Pages - Menu

Sunday, 20 August 2017

தஞ்சை பெரியகோவிலில் கல்வெட்டுகளில் காணப்படும் ஆடல் அழகிகளின் பெயர்கள்

தஞ்சை பெரியகோவிலில் கல்வெட்டுகளில் காணப்படும் ஆடல் அழகிகளின் பெயர்கள் நாகசாமி என்ற தமிழ்நாடு தொல் பொருட்துறை இயக்குனர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

சேரமங்கை
எடுத்தபாதம்                                                                                
இன்னிளவஞ்சி                                                                            
சோழகுல சுந்தரி                                                                          
கயிலாயம்
தில்லை அழகி                                                                            
ஆடவல்லாள்
மதுர வாசகி                                                                                
இளங்கோயில்
மாதேவடிகள்                                                                              
அறிவாட்டி
இரவி குலமாணிக்கம்                                                                  
கல்லறை
மாதேவி                                                                                      
சோமநாதி
சீருடையாள்                                                                                          
ஆரா அமுது                                                                              
மழலை சிலம்பு                                                                          
திகைச் சுடர்                                                                                  
காமக்கோபு                                                                                
பொற்கேசி                                                                                  
ஆறாயிரம்                                                                                
தில்லைகூத்தி                                                                          
செம்பொன்    
கன்னரதேவி
சுந்தர சோழி  
இராமி
சற்ப தேவி  
ஊதாரி
அறநெறி  
குந்தவை
பொற்கேசி   
அருள்மொழி
                                                           
50 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் 600 க்கும் மேற்பட்ட ஊழியர் அங்கு பணி செய்துள்ளனர்.

ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு, அருட்பணி. மரிய அந்தோனி ஜேம்ஸ், குடந்தை

ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு
27-08-2017
  எசா 22:19-23;   உரோ 11: 33-36; மத் 16: 13-20

அருட்பணி. மரிய அந்தோனி ஜேம்ஸ், குடந்தை 


இன்றைய அருள் வாக்குகள் நமக்கு கொடுக்கும் செய்தி ‘அறிவின் செயல்பாடுகளை விட அனுபவங்களின் வெளிப்பாடே சிறந்தது’ என்பதாகும். நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு கூறுகிறார்.
“நான் யார்?”  என்ற கேள்விக்கு  எத்தனை ஆண்டுகள், யுகங்கள் ஆனாலும் தன்னையே முழுமையாக ஒருவர் அறிந்துள்ளார்  என்பது உறுதியாக கூற இயலாத ஒன்று.  தான் எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்துச் சென்று, இறையரசின் பணிகளை செய்து, அனைத்து தருணங்களிலும், தன் பணியை தொடர்ந்து ஆற்ற தன் சீடர்களை அழைத்த  இயேசு கேட்டது. “நான் யார்?”  என்று. (விப 3:14) ‘நாமே இருக்கிறவர்’ என்று எக்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பழைய ஏற்பாட்டிலே இஸ்ராயேல் மக்களுக்கு உணர்த்தப்பட்ட இறைவன், புதிய ஏற்பாட்டிலே. ‘நானே உலகின் ஒளி’ (யோவா 8:12), ‘நானே நல்ல ஆயன்’ (யோவா 10:11), ‘உயிர்ப்பும், உயிரும் நானே’ (யோவா 3:35), என்று இயேசு வெளிப்படுத்தினார், தன்னை முழுமையாக அறிந்திருந்த  இயேசு, தன் சீடர்களிடம் கேட்டது “நான் யார்?” என்று . ஆனால் இன்றைய கால உளவியல் தத்துவத்தின்படி, எந்தவொரு செயலிலும் தன்னை முதன்மைப்படுத்தாதவர்  மனநோய்   (ணூdeஐdஷ்மிதீ உrஷ்விஷ்வி) உள்ளவரோ என்று இயேசுவை நினைத்துப் பார்க்கவும், மற்றவர்களின்  விமர்சனங்களை கண்டு அஞ்சி, மனம்  வருந்துபவர் போன்று, மக்கள் என்னை யாரென்று கூறுகிறார்கள் என்று இயேசு கேட்டறிகிறார்.

 இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலானவர்:

மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் தங்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க ஒரு மெசியா வருவார் என்பது  (தானி 7: 13). வானத்தின் மேகங்களிலிருந்து மானிட மகன் வருவார் என்று எசாயாவும்  கூறினார். நம்பிக்கையிலும், (எசா42:53) மற்ற இறைவாக்கினர்களும் மெசியா வருகையைப் பற்றிக் கூறினார்.ஆனால், இயேசு இறைவாக்கினர்க் களியயல்லாம் மேலான இறைமகன் என்பதை உணர்த்தவே, இயேசு இக்கேள்விகளை எழுப்பினார் எனவும் விவிலிய அறிஞர்கள் கூறுவர். மக்கள் கூறுவதை அறிந்திருந்த  சீடர்கள் அறிவின் வெளிப்பாடுகள் அல்லாமல் நீங்கள் அனுபவபூர்வமாக  என்னை யாரென்று கூறுகிறீர்கள் என்று சீடர்களிடம் இயேசு கேட்டதற்கு, பேதுரு இயேசுவோடு தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாக “ நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்” என்று  அனுபவ அறிக்கையிடுகிறார்
.
 அனுபவங்களின் பிரதிபலிப்பே கடவுள்:

ஒரு இளைஞனுக்கு கடவுள் நல்லவரா? கெட்டவரா? என்று அறிவுப்பூர்வமாக அறிய ஆவல். ஒரு முனிவரை அணுகினான். முனிவர் அவனைப் பார்த்து, நீ  பார்க்கின்ற மனிதர்கள், விலங்குகள் அனைவரிடமும் இக்கேள்வியை கேட்டுப் பார் என்றார். முதலில் சந்தித்த பூனை என் பல் நல்லதா? கெட்டதா? என்று கூறினால், கடவுளைப் பற்றி கூறுவேன் என்றது. அவனுக்கு பதில்  கூற முடியவில்லை. ஆகவே, பூனை நீ சென்று என் குட்டியிடமும், எலியிடமும் இதே கேள்வியை கேட்டு வா என்றது, பூனைக்குட்டியை அவன்  அனுகியபோது, என் தாயின் பல் பஞ்சு போன்றது. காரணம் என்னை தூக்கி செல்கையில் வலி தெரியாது தூக்கிச் செல்லும் என்றது. எலியிடம் சென்று கேட்டபோது, பூனையின் பல் பசாசு போன்றது. என்னைக் கண்டால் குதறிவிடும் என்றது. ஆக, இதிலிருந்து அவன் தெரிந்து கொண்டது  கடவுள் நல்லவரா, கெட்டவரா என்பது அறிவினால் அன்று அனுபவங்களாலே அறிய இயலும் என்பது தான். 

        அதுபோன்று, இரண்டாம் வாசகத்தில் தூய பவுல்  ‘அனைத்தையும் அறிந்த, உலகம் உருவாகக் காரணமான. அறிவிற்கெல்லாம் ஊற்றாகிய இறைவன்’ , என்கிறார்.  இயேசு, பேதுருவிடம் கேட்டபோது அவரும் அனுபவ ரீதியாக பதில் கூறுகின்றார். காரணம், யாயிர் மகள் உயிர்பெற்றபோது (மாற் 5:37), இயேசுவின் உருமாற்றம் (மாற் 9:2), நிறைவுகாலப் பொழிவு (மத் 24: 1‡2), மற்றும் கெத்சமெனியில் இயேசு இரத்த  வியர்வை வியர்த்தல் (மாற் 14:33‡37) போன்ற முக்கிய நிகழ்வுகளிலெல்லாம் பேதுரு இயேசுவை அனுபவப்பூர்வமாக சந்தித்திருந்தார் . அந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாகத்தான், ‘நீர் மெசியா, என்றும் வாழும் கடவுளின் மகன்’  என்றும் எடுத்துரைக்கிறார். அந்த அனுபவத்தின் பரிசாக இயேசு, இந்த அனுபவப்  பாறை மீது தன் திருச்சபையை எழுப்பி, விண்ணகத்தின்  திறவுகோல் வழங்கி, திருச்சபையை வழிநடத்த பொறுப்பு தந்தார். இதனை முதல் வாசகப் பகுதி பிரதிபலிக்கிறது.   தூய பேதுருவை மாதிரிகையாய் முன்வைத்து, இவ்வாரத்தின் திருவழிபாடுகள் நமக்கு உணர்த்தும் செய்தி, உலகம் நம்மை என்ன தான் விமர்சனங்கள் செய்தாலும், நம்மை புரிந்து கொள்ளாவிட்டாலும், நான் யார் என்பதை அறிந்து, நான் கிறிஸ்துவை சார்ந்தவன், இயேசு என்னோடு இருக்கிறார் (நிஜுலி ணூ ழிது?  நிஜுலிவிe ழிது ணூ?)  நான் ஏதோ இந்த உலகத்தில் தவறுதலாகப் பிறந்து விடவில்லை, மாறாக இறைதிட்டத்தால் இயேசுவால் அறியப்பட்டு முன்குறிக்கப்பட்டு  இந்த உலகத்தில் பிறந்திருக்கிறேன் என்றும், இயேசுவை அனுபவித்து மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்கக் கூடியவர்களாய் வாழ அழைப்பு விடுக்கிறது. 

(2 சாமு 7:18)  இல் தாவீது அரசர், ஆண்டவரின் சந்நிதியில் அமர்ந்து, ஆண்டவரே உம்மால் நினைவுகூறப்படுவதற்கு நான் யார்? என்று ஆண்டவரின் அருளை நினைத்துப் போற்றுவது போல் , இயேசுவைப்பற்றிய நமது உண்மையான தனிப்பட்ட அனுபவ அறிவு யாதென கண்டுணர்ந்து, நாளும் நம்மைக் காத்து வரும் தேவனிடத்தில் நமது முழு நம்பிக்கையை வைத்து,  அவரைப் போற்றுவோம். இறை அனுபவம் பெற்று, இயேசுவின் ஆசிர்வாதங்களை நம் குடும்பங்களுக்கும் நம்மை சந்திப்பவர்களுக்கும் பெற்றுத் தருவோம்.

Friday, 18 August 2017

பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு

பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு
20 - 08 - 2017
 எசா 56:1.6-7;  உரோ 11:13-15.29‡32; மத் 15:21-28

அன்புக்கு  எல்லையில்லை

  மனிதர் ஒவ்வொருவர் உள்ளத்திலும், இறைவனைத் தேடும்  ஓர் ஒளி மினுக் மினுக்கென்று ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது. மனிதர் அனைவரும் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். எனவேதான் எளிய, இயலாத மனிதரைப் பார்த்து நமக்கு இரக்கம் உண்டாகிறது. அவர்களின் போராட்டத்தில் மற்றவர்களின் இதயங்களும் இணைகின்றன.

ஆனால் சில தீவிரவாத இயக்கங்கள் மனிதரை ஜாதி, மத அடிப்படையில் பிரித்துப்பார்த்து, ஒரு சிலரை வெறுக்கவும் அழிக்கவும் முற்படுகின்றன. இது இறைவனின் வழிகளுக்கு எதிரானவை. மாட்டு இறைச்சியை உண்டார்கள் என்ற சந்தேகத்தில், இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கிறிஸ்துவ ஆலயங்கள் அப்பட்டமாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு, கனானிய பெண்ணின் மன்றாட்டிற்கு இணங்கி அவளின் மகளை பேயின் பிடியிலிருந்து குணமாக்குகிறார். வேற்றினத்தார் பகுதிக்கு (தீர், சீதோன், பாலஸ்தீனத்தின் வடக்குப் பகுதி) இயேசு செல்கிறார். அங்கு, கனானிய பெண் ஒருவர் தன் மகள், பேயின் பிடியிலிருந்து விடுபட ‘ஐயா, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்’ என்று கத்துகிறார். இயேசு அவளைக் கவனிக்காது நடக்கிறார். அவள் கத்திக் கொண்டு வருவதால் சீடர்கள், அவளுக்கு உதவி செய்யும் (அனுப்பிவிடும்) என்கிறார்கள். இயேசு, காணமற் போன ஆடுகளாய் உள்ள இஸ்ரயேல் மக்களுக்காகவே அனுப்பப்பட்டேன் என்றும் பிள்ளைகளுக்குரிய உணவை நாய் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்றும் கூறுகிறார். அந்தபெண், இயேசு கூறிய உவமையையே திருப்பி அடிக்கிறார். உரிமையாளர் மேஜையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்குட்டிகள் தின்னுமே என்று இயேசு பதில் கூற முடியாமல் சொல்கிறார். இயேசு வியந்துபோய், ‘அம்மா உன் நம்பிக்கை பெரிது. நீ விரும்பியவாறே நிகழட்டும்’ என்கிறார். அந்நேரமே அவளின் மகளின் பிணி நீங்கியது என்று சொல்லப்பட்டுள்ளது.

முதல்வாசகத்தில் பிறஇனத்தவரும் ஆண்டவருக்குத் திருப்பணி செய்யவும், அவரது ஊழியராய் இருக்கவும், ஓய்வுநாளைக் கடைபிடித்து, உடன்படிக்கையைப் பற்றிக் கொள்ளவும் இறைவன் அவர்களை ஏற்றுக் கொள்வதாக எசாயா தெரிவிக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், பிற இனத்தார் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும், யூதர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள் என்றும், அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள் என்றும் விளக்குகிறார். ‘கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்ப பெற்றுக் கொள்வதில்லை’ என்று இறைவனின் பரந்த மனநிலையை விளக்குகிறார்.

இரண்டாம் வத்திகான் சங்கம், கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு என்ற ஆவணத்தில் (எண் ‡2) ‘கிறிஸ்தவமல்லாச் சமயங்களை பின்பற்றுபவர்களிடத்தில் காணப்படுகின்ற, அருள்நெறி சார்ந்த நலன்களையும் சமூக ‡ பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்’ என்று விளங்குகிறது. பொங்கல், தீபாவளி போன்ற பொதுவான விழாக்களை இப்போது கிறிஸ்தவர்களும்  மற்ற சமயத்தினருடன் இணைந்து கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியர்கள் அல்ல என்று தற்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வி­மத்தை உமிழ்ந்து வருகிறார்கள். ஆனால் நாம், மக்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களே என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். 1980 இல் ஒரு கிராமத்தில், ஓர் ஏரி வெட்டும் திட்டம், வேலைக்கு உணவு என்ற திட்டத்தில் ஒரு குருவானவர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அரசாங்கம், இத்திட்டம் சரியாக உத்தரவு வாங்கப்படாத திட்டம் என்று நிறுத்த கூறினார்கள். ஓர்  இந்து சகோதரர் தான் குருவானவரோடு இணைத்து நின்று, நீங்கள் செய்யுங்கள், நாங்கள் உங்களோடிருக்கிறோம் என்று ஆதரவு தந்தார். 

எல்லாரும்இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் 
வேறொன்றும் அறியேன் பராபரமே  - தாயுமானவர். 

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்
- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

18. நற்கருணை விளக்கம் (VI)

நற்கருணை வழிபாட்டின் முக்கியமான பகுதியாகிய நற்கருணை மன்றாட்டு பற்றிய விளக்கத்தை இதுவரைப் பார்த்தோம். இப்பொழுது  மூன்றாவதும் இறுதிபகுதியுமாகிய நற்கருணை பிடுதல், அதை உட்கொள்ளுதலுக்கு விளக்கம் காண்போம். 

 இ.திருவிருந்து சடங்கு

நற்கருணைக் கொண்டாட்டம் ஒருபலி மட்டுமல்ல; பாஸ்கா விருந்துமாகும். ஆண்டவரின் கட்டளைப்படி தக்கமுறையில் தங்களைத் தயாரித்த நம்பிக்கையாளர் அவருடைய உடலையும் இரத்ததையும் ஆன்ம உணவாகப் பெற்றுக் கொள்ளவது அவசியம் (GIRM 80).   இத்திருவிருந்து சடங்கில் மூன்று பகுதிகளைக் காணலாம்.  1. தயாரிப்பு     2. பகிர்தல்       3. இறுதி நன்றி கூறுதல்.

 1. திருவிருந்துக்குத் தயாரிப்பு

இங்கு ஒன்றிப்பு, அமைதி அன்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நற்கருணை உட்கொள்பவர்களிடம் இப்புண்ணியங்கள்  சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும். எனவே இத்தயாரிப்பு பகுதியில் ஆண்டவர் கற்றுத்தந்த செபம், சமாதான பரிமாற்றம், அப்பத்தைப்பிடுதல் ஆகியவை இடம் பெறுகின்றன.

 1.1. ஆண்டவர் கற்றுத்தந்த செபம்

“ஆண்டவர் கற்றுதந்த இறைவேண்டலில் அன்றாட உணவுக்காக மன்றாடுகின்றோம். அது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக நற்கருணைவுணவைக் குறிக்கும். மேலும் இவ்வேண்டலில் பாவத்திலிருந்து தூய்மை பெறவும் மன்றாடுகிறோம்” (GIRM 81).
‘அன்றாட உணவு’ என்ற சொற்கள் இந்த இறைவேண்டலில் வருவதால்தான் இது நற்கருணையை உட்கொள்ளும் முன் தயாரிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டிலிருந்து இந்த இறை வேண்டல் எல்லா வழிபாடுகளிலும் காணப்படுகிறது. இங்கு ‘உணவு’ என்ற சொல் நற்கருணையைக் குறிக்கிறது என்று பல திருஅவையின் தந்தையர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

திருப்பலியில் நற்கருணை வசீகரத்துக்குப் பிறகு இந்த இறைவேண்டலை சொல்லும் பழக்கம் திருத்தூதர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது.  இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் இந்த இறைவேண்டலை அருள்பணியாளர் மட்டுமே சொல்லி வந்தார். அதன் கடைசியில் வந்த  “தீமையிலிருந்து எங்களை மீட்டருளும்”  என்ற பகுதியை மட்டும் மக்கள் சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது திருப்பலியில்அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பலியில் பொதுவாக மற்ற செபங்களின் முடிவில் ‘ஆமென்’ என்று மக்கள் சொல்லுகின்றனர். ஆனால் “ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலில்” ‘ஆமென்’ சொல்வதில்லை. இதற்கு என்ன காரணம்? மற்ற செபங்களில்,  எடுத்துக்காட்டாக  ‘திருக்குழும  மன்றாட்டு’, ‘காணிக்கை மீது மன்றாட்டு’, ‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு’, இறுதிபுகழுரை போன்றவைகளில், அருள்பணியாளர் வழிபாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களின் பெயரால் அவற்றைச் செபிக்கிறார். இறைமக்கள் எல்லாரும் சேர்ந்து  ‘ஆமென்’ (அப்படியே ஆகட்டும்) என்று சொல்லி அவற்றைத் தங்கள் செபமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு எல்லாரும் சேர்ந்து சொல்வதால் ‘ஆமென்’ சொல்ல தேவையில்லை.

முன்னுரைகளும் பின்னுரைகளும்
ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டலை சொல்ல அல்லது பாட அருள்பணியாளர் மக்களை அழைக்கிறார். பொதுவாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்ட அழைப்பு “ மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைபடிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்”  என்பது. இதற்கொத்த முன்னுரையை பிசாந்தின் (Byzantine) திருஅவையில் காணலாம். “ஆண்டவரே, நாங்கள் முழுமனவுறுதியோடு, எவ்வகைத் தண்டணைத் தீர்ப்புக்கும் உள்ளாகாமல், விண்ணின் இறைவனாம் உம்மைத் தந்தாய் என்று அழைத்துச் சொல்லத் துணிகிறோம்”. இதிலிருந்து நமது பாடம் விளக்கம் பெறுகிறது. இரண்டாம் வத்திகான் சங்கத்திற்குப் பின் ஆயர்களின் இசைவு பெற்ற வேறுமுன்னுரை பாடங்களும் திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டவர் கற்றுத்தந்த இறை வேண்டலுக்குப் பின்னுரையாக “ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.....” என்று தொடங்கும் செபத்தை அருள்பணியாளர் சொல்லுகிறார். இதன் முடிவில் நம்பிக்கையாளர்கள்  “ஏனெனில் ஆட்சியும் ஆற்றலும் மாட்சியும் என்றென்றும் உமதே”  என்று பதில் சொல்லுகிறார்கள். இது ஒரு வாழ்த்தொலியாக அமைகிறது.
இந்த செபம் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலின் பிற்பகுதியை விரிவுப்படுத்துகிறது. இத்தகைய பழக்கம் தொடக்கத்திலிருந்து வருகிறது. இந்த செபம் ‘எம்போலிஸம்’(Embolism) என்று அழைக்கப்படுகிறது. ‘திருத்தூதர்களின் போதனை’(Didache) என்ற முதல் நூற்றாண்டு நூலில் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலை இதே இறை புகழ்ச்சியோடு முடித்திருப்பது, இன்று இது திருப்பலியில் இடம் பெற்றிருப்பதற்கு ஒரு காரணமாகக் கொள்ளப்படலாம்.

 1.2. சமாதானம் பரிமாற்றம்

  இதன்பின் அருபணியாளர் சமாதனத்திற்காக செபிக்கிறார். அதாவது, திருஅவைக்கு அமைதியையும் ஒற்றுமையையும் தரவேண்டுமென்று மன்றாடுகிறார். இதன் பின்னணி யோவா 14:27; லூக் 24:36; யோவா 20:19; 21:26 ஆகிய பகுதிகள் ஆகும்.

  இதன்பின் உறவின் வாழ்த்தை அறிவித்து, சமாதனத்தைப் பகிர்ந்துக் கொள்ள இறைமக்களை அருள்பணியாளர் அழைக்கிறார். ஏனெனில் தம் சகோதர சகோதரிகளோடு சமாதானம் செய்துக்கொள்ளாமல் ஒருவர் நற்கருணை விருந்தில் பங்கேற்பது தவறானது மட்டுமல்ல, பொருளற்றதும் ஆகும் (காண். மத் 5:24).
சமாதானத்தைப் பகிர்ந்து கொள்ளும் இச்சடங்கு மிகப் பழமையானது. கி.பி.4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “திருத்தூது அமைப்பு விதித்தொகுப்பு”  (Apostolic Constitution) என்ற நூலில் இச்சடங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆயர் சமாதானம் வாழ்த்துக் கூற, ஒருவருக்கொருவர் சமாதான அடையாளத்தை அளித்துக்கொள்ள திருத்தொண்டர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, ஆயரும் அருள்பணியாளர்களும், திருத்தொண்டர்களும் மக்களும் ஒருவருக்கொருவர் சமாதானத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

  இன்று இந்த சமாதானம் பகிர்ந்தலின் பொருளை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாததால் இதுவெறும் சடங்கு ஆசாரமாக மாறிவிட்டது. அதனால் தங்கள் அருகில் ஆள் இருக்கிறார்களா என்று கூட அறியாமல், மக்கள் வலது புறமும் இடது புறமும் தலை வணங்குவதைப் பார்க்கிறோம். இது பொருளற்ற ஒரு செயல். இக்குறைபாடு பற்றி மக்களுக்கு அருள்பணியாளர் அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்

 1.3. அப்பம் பிடுதலும், உலகின் பாவம் என்ற மன்றாட்டும்

  முற்காலத்தில் மக்கள் திருப்பலிக்குப் பெரிய அப்பங்களைக் கொண்டு வந்தனர். எனவே அந்த அப்பங்களை உனடக்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரமும் தேவைப்பட்டது அப்பங்களை உடைத்து முடிக்கும்வரை ‘உலகின் பாவம் போக்கும்’  என்ற செபம் தொடர்ந்து சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது அப்பங்கள் சிறிய அளவில் தயார் செய்யப்படுவதால் அவற்றை உடைக்கும் தேவையில்லை. அருள்பணியாளர் தனக்கு பயன்படுத்தும் பெரிய அப்பத்தை மட்டும் பிடுகிறார். எனவே “உலகின் பாவம் போக்கும் ”  என்ற செபம் மும்முறை மட்டும் சொல்லப்படுகிறது.   “உலகின் பாவங்களைப் போக்கும் ” என்ற செபம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை செர்ஜ் (Sergius)அவரால் திருப்பலியில் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்செபத்தின் இறுதியில் வரும் வரும் “எங்கள் மேல் இரக்கமாயிரும்”  என்பது கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை மும்முறை சொல்லப்பட்டது. கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் இச்செபம் மூன்றாவது முறை சொல்லப்பட்டபோது “எங்களுக்குச் சமாதானத்தை அருளும்”  என்று மாற்றிச் சொல்லும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த செபம்  சொல்லப்படும்போதுதான் அருள்பணியாளர் பெரிய அப்பத்தை பிட்க வேண்டும். வசீகர சமயம் “அப்பத்தை எடுத்து, ஆசிவழங்கி பிட்டு” என்று சொல்லப்படும் போது அப்பத்தைப் பிடக் கூடாது. இது தவறு.
அப்பத்தைப் பிட்ட பிறகு ஒரு சிறு துண்டு இரசக்கிண்ணத்தில் போடப்படுகிறது.  இது “கொம்மிக்ஸியோ”  (Commixo Commingling)  என அழைக்கப்படுகிறது. இது மிகப் பழமையான ஒரு பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் மற்ற தல திருஅவைகளுக்கும் இடையேயுள்ள “ஒன்றிப்பின் அடையாளம்” . இருப்பினும் இச்சடங்கின் உட்பொருள் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.                      
இங்கு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். உலகின் பாவமா, பாவங்களா? என்பதுதான் அது.
நற்செய்தியின் மூலமொழியாகிய கிரேக்கத்திலும், இலத்தீன் மற்ற மொழி பெயர்ப்புகளிலும் தமிழிலும் (யோவா 1:29)  ‘பாவம்’ என்று ஒருமையில் உள்ளது. ஆனால் திருப்பலி நூலில் இலத்தீனில் ‘பெக்காத்தா முந்தி’ (Peccata Mundi) என்று உள்ளது. இருமுறை ‘எம்மேல்’,‘எமக்கு’ என்று இருப்பது ஒருமையைக் குறிக்கிறது. பாடுவதற்கு ‘பெக்காத்தும் முந்தி’ (Peccatum Mundi) என்பது எளிதல்ல என்பதால் “பாவங்கள்” என்று பன்மைக்கு மாற்றப்பட்டது என சில அறிஞர் கூறுவர். ஆனால் பொருளைக் கருதினோமாயின் ஒருமையே மிகச் சிறந்தது என்று தோன்றுகிறது. ‘பாவங்கள்’ என்பது எண்ணப்பட்ட ஒரு தொகுப்பைச் சுட்டுகிறது. மாறாக ஒருமையில் ‘பாவம்’ என்பது உலகின் பாவநிலையைக் குறிப்பதாகும். நமது ஆண்டவர் உலகைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்தார். 
-தொடரும்...

என் மனதிற்குக் கிடைத்த சுதந்திரம்

என் மனதிற்குக் கிடைத்த சுதந்திரம்
திருமதி. சந்தோ­ம்,  

முத்தாய் பெற்ற சுதந்திரம்
முழுதும் பெற்றால் அனுதினம்
எத்திசைக்கும் நிமிர்ந்து நிற்க
என் மனதிற்கு கிடைத்தது சுதந்திரம்...

தோல்வியில் கற்றுக் கொண்டேன்
வெற்றியைப் பெற்றுக் கொண்டேன்
வீழ்ந்தும் வாழ்வில் எழுந்து நின்றேன் காரணம் - என்
மனதிற்குக் கிடைத்த சுதந்திரம்

பெண்ணுரிமை! மண்ணுரிமை வெல்லக்  கண்டேன்
எத்தனைத் துறைகள் தோன்றினும்
அத்தனையிலும் எம் தடம் பதித்துச்
சொக்கி நின்றேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்

எத்தொழிலும் இழிவில்லை
தொழிலே தெய்வமெனக் கண்டேன்
வரி பல உயர்ந்திடினும்
வாழ்வு என்னை தொடர்ந்திட உணர்ந்தேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்

கல்வி ஏட்டினில் காலம் சொல்லிடும்
புதுமை வித்தைகள் கண்டேன்
தேடும் இடமெல்லாம் கொட்டிக் கிடக்கும்
வாழ்க்கைப் பாடம் கற்றேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்

கொடுமை பல கோ­மிடக்  கண்டேன்
எட்டுத்திசைக்கும் எட்டாக் கனியாய்
கொடுமை பறந்தோடக் கண்டேன் காரணம் -என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்

படிப்பில்லா பெண்ணை
நானும் கண்டேன்!
பட்டமில்லா பெண்கள் பெயர்
ஏட்டினில் அழியக் கண்டேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்

திருமணம் மறுமணம்
மறுக்கக் கண்டேன்
இருமனமும் இவ்வுலகில்
பலுகிப் பெருகி  மகிழக் கண்டேன் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்

பாரதி கண்ட சுதந்திரம்
எங்கோ! என்றோ! என கலங்கி நின்றேன்!...
பாரதம் தந்த  சுதந்திரம்
இன்றே! இங்கே! இப்போதே  என்று மனமகிழ்ந்தேன் காரணம்
என் மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்......

.வெற்றி உங்கள் கையில், அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

வெற்றி உங்கள் கையில் 

 அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் யாவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
“கிரியேட்டிவிட்டி இருந்தா, இப்படியும் லாபம் அள்ளலாம்!”  - எதையும் ரீமாடல் செய்யும் இளைஞர் பிரையன் அக்டன் (Brian Acton), ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்குப் பிறகு‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008-ன் இறுதியில் அமெரிக்காவில் வைரலாகப் பரவிக் கொண்டிருந்த  ஃபேஸ்புக்கில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ‘நிராகரிக்கப்பட்டது’ என்று பதில் வந்தது. அந்த வருடத்தில் வேறு எந்த வேலைக்கும் முயலவில்லை. அவர்களின் ப்ரோபைலுக்கு நிச்சயம் ஐடி நிறுவனங்கள் வேலை கொடுக்க தயங்கப்போவதில்லை. இருந்தபோதும் கிடைத்த வேலைக்கு சென்று வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள துடிக்கவில்லை. என்ன செய்தால் பெரிய வெற்றியாக இருக்க முடியும் என்று ஆராய்ந்தார்கள்.

அந்த சமயத்தில் ஐஃபோன் அமெரிக்காவின் இளைஞர்களின் நவயுக அடையாளமாக சென்று சேர்ந்திருந்தது.AppStore ல் மற்றவர்களும் ஆப் செய்து வெளியிட திறந்துவிடப்பட்டது. அது அவர்களை கவர்ந்தது. அலெக்ஸ் பிஷ்மேன்  (Alex Fishman) என்ற இன்னுமொரு நண்பரையும் அழைத்து ஆலோசிக்கிறார்கள். மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க ஒரு மொபைல்  ஆப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு ஐபோன் டெவலப்பர் ஒருவர் வேண்டும். இவர்கள் சர்வர் உள்ளிட்ட பின்புல தொழில்நுட்பத்தில் வல்லவர்கள். பிஷ்மேன் ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த மொபைல் ஆப் தொழில்நுட்ப வல்லுனரை கண்டுபிடிக்கிறார். எல்லாம் தயார். பிறகென்ன ஜான்கோம் தன் கையில் இருந்த சேமிப்பை வைத்து வாட்ஸ்அப் என்று பெயர் வைத்து தங்கள் ஸ்டார்ட்அப்பை பதிவு செய்கிறார்.  நினைத்ததுபோலவே நடந்துவிட்டால் வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? இவர்களது ஆப் எக்கச்சக்க பிழைகளைக் கொண்டு அடிக்கடி நின்று விட்டு செம்மையா கடுப்பேற்றும். ஒருகட்டத்தில் இதை நிறுத்தி விட்டு மீண்டும் வேலைக்கே சென்றுவிடலாமா என்று ஜான்கோம் நினைத்ததுண்டு. ஆனால் நண்பர் ப்ரையன் அக்டன்

இரு... அவசரப்படாதே. இன்னும் சில மாதங்கள் பல்லை கடித்துக்கொண்டு  பொறுத்திருப்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றாராம். இதுதான் எல்லா ஸ்டார்ட்அப்பிலும் பொதுவாக நடக்ககூடியது. சிலர் மீண்டும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். சிலர் தங்களது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுதான் Push Notification உங்கள் வாட்ஸ்அப்புக்கு அல்லது மெயில் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்தால் டொயிங்  என்ற சத்ததுடன் ஒரு சின்ன ஐகான் வருமே அதுதான். உடனே அந்த நுட்பத்தை தங்கள் ஆப்பில் கொண்டுவருகிறார்கள். வாட்ஸ்அப்2.0  இந்த வசதியுடன் கூடிய மெசேஜ் ஆப்பாக வருகிறது. வெளியிட்ட சில நாட்களில் 250000 பயனாளர்கள் பயன்படுத்த தொடங்க வேகம் எடுத்தது வாட்ஸ்ஆப். ஆக்டன் தனது யாகூ நண்பர்களின் துணை கொண்டு 250,000$  டாலர் முதலீட்டை திரட்டுகிறார். இன்னும் சிலரை வேலைக்கு எடுக்கிறார்கள். ப்ளாக்பெர்ரி போனுக்கும் இந்த ஆப்பை கொண்டுவருகிறார்கள்.

நிறையபேர் உள்ளே வந்து லோடு அதிகமாகி, சர்வர் பழுதாகாமல் இருக்க இலவச ஆப்பாக இருந்ததை கட்டணமாக மாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் பயனர்களின் வரத்து குறையவில்லை. 2011 ஆண்டுவாக்கில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில்     வீலிஸ்ரீ20க்குள் வருகிறது.   இப்போது முதலீட்டாளர்களின் கவனம் படுகிறது. கம்பெனியின் 15 சதவீத பங்கிற்கு 8 மில்லியன் டாலர்கள் முதலீடு  கிடைக்கிறது. இன்னும் சிலரை வேலைக்கு எடுத்து மற்ற ஆண்டிராய்ட், நோக்கியா சிம்பியன் உள்ளிட்ட பிற மொபைல் செயலிகளுக்கும் வாட்ஸ்அப்  வெளிவருகிறது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் இருபது கோடி பயனாளர்கள் உள்ளே வருகிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்த செக்குயர் கேபிட்டல், என்னும் நிறுவனம் இன்னும் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவே மீண்டும் இலவச சேவையாக மாற்றுகிறார்கள்.  போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி வர, ஒரு பெரும் கூட்டம் அதில் களம் இறங்குகிறது. வேற யாரு? எல்லாம் நம்ம இந்திய மக்களே. உலகிலேயே வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் தேசம் இந்தியா தான். இருபது நிராகரிக்கப்பட்டவுடன் தலைகுனிந்து கீழே பார்ப்பதுதான் இழப்பு. மேலே பார்த்தால் அங்கே ஓர்  அருமையான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

அதேபோல நம் முயற்சியில் நினைத்தது நினைத்ததுபோல நடக்கவில்லை என்றால் தோல்வி அல்ல. ‘அதைவிட இன்னும் சிறப்பாக நினை’ என்று உங்கள் வாழ்க்கை சொல்கிறது என்று யோசியுங்கள். பிராமாண்டமான வெற்றி அங்கு தான் கிடைக்கும்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் படிக்கின்ற போது, பணிசெய்கின்றபோது, வாய்ப்புகளை தேடிச்செல்லும் போதும் உங்களைப் பலர் நிராகரிக்கலாம். அப்போது வாட்ஸ்அப் ஆரம்பித்த இளைஞர்களை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். நிராகரிப்பு அருமையான வாய்ப்புக்கு அழைத்துச்செல்லும். அதில் வெற்றிக்கண்டு சரித்திரம் படைத்திட வாழ்த்துகிறேன்! வாழ்க வளமுடன்!

“நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது”   - ப்ரெமர்.

அன்னை மரியாவின் விண்ணேற்பும், நமது விடுதலை வாழ்வும் - அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அன்னை மரியாவின் விண்ணேற்பும், நமது விடுதலை வாழ்வும்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

நாசரேத்தூர் நல்லாள் மரியாள். உலக மீட்பரின் தாய். இறைவனின் அன்னை. எனவே மரியாள் ஒரு போதும் மரியாள். எனவேதான் மரியா என்பது மாதா பக்தர்களின் ழுழக்கமாகியது.

 அன்னை மரியா மரித்தாரா?

ஆம். இயேசுவைப் போன்றும்  எல்லா மனிதரைப் போன்றும் மரியா மரித்தார். அழிவுக்குரிய இவரின் உடல் அழியாமை பெற்று நிலையான வீடுபேறு நோக்கி எடுத்துக் கொள்ளப்பெற்றது. இதுவே மரியாவின் விண்ணேற்பு எனப்படுகின்றது.

 அன்னை மரியா பற்றிய நம்பிக்கைக் கோட்பாடுகள்:

மரியா இயேசுவின் தாய் என்ற நிலையில் மிகவும் உயர்ந்த நிலையிலேயே திருச்சபையின் தொடக்கக் காலத்திலிருந்து கருதி வணங்கப்பட்டு வந்தார். மரியா பற்றிய புரிதல்களின் வரலாறு மிகவும் நீண்ட நெடியதொன்றாகும். பல்வேறு சர்ச்சைகள், கருத்து மோதல்களுக்குப் பின்னரே கீழ்க்காணும் நம்பிக்கைக் கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
 1. கி.பி. 431 எபேசு திருச்சங்கம் ‡ இறைவனின் அன்னை மரியா
 2. கி.பி. 649 லாத்தரன் திருச்சங்கம் ‡ என்றும் கன்னியான மரியா
 3. கி.பி. 1854 திருத்தந்தை 9 ஆம் பயஸ் ‡ அமல உற்பவியான மரியா
4. கி.பி. 1954 திருத்தந்தை 12 ஆம் பயஸ் ‡ விண்ணேற்படைந்த அரசியாம் மரியா

மரியாவின் விண்ணேற்பு பற்றிய நம்பிக்கைக் கோட்பாடு அறிக்கை:

மரியா இயேசுவின் தாயாக மட்டுமன்று,  இயேசுவின் முதன்மைச் சீடத்தியாகவும், மீட்கப்பட்டோரின் கூட்டத்தில்  தலைப்பேறாகவும் திகழ்கின்றார். எனவே இவர் பிறக்கும் பொழுதும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களிலும், இறப்பிற்குப் பின்னரும், பாவ மாசின்றித் திகழ்ந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னரும் இவரின் உடல் அழியாது ஆன்மாவோடு விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனை திருச்சபையின் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவிக்க வேண்டும் என்று 1869 - 1870களில் நடைபெற்ற முதல் வத்திக்கான் திருச்சங்கத்தில் பங்கேற்ற 200 ஆயர்கள் வலியுறுத்தினர். 1922 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு  விண்ணேற்பு அன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் 1895 ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட  கடிதத்தின் மூலம் அன்னையின் விண்ணேற்பு பற்றிய கருத்தினை அறிந்து கொள்ள முற்பட்டார். 95 விழுக்காடு ஆயர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கினார்கள். பல்வேறு தேதிகளில் விண்ணேற்பு விழா கொண்டாடப்பட்டாலும் ஆகஸ்ட் 15 உரிய நாளாகக் கருதப்பட்டது.

  Munificient Tissimus Deus என்னும் திருத்தூது மடல் மூலம் 1954 நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ் மரியாவின் விண்ணேற்பினை திருச்சபையின் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தார். அமல உற்பவியான கன்னி மரியாவின் உடல் அழியாது ஆன்மாவோடு விண்ணகத் தந்தையினால் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றது என்பதுவே இம்மடலின் மையக் கருத்தாகும். எனவே ஆகஸ்ட் 15 பெருவிழாவாகவும், கடன்திருநாளாகவும் விண்ணேற்றப் பெருவிழா கொண்டாப்பட்டு வருகிறது.

 மரியாவின் விண்ணேற்பும், இந்தியாவின் விடுதலையும்:

இவ்வுலக தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்றவரே மரியா. இந்தியா ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலைப் பெற்றது போன்று அனைத்து தீய அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம் என்னும் நோக்கில் இந்தியா தனது 70 ஆம் ஆண்டு விடுதலை விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளை எண்ணித் தலை வணங்குகின்றது.

 அகிம்சையயனும் தத்துவமும் அதன் விளைவுகளும்: 

1857 ஆம் ஆண்டு தொடங்கியது இந்திய விடுதலைப்போர். சத்தியாக்கிரகம் மற்றும் அகிம்சை இரண்டையும் இரு கண்களாகப் போற்றிச் செயல்படுத்திக் காட்டிய மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலைப் போர் நடந்தது. கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்றை  நடத்தி எமது சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்ற ஆணவம், கர்வம் நிறைந்த பிரிட்டிஷாரை  விரட்டியடித்தோம். கண்ணீரும், செந்நீரும் சிந்தி செக்கிழுத்தும், உயிரை இழந்தும் சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகச் செம்மல்களின் கனவுகள் இன்றைய பாரத நாட்டில் நனவாகிறதா என்பதனை எண்ணிப் பார்க்கும்  நாளே இந்த நாள்.

 விடுதலை பெற்ற இந்தியாவின் தனித்துவப் பயணம்:

பல்வேறு  இனம், மொழி, மதம், கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்தியா தனக்குள் சண்டையிட்டுக் கொண்டு பிளவுபட்டு விழும் என்ற வெள்ளையரின்  அவலாசையைப் பொய்யாக்கி ஒரே இந்தியா என்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். உலகுக்கே வழிகாட்டும் மக்களாட்சி தத்துவத்தின்படி ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் நடத்தி உலகின் தலை சிறந்த மக்களாட்சி நாடாகத் திகழ்ந்து வருகின்றது. நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள், பங்காளிச் சண்டைகள். இவைகள் மத்தியிலும் வேற்றுமையில் ஒற்றுமை. எல்லோரும் ஓரினம். அதுவே எமது இந்தியா என்பதனை உலகுக்குப் பறைசாற்றி வருகிறோம்.

முதல் பிரதமர் நேரு முதல் இன்று வரையில் தனக்கென தனிக்கொள்கையை வகுத்துக் கொண்டு எந்நாட்டினருக்கும் அதாவது பீடு நடைபோட்டு வருகின்றோம் நாம். ஆண்டு 70 ஆயினும் இளமை உள்ளங்கொண்டு இந்தியா திகழ்கின்றது. எனினும் நமது விடுதலைப் பயணம் முழு நிறைவடைந்ததாகச் சொல்ல முடியவில்லை. மக்களைக் கொண்டு மக்களுக்காக, மக்களாலே உருவாக்கப்படும் அரசு மக்கள் நலனில் முழுமையான ஈடுபாட்டோடு செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

விடுதலை இந்தியாவின் வளர்ச்சியும், தளர்ச்சியும்:

பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றின் மூலம் உணவு தானியப் பெருக்கம், பால் உற்பத்திப் பெருக்கம் மக்களின் தேவையை நிறைவு செய்தது. 1990 வரை யe ணூஐdஷ்ழிஐ யற்தீ ணூஐdஷ்ழிஐ என்ற கொள்கை மூலம் தனது உள்நாட்டுப் பெருக்கத்தில் மட்டுமே இந்தியா முழுக் கவனம் செலுத்தியது. 1990 ஆம் ஆண்டு முதல் உலகமயமாதல், தாராளமயமாதல் என்னும் இரு கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலகச் சந்தையில் கிடைக்கும் எல்லாப் பொருள்களும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் சுதந்திரமாக தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி அனுபவிக்கின்றனர். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருள்கள் மூலம் கணிணியுகத்தில் நாம் பயணிக்கின்றோம். 10,15 ஆண்டுகளுக்குள்ளாக ஊடகப் புரட்சி (ளீலிதுதுற்ஐஷ்உழிமிஷ்லிஐ யூeஸலியிற்மிஷ்லிஐ)  ஏற்பட்டு  உலகின் மூலை முடுக்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் எல்லா மக்களாலும் அறியப்பட்டு வருகிறது. இந்திய இளம் விஞ்ஞானிகள் பலர் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். நமது கரங்களில் தவழும் செல்போன்கள் ஊடகப் புரட்சியினுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார் மகாத்மா காந்தியடிகள். கிராமியப் பொருளாதாரமே இந்தியப் பொருளாதாரம். நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. கிராமியப் பண்பாடு, கிராமியக்கலை, கலாச்சாரம் போன்றவை நவீன வளர்ச்சி என்ற அரக்கனின் கரத்தால் அழிக்கப்பட்டு  வருகின்றன. ஒருபுறம் பகட்டான அற வளர்ச்சி. மறுபுறம் குழி விழுந்த கன்னங்கள் ஒட்டிய ஏழைக் கிராமத்தினர். தனது சுயத்தை இழந்து பாரம்பரிய விவசாய முறையை கைவிட்டு வேலை தேடி நகரங்கள் நோக்கி நகரும் நிலை பாராட்டுதற்குரியதொன்றல்ல. உலகச் செல்வந்தர் வரிசையில் இந்தியர் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியதே. அதே வேளையில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகளைப் பிச்சைக்காரர்களாக்கி வருவது எந்த விதத்தில் நியாயம்?

 அந்நிய முதலீடும் அதன் விளைவுகளும்:

எல்லா இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதுவே இந்தியா. அந்நிய முதலீடு என்ற பெயரில் பன்னாட்டுப் பண முதலைகளுக்கு இந்திய வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

 நமது கிராமத்து இளைஞர்களின் திறமைகள் சிறுமைப்படுத்தப்பட்டு அயலவரிடம் கையேந்தி வேலை தேடிச் செல்ல வைப்பதுதான் விடுதலைக் கனியா? அந்நிய முதலீடு என்பதன் மூலம் இன்னொரு காலனி ஆதிக்கத்திற்கு  இந்தியா தன்னை உட்படுத்தி வருவது மிகவும் வேதனையும், வெட்கமும் கலந்த செயல்பாடாகும்.

 விடுதலை வாழ்வா? விடுதலை தேடும் வாழ்வா?

சுயாட்சி பெற்ற தன்னிறைவு நோக்கிப் பயணிப்பதே உண்மையான விடுதலை வாழ்வு. அனைவரும் அனைத்து  வசதிகளையும் சமமாகப் பெற்று வாழச் செய்வதுவே நிதர்சனமான விடுதலையின் வெளிப்பாடுகள்.  ஆனால் இன்றைய நிலையில் விடுதலை முழக்கங்களைக் கேட்கும் நிலையில்தானே நாம் உள்ளோம். அரசின் நலத்திட்டங்கள் என்ற பெயரில் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் நடுவே இந்திய விடுதலை சின்னா பின்னமாகித் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றதே!

விடுதலையின் பன்முகப் பரிமாணங்கள்:

அன்பர் பணிச்செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் 
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே -தாயுமானவர்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு ஏழையரில் ஒருவராகச் செயல்பட்டுச் சுதந்திரம் பெற்றுத் தந்தனர் தியாக சீலர்கள். இன்றையக் காலத்தில் விடுதலைப் பற்றிய கருத்தும் அதன் பரிமாணமும் பெருகிக் கொண்டே செல்கிறது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, சமய விடுதலை, அநீதிக் கெதிரான விடுதலை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் காக்கும் விடுதலை போன்றவையே அவை.

 மக்களின் வாழ்வாதாரம் காக்கும் விடுதலைப்போர்:

உலகுக்கெல்லாம் சோறிடுவோர் உழவர். எனவே தான் உழவுத்தொழில் அனைத்துத் தொழில்களிலும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், நுஹிறூளீ யின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் உரிமை முழக்கங்கள் நமதாகி ஒலித்திடல் வேண்டும். பற்றி எரிந்த எரிவாயு குழாயை அடைக்கக் கோரிய கதிராமங்கலத்தில் போலீஸ் தடியடி, 10 பேர் கைது என்ற செய்தி கொள்ளையடிப்போர் சார்பான  அரசின் செயல்பாடுதானே? இது மக்கள் நலன் பேணும் அரசா? இல்லை மக்களை அழிக்கும் அரசா?

தீமையையும், திணிப்பையும் எதிர்த்துத் திராணியுடன் போராடிய எலியா போல்..

இன்றைய மத்திய அரசு காவிமயமாக்கும் கல்விக் கொள்கையைத் திணிக்கிறது. சமஸ்கிருத, இந்தி மொழிகளைத் திணிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் திணித்து பொது மக்களை வாட்டி வதைத்தது.  தமிழ்க்  கலாச்சாரப் பண்பாட்டினை அழிக்க ஜல்லிக்கட்டு ஒழித்தல், மாடுகள் விற்றல், வாங்கல் போன்றவற்றைத் தடுத்து அந்நிய நாட்டுக் கால்நடைகளைக் கொண்டு வந்து திணிக்கிறது. பாரம்பரிய வீரிய விதைப் பேணுதலை விடுத்து மாண்டேப் போன்ற அயல்நாட்டு விதைகளைத் திணிக்கிறது. ஜி.எஸ்.டி வரியைத் திணிக்கிறது. இவற்றினை எதிர்த்து நாம் திராணியோடு போராட வேண்டும்.

தீமைகளை எதிர்த்துப் போராடிய விவிலியத் தலைவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் இறைவாக்கினர் எலியா. இவர் திராணியோடு போராடியவை...

1. ஆணவத் திணிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த  ஈசபேல் (1 அரசர் 16:29- 22). தீர், சீதோனின் பாகலின் தெய்வ வழிப்பாட்டைத் திணித்த ஈசபேலைத் திராணியோடு எதிர்த்து வெற்றிக் கொள்கிறார் எலியா (1 அரசர் 18)

2. தம் ஆணவ அரக்தனத்தால் ஏழை நாபோத்தைக் கொன்ற ஈசபேலைக் கடுமையாகச் சாடுகின்றார். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் ஈசபேலின் இரத்தத்தை நக்கி, தின்றழிக்கும் என வெஞ்சினம் உரைக்கின்றார்
 (2அரசர் 21 ).

3. ஆகாபின் வழித்தோன்றல் அகசியா அரசர் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செயூரின் வழிப்பாட்டைத் திணித்ததைத் திராணியோடு எதிர்த்து வெற்றி காண்கின்றார் (2அரசர்1)                                                           
வேண்டும் இன்னொரு விடுதலைப் போர்: 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து தன்னுணர்வோடு  மெரினாவிலும், தமிழகமெங்கும் ஒன்று திரண்டது இளைஞர் எழுச்சி. துருப்பிடித்த அரசியல் எந்திரம் சரி செய்யப்படல் வேண்டும். பாழாக்கும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊழலில் மலிந்து போன பழம் பெருச்சாளிகள் தூக்கியயறியப் படவேண்டும். எழுச்சிக் கொண்ட இளைஞர் படை புதிய பாரதம் படைத்திட திராணியோடு செயல்படட்டும். எனவே நமக்கு வேண்டும் இன்னொரு விடுதலைப்போர்.

இனியயாரு விதிசெய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்.
தனியயாருவனுக்கு உணவில்லை யயனில் 
ஜகத்தினை அழித்திடுவோம்.      ‡ சுப்ரமணிய பாரதி.

Ads Inside Post