Pages - Menu

Wednesday, 1 June 2016

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு, 12 - 06 - 2016

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு 12 - 06 - 2016

1 சாமு 12 : 7 - 10, 13                         கலா 2 : 16, 19 - 21                    லூக் 7 : 36 - 8 : 3

இன்றைய நற்செய்தி, மன்னிப்பில் இருக்கின்ற சுதந்திர தன்மையை விளக்கி கூறுகின்ற படமாக அமைகின்றது. இது சீமோனுக்கும், இந்த பாவியான பெண்ணிற்கும் இடையில் நடக்கும் காட்சிகள் அல்ல. மாறாக, நமக்கும், இயேசுவுக்கும் இடையே நடக்கின்ற மன்னிப்பு போராட்டத்தில், நாம் சீமோனாக இருக்கின்றோமோ அல்லது பாவியான பெண்ணாக இருக்கின்றோமோ என்பதை சீர்தூக்கி பார்க்க விடுக்கப்படும் அழைப்பு.

நம்முடைய வாழ்க்கை - குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போதும், மனிதர்களைவிட சட்டதிட்டங்களுக்கு அதிக மதிப்பளிக்கும் போதும், நம்மை போல இயேசுவையும் மாற, சிந்திக்க, எதிர்ப்பார்க்கின்ற போதும், நாம் நாமாக இல்லாமல் நடிக்கின்றபோதும், பிறர் நம்மை பார்க்க வேண்டும் என்கின்ற வாழ்க்கை வாழ்கின்ற போதும், பிறரை ஒதுக்கி ஓரம் கட்டி தீர்ப்பிடுகின்ற போதும், நாம் சரியானவர்கள் என்றும், பிறர் தவறானவர்கள் என்றும் நம்மை நாமே நியாயப்படுத்தும் போதும், நம்முடைய பதவி, இடம் குறித்து அதீத அகங்காரத்தில் பிறரை பூச்சிகளாக பார்க்கின்ற போதும் நாம் ‡ சீமோன்களாகவே இருக்கின்றோம். சீமோனாக வாழ்கின்ற போது ‡ நம்முடைய வாழ்க்கை கடினமானதாகவும், மூடிய வாழ்வாகவும் இருக்கும்.  அப்போது நாம் நமக்கு முன் இருக்கின்ற முழுமையான வாழ்வை பெற்றுக்கொள்ள போவதில்லை.

அடுத்தவர்களால் நம்முடைய வாழ்க்கை நிச்சயிக்கப்படுவதை அனுமதிக்காத போதும், இயேசு கிறிஸ்துவை போல பார்க்க, சிந்திக்க, நடக்க கற்று கொள்கின்ற போதும், பிறருக்காக நடிக்காமல், முகமூடி அணியாமல் வாழ கற்று கொள்கின்ற போதும், இயேசுவின் மன்னிப்பை நம்பி அவரிடம் நாம் சரணடைகின்றபோதும், நம்மை, நம் தவறான வாழ்க்கை பாதையை திருத்திக் கொள்ள மனம் உள்ளவராக இருக்கின்ற போதும், தெரிந்த கண்ணோட்டத்தோடு ஒளிவு மறைவு இல்லா வாழ்க்கையை கையாளுகின்ற போதும்,நாம் அனைவரும் பாவியான பெண்ணை ஒத்த வாழ்க்கை வாழ்ந்து இயேசுவின் மன்னிப்பை பரிசாக பெற்று கொள்கிறோம்.

பாவியான பெண்ணைப்போல வாழ்கின்ற போது நம்முடைய வாழ்வு ஒளிவு மறைவற்றதாகவும், நேர்மையானதாகவும், கண்ணீர் நம் பாவங்களை கழுவுகிற, புதுவாழ்வு தருகின்ற ஜீவ ஞானஸ்நான தண்ணீராகவும் மாறுகின்றது. பழைய வாழ்க்கையை கட்டி புரள அவசியமில்லை. மன்னிப்பு என்பது எதிர்காலத்தை காட்ட கூடிய, வசந்தத்தை வாழ்வில் சேர்க்க கூடிய ஒரு விந்தையான வீட்டிற்கான வாயில் என்றே சொல்லலாம்.

இத்தகைய இருவரில் நாம் யாராக இருக்க விரும்புகின்றோம் என்பதை சிந்திப்போம், புதுவாழ்வை பரிசாக பெறுவோம்.
மற்றவர்களை தீயவர் என தீர்ப்பிடாதீர்கள்
அவர்கள் நாம் செய்யும் தீமைகளைத்தான் வேற்று வடிவில் செய்கிறார்கள் ‡ ஒரு பழமொழி
வாழ்க்கையில் மற்றவர்கள் முன் நடித்து காட்டிக் கொள்வதை அப்படியே வாழ்ந்து விட்டால் அதுதான் உண்மையான பெருமையாகும் ‡ சான் ரடிஸ்
நேர்மையைப் போன்ற சிறந்த செல்வமில்லை ‡ வில்லியம் ஷ


No comments:

Post a Comment

Ads Inside Post