திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
02 - 12 - 2016
எசா 11 : 1 - 10; உரோ 15 : 4 - 9; மத் 3 : 1 - 12
மனமாற்றம் என்ற மாய விளக்கு
பவுல் அடிகளாரின் மனமாற்றத்தைக் குறிப்பிட, ‘மாற்றம் தரும் ஆற்றல்’ என்று ஒருவர் விளக்கினார். வளர்ச்சியில் இடம்பெறுவது மாற்றம். தாவரங்கள், உயிரினங்கள் வளர்ச்சியில் உருவத்தின் மாற்றத்தில் காணலாம். மனிதரின் வளர்ச்சியில், மனிதரின் மனம், மைய இடத்தைப் பெறுகிறது.
திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று, திருவழீபாடு திருமுழுக்கு யோவானை நம் கண்முன் வைக்கிறது. திருமுழுக்கு யோவான், ‘சின்ன இயேசு’ என்று துவக்கத் திருச்சபையில் அழைக்கப்பட்டார். இயேசுவின் போதனையின் மையக் கருத்தான மனமாற்றம் என்ற கருத்தையே திருமுழுக்கு யோவான் வலியுறுத்தி போதித்தார். இயேசு அளித்த திருமுழுக்கினையே, மனமாற்றத்தின் அடையான செயலாக நிகழ்த்தினார். மனம் மாறாதவர்களுக்கு தீவினைகள், தண்டனைகள் காத்திருக்கின்றன என்றும் இயேசுவை போல வலியுறுத்தினார்.
‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனநலம்
எல்லா புகழும் தரும்’ (குறள் 457)
ஒருவரின் உயர்வு ஒருவரின் மனத்தை சார்ந்தது என்கிறார் வள்ளுவர்.
மனிதர் தன்னுள் இருக்கிற தீய நாட்டங்களை திசை திருப்பும்போது, இங்கே இறைவன் செயல்படுகிறார். இறைவனின் வல்ல செயல் அங்கு நடைபெறுகிறது. மனிதரிடம் நடக்கும் போராட்டம், வன்செயல்கள் மறைகின்றன. இதனைத்தான் முதல் வாசகம் விளக்குகிறது. ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்படி ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு ஆகிய எழில் மிகுப் பண்புகளை ஆவியானவர், மனமாறியவருக்கு வழங்குகிறார். அச்சூழலில் பகைமையயல்லாம் அழிகின்றன. மனம்மாறியவர் மற்றவருக்கு முன்னோடியாகத் திகழ்வர்.
இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார், கிறிஸ்து, விருத்தசேதனம் செய்துக் கொண்டவர்களுக்கு தொண்டரானார் என்றும் மக்கள் இறைவனை போற்றி புகழும் பண்பில் வளரவே, கிறிஸ்து தொண்டரானார் என்றும் கூறுகிறார்.
மனிதரிடத்தில் பிடிவாத எண்ணம், பாத்திரத்தில் படிந்த பாசானம் போல பற்றி புடித்து நிற்கிறது. குடும்பங்களை அழிக்கும் குடிபழக்கத்தை விட்டுவிட மனஉறுதி இல்லாது தமிழ்நாட்டில் கோடிகணக்கானோர் உள்ளனர். பாகப்பிரிவினை, சொத்து பிரிவினை ஆகியவைகளால் பகைமையில் மூழ்கி இருப்பவர்கள், விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக வாழ முன்வராதவர் ஏராளம். பொருள் பைத்தியம்எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. ஓர் அரசு கடைநிலை ஊழியர். அவருக்கு ஒரே மகன். நாம் கஷ்டபட்டது போல் நம் பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று செல்லமாக வளர்த்தார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே பெரிய பைக் வேண்டுமென்று பையன் கேட்டு வாங்கினான். இப்போது கல்லூரியில் சேர்க்க வேண்டும். எனக்கு கார் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்தான். ‘நம்மால் இது முடியாதப்பா. நம் வருமானத்தில் இதை வாங்கி நாம் நிர்வகிக்க முடியாது’ என்றனர் பெற்றோர். இடையில் தீய நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருளை பயன்படுத்தினான் பையன். பெற்றோர் கார் வாங்கி தராத நிலையில், ஒரு நாள் மது அருந்தி வந்து ‘கார் வாங்கி தரமுடியாத நீ என்னை ஏன் பெத்த?’என்று வீட்டீலுள்ள தொலைக்காட்சி பெட்டி, மற்ற கண்ணாடி பொருள்களை உடைத்தான்.
பையனை எப்படி மனமாற்றுவது? தந்தை ஒரு முடிவெடுத்தார். என் அலுவலில் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன், மற்றவருக்கு உதவி செய்வேன், வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வேன் என்று முடிவெடுத்து செயல்பட்டார். புதுமையாக மகனின் மனம் மாறியது. ஆர்வமாக கல்லூரி சென்று படித்து வருகிறான்.
திருவருகைக் காலம் மனதைத் திருத்தும் காலம். நல்லவராகிய இறைவனிடம் திரும்பும் காலம்.
No comments:
Post a Comment