இரட்சணிய யாத்திரிகம்
மகாவித்துவான் யஹன்றி ஆல்பிரெட் கிருட்டிணன்
- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ,
(கிருட்டிண பிள்ளையின் மனமாற்ற போராட்டம் இங்கு விளக்கப்பட்டுள்ளது)
1868 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் மைலாப்பூரிலுள்ள தேவாலயத்தில் யஹன்றி ஆல்பிரெட் என்னும் பெயரை ஏற்று திருமுழுக்குப் பெற்றார். இக்காட்சியைக் கண்ணாரக் காண வந்தவர்களின் தொகை அதிகம். நம் வித்துவானுக்கு அப்போது வயது முப்பது. முப்பது வருடம் இவர் பிடிவாதம் உள்ள கொடிய வைணவராயிருந்து, பெருமாள் என்னும் தெய்வத்திறகு ஆட்பட்டிருந்தவர், சமயநெறி தவறாதவர், மதவைராக்கிய முடையவர். ஐந்துலோகத்தால் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சங்கு சக்கரமாகிய முத்திரயைப் பழுக்கக் காய்ச்சி தன்னிரு தோளிலும் சூடு போட்டிருந்தவர். இந்நிலையிலிருந்து தாம் மீட்கப்பட்ட காலத்தில் இவரது மனநிலையை இவர் பாடிய கீழ்வரும் செய்யுளில் காணலாம்.
பிறவியில் பிடிவாத கொடியவை ணவனாய்ப்
பிறந்து முப்பது வற்சாம்
பிரபஞ்ச மயல்கொண்டு மூடர்ந்த காரப்
பிழப்பில் அடைபட் டுழன்று
மறவினைக் காளாகி நெறியிலாத் தூர்த்த
மனவாஞ் சைக்கிடங் கொடுத்து
மருளுற்று வறிதுநாள் செலவிட்ட நீசன்எனை
மலர டிகாட் படுத்தி
குறைவிலாப் பேரரு ளளித்தின் றுகாறும்
குறிகொண்டு காத்தி யயனினும்
கொச்சைமதி யேற்கின்னும் நன்றியறியாக் கெட்ட
வித்துவான் எய்ச். ஏ. கிருட்டிணப்பிள்ளை கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைபாட்டில் தனக்கோடி ராஜிவும், வித்துவானுடைய சகோதரர் முத்தையாப்பிள்ளையும் காட்டிய சிரத்தை கொஞ்சமல்ல. இம்மூவரும் கூடி இவ்விசயத்தைப் பற்றி ஆராய்ந்து பேசி, வித்துவான் தானிருந்த சாயர்புரத்தில் கிறிஸ்துவ மறையைத் தழுவினால் பல சங்கடங்களும், கலகங்களும் ஏற்படுமாகையால் சென்னைப்பட்டினம் சென்று அவ்விடத்தில் சில காலம் தங்கி, பிறகு தம் மனைவி மக்களை வரவழைத்து, அவர்களுக்கு கிறித்துவ மறை உண்மைகளைப் புகட்டி கடைசியில் குடும்ப சகிதமான திருமுழுக்குப் பெறுவதுதான் நல்லது என்று தீர்மானித்தனர். அவ்வாறே வித்துவான் தம் மாணாக்கரைத் தமது தமிழாசிரியர் பணியில் இருத்திவிட்டு, தமது மனைவி, பிள்ளைகளை தம் சகோதரர் முத்தையா பிள்ளையின் ஆதரவில் தம் தாயார் வசம்விட்டு, தான் மட்டும் சென்னைப்பட்டினம் சேர்ந்தார். சென்னையில் மதப் போதகர்கள் அருள்திரு. கோலப், அருள்திரு. பெர்சிவல் ஆகியோரை கண்டு பேசினார். அருள்திரு. பெர்சிவல் இவரைத் தம் மதத்திலிருத்தித் தாம் பிரசுரித்து வந்த தினவர்த்தமானி என்ற இதழுக்கு இவரது உதவியைப் பெற்றார். மேலும் பிரசிடென்சி கல்லூரியில் வித்துவானை தமிழ் பண்டிதராகவும் நியமித்தார். இவ்வாறு சென்னையில் நம் வித்துவான் தங்குவதற்கான நல்ல சூழல் வாய்த்தபின் தம் குடும்பத்தினரை அழைத்துக் கொள்ளப் பலமுறை முயற்சி செய்தும் பலன் படாமற் போயிற்று, இதனால் வித்துவான் துன்பம் அடைந்திருந்தாலும், சென்னையில் இவருக்கு பலரின் அறிமுகம் கிடைத்தது. திருநெல்வேலி திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் இவருக்கு மிகவும் ஆறுதலான கடிதங்களை எழுதி வந்தனர். சென்னையில் உள்ள அருள்திரு. சிம்மண்ட்ஸ் அவர்கள் பல தடவை வித்துவானை அழைத்து அவரிடத்தில் ஆன்மீக விசயங்களைப் பற்றி பேசி வருவார். 1858ஆம் வருடம் மார்ச் 27 ஆம் நாள் கிறிஸ்துநாதரின் திருவடிகளே தமக்கு சரணாகதி என்று நம்பி, இராயப்பேட்டை கலிவன் தோட்டத்துக்குக் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டார். இக்காலத்து அனுபவத்தைப் பற்றி நம் வித்துவான் வ்வாறு கூறுகிறார்,
“அன்றே யான் பூர்வத்தில் தெரியாது ஒழுகி வந்த
இந்து மதச் சடங்குகளெல்லாம் என் மனதை விட்டு
ஒழிந்தன. மார்க்க சின்னங்களும் என் சரீரத்தைவிட்டுப்
பறந்தன. வெகு காலமாக என் மனதில் பதிந்திருந்த
ஜாதி கடடும்ஒழிந்தது. இதன் பிறகு சர்வ வல்லவரது (இயேசு)
திருக்கரத்தை இறுகப் பற்றிக் கொண்டேன்”.
என்று வித்துவான் தம் அனுபவத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.
1868 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் மைலாப்பூரிலுள்ள தேவாலயத்தில் யஹன்றி ஆல்பிரெட் என்னும் பெயரை ஏற்று திருமுழுக்குப் பெற்றார். இக்காட்சியைக் கண்ணாரக் காண வந்தவர்களின் தொகை அதிகம். நம் வித்துவானுக்கு அப்போது வயது முப்பது. முப்பது வருடம் இவர் பிடிவாதம் உள்ள கொடிய வைணவராயிருந்து, பெருமாள் என்னும் தெய்வத்திறகு ஆட்பட்டிருந்தவர், சமயநெறி தவறாதவர், மதவைராக்கிய முடையவர். ஐந்துலோகத்தால் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சங்கு சக்கரமாகிய முத்திரயைப் பழுக்கக் காய்ச்சி தன்னிரு தோளிலும் சூடு போட்டிருந்தவர். இந்நிலையிலிருந்து தாம் மீட்கப்பட்ட காலத்தில் இவரது மனநிலையை இவர் பாடிய கீழ்வரும் செய்யுளில் காணலாம்.
பிறவியில் பிடிவாத கொடியவை ணவனாய்ப்
பிறந்து முப்பது வற்சாம்
பிரபஞ்ச மயல்கொண்டு மூடர்ந்த காரப்
பிழப்பில் அடைபட் டுழன்று
மறவினைக் காளாகி நெறியிலாத் தூர்த்த
மனவாஞ் சைக்கிடங் கொடுத்து
மருளுற்று வறிதுநாள் செலவிட்ட நீசன்எனை
மலர டிகாட் படுத்தி
குறைவிலாப் பேரரு ளளித்தின் றுகாறும்
குறிகொண்டு காத்தி யயனினும்
கொச்சைமதி யேற்கின்னும் நன்றியறியாக் கெட்ட
குணதோசம் ஒழிய விலையே
இறைவலப் புறமிருந் தடியருக்காப்பரிந்
தென்றுமன் நாடு முகிலே
ஏகநா யகசருவ லோகநா யககிறிஸ்
தியேசு நாயக சுவாமியே
மீட்பு என்பது ஒரு மதம்விட்டு இன்னொரு மதம் புகுவதல்லவென்பது வித்துவானுக்கு நன்குத் தெரியும். அப்போஸ்தலரான புனித பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் கூறியபடி மீட்பு என்பது ஒரு புதிய நிலைமை என்பதை உணர்ந்தார். அது மரணத்தினின்று வாழ்வுக்கு வருவது போலவும், இருளிலிருந்து வெளிச்சத்துக்குள் நுழைவது போலவும், பிசாசின் அடிமைத்தனத்தினின்று இறைமகன் தன்மையை அடைவது போலவும் இருக்கின்றது என்பது நம் வித்வானின் கருத்து. இதைக் குறித்து இரட்சணிய மனோகரம் என்னும் நூலில் இவர் அனுபவார்த்தமாகக் கூறுவதாவது.
“ஆகாமி யத்திலே செத்துக்கி டந்தஎனை
ஆவி யில்உயிர்ப் பித்தனை
அஞ்ஞான இருளோடு கண்கெட்டலைந்தவெற்
கலியா தஒளி காட்டினை
மாகாத கப்பேயின் அடிமையாய்ப் போனானை
வலியக் பிடித்த ழுந்தன்
மகிமைக் குயர்த்திக் கிறிஸ்துவுக் குள்எனையும்
மைந்தன னாப்ப வித்தனை
தேகாதி பிரபஞ்ச நச்சித்தி ரிந்துவனைச்
சேவியாப் பாவி யேற்குத்
திருவுளம் இரங்கிநீ செய்த இந்நன்றியைச்
சிதையாத சிந்தை தருவாய்
பாகாயயன் உளமூடு மதுகரிக்க நல்லருள்
பழுத்தொழு குஜீவ தருவே
பக்தசன பரிபால நித்யம அவர் அநுகூல
பரமார்த்த பரம நிதியே”
இவ்வாறு இயேசு கிறிஸ்துவினால் உண்டான மீட்பை மனமகிழ்ச்சியுடன் அனுபவித்து வருங்காலத்தில் யஹன்றி பவர் எனும் பண்டிதர் சென்னைக்கு வந்து விவிலியத்தை தமிழ் நடையில் மொழிபெயர்க்கும் ஊழியத்துக்கு வித்வானைத் தெரிந்து கொண்டார். ஆயினும் இக்கட்டான சூழல் காரணமாக தமது குடும்பத்தாரை ஆதாயப்படுத்தும் வண்ணம் இவர் பாளையங்கோட்டைக்கு வந்து சேர வேண்டியிருந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment