பிப்ரவரி திங்களில் கொண்டாடப்படும் முக்கியப் புனிதர்கள்
தொகுப்பு : சகோ. பிளவர் மேரி.
மெழுகுவர்த்தி திருநாள்
கிறிஸ்து பிறந்த 40 ஆம் நாள் கன்னித்தாயும், சூசையும் குழந்தை இயேசுவை கோயிலில் அர்ப்பணித்து மீண்டும் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு :
இன்று மெகுழுதிரிகளை பிடித்தபடி மக்கள் பவனி வருவார்கள். குரு பிடித்திருக்கும் ஒளி உலகின் இருளை நீக்க வந்த உலகின் ஒளியான கிறிஸ்துவை குறிக்கிறது. நாம் வைத்திருக்கும் எரிகின்ற திரி வாழ்வின் இறுதியில் கிறிஸ்துவை எதிர்கொள்ளும் போது, நற்செயல்கள் மூலம் ஒளிமயமாய் இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
மீட்பு வரலாற்றின் முதல் அறிவிப்பு : மங்கள வார்த்தை (லூக் 1 : 31)
2 வது அறிவிப்பு : சிமியோன் கன்னி மரியாயிடம் கூறியது, ‘உமது உள்ளத்தையும் ஒருவாள் ஊடுருவிப் பாயும்’ (லூக் 2 : 35)
ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட போது சிமியோன் கூறியது கல்வாரி மலையில் நிறைவேறியது.
சிந்தனை : நாம் இறைமகன் இயேசுவின் ஒளியில் உலகம் எழுச்சி பெற நம்மையே அர்ப்பணிப்போம்.
பிப்ரவரி 3 : புனித பிளாசியுஸ்
பிறப்பு : துருக்கி கி.பி. 316
சூழல் : வேத கலாபனை காலம்
தவ முனிவராக குகையில் செலவழித்த நாட்களில் இவரை வன விலங்குகள் காத்தன. காயப்பட்ட உடல் நலமற்ற விலங்குகளை குணப்படுத்தவே அவைகள் அவருடைய ஆசீருக்காக காத்திருந்தனவாம். விலங்குகளை பிடிக்க வந்த அரசு சர்க்கஸ் அதிகாரிகள், புனிதரையும் விலங்கிட்டு அரசனிடம் கொண்டு சென்றனர். போகும் வழியில் தாய் மகளின் தொண்டையில் சிக்கி இருந்த மீன் முள்ளை எடுக்கச் சொன்னார். தொண்டையில் கை வைத்து தொட்டு செபித்தவுடன் முள் தூரத்தில் போய் விழுந்தது.
துன்பம் : சிலைகளுக்கு ஆராதனை செலுத்த பணிக்க மறுத்ததும் நைய புடைத்து மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, கருமையான ஆணிகள் வாய்ந்த ஆயுதத்தால் குத்தியும் இரத்தம் பீறிட்ட போதும் உயிர் பிரியவில்லை.
இறப்பு : தலைவெட்டி கொல்லப்பட்டார்.
சிறப்பு : தொண்டை வியாதி நலம் பெற இவரிடம் செபிப்பது வழக்கம்.
பிப்ரவரி 4 : புனித அருளானந்தர் சே.ச.
பிறப்பு : போர்ச்சுகல் நாடு, லிஸ்பன் நகர். உயர்குலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்தார்.
அழைப்பு : 1662இல் இயேசுசபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார்.
பணி : இந்தியாவிற்கு கிறிஸ்துவின் ஒளியை கொண்டு வந்தவர். தமிழ் கற்றுக் கொண்டு தாயகமாக்குதல், பண்பாட்டு மயமாக்குதல் என்ற முறைகளை செயல்படுத்தினார்.
சிறப்பு : இந்திய துறவிபோல் காவி உடை அணிந்து, இந்தியராக வாழ்ந்து மக்களின் அன்பையும், வணக்கத்தையும் பெற்றவர். பலர் மெய்மறையைத் தழுவினர். புதுமை வரம் பெற்றார். பலரின் கொடிய நோய் குணமானது. மாமன்னர் தடியதேவன் இவரால் குணம் பெற்று திருமுழுக்குப் பெற்றார். 5 மனைவிகளை வைத்திருந்த அவர், இவரின் அறிவுரையின்படி ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, மற்ற நால்வரையும் அனுப்பி விட்டார். அவளில் ஒருவரின் தூண்டுதலால் உடையதேவர் கொல்ல ஆணையிட்டான்.
இறப்பு : ஓரியூரில் தலைவெட்டப்பட்டு, 4.2.1693ல் இறந்தார்.
பிப்ரவரி 5 : புனித ஆகத்தம்மாள், கி.பி.251
பிறப்பு : உயர்குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இறைவனிடம் அர்ப்பணித்தனர்.
சிறப்பு : கிரேக்க மொழியில் (ஆகத்தா என்றால் நல்லது என்று பொருள்) அலகை, அரக்கர்கள், அரசர்களால்
கற்புக்கு ஏற்பட்ட சோதனைகளை மனவலிமையுடன் வென்றார். அரசன் மணம் செய்து கொள்ள விரும்பி, அது இயலாததால் கிறிஸ்தவர் என குற்றம்சாட்டி தீய பெண்ணை ஏவிவிட்டார், அசையவில்லை. கடுமையாக அடிக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட பின்பு மார்பு அறுக்கப்பட்டார், அன்று இரவு பேதுருவின் காட்சியைக் கண்டார். நெருப்பில் போடப்பட்டு காயமடைந்தார்.
இறப்பு : நெருப்பு காயங்களால் தன் தூய ஆன்மாவை 5.2.251ல் இறைவனிடம் அர்ப்பணித்தார்.
பிப்ரவரி 6 : புனிதர்களான பால் மீக்கி, கொன்சாலோ கார்சியா தோழர்கள்.
பால், ஜான், ஜேம்ஸ் ஆகிய மூவர் மற்றும் 6 பேர் பிரான்சிஸ்கன் சபையினர்.
இடம் : ஜப்பான் நாட்டில் நாகசாகி 1592ஆம் ஆண்டு 17 பேர் புதிதாக கிறித்துவ மறையில் சேர்ந்தார்கள். இவர்களை சிலுவையில் கொல்ல முடிவானது.
நாகசாகி குன்றின் மேல் 26 சிலுவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சிலுவையின் பக்கத்தில் குழிகளும் வெட்டப்பட்டிருந்தன.
சிறப்பு : குன்றிற்கு ‘தேதேயும்’ என்ற நன்றி பாடலை பாடிக் கொண்டு வந்தனர். ஒவ்வொருவரும் சிலுவையில் கட்டப்பட்டனர். ‘இயேசு சபை குரு மாணவர் நான் சாவதற்கு காரணம் கிறிஸ்துவின் கொள்கைகளைப் போதித்தது. நன்றி கூறுகிறேன் இறைவனுக்கு’ என்று அறிக்கையிட்டனர்.
கிறிஸ்துவை போல மன்னிக்கிறேன். எனது குருதி சிந்தப்படும்போது அது என் நாட்டு மக்களுக்கு பயன்தரும் பனிமழையாக அமையும் என்பது எனது துணிவு என்று கூறினார். கடைசியில் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தனர்.
இறப்பு : பிப்ரவரி 6, 1597இல் இறந்தார்.
பிப்ரவரி 7 : புனித மிக்கேல் கோர்டரோ (புதிய புனிதர்)
பிறப்பு : 7/11/1854, ஈவெடார் நாடு, குவென்கா நகர். பிறப்பில் கால் ஊனம்.
வார்த்தைப்பாடு : இலத்தீன் அமெரிக்காவில் மூவித வார்த்தைப்பாடு கொடுத்த முதல் நபர்.
பணி : மொழிகள் கற்பிக்கும் பணி, பின் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி, மறைக்கல்வி, புது நன்மைக்கு தயாரிப்பு, நவ துறவிகளைப் பயிற்றுவிக்கும் பணி.
சிறப்பு : திருச்சபைக்கும், குருக்களுக்கும் ஏற்பட்ட போராட்டத்தில் நற்கருணை பேழையை பாதுகாக்க ஊனமுற்ற பாதத்தை பொருட்படுத்தாது 8 மைல் நடந்து வந்தார். நவ கன்னியருக்கு கற்பித்தார். போர் சூழலில் ஆலயங்கள் எரிக்கப்பட்டன. படகுகளின் வழியே வெளியேறினர்.
இறப்பு : 1910ல் பிப்ரவரி 10ஆம் நாள் நிமோனியா காய்ச்சலால் உயிர்நீத்தார்.
முக்தி பேறு பட்டம் : 1977, அக் 30. தி. த. 2ஆம் ஜான்பால்.
புனிதர் பட்டம் : 1984, அக் 21. தி. த. 2ஆம் ஜான்பால்.
சிந்தனை : ‘நான் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும், வாசிக்கும் ஒவ்வொரு எழுத்தும், செய்யும் ஒவ்வொரு பணியும் அனைத்தும் அவரது அதி மிக புகழுக்கே’ (புனித கார்டரே).
பிப்ரவரி 8 : புனித ஜெரோம் எமிலியானி
பிறப்பு : பிரபு குலம்
சிறப்பு : போரில் கைதியாக்கப்பட்டு, விலங்கிடப்பட்டார். இன்னல்களை பொறுமையுடன் ஏற்றார். செப, தியானத்தில் ஈடுபட்டார். அன்னை மரியாவின் பரிந்துரையால் விலங்குகள் உடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
பணி : துறவற சபை நிறுவியது. வருந்துவோருக்கு உதவி செய்தல். கொள்ளை நோயால் இறந்த பெற்றோரின் ஆதரவற்ற பிள்ளைகளை ஒன்று சேர்த்து பேணி காப்பது.
இறப்பு : 1537, பிப்ரவரி 8இல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
பிப்ரவரி 10 : புனித ஸ்கொலாஸ்திகா
காலம் : 480 ‡ 547
பிறப்பு : இத்தாலி நாடு, புனித ஆசீர்வாதப்பர் ஸ்கொலாஸ்திக்காவின் சகோதரர், இரட்டையர்.
பெற்றோர் : செல்வந்தர்கள்.
அழைப்பு : பெற்றோரின் செல்வங்களை குப்பை என மதித்தனர். ஒரு துறவற சபையை ஏற்படுத்தினர்.
சிறப்பு : ஆசீர்வாதப்பர் மடத்தில் பெண்கள் நுழைய அனுமதியில்லை. அருகில் இருந்த வீட்டில் சந்தித்து ஆன்மீக காரியங்கள் பற்றி பேசுவார்கள். கடவுளுடைய நன்மைத்தனத்தையும், மோட்சவாசிகளின் ஆனந்தம் பற்றியும் பேசினார்கள்.
கடைசி சந்திப்பு : இரவு மழை காரணமாக தங்கினார். இரவு முழுவதும் ஜெபிப்பதில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்குப் பிறகு இறந்தார். தன் தங்கையின் ஆன்மா விண்ணில் வெண்புறா வடிவில் விண்ணில் பறந்து செல்வதாக காட்சி கண்டார் ஆசீர்வாதப்பர்.
இறப்பு : 10.2.457இல் இறந்தார்.
பிப்ரவரி 11 : லூர்து அன்னையின் காட்சிகள்
தொடக்கம் : 1858, பிப்ரவரி 11, பிரனீஸ் மலையடி வாரம், பிரான்ஸ் நாடு. லூர்து என்னும் இடம்.
சிறப்பு : 1859இல், பிப்ரவரி 11 லிருந்து ஜீலை 11 வரை, 18 தடவை அன்னை ஜெபமாலையுடன் பெர்நதத்திற்கு காட்சியளித்தார். அற்புதமான நீருற்று அங்கு தோன்றியது.
அன்னையின் வேண்டுகோள் : பாவிகளுக்காகச் செபிப்பது, தவம் செய்வது, அற்புத அன்னையின் பெயரை பெர்நதெத் திரும்ப திரும்ப கேட்டார். அதற்கு அன்னை புன்சிரிப்புடன் “நாமே அமல உற்பவம்” என்றார்.
பிப்ரவரி 26 : புனித மெக்டில்ட்
காலம் : 1240 - 1298
பிறப்பு : சாக்சனி, எய்ஸ் எல்பன் நகர், யஹரிஃபா அரண்மனை
அழைப்பு : துறவியரானார், மடத்திற்குச் சென்றார்.
பணி : தாழ்ச்சி, ஞானம், ஆன்ம ஆர்வம் கொண்டவர். நவகன்னியர் பொறுப்பு. பாடல் குழு பொறுப்பு.
சிறப்பு ; நோயினால் கடுமையாய் தாக்கப்பட்டார். துறவிகள் திருப்புகழ் மாலை பாடும்போது பரவசமாகி விடுவார். பாடலின் ரசனையைக் கேட்டு ஆண்டவரே அவரிடம் நீ ஒரு குயில் என்றார். இறைவன் அளித்த ஊட்டச்சத்தின் காரணமாக டொமினிக்கன் சபை அறிவுக் களஞ்சியம் என்பர். திரு இருதய பக்திக்கு ஊற்றுக்கண்.
இறப்பு : 19. 11. 1298
சிந்தனை : தினமும் காலையில் நீ துயில் எழும்போது எனது இதயத்திற்கு வணக்கம் செலுத்து. உன் இதயத்தைக் கொடு. திரு இருதய ஆண்டவர் காட்சி இது.
பிப்ரவரி 27 : வியாகுல அன்னையின் புனித கபிரியேல்
காலம் : 1838 - 1862
பிறப்பு : இத்தாலி நாடு, அசிசி
தந்தை : சான்றோ, அசிசி நகர் ஆளுநர், கத்தோலிக்க விசுவாசி. திருப்பலிக்கு முன் 1 மணி நேரம் அமைதியாக செபிப்பார். இரவுக்கு முன் திவ்ய நற்கருணையை சந்தித்து விட்டு இல்லம் திரும்புவார்.
தாய் : ஆக்னஸ் இவர் 11வது பிள்ளை.
அழைப்பு : பகட்டான உரை, நாடக கச்சேரி, நடனம் இவற்றில் பற்று கொண்ட இவர் நோய்வாய்ப்பட்டார். நோய் நீங்கினால் துறவற வாழ்வை மேற்கொள்வேன் என்று வாக்கு கொடுப்பார், செய்யமாட்டார். மரியன்னை இவரை கூர்ந்து நோக்கி விரைந்து துறவியாக மாறு என்ற கடினக் குரலை கேட்டதும் திருப்பாடுகளின் துறவு சபைக்கு சென்றார்.
சிறப்பு : திருப்பாடுகள் மீது சிறப்பு பக்தி. மரியன்னை பக்தி, நற்கருணை நாதரின் மீது பக்தி, நிறை ஆறுதல் தந்தது. 1861இல் குருப்பட்டத்திற்கு முன் பெற வேண்டிய 4 பட்டங்கள் பெற தயார் நிலையில் இருந்தபோது மதக்கலவரம், மாபெரும் குழப்பம், குருப்பட்டம் பெறுவது ஆபத்து என்று தடுத்தனர்.
இறப்பு : 27. 2 . 1862. இறந்தபின் மனமாற்றங்கள், புதுமைகள் ஏராளம்.
புனிதர் பட்டம் : 13. 5. 1920
சிந்தனை : என் இதயத்தில் இறையன்புக்கு முரசு கொட்டாமல் இருக்கும் நரம்பை உடனடியாக பிடுங்கி எறிந்து விடுவேன் - புனித கபிரியேல்.
No comments:
Post a Comment