திருத்தந்தை பக்கம்
அருட்தந்தை. அ. பிரான்சிஸ், பாபநாசம்
1. இதயக் கதவுகள் திறக்கப்படட்டும் :
10 - 02 - 2016 திருநீற்றுப் புதன் அன்று தவக்காலத் தொடக்க வழிபாட்டினை திருநீறு பூசி திருத்தந்தை வழிநடத்தினார். புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு வேளையில் உலகெங்கும் இருந்து 1000 குருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறை இரக்கத்தின் தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். தமது மறையுரையில் இதயக் கதவுகள் இறைவனை நோக்கி திறக்கப்படட்டும். கீழ்க்காணும் நான்கு காரணிகள் இதற்குத் தடையாக உள்ளன.
அ. நமது தவறுகளைச் சிறிதென எண்ணுதல் அல்லது தவறுகளை நியாயப்படுத்துதல். மற்றவர்களை விட நான் ஒன்றும் பெரும் பாவியல்ல என்ற மனநிலை.
ஆ. இதயத்தின் இரகசியக் கதவைத் திறந்து பாவ நிலையிலிருந்து எழும்பிட வெட்கப்படுதல்.
இ. நமது தவறுகளிலேயே உழன்று கொண்டு தெய்வ பயம் குறைதல்.
ஈ. இதன் மூலம் ஆன்மாவின் இருள் அடர்ந்த பகுதிகளிலேயே மூழ்கிக் கிடத்தல்.
இவற்றினை அகற்றி இத்தவக்காலத்தில் நமது இதயக் கதவுகளை இறைவனுக்காய் திறந்து வைப்போம்.
2. உரோமை நகரின் யூதச் செபக்கூடத்தில் திருந்தந்தை :
திருத்தந்தை புனித பவுல் யோவான் யூதர்களை நமது மூத்த சகோதரர்கள் என்றழைத்தார். இந்தச் சிந்தனையின் அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிஸ் ஜனவரி 17 அன்று உரோம் நகரில் உள்ள யூதர்களின் செபக்கூடத்திற்குச் சென்று செப வழிபாட்டில் பங்கேற்றார். திருத்தந்தையர்கள் யோவான் பவுல், 16 ஆம் பெனடிக்ட் ஆகியோருக்குப் பின் இந்தச் செபக்கூடத்திற்கு வருகை புரிந்த மூன்றாவது திருத்தந்தை இவரே. இவ்வேளையில் இறையியல் பின்னணியில் உற்று நோக்கும் போது கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட முடியாத ஒருமைப்பாடு உண்டு. யூத வேரோட்டமின்றி கிறிஸ்தவம் கிடையாது. கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையின் வழியாக இஸ்ராயேல் மக்கள் மீது இறைவன் கொண்டிருந்த உடன்படிக்கை ஒரு தொடர்பயணம். இப்பயணத்தினையே திருச்சபை தொடர்கின்றது என்று கூறினார்.
மேலும் இன்றைய உலகு சுற்றுச் சூழல், அமைதி மற்றும் உயிர் பாதுகாப்பு ஆகிய மூன்று சவால்களைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. 16 ‡ 10 ‡1943 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், ஆகியோர், யூதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உரோமையினின்று வெளியேற்றப்பட்டனர். அது மட்டுமின்றி மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த அறுபது லட்சம் யூதமக்களின் துன்பங்கள் மற்றும் இவர்களின் கண்ணீர் மறக்கப்பட முடியாதே என்றுரைத்தார்.
3. கிறிஸ்தவ சமய புரட்சியின் 500 ஆவது ஆண்டு விழாவில் திருத்தந்தை பங்கேற்க உள்ளார் :
1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் மார்ட்டின் லூத்தர் ஸ்வீடன் நாட்டின் லுண்ட் என்னும் நகரில் கிறிஸ்தவ சமயத்துக்கெதிரான 95 கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டார். இதன் ஐநூறாவது ஆண்டு விழா ஸ்வீடனில் கொண்டாடப்பட உள்ளது. உலக லூத்தரைன் கழகம் (ஸிற்மிஜுrழிஷ்ஐ நிலிrயிd ய்ஷ்derழிமிஷ்லிஐ) இங்குதான் உதயமானது. இதன் பொதுச் செயலாளர் மார்ட்டின் ஜீங்க் இந்நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகையில் முரண்பாடுகளினாலும், வன்முறையினாலும் சிதறுண்டு போயுள்ள உலகுக்கு, நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றின் கத்தோலிக்கர் மற்றும் லூத்தரைன்கள் மத்தியில் மலரும் ஒன்றிப்பின் மூலம் வழங்க முடியும் என்கின்றார்.
திருச்சபையின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகத் தலைவர் கர்தினால் குர்ட் கோச் என்பவரின் கூற்றுப்படி, கிறிஸ்துவ மைய அணுகுமுறையில் மரித்து உயிர்த்த இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினை ஆழப்படுத்தும் விதமாக இந்த விழா அமையும். மேலும் லூத்தர் சபையில் பிறந்து கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ந்து, தற்போது ஆயராகப் பணி புரியும் மேதகு ஆன்டர்ஸ் அப்போரெல்லியுஸ், நமது உலகியல் ஈடுபாட்டில் வாழும் மாந்தருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும் உயிருள்ள சாட்சிகளாக வாழ இந்த விழா அமையும் என்கின்றார்.
4. அருள்பணியாளர்களுக்கு ஒப்புரவு அருள்சாதனம் வழங்கிய திருத்தந்தை :
பிப்ரவரி 11 அன்று ஜான் லாத்தரன் பசிலிக்காவில் குழுமியிருந்த குருக்களோடு உரையாடினார். இவர்களுக்குக் கடவுளின் பெயர் இரக்கம் என்னும் புத்தகத்தை வழங்கினார். அதன் பின் அங்குள்ள சில குருக்களுக்கு பாவசங்கீர்த்தனம் கேட்டு பாவ மன்னிப்பினை அளித்தார்.
5. திருத்தந்தை மற்றும் ரஷ்ய ஆர்தடாக்ஸ் திருச்சபை தலைவர் சந்திப்பு :
மெக்சிகோ நாட்டிற்குச் செல்லும் வழியில் கியூபா நாட்டின் ஹவானா விமான நிலையத்தில் ரஷ்ய ஆர்தடாக்ஸ் தலைவர் மேன்மை தங்கிய கிரில் அவர்களை 12 ‡ 02 ‡ 2016 அன்று திருத்தந்தை சந்தித்தார். அவ்வேளையில் இருவரும் மனம் திறந்து பேசி வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு, அன்னை மரியா மற்றும் புனிதர்களின் வணக்கத்தில் ஒன்றிணைந்துள்ள நாம் நம்மிடம் உள்ள
கடந்த கால கசப்புகளை மறந்து கரம் கோர்த்து வாழ்வோம். மேலும் சிரியா, ஈராக் இன்னும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடைபெறும் அநீதியான கொலைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உலகெங்கும் வாழும் மக்களுக்கெதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற முறையில் சொல்லப்படும் கோடிக்கணக்கான மக்கள் கொலைகளுக்கெதிராக உலக சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கருத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை அமைந்துள்ளது.
மெக்சிகோவில் திருத்தந்தை :
பிப்ரவரி 12 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் தனது மேய்ப்புப்பணி பயணத்தினை மெக்சிகோ நாட்டில் மேற்கொண்டார்.பிப்ரவரி 16 அன்று மெக்சிகோவின் பொக்கிமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். இயேசுவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினையே நீங்கள் செல்வமெனக் கருத வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் தாம் அமைதியின் தூதுவராக வந்திருப்பதாகவும், இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் மது போன்றவற்றை விற்பவர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
குருக்கள் மற்றும் துறவியரைச் சந்தித்த போது, நீங்கள் இயேசுவின் ஊதியம் பெறும் வேலைக்காரர்கள் அல்ல, மாறாக நீங்கள் அவர்களின் பணியாளர்கள். எனவே மக்களின் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் ஊனப்படுத்தும் அநீதிக்கெதிராக உரிமைக்குரல் எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment