந்தத் தாய் எனக்கு எழுதப்படிக்கத் தெரியாதுதான். ஆனால் என் புள்ள நல்லா எழுதும் என எனக்குத் தெரியும் என்றாள்.

இன்றைய நற்செய்தியில் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவின் முன் நிறுத்தி அவளுக்கு மோசே சட்டப்படி கல் எறிந்து கொல்ல இயேசுவின் தீர்ப்பைக் கேட்டனர். இயேசு மேல் கொண்டிருந்த மரியாதை நிமித்தமாக அல்ல ; இயேசுலை சிக்க வைக்க இந்த நிகழ்வு நடந்தது. இயேசு குனிந்து தலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதினார்? சிலர் சொல்வர், அவர்களின் பாவங்களை எழுதினார். தங்கள் பாவங்களைப் படித்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞரும் ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர் என்று. பிறரின் பாவங்களை பொ/துவில் அறிக்கை செய்வது ஒரு பாவமாகும். எனவே இயேசு அவர்களின் பாவங்களை தரையில் எழுதவில்லை. கதையில் சிறுவன் சிலேட்டில் கிறுக்கியிருந்ததைப் போல, இயேசுவும் தரையில் கிறுக்கினார். கிறுக்கினார் என்றால் அதற்குப் பொருள் இல்லை. ஆனால் பார்த்தவர்கள் அதில் பொருளைக் கண்டு கொண்டார்கள். எப்படி?

இயேசு தீர்பிட்டிருக்க முடியும். அவரும் தீர்ப்பிடவில்லை. ஏனெனில் இது அவரது இரக்கம். இறைவன் நம்மீது இரக்கம் பொழிகிறார் என்றால் நாம் மீண்டும், மீண்டும் பாவம் செய்யலாம் என்பதற்காக அல்ல.
இயேசுவே என் ஒப்பற்ற செல்வம். அவரை அடைவதற்கு அனைத்தையும் இழந்துவிட்டேன். இயேசுவோடு உலக செல்வத்தை ஒப்பிடும்போது ‡ உலக செல்வங்கள் குப்பை என பவுலடியார் 2ஆம் வாசகத்தில் முழங்குகிறார்.பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுதான் வாழ்வுக்கு வளமான வழி என்பதை நற்செய்தியிலிருந்து புரிந்துக் கொண்டோம். முதல் வாசகத்திலும் எசாயா இறைவாக்கினர் இந்த மீட்பைத் தான் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீள இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாக ‡ நிரந்தர வாழ்வாக ஒளிவீசம் எனப் போதித்தார். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வதே புதிய வாழ்வாகும் எனவும் முழங்கினார்.

நல்வவர்கள் எவரும் பிறரைத் தீர்பிபட மாட்டார்கள். நாம் நல்லவர்கள் என்றால் பிறரின் குறைகளைப், பாவங்களைப் பட்டியலிடாமல் நம் குறைகளைத் தவிர்த்து முன்னேறிச் செல்வோம்.


                      குருத்து ஞாயிறு                            20 - 3 - 2016
எசா 50 : 4 - 7
பிலிப் 2 : 6 - 11
மத் 26 : 14 - 27 : 66
இந்த ஞாயிறு நாளை பாடுகளின் ஞாயிறு = குருத்தோலை ஞாயிறு என்றும், மேலும் பாடுகளின் ஞாயிறு என்றும் திருச்சபை அழைக்கிறது. இயேசு எருசலேம் நோக்கி இறுதியாகச் சென்றபோது ‡ இது ஒரு வித்தியாசமான வேறுபட்ட பயணம் ‡ வழியில் மக்கள் தங்கள் உடைகளை வழியில் விரித்தனர். வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியில் மேலுடைகளையும், வேறுசிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளைகளையும் வழியில் பரப்பினர் என்று மாற்கு (11 : 8) வும் குறிப்பிடுகிறார்.

பாடுகளின் ஞாயிறு ‡ இந்நாளில்தான் எருசலேமுக்கு அவர் எளிமையின், அமைதியின் அரசராக வரவேற்கப்பட்ட போதிலும் இந்நாள் அவருக்கு பாடுகளைத் தொடங்கி வைத்தது. எனவே இது இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.
அந்தப் படகு கடலில் மூழ்கியத. பயணி ஒருவர் கரையில் ஒருங்கினார். அந்தக் கரை ஒரு தீவு. அந்தத் தீவின் மக்கள் அவரை அழைத்துச் சென்று தம் நாட்டின் அரசராக அபிஷேகம் செய்தனர். தாரை, தம்பட்டம், ஆட்டம், கொண்டாட்டம், மேள தாளம் இவற்றையும் பார்த்து இந்த அரசர் அசந்து போனார். ஆச்சரியப்பட்டார். ஒரு வேளையில் பயந்தும் போனார். ஏன் இவ்வாறு செய்தார்கள் என பதறியும் போனார்.

அத்தீவு நாட்டின் சட்டம் இதுதான். ஓர் ஆண்டுக்கு அந்த அரசருக்கு மக்கள் எல்லா வகையிலும் கீV;ப்படிவர்; ஆனால் ஓர் ஆண்டு முடிந்தவுடன் அரசர் தம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வறட்சியான தீவு ஒன்றுக்கு நாடு கடத்தப்படுவார். அங்கே அவர் வறுமையை அனுபவிக்க வேண்டும்.
இந்தப் புதிய அரசர் எடுத்த எடுப்பிலேயே அந்த வறட்சியான நாட்டைத் தெரிந்து கொண்டார். அங்கே தனக்கும், பிற குடிமக்களுக்கும் நல்ல வீடுகளைக் கட்டினார். வசதிகளைப் பெருக்கிக் கொண்டார். ஓர் ஆண்டு முடிந்ததும் அங்கே நாடு கடத்தப்பட்டார். அங்கே அவர் நிம்மதியாக, மகிழ்வாக வாழ்ந்தார்.

இயேசு ஆண்டவரும் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார். இங்கே அவருக்கு வரவேறபம், புறக்கணிப்பும் காத்திருந்தன. தன் பாடுகளாலும், உயிர்ப்பாலும் ஒரு புதிய உலகை உருவாக்கினார். தனக்கு மட்டுமல்ல. தன் சீடர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய உலகை துவக்கி வைத்தார்.

இயேசு எருசலேம் நகர் சென்றது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னைப் பலியாக்க, தரணியை மீட்க, அவருடைய பாடுகளும், உயிர்ப்பும் நமக்கு நல்ல பாடங்கள். பாடுகளைப் புறந்தள்ளி பரலோக அரசை அடைவது கடினம். எசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் இந்தக் கற்றலைப் பெரிதுப்படுத்தினார். ஆண்டவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார் (எசா 50 : 4). இவ்வுலகின் பாடுகள் விண்ணக வீட்டின் விலாசங்கள் என்றால் மிகையாகாது. 2ஆம் வாசகத்தில் பவுலடியார் மிக அருமையாக இயேசுவின் சாவின் தன்மையை விளக்குகிறார். இயேசு தன்னையே வெறுமையாக்கிக் கொண்டார். இதை கிரேக்க மொழியில் கெனோசிஸ் என்ற வார்த்தையில் இயேசுவின் முழு இழப்பை, வெறுமைத்தன்மையை விளக்குகிறது. எந்த அளவுக்கு அவர் தன்னையேத் தாழ்த்திக் கொண்டாரோ ‡ அந்த அளவுக்கு ஆண்டவர் அவரை உயர்த்தினார். தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப் பெறுவான் என்று உரைக்கவில்லையா? இவ்வுலகில் நமக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும் ஏற்று இறைவனைப் பற்றி வாழ்கிற போது விண்ணும் நம் தாய் வீடாக மாறுகிறது.

                       ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா                      27 - 3 - 2016
தி ப. 10 : 34 அ, 37 - 43
கொலோ 3 : 1 - 4
யோவான் 20 : 1 - 9
அந்தப் பாபு ஓர் இளம்பிஞ்சு. தாத்தாவின் கரங்களில் தவழ்ந்தவன். தாத்தாவின் முதுகிலே ஏறி சவாரி செய்தவன். அவர் தோள்பட்டடையில் உட்கார்ந்து விண்ணை நோட்டமிட்டவன். அப்படிப்பட்ட தாத்தா பாவம் ஒருநாள். தடுமாறி விழுந்தவர் எழுவே இல்லை. இவ்வுலகை நீத்மு இறைப்பதம் தாத்தா பாவம் ஒருநாள். தடுமாறி விழுந்தவர் எழுவே இல்லை. இவ்வுலகை நீத்மு இறைப்பதம் சேர்ந்தார். பாபு தேம்பி, தேம்பி அழுதான். துக்க நிகழ்ச்சிகள் முடிந்தன. தாத்தாவை கல்லறையில் இறக்கி மண்ணால் மூடினர்.

ஒரு வாரத்திற்குப் பிறகு பங்கில் பாஸ்கா விழா நிகழ்ந்தது. இயேசு மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாள் பிரகாசமாக, வெடிகள் அதிர, பூமி குலுங்க, இருள்விலக, ஒளிமழையில் ஆண்டவர் இயேசு உயிர்த்தார். இந்தக் காட்சி தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. இயேசு உயிர்த்த காட்சி பாபுவின் மனதில் பசுமரத்தாணிபோலப் பதிந்தது. அதோடு பங்குத்தந்தையும் இயேசுவைப் போல நாமும் இறந்தபின் உயிர்ப்போம் என்று உரக்கச் சொன்னார். இந்த வார்த்தைகள் பாபுவின் இதயத்தை ஊடுருவியது. இயேசுவின் உயிர்ப்பைப் பார்த்த பாபுவின் மனதில் ஒரு ஏக்கம் உதித்தது. தன் அம்மாவைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட்டு கேட்டான், அம்மா, இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தார் தானே. நம்ம தாத்தா மூன்றாம் நாள் நம்ம வீட்டுக்கு வந்துடுவாரா? ஆம், வருவாரப்பா என்று தாய் சொல்ல இருவரும் தாத்தா உயிர்த்து வருவார் என்ற நம்பிக்கையில் வீடு நோக்கி நடந்தனர்.

ஆம், நாமும் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையில் விண்ணக வீடு நோக்கி, நகர்ந்து கொண்டிருக்கிறோம்.. ஏனெனில் இயேசுவின் உயிர்ப்பு நம் உயிர்ப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. இயேசுவின் உயிர்ப்பு நம் உயிர்ப்புக்கு ஒரு நம்பிக்கை. இயேசுவின் உயிர்ப்பு நம் உயிர்ப்புக்கு ஒரு முன்னோட்டம். இயேசு தான் உயிர்ப்பேன் என்பதை தெளிவுபடுத்த நற்செய்தியில் நயீன் ஊர்க்கைம்பெண் மகனை உயிர்ப்பித்தார் (லூக் 7 : 14). தொழுகைக்கூடத் தலைவரங் யாயீர் என்பவரின் மகளை உயிர்ப்பித்தார் (லூக் 8 : 54). மரியா, மார்த்தாள் இவர்களின் சகோதரன் லாசரை உயிர்ப்பித்தார் (யோவான் 11 : 44).

நாமும் உயிர்ப்போம் என்பதைத் தெளிவுப்படுத்த அவர்தாமே உயிர்த்தார் (மாற்கு 20 : 6). இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகள் 1.. அவருடைய வார்த்தைகளே. நான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என நற்செய்தியில் மும்முறை முழங்கியிருக்கிறார் (மத் 16 : 20, 17 ‡ 22, 20 ‡ 17). 2. காலியான கல்லறை : இயேசு பிறந்தபோது மரியா இயேசுவை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினாள். இயேசு இறந்தபோதும் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டார். அந்தத் துணிகள்தான் இயேசுவிக் உயிர்ப்புக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. மூன்றாம் நாள் கல்லறையில் இயேசு இல்லை. அந்தத் துணிகள்தான் இருந்தன. 3. வானதூதர்கள் : இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என வானதூதர்கள் ஆர்ப்பரித்தனர் (மாற்கு 16 : 7). 4. சீடர்கள் : திருத்தூதர்கள் உயிர்த்த இயேசுவை பலமுறைக் கண்டு, பயணப்பாதையில, கடற்கரையில், செபக் கூடத்தில் இப்படி பல இடங்களில் உயிர்த்த இயேசுவைக் கண்டு உலகுக்கு ஓங்கி ஒலித்தனர். சீடர்கள் என்று சொல்லும்போது பெண்களுக்கும் காட்சி கொடுத்துள்ளார் (மத் 28 : 5, மாற்கு 16 : 9 , 12 ; லூக் 24 : 33).

இயேசுவின் உயிர்ப்பிலே நாம் பங்குப் பெற்றோம் என்றால் மேலுலகத்தைச் சார்ந்தவற்றை நாடுங்கள் என 2ஆம் வாசகத்தில் பவுலடியார் குறிப்பிடுகிறார். முதல் வாசகத்தில் பவுலடியாரும்  இயேசுவின் உயிர்ப்புக்கு ஒரு சாட்சி. புற இனத்தாருக்கு இயேசுவின் உயிர்ப்பை சுமந்து சென்றவர் பவுலடியார் :

இயேசு உயிர்த்தார் என அகமகிழ்வோம்
இயேசுவில் நாமும் உயிர்ப்போம் என ஆர்ப்பரிப்போம்
உயிர்ப்பின் மக்களாக விண்ணுலகை நாடுபவர்களாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post