Pages - Menu

Tuesday 20 June 2017

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒர் அதிர்ஷ்டசாலி. அவர் எதை விரும்பினாரோ அதைச் செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு 20 வயதாகும் போது கிடைத்தது. அவருடைய நண்பரான நிலிகு வோடு சேர்ந்து  “ஆப்பிள்”  நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர்கள் கடினமாக உழைத்ததால் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு பேராக இருந்த நிலையிலிருந்து நான்காயிரம் பேராகவும், இரண்டு பில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட நிறுவனமாகவும் வளர்ச்சி அடைந்தார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் அவர்களது ஒப்பற்ற படைப்பான  “மெக்கின்டாஷ்ஐ”  சந்தையில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த  நேரத்தில்தான் அவர் நிறுவிய நிறுவனமே எதிர்மறையாக அவரை வெளியேற்றியது.
          
அவர் வெளியேற்றப்பட்டவுடன் சில மாதங்கள் அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் டேவிட்  பாக்கார்டையும், பாப் நோயிஸையும் சந்தித்து மன்னிப்பு கேட்க முயற்சித்தார். சமூகத்தில் அவர் தோல்வி அடைந்தவராகப் பார்க்கப்பட்டார். சிலிக்கன்வேலியை விட்டே ஓடிப்போய்விடலாமா என்று கூட நினைத்தார். ஆனால் ஏதோவொன்று அதையயல்லாம் செய்யவிடாமல் அவரை தடுத்தது. நடந்த நிகழ்வுகள் ஆப்பிளில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால், அவருக்குள் இருந்த  உத்வேகம் அப்படியே இருந்தது. எனவே புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம் என நினைத்தார். வெற்றி என்கிற உக்கிரத்தை, ஆரம்பம் என்கிற  மென்மை மாற்றி அமைத்தது. 

அவர் இதை அப்போது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டது அவரை அதிக படைப்பாற்றல் கொண்டவராக மாற்றியது. அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் “ ஹிeமுமி”   என்கிற நிறுவனத்தையும்“Pஷ்முழிr” என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். “வீலிதீ விமிலிrதீ”  என்கிற பெயரில் உலகத்திலேயே முதன் முறையாக, கம்ப்யூட்டர் அனிமேட்டர் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடப்பட்டது. அதற்கு  அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் ஆப்பிள் நிறுவனமே  “ ஹிeமுமி” ஐயும் வாங்கியது. அவரும் ஆப்பிளுக்குத் திரும்பினார். “ ஹிeமுமி” நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய தொழில் நுட்பம்தான் ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய மறுமலர்ச்சிக்கான இதயமாக இருக்கிறது.
          
   ஸ்டீவ் ஜாப்ஸ் நமக்கு சொல்லும் வார்த்தைகள், நான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்படவில்லை எனில் மேலே சொன்ன எதுவும் நடந்திருக்காது. மருந்து கசப்பாகத்தான்  இருக்கும். ஆனால் நோயாளி குணம்பெற அது தேவை. சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் சம்மட்டியால் அடிக்கும். அதற்காக நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் எதை செய்தேனோ, அதை நேசித்தேன். அதுதான் என்னை முன்னோக்கி இட்டுச் சென்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை உங்கள் வேலை எடுத்துக் கொள்ளும். எனவே அதில் முழு திருப்தி அடைவதற்கு நீங்கள் உங்கள் வேலையை நேசியுங்கள். அப்படி எதுவும் உங்களுக்கு இதுவரை அமையவில்லை என்றால் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள். அது வரை          “செட்டில்”  ஆகாதீர்கள். நீங்கள் எப்போது அதை கண்டடைவீர்கள் என்பதை உங்கள் இதயம் காட்டிக் கொடுக்கும். எந்தவொரு உறவுமுறையும் ஆண்டுகள் செல்லச் செல்ல சிறப்பாக அமையும். எனவே நீங்கள் தேடுவது கிடைக்கும் வரை ஓய்ந்துவிடாதீர்கள். தேடிக் கொண்டே இருங்கள்.

அன்பான வாசகர்களே, ஸ்டீவ் ஜாப்ஸின் இரண்டாவது அனுபவத்தை வாசித்தோம். ய்னி ரேடியோவில் சொல்லப்படுவது “கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க” . ஆனால் நமக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது “தேடுங்க, தேடுங்க, தேடிக்கிட்டே இருங்க”. இயேசுவின் வார்த்தைகளை ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்வாக்கினார் எனலாம்.  ‘தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்’ ( மத்தேயு 7: 7). சாதிக்கத் துடிக்கும் சாதனையாளர்களே! வெற்றிக்கான வேட்கையில் ஓடும் வேந்தர்களே! வாய்ப்புகளைத் தேடி, சிக்கெனப் பிடித்து வெற்றிகள் பல பெற்று சரித்திரம் படைத்திட வாழ்த்துகிறேன்.
வெற்றி நமதே!
                      வெற்றி என்பது நிரந்தரமல்ல;
                      தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 
                                                                  - பில்கேட்ஸ்.

No comments:

Post a Comment

Ads Inside Post