Tuesday, 16 February 2016
Saturday, 13 February 2016
Monday, 8 February 2016
Thursday, 4 February 2016
Tuesday, 2 February 2016
இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய யாத்திரிகம்
மகாவித்துவான் யஹன்றி ஆல்பிரெட் கிருட்டிணன்
- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ,
(கிருட்டிண பிள்ளையின் மனமாற்ற போராட்டம் இங்கு விளக்கப்பட்டுள்ளது)
1868 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் மைலாப்பூரிலுள்ள தேவாலயத்தில் யஹன்றி ஆல்பிரெட் என்னும் பெயரை ஏற்று திருமுழுக்குப் பெற்றார். இக்காட்சியைக் கண்ணாரக் காண வந்தவர்களின் தொகை அதிகம். நம் வித்துவானுக்கு அப்போது வயது முப்பது. முப்பது வருடம் இவர் பிடிவாதம் உள்ள கொடிய வைணவராயிருந்து, பெருமாள் என்னும் தெய்வத்திறகு ஆட்பட்டிருந்தவர், சமயநெறி தவறாதவர், மதவைராக்கிய முடையவர். ஐந்துலோகத்தால் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சங்கு சக்கரமாகிய முத்திரயைப் பழுக்கக் காய்ச்சி தன்னிரு தோளிலும் சூடு போட்டிருந்தவர். இந்நிலையிலிருந்து தாம் மீட்கப்பட்ட காலத்தில் இவரது மனநிலையை இவர் பாடிய கீழ்வரும் செய்யுளில் காணலாம்.
பிறவியில் பிடிவாத கொடியவை ணவனாய்ப்
பிறந்து முப்பது வற்சாம்
பிரபஞ்ச மயல்கொண்டு மூடர்ந்த காரப்
பிழப்பில் அடைபட் டுழன்று
மறவினைக் காளாகி நெறியிலாத் தூர்த்த
மனவாஞ் சைக்கிடங் கொடுத்து
மருளுற்று வறிதுநாள் செலவிட்ட நீசன்எனை
மலர டிகாட் படுத்தி
குறைவிலாப் பேரரு ளளித்தின் றுகாறும்
குறிகொண்டு காத்தி யயனினும்
கொச்சைமதி யேற்கின்னும் நன்றியறியாக் கெட்ட
வித்துவான் எய்ச். ஏ. கிருட்டிணப்பிள்ளை கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைபாட்டில் தனக்கோடி ராஜிவும், வித்துவானுடைய சகோதரர் முத்தையாப்பிள்ளையும் காட்டிய சிரத்தை கொஞ்சமல்ல. இம்மூவரும் கூடி இவ்விசயத்தைப் பற்றி ஆராய்ந்து பேசி, வித்துவான் தானிருந்த சாயர்புரத்தில் கிறிஸ்துவ மறையைத் தழுவினால் பல சங்கடங்களும், கலகங்களும் ஏற்படுமாகையால் சென்னைப்பட்டினம் சென்று அவ்விடத்தில் சில காலம் தங்கி, பிறகு தம் மனைவி மக்களை வரவழைத்து, அவர்களுக்கு கிறித்துவ மறை உண்மைகளைப் புகட்டி கடைசியில் குடும்ப சகிதமான திருமுழுக்குப் பெறுவதுதான் நல்லது என்று தீர்மானித்தனர். அவ்வாறே வித்துவான் தம் மாணாக்கரைத் தமது தமிழாசிரியர் பணியில் இருத்திவிட்டு, தமது மனைவி, பிள்ளைகளை தம் சகோதரர் முத்தையா பிள்ளையின் ஆதரவில் தம் தாயார் வசம்விட்டு, தான் மட்டும் சென்னைப்பட்டினம் சேர்ந்தார். சென்னையில் மதப் போதகர்கள் அருள்திரு. கோலப், அருள்திரு. பெர்சிவல் ஆகியோரை கண்டு பேசினார். அருள்திரு. பெர்சிவல் இவரைத் தம் மதத்திலிருத்தித் தாம் பிரசுரித்து வந்த தினவர்த்தமானி என்ற இதழுக்கு இவரது உதவியைப் பெற்றார். மேலும் பிரசிடென்சி கல்லூரியில் வித்துவானை தமிழ் பண்டிதராகவும் நியமித்தார். இவ்வாறு சென்னையில் நம் வித்துவான் தங்குவதற்கான நல்ல சூழல் வாய்த்தபின் தம் குடும்பத்தினரை அழைத்துக் கொள்ளப் பலமுறை முயற்சி செய்தும் பலன் படாமற் போயிற்று, இதனால் வித்துவான் துன்பம் அடைந்திருந்தாலும், சென்னையில் இவருக்கு பலரின் அறிமுகம் கிடைத்தது. திருநெல்வேலி திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் இவருக்கு மிகவும் ஆறுதலான கடிதங்களை எழுதி வந்தனர். சென்னையில் உள்ள அருள்திரு. சிம்மண்ட்ஸ் அவர்கள் பல தடவை வித்துவானை அழைத்து அவரிடத்தில் ஆன்மீக விசயங்களைப் பற்றி பேசி வருவார். 1858ஆம் வருடம் மார்ச் 27 ஆம் நாள் கிறிஸ்துநாதரின் திருவடிகளே தமக்கு சரணாகதி என்று நம்பி, இராயப்பேட்டை கலிவன் தோட்டத்துக்குக் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டார். இக்காலத்து அனுபவத்தைப் பற்றி நம் வித்துவான் வ்வாறு கூறுகிறார்,
“அன்றே யான் பூர்வத்தில் தெரியாது ஒழுகி வந்த
இந்து மதச் சடங்குகளெல்லாம் என் மனதை விட்டு
ஒழிந்தன. மார்க்க சின்னங்களும் என் சரீரத்தைவிட்டுப்
பறந்தன. வெகு காலமாக என் மனதில் பதிந்திருந்த
ஜாதி கடடும்ஒழிந்தது. இதன் பிறகு சர்வ வல்லவரது (இயேசு)
திருக்கரத்தை இறுகப் பற்றிக் கொண்டேன்”.
என்று வித்துவான் தம் அனுபவத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.
1868 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் மைலாப்பூரிலுள்ள தேவாலயத்தில் யஹன்றி ஆல்பிரெட் என்னும் பெயரை ஏற்று திருமுழுக்குப் பெற்றார். இக்காட்சியைக் கண்ணாரக் காண வந்தவர்களின் தொகை அதிகம். நம் வித்துவானுக்கு அப்போது வயது முப்பது. முப்பது வருடம் இவர் பிடிவாதம் உள்ள கொடிய வைணவராயிருந்து, பெருமாள் என்னும் தெய்வத்திறகு ஆட்பட்டிருந்தவர், சமயநெறி தவறாதவர், மதவைராக்கிய முடையவர். ஐந்துலோகத்தால் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சங்கு சக்கரமாகிய முத்திரயைப் பழுக்கக் காய்ச்சி தன்னிரு தோளிலும் சூடு போட்டிருந்தவர். இந்நிலையிலிருந்து தாம் மீட்கப்பட்ட காலத்தில் இவரது மனநிலையை இவர் பாடிய கீழ்வரும் செய்யுளில் காணலாம்.
பிறவியில் பிடிவாத கொடியவை ணவனாய்ப்
பிறந்து முப்பது வற்சாம்
பிரபஞ்ச மயல்கொண்டு மூடர்ந்த காரப்
பிழப்பில் அடைபட் டுழன்று
மறவினைக் காளாகி நெறியிலாத் தூர்த்த
மனவாஞ் சைக்கிடங் கொடுத்து
மருளுற்று வறிதுநாள் செலவிட்ட நீசன்எனை
மலர டிகாட் படுத்தி
குறைவிலாப் பேரரு ளளித்தின் றுகாறும்
குறிகொண்டு காத்தி யயனினும்
கொச்சைமதி யேற்கின்னும் நன்றியறியாக் கெட்ட
குணதோசம் ஒழிய விலையே
இறைவலப் புறமிருந் தடியருக்காப்பரிந்
தென்றுமன் நாடு முகிலே
ஏகநா யகசருவ லோகநா யககிறிஸ்
தியேசு நாயக சுவாமியே
மீட்பு என்பது ஒரு மதம்விட்டு இன்னொரு மதம் புகுவதல்லவென்பது வித்துவானுக்கு நன்குத் தெரியும். அப்போஸ்தலரான புனித பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் கூறியபடி மீட்பு என்பது ஒரு புதிய நிலைமை என்பதை உணர்ந்தார். அது மரணத்தினின்று வாழ்வுக்கு வருவது போலவும், இருளிலிருந்து வெளிச்சத்துக்குள் நுழைவது போலவும், பிசாசின் அடிமைத்தனத்தினின்று இறைமகன் தன்மையை அடைவது போலவும் இருக்கின்றது என்பது நம் வித்வானின் கருத்து. இதைக் குறித்து இரட்சணிய மனோகரம் என்னும் நூலில் இவர் அனுபவார்த்தமாகக் கூறுவதாவது.
“ஆகாமி யத்திலே செத்துக்கி டந்தஎனை
ஆவி யில்உயிர்ப் பித்தனை
அஞ்ஞான இருளோடு கண்கெட்டலைந்தவெற்
கலியா தஒளி காட்டினை
மாகாத கப்பேயின் அடிமையாய்ப் போனானை
வலியக் பிடித்த ழுந்தன்
மகிமைக் குயர்த்திக் கிறிஸ்துவுக் குள்எனையும்
மைந்தன னாப்ப வித்தனை
தேகாதி பிரபஞ்ச நச்சித்தி ரிந்துவனைச்
சேவியாப் பாவி யேற்குத்
திருவுளம் இரங்கிநீ செய்த இந்நன்றியைச்
சிதையாத சிந்தை தருவாய்
பாகாயயன் உளமூடு மதுகரிக்க நல்லருள்
பழுத்தொழு குஜீவ தருவே
பக்தசன பரிபால நித்யம அவர் அநுகூல
பரமார்த்த பரம நிதியே”
இவ்வாறு இயேசு கிறிஸ்துவினால் உண்டான மீட்பை மனமகிழ்ச்சியுடன் அனுபவித்து வருங்காலத்தில் யஹன்றி பவர் எனும் பண்டிதர் சென்னைக்கு வந்து விவிலியத்தை தமிழ் நடையில் மொழிபெயர்க்கும் ஊழியத்துக்கு வித்வானைத் தெரிந்து கொண்டார். ஆயினும் இக்கட்டான சூழல் காரணமாக தமது குடும்பத்தாரை ஆதாயப்படுத்தும் வண்ணம் இவர் பாளையங்கோட்டைக்கு வந்து சேர வேண்டியிருந்தது.
(தொடரும்)
இது கோயம்புத்தூரில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ......
இது கோயம்புத்தூரில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ......
ஒரு பெரிய வணிக அங்காடியில், ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான். பணம் பெறுபவர் உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்குத் தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா? என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு, ‘இல்லடா செல்லம் குறைவாக உள்ளது’ என்றார். அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.
நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மையை யாருக்கு தரப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன், அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும், அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்றுவிட்டது போல உணர்ந்தேன். அவன் கூறியது இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள். என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார்.
நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டுவந்தேன். எனக்கு என் தங்கையும், அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினான்.
மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான். அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள். அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.
நான், என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியமால் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். இவனும் இசைந்தான். நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது. அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.
நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன். பின்னர் உள்ளூர் தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என்நினைவிற்கு வந்தது. மகிழ்வுந்தில் பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி மோதி விபத்துக்குள்ளானது என்றும், அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த செய்தி, மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் சாகும் நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா? என்ற சந்தேகத்தை அளித்தது.
இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி, விபத்துக்குள்ளான பெண் இறந்து விட்டாள் என்று, நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன். அச்சிறுவனின் அம்மா சடலமாக கிடந்தாள். கையில் சிறுவனின் புகைப்படமும், அந்த பொம்மையும் இருந்தன. அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினேன். அந்த சிறுவன் தன் அம்மாவிடமும், தங்கையிடமும் வைத்திருந்த அன்பும், பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.
ஆதாரம் : இணையதளம்
வேதியரிடம் கேளுங்கள்
வேதியரிடம் கேளுங்கள் - 8
- நல்லை.இ. ஆனந்தன்
குழந்தைராஜ் - காரைக்குடி
மின் மயானம் வந்தபின் மனிதன் இறப்பிற்குப் பின் சாம்பல் என்று ஆகிவிட்டதே?
மனிதன் முதன்முதலில் கண்திறந்தால் அது பிறப்பு. நிரந்தரமாக கண்களை மூடினால் அது இறப்பு. சாம்பல் ஆகிப் போவதல்ல. மனித வாழ்வு. சேம்பிள் (SAMPLE) ஆவதே மனிதருக்குப் பெருமை. இயேசு முதல் அன்னை தெரசா, அப்துல் கலாம் வரை இறப்புக்குப் பின் அவர்கள் சாம்பலாகி விடவில்லை. சேம்பிள் (முன் உதாரணமாகிப் போனார்கள், நீங்களும் ‘உங்கள் பின்னோருக்கு சேம்பிள் ஆகலாம்’. முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
சலோமி - மதுரை
பலர் என் முதுகுக்குப் பின்னே கேவலமாகப் பேசுகிறார்கள். அது எனக்குத் தெரிய வரும்போது அப்செட் ஆகிறேன். என்ன செய்வது?
முதுகுக்குப் பின் பேசுபவர்கள் கோழைகள். முகம் பார்த்து பேசுபவரே வீரர்கள். கோழைகள் புறணி பேசும்போது அவர்களுக்கு ‘முன்னே’ நீஙகள் இருக்கிறீர்கள். பர்ஸ்ட் நீங்கள் நெக்ஸ்ட் அவர்கள். எனவே அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புத்தாண்டுச் செய்தி ‘வாட்ஸ் அப்’ பில் வந்ததைப் பார்க்கவும். அதில் முதல் செய்தி (DON’ T GASSIP). புறணி பேச வேண்டாம் என்பதே. திருத்தந்தைக்கு கீழ்ப்படியவும்.
வடினிலா மேரி - நத்தம்
பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது டீச்சர் என்னை ஓவராகத் திட்டுகிறார். சில நேரங்களில் கோபம், பல நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது?
தங்கச்சி, உன் டீச்சர் உன்னைத் திட்டவில்லை, தட்டி எஎழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். உனது மேற்படிப்பை, எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு. உன் வளமான எதிர்காலத்திற்காகத் தான் இவ்வாறு செய்கிறார்கள். இப்போது உனக்குப் புரியாது. பின்னரே விளங்கும். மார்ச்சில் தேர்வு. கவனமாகப் படிக்கவும். இலக்கு வைத்து முன்னேறவும். வாழ்த்துக்கள்!
பாஸ்கரன் - சென்னை
தவக்காலம் தேவைதானா?
கண்டிப்பாகத் தேவை. தவக்காலம் பெரிய வெள்ளியுடன் முடிவதில்லை. உயிர்ப்பு ஞாயிறில் நிறைவடைகிறது. இயேசுவின் பாடுகளை நினைக்கும் போது மனம் துன்புறும். ஆனால் உயிர்ப்பை நினைக்கும் போது மனம் தெம்படையும். எல்லா துன்பங்களுக்கும் முடிவு உண்டு என்பதை வலியுறுத்தும் தவக்காலம் நமக்குத் தேவைதான்.
விண்ணரசி - தூத்துக்குடி
புகழ், போதை தரக்கூடிய ஒன்றா?
நிச்சயமாக, குட்டி ஒட்டகம் தன் தாயிடம் நடத்திய உரையாடல்.
அம்மா, நமக்கு ஏன் நீண்ட கால்கள்?
தாய் சொன்னது, பாலைவனத்தில் மணலில் நடப்பதற்கு கடவுள் கொடுத்தார்.
தடித்த நாக்குகள் நமக்கு ஏன் அம்மா?
பாலைவனத்தில் முட்செடிகளைத் தின்பதற்காகக் கடவுள் கொடுத்தார்.
முதுகு ஏன் நமக்கு வீங்கியுள்ளது அம்மா?
பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காது. எனவே கடவுள் நமக்குக் கொடுத்த ஓவர் டேங்க அது.. அப்போது குட்டி ஒட்டகம் கேட்டது. அப்போ, நாம் பாலைவனத்தில் இல்லாமல், இந்த சர்க்கசில் ஏன் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறோம்?
அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது : ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் நமக்கு கைத்தட்டுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)







