Pages - Menu

Tuesday, 2 February 2016

வேதியரிடம் கேளுங்கள்

வேதியரிடம் கேளுங்கள் -  8
- நல்லை.இ. ஆனந்தன்

குழந்தைராஜ் - காரைக்குடி

 மின் மயானம் வந்தபின் மனிதன் இறப்பிற்குப் பின் சாம்பல் என்று ஆகிவிட்டதே?

மனிதன் முதன்முதலில் கண்திறந்தால் அது பிறப்பு. நிரந்தரமாக கண்களை மூடினால் அது இறப்பு. சாம்பல் ஆகிப் போவதல்ல. மனித வாழ்வு. சேம்பிள்  (SAMPLE)  ஆவதே மனிதருக்குப் பெருமை. இயேசு முதல் அன்னை தெரசா, அப்துல் கலாம் வரை இறப்புக்குப் பின் அவர்கள் சாம்பலாகி விடவில்லை. சேம்பிள் (முன் உதாரணமாகிப் போனார்கள், நீங்களும் ‘உங்கள் பின்னோருக்கு சேம்பிள் ஆகலாம்’. முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

 சலோமி - மதுரை
 பலர் என் முதுகுக்குப் பின்னே கேவலமாகப் பேசுகிறார்கள். அது எனக்குத் தெரிய வரும்போது அப்செட் ஆகிறேன். என்ன செய்வது?
முதுகுக்குப் பின் பேசுபவர்கள் கோழைகள். முகம் பார்த்து பேசுபவரே வீரர்கள். கோழைகள் புறணி பேசும்போது அவர்களுக்கு ‘முன்னே’ நீஙகள் இருக்கிறீர்கள். பர்ஸ்ட் நீங்கள் நெக்ஸ்ட் அவர்கள். எனவே அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புத்தாண்டுச் செய்தி ‘வாட்ஸ் அப்’ பில் வந்ததைப் பார்க்கவும். அதில் முதல் செய்தி (DON’ T GASSIP). புறணி பேச வேண்டாம் என்பதே. திருத்தந்தைக்கு கீழ்ப்படியவும்.

வடினிலா மேரி - நத்தம்

 பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது டீச்சர் என்னை ஓவராகத் திட்டுகிறார். சில நேரங்களில் கோபம், பல நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது?

தங்கச்சி, உன் டீச்சர் உன்னைத் திட்டவில்லை, தட்டி எஎழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். உனது மேற்படிப்பை, எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு. உன் வளமான எதிர்காலத்திற்காகத் தான் இவ்வாறு செய்கிறார்கள். இப்போது உனக்குப் புரியாது. பின்னரே விளங்கும். மார்ச்சில் தேர்வு. கவனமாகப் படிக்கவும். இலக்கு வைத்து முன்னேறவும். வாழ்த்துக்கள்!

பாஸ்கரன் - சென்னை
 தவக்காலம் தேவைதானா?

கண்டிப்பாகத் தேவை. தவக்காலம் பெரிய வெள்ளியுடன் முடிவதில்லை. உயிர்ப்பு ஞாயிறில் நிறைவடைகிறது. இயேசுவின் பாடுகளை நினைக்கும் போது மனம் துன்புறும். ஆனால் உயிர்ப்பை நினைக்கும் போது மனம் தெம்படையும். எல்லா துன்பங்களுக்கும் முடிவு உண்டு என்பதை வலியுறுத்தும் தவக்காலம் நமக்குத் தேவைதான்.

விண்ணரசி - தூத்துக்குடி
 புகழ், போதை தரக்கூடிய ஒன்றா?

நிச்சயமாக, குட்டி ஒட்டகம் தன் தாயிடம் நடத்திய உரையாடல்.
அம்மா, நமக்கு ஏன் நீண்ட கால்கள்?
தாய் சொன்னது, பாலைவனத்தில் மணலில் நடப்பதற்கு கடவுள் கொடுத்தார்.
தடித்த நாக்குகள் நமக்கு ஏன் அம்மா?
பாலைவனத்தில் முட்செடிகளைத் தின்பதற்காகக் கடவுள் கொடுத்தார். 
முதுகு ஏன் நமக்கு வீங்கியுள்ளது அம்மா?
பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காது. எனவே கடவுள் நமக்குக் கொடுத்த ஓவர் டேங்க அது.. அப்போது குட்டி ஒட்டகம் கேட்டது. அப்போ, நாம் பாலைவனத்தில் இல்லாமல், இந்த சர்க்கசில் ஏன் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறோம்?
அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது : ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் நமக்கு கைத்தட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post