அன்னை மரியாவின் விண்ணேற்பும், நமது விடுதலை வாழ்வும்
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்
நாசரேத்தூர் நல்லாள் மரியாள். உலக மீட்பரின் தாய். இறைவனின் அன்னை. எனவே மரியாள் ஒரு போதும் மரியாள். எனவேதான் மரியா என்பது மாதா பக்தர்களின் ழுழக்கமாகியது.
அன்னை மரியா மரித்தாரா?
ஆம். இயேசுவைப் போன்றும் எல்லா மனிதரைப் போன்றும் மரியா மரித்தார். அழிவுக்குரிய இவரின் உடல் அழியாமை பெற்று நிலையான வீடுபேறு நோக்கி எடுத்துக் கொள்ளப்பெற்றது. இதுவே மரியாவின் விண்ணேற்பு எனப்படுகின்றது.
அன்னை மரியா பற்றிய நம்பிக்கைக் கோட்பாடுகள்:
மரியா இயேசுவின் தாய் என்ற நிலையில் மிகவும் உயர்ந்த நிலையிலேயே திருச்சபையின் தொடக்கக் காலத்திலிருந்து கருதி வணங்கப்பட்டு வந்தார். மரியா பற்றிய புரிதல்களின் வரலாறு மிகவும் நீண்ட நெடியதொன்றாகும். பல்வேறு சர்ச்சைகள், கருத்து மோதல்களுக்குப் பின்னரே கீழ்க்காணும் நம்பிக்கைக் கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
1. கி.பி. 431 எபேசு திருச்சங்கம் ‡ இறைவனின் அன்னை மரியா
2. கி.பி. 649 லாத்தரன் திருச்சங்கம் ‡ என்றும் கன்னியான மரியா
3. கி.பி. 1854 திருத்தந்தை 9 ஆம் பயஸ் ‡ அமல உற்பவியான மரியா
4. கி.பி. 1954 திருத்தந்தை 12 ஆம் பயஸ் ‡ விண்ணேற்படைந்த அரசியாம் மரியா
மரியாவின் விண்ணேற்பு பற்றிய நம்பிக்கைக் கோட்பாடு அறிக்கை:
மரியா இயேசுவின் தாயாக மட்டுமன்று, இயேசுவின் முதன்மைச் சீடத்தியாகவும், மீட்கப்பட்டோரின் கூட்டத்தில் தலைப்பேறாகவும் திகழ்கின்றார். எனவே இவர் பிறக்கும் பொழுதும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களிலும், இறப்பிற்குப் பின்னரும், பாவ மாசின்றித் திகழ்ந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னரும் இவரின் உடல் அழியாது ஆன்மாவோடு விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனை திருச்சபையின் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவிக்க வேண்டும் என்று 1869 - 1870களில் நடைபெற்ற முதல் வத்திக்கான் திருச்சங்கத்தில் பங்கேற்ற 200 ஆயர்கள் வலியுறுத்தினர். 1922 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு விண்ணேற்பு அன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் 1895 ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட கடிதத்தின் மூலம் அன்னையின் விண்ணேற்பு பற்றிய கருத்தினை அறிந்து கொள்ள முற்பட்டார். 95 விழுக்காடு ஆயர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கினார்கள். பல்வேறு தேதிகளில் விண்ணேற்பு விழா கொண்டாடப்பட்டாலும் ஆகஸ்ட் 15 உரிய நாளாகக் கருதப்பட்டது.
Munificient Tissimus Deus என்னும் திருத்தூது மடல் மூலம் 1954 நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ் மரியாவின் விண்ணேற்பினை திருச்சபையின் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தார். அமல உற்பவியான கன்னி மரியாவின் உடல் அழியாது ஆன்மாவோடு விண்ணகத் தந்தையினால் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றது என்பதுவே இம்மடலின் மையக் கருத்தாகும். எனவே ஆகஸ்ட் 15 பெருவிழாவாகவும், கடன்திருநாளாகவும் விண்ணேற்றப் பெருவிழா கொண்டாப்பட்டு வருகிறது.
மரியாவின் விண்ணேற்பும், இந்தியாவின் விடுதலையும்:
இவ்வுலக தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்றவரே மரியா. இந்தியா ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலைப் பெற்றது போன்று அனைத்து தீய அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம் என்னும் நோக்கில் இந்தியா தனது 70 ஆம் ஆண்டு விடுதலை விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளை எண்ணித் தலை வணங்குகின்றது.
அகிம்சையயனும் தத்துவமும் அதன் விளைவுகளும்:
1857 ஆம் ஆண்டு தொடங்கியது இந்திய விடுதலைப்போர். சத்தியாக்கிரகம் மற்றும் அகிம்சை இரண்டையும் இரு கண்களாகப் போற்றிச் செயல்படுத்திக் காட்டிய மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலைப் போர் நடந்தது. கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்றை நடத்தி எமது சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்ற ஆணவம், கர்வம் நிறைந்த பிரிட்டிஷாரை விரட்டியடித்தோம். கண்ணீரும், செந்நீரும் சிந்தி செக்கிழுத்தும், உயிரை இழந்தும் சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகச் செம்மல்களின் கனவுகள் இன்றைய பாரத நாட்டில் நனவாகிறதா என்பதனை எண்ணிப் பார்க்கும் நாளே இந்த நாள்.
விடுதலை பெற்ற இந்தியாவின் தனித்துவப் பயணம்:
பல்வேறு இனம், மொழி, மதம், கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்தியா தனக்குள் சண்டையிட்டுக் கொண்டு பிளவுபட்டு விழும் என்ற வெள்ளையரின் அவலாசையைப் பொய்யாக்கி ஒரே இந்தியா என்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். உலகுக்கே வழிகாட்டும் மக்களாட்சி தத்துவத்தின்படி ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் நடத்தி உலகின் தலை சிறந்த மக்களாட்சி நாடாகத் திகழ்ந்து வருகின்றது. நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள், பங்காளிச் சண்டைகள். இவைகள் மத்தியிலும் வேற்றுமையில் ஒற்றுமை. எல்லோரும் ஓரினம். அதுவே எமது இந்தியா என்பதனை உலகுக்குப் பறைசாற்றி வருகிறோம்.
முதல் பிரதமர் நேரு முதல் இன்று வரையில் தனக்கென தனிக்கொள்கையை வகுத்துக் கொண்டு எந்நாட்டினருக்கும் அதாவது பீடு நடைபோட்டு வருகின்றோம் நாம். ஆண்டு 70 ஆயினும் இளமை உள்ளங்கொண்டு இந்தியா திகழ்கின்றது. எனினும் நமது விடுதலைப் பயணம் முழு நிறைவடைந்ததாகச் சொல்ல முடியவில்லை. மக்களைக் கொண்டு மக்களுக்காக, மக்களாலே உருவாக்கப்படும் அரசு மக்கள் நலனில் முழுமையான ஈடுபாட்டோடு செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே.
விடுதலை இந்தியாவின் வளர்ச்சியும், தளர்ச்சியும்:
பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றின் மூலம் உணவு தானியப் பெருக்கம், பால் உற்பத்திப் பெருக்கம் மக்களின் தேவையை நிறைவு செய்தது. 1990 வரை யe ணூஐdஷ்ழிஐ யற்தீ ணூஐdஷ்ழிஐ என்ற கொள்கை மூலம் தனது உள்நாட்டுப் பெருக்கத்தில் மட்டுமே இந்தியா முழுக் கவனம் செலுத்தியது. 1990 ஆம் ஆண்டு முதல் உலகமயமாதல், தாராளமயமாதல் என்னும் இரு கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலகச் சந்தையில் கிடைக்கும் எல்லாப் பொருள்களும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் சுதந்திரமாக தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி அனுபவிக்கின்றனர். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருள்கள் மூலம் கணிணியுகத்தில் நாம் பயணிக்கின்றோம். 10,15 ஆண்டுகளுக்குள்ளாக ஊடகப் புரட்சி (ளீலிதுதுற்ஐஷ்உழிமிஷ்லிஐ யூeஸலியிற்மிஷ்லிஐ) ஏற்பட்டு உலகின் மூலை முடுக்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் எல்லா மக்களாலும் அறியப்பட்டு வருகிறது. இந்திய இளம் விஞ்ஞானிகள் பலர் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். நமது கரங்களில் தவழும் செல்போன்கள் ஊடகப் புரட்சியினுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார் மகாத்மா காந்தியடிகள். கிராமியப் பொருளாதாரமே இந்தியப் பொருளாதாரம். நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. கிராமியப் பண்பாடு, கிராமியக்கலை, கலாச்சாரம் போன்றவை நவீன வளர்ச்சி என்ற அரக்கனின் கரத்தால் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் பகட்டான அற வளர்ச்சி. மறுபுறம் குழி விழுந்த கன்னங்கள் ஒட்டிய ஏழைக் கிராமத்தினர். தனது சுயத்தை இழந்து பாரம்பரிய விவசாய முறையை கைவிட்டு வேலை தேடி நகரங்கள் நோக்கி நகரும் நிலை பாராட்டுதற்குரியதொன்றல்ல. உலகச் செல்வந்தர் வரிசையில் இந்தியர் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியதே. அதே வேளையில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகளைப் பிச்சைக்காரர்களாக்கி வருவது எந்த விதத்தில் நியாயம்?
அந்நிய முதலீடும் அதன் விளைவுகளும்:
எல்லா இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதுவே இந்தியா. அந்நிய முதலீடு என்ற பெயரில் பன்னாட்டுப் பண முதலைகளுக்கு இந்திய வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
நமது கிராமத்து இளைஞர்களின் திறமைகள் சிறுமைப்படுத்தப்பட்டு அயலவரிடம் கையேந்தி வேலை தேடிச் செல்ல வைப்பதுதான் விடுதலைக் கனியா? அந்நிய முதலீடு என்பதன் மூலம் இன்னொரு காலனி ஆதிக்கத்திற்கு இந்தியா தன்னை உட்படுத்தி வருவது மிகவும் வேதனையும், வெட்கமும் கலந்த செயல்பாடாகும்.
விடுதலை வாழ்வா? விடுதலை தேடும் வாழ்வா?
சுயாட்சி பெற்ற தன்னிறைவு நோக்கிப் பயணிப்பதே உண்மையான விடுதலை வாழ்வு. அனைவரும் அனைத்து வசதிகளையும் சமமாகப் பெற்று வாழச் செய்வதுவே நிதர்சனமான விடுதலையின் வெளிப்பாடுகள். ஆனால் இன்றைய நிலையில் விடுதலை முழக்கங்களைக் கேட்கும் நிலையில்தானே நாம் உள்ளோம். அரசின் நலத்திட்டங்கள் என்ற பெயரில் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் நடுவே இந்திய விடுதலை சின்னா பின்னமாகித் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றதே!
விடுதலையின் பன்முகப் பரிமாணங்கள்:
அன்பர் பணிச்செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே -தாயுமானவர்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு ஏழையரில் ஒருவராகச் செயல்பட்டுச் சுதந்திரம் பெற்றுத் தந்தனர் தியாக சீலர்கள். இன்றையக் காலத்தில் விடுதலைப் பற்றிய கருத்தும் அதன் பரிமாணமும் பெருகிக் கொண்டே செல்கிறது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, சமய விடுதலை, அநீதிக் கெதிரான விடுதலை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் காக்கும் விடுதலை போன்றவையே அவை.
மக்களின் வாழ்வாதாரம் காக்கும் விடுதலைப்போர்:
உலகுக்கெல்லாம் சோறிடுவோர் உழவர். எனவே தான் உழவுத்தொழில் அனைத்துத் தொழில்களிலும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், நுஹிறூளீ யின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் உரிமை முழக்கங்கள் நமதாகி ஒலித்திடல் வேண்டும். பற்றி எரிந்த எரிவாயு குழாயை அடைக்கக் கோரிய கதிராமங்கலத்தில் போலீஸ் தடியடி, 10 பேர் கைது என்ற செய்தி கொள்ளையடிப்போர் சார்பான அரசின் செயல்பாடுதானே? இது மக்கள் நலன் பேணும் அரசா? இல்லை மக்களை அழிக்கும் அரசா?
தீமையையும், திணிப்பையும் எதிர்த்துத் திராணியுடன் போராடிய எலியா போல்..
இன்றைய மத்திய அரசு காவிமயமாக்கும் கல்விக் கொள்கையைத் திணிக்கிறது. சமஸ்கிருத, இந்தி மொழிகளைத் திணிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் திணித்து பொது மக்களை வாட்டி வதைத்தது. தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டினை அழிக்க ஜல்லிக்கட்டு ஒழித்தல், மாடுகள் விற்றல், வாங்கல் போன்றவற்றைத் தடுத்து அந்நிய நாட்டுக் கால்நடைகளைக் கொண்டு வந்து திணிக்கிறது. பாரம்பரிய வீரிய விதைப் பேணுதலை விடுத்து மாண்டேப் போன்ற அயல்நாட்டு விதைகளைத் திணிக்கிறது. ஜி.எஸ்.டி வரியைத் திணிக்கிறது. இவற்றினை எதிர்த்து நாம் திராணியோடு போராட வேண்டும்.
தீமைகளை எதிர்த்துப் போராடிய விவிலியத் தலைவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் இறைவாக்கினர் எலியா. இவர் திராணியோடு போராடியவை...
1. ஆணவத் திணிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஈசபேல் (1 அரசர் 16:29- 22). தீர், சீதோனின் பாகலின் தெய்வ வழிப்பாட்டைத் திணித்த ஈசபேலைத் திராணியோடு எதிர்த்து வெற்றிக் கொள்கிறார் எலியா (1 அரசர் 18)
2. தம் ஆணவ அரக்தனத்தால் ஏழை நாபோத்தைக் கொன்ற ஈசபேலைக் கடுமையாகச் சாடுகின்றார். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் ஈசபேலின் இரத்தத்தை நக்கி, தின்றழிக்கும் என வெஞ்சினம் உரைக்கின்றார்
(2அரசர் 21 ).
3. ஆகாபின் வழித்தோன்றல் அகசியா அரசர் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செயூரின் வழிப்பாட்டைத் திணித்ததைத் திராணியோடு எதிர்த்து வெற்றி காண்கின்றார் (2அரசர்1)
வேண்டும் இன்னொரு விடுதலைப் போர்:
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து தன்னுணர்வோடு மெரினாவிலும், தமிழகமெங்கும் ஒன்று திரண்டது இளைஞர் எழுச்சி. துருப்பிடித்த அரசியல் எந்திரம் சரி செய்யப்படல் வேண்டும். பாழாக்கும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊழலில் மலிந்து போன பழம் பெருச்சாளிகள் தூக்கியயறியப் படவேண்டும். எழுச்சிக் கொண்ட இளைஞர் படை புதிய பாரதம் படைத்திட திராணியோடு செயல்படட்டும். எனவே நமக்கு வேண்டும் இன்னொரு விடுதலைப்போர்.
இனியயாரு விதிசெய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்.
தனியயாருவனுக்கு உணவில்லை யயனில்
ஜகத்தினை அழித்திடுவோம். ‡ சுப்ரமணிய பாரதி.