வெற்றி உங்கள் கையில்
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் யாவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
“கிரியேட்டிவிட்டி இருந்தா, இப்படியும் லாபம் அள்ளலாம்!” - எதையும் ரீமாடல் செய்யும் இளைஞர் பிரையன் அக்டன் (Brian Acton), ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்குப் பிறகு‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008-ன் இறுதியில் அமெரிக்காவில் வைரலாகப் பரவிக் கொண்டிருந்த ஃபேஸ்புக்கில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ‘நிராகரிக்கப்பட்டது’ என்று பதில் வந்தது. அந்த வருடத்தில் வேறு எந்த வேலைக்கும் முயலவில்லை. அவர்களின் ப்ரோபைலுக்கு நிச்சயம் ஐடி நிறுவனங்கள் வேலை கொடுக்க தயங்கப்போவதில்லை. இருந்தபோதும் கிடைத்த வேலைக்கு சென்று வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள துடிக்கவில்லை. என்ன செய்தால் பெரிய வெற்றியாக இருக்க முடியும் என்று ஆராய்ந்தார்கள்.
அந்த சமயத்தில் ஐஃபோன் அமெரிக்காவின் இளைஞர்களின் நவயுக அடையாளமாக சென்று சேர்ந்திருந்தது.AppStore ல் மற்றவர்களும் ஆப் செய்து வெளியிட திறந்துவிடப்பட்டது. அது அவர்களை கவர்ந்தது. அலெக்ஸ் பிஷ்மேன் (Alex Fishman) என்ற இன்னுமொரு நண்பரையும் அழைத்து ஆலோசிக்கிறார்கள். மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க ஒரு மொபைல் ஆப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு ஐபோன் டெவலப்பர் ஒருவர் வேண்டும். இவர்கள் சர்வர் உள்ளிட்ட பின்புல தொழில்நுட்பத்தில் வல்லவர்கள். பிஷ்மேன் ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த மொபைல் ஆப் தொழில்நுட்ப வல்லுனரை கண்டுபிடிக்கிறார். எல்லாம் தயார். பிறகென்ன ஜான்கோம் தன் கையில் இருந்த சேமிப்பை வைத்து வாட்ஸ்அப் என்று பெயர் வைத்து தங்கள் ஸ்டார்ட்அப்பை பதிவு செய்கிறார். நினைத்ததுபோலவே நடந்துவிட்டால் வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? இவர்களது ஆப் எக்கச்சக்க பிழைகளைக் கொண்டு அடிக்கடி நின்று விட்டு செம்மையா கடுப்பேற்றும். ஒருகட்டத்தில் இதை நிறுத்தி விட்டு மீண்டும் வேலைக்கே சென்றுவிடலாமா என்று ஜான்கோம் நினைத்ததுண்டு. ஆனால் நண்பர் ப்ரையன் அக்டன்
இரு... அவசரப்படாதே. இன்னும் சில மாதங்கள் பல்லை கடித்துக்கொண்டு பொறுத்திருப்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றாராம். இதுதான் எல்லா ஸ்டார்ட்அப்பிலும் பொதுவாக நடக்ககூடியது. சிலர் மீண்டும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். சிலர் தங்களது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் வந்திருக்கிறார்கள்.
இரு... அவசரப்படாதே. இன்னும் சில மாதங்கள் பல்லை கடித்துக்கொண்டு பொறுத்திருப்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றாராம். இதுதான் எல்லா ஸ்டார்ட்அப்பிலும் பொதுவாக நடக்ககூடியது. சிலர் மீண்டும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். சிலர் தங்களது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் வந்திருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுதான் Push Notification உங்கள் வாட்ஸ்அப்புக்கு அல்லது மெயில் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்தால் டொயிங் என்ற சத்ததுடன் ஒரு சின்ன ஐகான் வருமே அதுதான். உடனே அந்த நுட்பத்தை தங்கள் ஆப்பில் கொண்டுவருகிறார்கள். வாட்ஸ்அப்2.0 இந்த வசதியுடன் கூடிய மெசேஜ் ஆப்பாக வருகிறது. வெளியிட்ட சில நாட்களில் 250000 பயனாளர்கள் பயன்படுத்த தொடங்க வேகம் எடுத்தது வாட்ஸ்ஆப். ஆக்டன் தனது யாகூ நண்பர்களின் துணை கொண்டு 250,000$ டாலர் முதலீட்டை திரட்டுகிறார். இன்னும் சிலரை வேலைக்கு எடுக்கிறார்கள். ப்ளாக்பெர்ரி போனுக்கும் இந்த ஆப்பை கொண்டுவருகிறார்கள்.
நிறையபேர் உள்ளே வந்து லோடு அதிகமாகி, சர்வர் பழுதாகாமல் இருக்க இலவச ஆப்பாக இருந்ததை கட்டணமாக மாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் பயனர்களின் வரத்து குறையவில்லை. 2011 ஆண்டுவாக்கில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில் வீலிஸ்ரீ20க்குள் வருகிறது. இப்போது முதலீட்டாளர்களின் கவனம் படுகிறது. கம்பெனியின் 15 சதவீத பங்கிற்கு 8 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. இன்னும் சிலரை வேலைக்கு எடுத்து மற்ற ஆண்டிராய்ட், நோக்கியா சிம்பியன் உள்ளிட்ட பிற மொபைல் செயலிகளுக்கும் வாட்ஸ்அப் வெளிவருகிறது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் இருபது கோடி பயனாளர்கள் உள்ளே வருகிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்த செக்குயர் கேபிட்டல், என்னும் நிறுவனம் இன்னும் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவே மீண்டும் இலவச சேவையாக மாற்றுகிறார்கள். போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி வர, ஒரு பெரும் கூட்டம் அதில் களம் இறங்குகிறது. வேற யாரு? எல்லாம் நம்ம இந்திய மக்களே. உலகிலேயே வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் தேசம் இந்தியா தான். இருபது நிராகரிக்கப்பட்டவுடன் தலைகுனிந்து கீழே பார்ப்பதுதான் இழப்பு. மேலே பார்த்தால் அங்கே ஓர் அருமையான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.
அதேபோல நம் முயற்சியில் நினைத்தது நினைத்ததுபோல நடக்கவில்லை என்றால் தோல்வி அல்ல. ‘அதைவிட இன்னும் சிறப்பாக நினை’ என்று உங்கள் வாழ்க்கை சொல்கிறது என்று யோசியுங்கள். பிராமாண்டமான வெற்றி அங்கு தான் கிடைக்கும்.
ஆகவே உங்கள் வாழ்க்கையில் படிக்கின்ற போது, பணிசெய்கின்றபோது, வாய்ப்புகளை தேடிச்செல்லும் போதும் உங்களைப் பலர் நிராகரிக்கலாம். அப்போது வாட்ஸ்அப் ஆரம்பித்த இளைஞர்களை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். நிராகரிப்பு அருமையான வாய்ப்புக்கு அழைத்துச்செல்லும். அதில் வெற்றிக்கண்டு சரித்திரம் படைத்திட வாழ்த்துகிறேன்! வாழ்க வளமுடன்!
“நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது” - ப்ரெமர்.
No comments:
Post a Comment