உயிர்ப்பில் மலரும் இறை இரக்கம்
அருள்தந்தை. அ. பிரான்சிஸ்,
பாபநாசம்.
உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சங்கமம் அவதே தமிழுக்கு அணங்கும், அழகுமாகும். உயிரோடிணைந்த உடலே வாழ்வுச் செயலாக்கம் பெறுகிறது. பாவ மாசகன்ற வாழ்வே ஆன்மாவினுக்கு அழகூட்டி மணம் கமழச் செய்கிறது. அகத்தூய்மை புறத்தூய்மை இரண்டுமே இறை இரக்க மனிதராக ஒருவரை மாற்றி இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்கச் செய்கிறது. தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் (லேவி 19 : 1). ஆண்டவரின் நியமங்கள் சரியானவை ; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை ; அவை கண்களை ஒளிர்விக்கின்றன (தி. பா. 19 : 8)
பாவத்தின் சம்பளம் மரணம். சாதலின் இன்னாத தில்லை (குறள் 230). அதாவது சாவை விடத் துன்பமானது எதுவும் இல்லை என்பதுவே வள்ளுவம் கூறும் வாழ்வியல் உண்மை. மரணமில்லாப் பெருவாழ்வினை நோக்கியே நாம் பயணிக்கிறோம். பாவத்தினின்றும், சாபத்தினின்றும், நோய், பிணியினின்றும் விடுவித்திட இயேசு பாவிகளையும், நோயாளர்களையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போரையும் தேடிச் சென்று உயிர்ப்பு வாழ்வு வாழச் செய்தார். பாவத்தினால் உருக்குலைந்த மனிதனை கிறிஸ்து தமது உயிர்ப்பினால் புத்துரு அளக்கின்றார். இயேசவின் உயிர்ப்பில் இணைந்து பங்கேற்றிட கீழ்க்காணும் கருத்துக்கள் செயலாக்கம் பெறட்டும்.
1. பாவ அறிக்கை :
பாவத்தை வெறுத்துப் பாவிகளை அரவணைப்பவர் இறைவன். பாவத்தில் உழலும் மனிதன் பிளவுபட்ட மனப்பான்மை கொண்டு தான் வாழும் சமூகத்தைச் சீரழிக்கின்றான். எனவே பாவ நிலை அகற்றிப் பாவப் பரிகாரம் மேற்கொள்ள இத்தவக்காலம் நம்மை அழைக்கின்றது.
2. ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கையிடுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் (யாக்கோபு 5 : 16). பாவம் பற்றிய உணர்வு மங்கிக் கொண்டே வந்து மருங்கிப் போன மனம் பெற்றவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இந்த மனநிலை மாறி நிறைந்திருக்கும். மூவொரு இறைவனின் அருள் பிரசன்னம் எனது ஆன்மாவில் ஊடுருவிப் பாய்ந்து தெய்வீக இரக்கக் கடலில் நான் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பேன். எனது ஒன்றுமில்லாமையில் இறை நெருக்கம் ஒன்றே போதும் என்று வாழ்கின்றேன்.
ஒப்புரவு அருள்சாதனம் :
1. இது இரக்கம்மிகு இறைவனின் கொடை தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னகிக்ப்படா (யோவான் 20 : 22, 23)
2. புனித மதர் தெரசா : தாழ்ச்சியின் செயலாக்கம் ஒப்புரவு அருள்சாதனம். இது பாவப் பரிகாரம் அல்ல. இதுவே அன்பின் அருள்சாதனம்.
3. மனதின் குப்பைகளை வெளியேற்று.
4. ஆன்மத் தூய்மை உலகோரையும் தூய்மையாக்கும்.
5. புனிதமிகு ஆன்மாவில் இறை இரக்கத்தின் அருள் அதிகமாகப் பொழியப்படுகிறது.
ஒப்புரவு, திருப்பலி, செபம் ஆகியவற்றில் அடிக்கடி பங்கேற்போர் கடந்த காலத் தவறுகளைக் களைந்தால், தற்காலப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பர். ஆண்டவர் இயேசுவுக்கும் அவர்தம் திருச்சபையினுக்கும் தம்மையே அர்ப்பணிப்பர்.
இயேசுவின் உயிர்ப்பு : ஓர் வரலாற்று நிகழ்வு.. காலம் கடந்த நிகழ்வு. இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாகத் திகழ்வது வெற்றுக் கல்லறை. இந்த வெற்றுக் கல்லறையும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று. வெறுமையில் கடவுளின் முழுமை வெளிப்படுகிறது. அழிவுக்குரிய உடல் அழிவுக்குட்படுத்தப்படாதவாறு உயிர்பெற்றெழுந்து இறைத்தன்மையின் நிறைவினை உலகுக்குணர்த்தியது. இந்த வெற்றுக் கல்லறையே. உயிரற்ற உடல்களைத் தாங்கும் ஒவ்வொரு கல்லறையும் உயிர்ப்புக் கட்டியதாகக் கூறுகிறது.
உயிர்ப்புச் செயல்பாடுகள் : கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது தோ ஒரு முடிந்து விட்ட செயல் அல்ல. கிறிஸ்துவோடு இந்த உயிர்ப்பு அடங்கிவிடக்கூடியதும் அல்ல. உயிர்ப்பு என்பது ஒரு தொடர் பயணம். இயேசுவின் உயிர்ப்பின் பண்புக் கூறுகள் பல உள்ளன. பாவத்ஙதை அறிக்கையிட்டுப் பாவப் பரிகாரம் மேற்கொண்டு ஆக்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுதல். ஒப்புரவின் தோவையினை உணர்ந்து அடிக்கடி பாவ அறிக்கை செய்து இறை ‡ மனித ஒப்புரவினைப் பலப்படுத்திக் கொள்ளுதல். அடிமையாக்கும் பாவச் சக்தியினின்றெழுந்து நற்செயல்கள் மூலம் புனித வாழ்வில் இணைந்திருக்க முயல்தல்.
எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்ப்பு வாழ்வினை வாழ்வாக்குதல் எப்படி? உயிர்ப்புச் செயல்பாடுதான் அவ்வப்போது செய்திகள் வழியாக நம்மை நோக்கி வந்து கொண்டுதானிருக்கின்றன. உடல் உறுப்பு தானமும் ஓர் உயிர்ப்புச் செயல்பாடே. மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு தேவைப்படுவோருக்கு வழங்குவது மிகவும் உன்னதமான உயிர்ப்புச் செயலாகும்.
பெங்களூரில் நடந்த உண்மையான உயிர்ப்புச் செய்தி :
ஹரீஷ் 24 வயது இளைஞர். பிப்ரவரி 16 அன்று தனது கிராமத்திலிருந்து பெங்களூரு நகரில் பைக்கில் பயணிக்கின்றார். எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி பைக் மீது மோதுகிறது. ஹரீ´ன் உடல் இரு துண்டுகளாகின்றது. தன் உயிர் பிரியும் நேரத்திலும் நான் சாவது திண்ணம். இதோ நல்ல நிலையில் உள்ள எனது இரு கண்களையும் எடுத்து தேவைப்படுவோருக்கு அளியுங்கள் என்று கூறி உயிர் துறக்கின்றார். அவரின் இரு கண்களும் நேத்ராலாயா மருத்துவ டாக்டர்களால் எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் உயிர்ப்பின் செயல் வடிவங்கள் தானே! எனவே அவர்தம் திருச்சபையினுக்கும் தம்மையே அர்ப்பணிப்பர்.

நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் உயிர்ப்பின் செயல் வடிவங்கள் தானே! எனவே நாமும் உயிர்ப்பினை வாழ்வாக்கும் செயல்களில் ஈடுபட்டு உழைப்போம்.
இறை அக்க அழகு உனது ஆன்மாவை அலங்கரிக்க வேண்டுமா? இதயத்தை மூடியிருக்கும் அழுக்கை அகற்று. புண்ணிய நற்பேறுகளால் உனது ஆன்மாவை நிரப்பு என்று நீசா நகர் புனித கிரகோரி கூறுகின்றார். உயிர்த்த ஆண்டவரின் இறை இரக்க அழகு நமது ஆன்மாவினுக்கு ழேகூட்டி உயிர்க்கின் மக்களாக வாழ வழிகாட்டட்டும்.
No comments:
Post a Comment