என் மனதிற்குக் கிடைத்த சுதந்திரம்
திருமதி. சந்தோம்,
முத்தாய் பெற்ற சுதந்திரம்
முழுதும் பெற்றால் அனுதினம்
எத்திசைக்கும் நிமிர்ந்து நிற்க
என் மனதிற்கு கிடைத்தது சுதந்திரம்...
தோல்வியில் கற்றுக் கொண்டேன்
வெற்றியைப் பெற்றுக் கொண்டேன்
வீழ்ந்தும் வாழ்வில் எழுந்து நின்றேன் காரணம் - என்
மனதிற்குக் கிடைத்த சுதந்திரம்
பெண்ணுரிமை! மண்ணுரிமை வெல்லக் கண்டேன்
எத்தனைத் துறைகள் தோன்றினும்
அத்தனையிலும் எம் தடம் பதித்துச்
சொக்கி நின்றேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்
எத்தொழிலும் இழிவில்லை
தொழிலே தெய்வமெனக் கண்டேன்
வரி பல உயர்ந்திடினும்
வாழ்வு என்னை தொடர்ந்திட உணர்ந்தேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்
கல்வி ஏட்டினில் காலம் சொல்லிடும்
புதுமை வித்தைகள் கண்டேன்
தேடும் இடமெல்லாம் கொட்டிக் கிடக்கும்
வாழ்க்கைப் பாடம் கற்றேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்
கொடுமை பல கோமிடக் கண்டேன்
எட்டுத்திசைக்கும் எட்டாக் கனியாய்
கொடுமை பறந்தோடக் கண்டேன் காரணம் -என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்
படிப்பில்லா பெண்ணை
நானும் கண்டேன்!
பட்டமில்லா பெண்கள் பெயர்
ஏட்டினில் அழியக் கண்டேன் காரணம் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்
திருமணம் மறுமணம்
மறுக்கக் கண்டேன்
இருமனமும் இவ்வுலகில்
பலுகிப் பெருகி மகிழக் கண்டேன் - என்
மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்
பாரதி கண்ட சுதந்திரம்
எங்கோ! என்றோ! என கலங்கி நின்றேன்!...
பாரதம் தந்த சுதந்திரம்
இன்றே! இங்கே! இப்போதே என்று மனமகிழ்ந்தேன் காரணம்
என் மனத்திற்குக் கிடைத்த சுதந்திரம்......
No comments:
Post a Comment