Pages - Menu

Monday 28 August 2017

எனக்கான சுதந்திரம் எதற்காக?

எனக்கான சுதந்திரம் எதற்காக?

குடந்தை  இதயா கல்லூரி மாணவிகளின் கருத்தோட்டம்

ஒருங்கிணைப்பு‡ அருட்சகோ. விமலி FIHM,

நீயே நீயாக வாழ இருக்கும் சூழல்தான் சுதந்திரம் என்கிறார், ஜிம்மோரிசன்.

சுதந்திர சூழலில்தான் உன்னத கலைகள் வெளிப்படும் என்கிறார், கிறிஸ்டோ.

சுதந்திரத்துடன் வரும் பொறுப்புணர்வை புரிந்து கொள்பவர்தான் உயர்ந்த மனிதராகிறார் என்கிறார் பாபு டைலன்.

மனிதரை உயர்த்தும் அவரின் மாண்பினைக் காக்கும் சுதந்திரம் நம் நாட்டில் எந்நிலையில் உள்ளது என  குடந்தை  இதயா கல்லூரி மாணவிகள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மணிபுரியில் பெண்களின் இனிய சுதந்திரம்: (அழகுப்புஷ்பம், தமிழ் இலக்கியம் முதுகலை முதலாமாண்டு, அறந்தாங்கி)

      இமா (Ima) மணிப்புரி மொழியில் அம்மா என்று பொருள்: கெய்த்தல் (Kaithel) என்றால் சந்தை. நகரின் மையத்தில் அமைந்துள்ளது இமாசந்தை. பெண்கள் மட்டுமே அந்தச் சந்தையில் விற்பனையாளர்கள் (Sellers): நான்காயிரம் பெண்கள்! மதம், சாதி வித்தியாசமின்றி பெண்கள் இமா மார்க்கெட்டில் வணிகம் செய்ய மாநகராட்சி உரிமம் வழங்கியுள்ளது. உலகில் பெண்களே நடத்தும் ஒரேயயாரு சந்தை இது. சுற்றுலாப் பயணிகளின் தனிக் கவர்ச்சி இதுதான். மாநிலத்தின் வணிகப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு செலுத்துவதும் இதுதான். இந்த அங்காடி வளாகத்தில், கிடைக்கும் பொருட்களுக்கு கணக்கு இல்லை. காய்கள், கீரைகள், அரிசி, பயறுவகை, பருப்புவகை, இறைச்சி, மீன், கருவாடு உணவுப் பொருட்கள்: அனைத்து வகையான ஆடைகள், எண்ணெய், நாட்டு வாசனைத் திரவியங்கள் வரை வாழ்வுக்குத் தேவையான அத்தனையும் விற்கிறார்கள். கீழ்த்தட்டு, நடுத்தட்டு பெண்கள், கிராமப்புறப் பெண்டிரின் இமா மார்க்கெட் சம்பாதனையே குடும்பத்தைக் காக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில், மணிப்பூரில் பல குடும்பங்களில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக உலவுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு வாழ்வு முறை. இன்று நான் வாழும் இந்த தமிழகத்தில் இந்நிலை இருக்க வேண்டுமென்று என்னுகிறேன் இதுவே எனது சுதந்திர எண்ணங்களாகும். 

தாய்மொழி பெற வேண்டிய சுதந்திரம்:  (ஜெயப்பிரியா, ஆங்கிலம் இலக்கியம் முதுகலை இரண்டாமாண்டு,   ஜெயங்கொண்டம்)

  கற்றல் என்பது இன்று மிகவும் வடிவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. மதிப்பெண் பெறுவது, வெற்றியைப் பெறுவது, சான்றிதழ்கள் பெறுவது, உயர்கல்வி நிறுவனத்தில் இடம் பெறுவது, மேல்நாட்டுக்குச் செல்வது என்று வடிவமயப் படுத்தப்பட்டிருக்கிறது. கற்பதை அறிவாக மாற்றுவது எப்படி? படிப்பில்லாத மக்களுக்குப் படிப்பில்லாத போதும் பிரச்சினை: படிப்பு கிடைக்கையிலும் பிரச்சினை. நவீன படிப்பு என்பது பற்றி நாம் போதிய முறையில் சிந்திக்கவில்லை. நவீனக் கல்வி என்பது பண்பாட்டோடு இணைக்கப்படவில்லை. தமிழ் என்று ஒரு இலக்கியம் இருக்கிறது என்று  தமிழருக்கு புரியவில்லை. நவீன கல்வியானது அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பண்பாட்டிலிருந்து பிறந்ததாக அமையவில்லை. இதை மாற்றும் சுதந்திரம் இன்று இந்தியாவிற்குத் தேவை. இதுவே எனது விருப்பம். 

  கற்றலில் சுதந்திர சூழல்: (நா.ராஜேஸ்வரி, தமிழ் இலக்கியம் முதுகலை இரண்டாமாண்டு, கும்பகோணம்)
 
உண்மை அறிவு என்பது மேல் தோற்றத்தை உண்மை என்று ஏற்காது. அது கண்ணுக்குத் தெரியா ஆழங்களில் துண்டு துணுக்காய் இருக்கும் அறிவை ஒன்றிணைத்து காணும் வல்லமை பெற்றதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி தரத்திற்கேற்ப, சமூகம் சார்ந்த சிந்தனைகளுடன் இரண்டறக் கலக்கையில், நம் சமூகத்தின்  சமத்துவமின்மை, தீண்டாமை, திரைப்பட நடிகர் வழிபாடு, தலைவர் வழிபாடு, தமிழகக் கட்சிகளில் நிரந்தரத் தலைவர்கள் என்ற போக்கு போன்ற விமர்சிக்கப்படும். விமர்சன அறிவு (ளீrஷ்மிஷ்உழியி சிஐஆற்ஷ்rதீ) என்பது உலகம் எங்கும் போற்றிப் பாதுகாக்கப்படும் அறிவுமுறையாகும். மாணவர்கள் இயற்கையாய் வாழும்போது வாழ்வின் முழுப் பரிமாணம் வளரும். இந்த நிலை இன்றைய கல்வி திட்டத்தின் நிலையாக இயங்கி வளரவேண்டும். இதை அரசே முன்னின்று செய்ய வேண்டும் என்பதே எனது மக்களின் கல்விக்கான சுதந்திரமாக நான் எண்ணுகிறேன். 

சுதந்திரத்தால் முன்னேற்றம்: (நா.ராஜேஸ்வரி, தமிழ் இலக்கியம் முதுகலை இரண்டாமாண்டு, கும்பகோணம்)

உறுதியோடு உறவாடும் உன்னதமான உயிரான சுதந்திரமே! என் கனா காணும் வினாக்களுக்கு விடையாக நீ இரு! வலியச் சென்று தேடும் பொருள்கள் தொலைவில் இல்லை! வலியோடு தேடும் பொருள்களும் தொலைவதில்லை! யாரையும் சார்ந்து நில்லாமல், காரணங்களைத் தேடாமல், எடுப்பார் கை பிள்ளையாக இராமல், சூழ்நிலைக் கைதியாகச் சிறைபடாமல், கைகட்டி சேவகம் செய்யாமல், கூழைக் கும்பிடு போடாமல், தடைகளினால் தடம் புறளாமல், வீண் பெருமையில் மூழ்கிப் போகாமல், பணிகளை வாய்ப்புகளை நழுவ விடாமல், அற்ப மானிடர் முன் தலைகுனியாமல் வாழும் வாழ்வு தேவை! இத்தகைய வாழ்வு இத்தரணிக்கு நிரந்திடமாகிட தகுதி, திறன், தரம் நிரந்தரமானால், தரணியில் இனிய தாரகை புனிதமான சுதந்திரத்திற்கு தொடர் முயற்சியோடு கை கோர்த்தால் முன்னேற்ற ஏறுமுகமாக இருக்கும் என்பதே என் ஆசை. 

பெண்களின் சுதந்திரம்: (கி.சந்தியா, வயது 19, வேப்பத்தூர்)

  இந்த தேசத்தின் சுவாசமாக உள்ள பெண் குழந்தைகளின் சுதந்திரத்தை ஆற்றல்மிக்கவர்களாக உறுதியுள்ளவர்களாக வளர ஊக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலான பெண்கள் தங்களின் திறமைகளை, தனித்துவத்தை, தன்மானத்தை, சுயமரியாதையைக் கெளரவத்தை திருமணம்,குடும்பம், குழந்தைகளுக் ‡காகத் தியாகம் செய்து விடுகிறார்கள். அதற்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆண், பெண் இருவருமே  சுகமாக மகிழ்வாக வாழ்வதுதான் நீதியானது என்பதைத் தற்போது சிலர் உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. 

சமத்துவ சுதந்திரம்: (பா.துர்கா லெஷ்மி,  முதுகலை இரண்டாமாண்டு கணிதம், ஆடுதுறை)

  ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவில் வைக்கச் சொன்னார் பாரதி. நாமோ கவுரவம் என்கிற ஒரு வார்த்தையைப் பெண்ணின் தோளேற்றி இந்த நூற்றாண்டிலும் அவளைச் சுமக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். தனக்கான மணத்தேர்வைச் செய்வதற்கும், அதன் அடிப்படையில் வாழ்வதற்கும் இயலாத நிலையில் இருக்கும் பெண்ணின் இடம் எத்தனை கொடுமையானது. பால் அடையாளத்தின் பொருட்டு பெண் இழந்துவிட்ட எண்ணற்ற வி­யங்களை அவளுக்கானதாகக் கை மாற்றும் காலமாக இனிவரும் காலம் இருக்கட்டும். ஆணும் பெண்ணுமே இந்த வாழ்வை, குடும்ப அமைப்பின் விழுமியங்களாக, தோளில் ஏற்றவோ, அல்லது உதறித் தள்ளவோ இணையட்டும். இந்த வாழ்வென்பது வாழ்ந்து கடக்கவே, வன்முறையினால் வீழ்ந்து கிடக்க அல்ல. 

ஆ.ஸ்டேசி தெபோரா, முதுகலை இரண்டாமாண்டு கணிதம், திருவையாறு.

  ஆண், பெண் இருவரும் உடலினால் மாறுபட்டவர்களே அன்றி உணர்வுகளினால் ஒன்றுபட்டவர்கள் என்பதைச் சிறுவயதிலேயே புரியவைத்துவிட வேண்டும். இருவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை நம் வீடுகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். எத்தனை யுகங்கள் ஆனாலும் பெண்கள் தியாகியாகவே இருக்க வேண்டும் என்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். பெரும்பாலான ஆண்களால் பெண்களின் துணிவை, முன்னேற்றத்தை, சதுரியத்தைத், திறமையைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஆண், பெண்ணை அடக்க நினைக்காமல், அன்புகூர்ந்து, அரவணைத்து வாழும் இல்லறம்தான் இன்பம் பொங்கும் நல்லறம். இதுவே நம் நாட்டின் சுதந்திரம். 

 கி.கவிதா, முதுகலை இரண்டாமாண்டு, ஆடுதுறை.

உரிமைகள் சுதந்திரங்கள், பாதுகாப்பு அனைத்திற்கும், ஆணைப்போன்று பெண்ணுக்கும், அனைத்து வகையிலும் சமத்துவம், சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. சபையின் அறிவிப்பும் வழிகாட்டுதலும் (பிரிவு‡3) வழங்கப்பட்டு 68 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதற்குப் பின், அதை அடியயாற்றி உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 முதல் 18 வரையிலான பிரிவுகள் இருபாலாருக்குமான சுதந்திரத்துவ உரிமைகளைப் பற்றி அறுதியிட்டுக் கூறியுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக அமைவது சமத்துவம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறாகவும் அமைகிறது. 
 
இன்று மேலே குறிப்பிட்டுள்ள ஒரு சில உண்மைகளைக் கண்திறந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நான் நானாக பொறுப்புடன் வளர்வதற்கு ஏற்ற சூழல் நம் நாட்டில் நிறையவே வளர வேண்டும். சமய சுதந்திரத்தை வேரருக்கும் செயலை, மத்திய அரசு மிக தீவிரமாக செய்து வருகிறது. இதில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் புதைக்கப்படுகிறது. இன்னும் வேண்டிய சமவாய்ப்பு நிலைகளை அழித்து வருகிறது. நான் மட்டும் நன்றாய் இருந்தால் போதும் என்ற எண்ணம் தான் ஊழலின் அடிப்படை இருட்டு.
மேல் நாடுகள் சுதந்திர சூழலில் மக்கள் வாழ வழிசெய்கிறது. மக்கள் வளர, இதனால் நாடு வளர்கிறது. நம் நாடும் வளரும் நாடு என்ற வரிசையில் நிற்கையில், சுதந்திர உயிர்நிலத்தை நாட்டில் உலவ செய்து மனிதரை, நாட்டை வளர செய்வோம்...
     

No comments:

Post a Comment

Ads Inside Post